Thiruchchikkaaran's Blog

“நானும் ஒரு இந்து”, நண்பர் ரசீன் அப்துர் ரஹ்மான் முழக்கம்.

Posted on: April 11, 2010


 நம்முடைய அன்புக்குரிய நண்பர்  நண்பர் ரசின் அப்துல் ரஹ்மான் அவர்கள்  தன்னுடைய தளத்திலே தானும் ஒரு  இந்து என ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளார். அவர் கூறுவது சரியே. 

ஏனெனில் ஒருவன்  எந்தக் கடவுளை வணங்கினாலும் , வணங்காவிட்டாலும் இந்துவாக வாழ முடியும்.

இந்து  மத தெய்வங்களை வணங்கி தான் ஆக வேண்டும் என எந்த இந்து மத  அறிங்கரோ, நூல்களோ கட்டாயப் படுத்தவில்லை. 

அதோடு உருவம் இல்லாத நிலையில் கடவுள் இருப்பதாக கருதுவதையும், வணங்குவதையும் இந்து மதம் அங்கீகரிக்கிறது.

ஹிந்து என்பது மதம் சாராத சொல், அது புவியியல் ரீதியானது என்பதே நண்பரின் கருத்து. ஆனால் பாலித் தீவில் இருப்பவரும் இந்து என்றே அழைக்கப் படுகிறார்,  பாலித்  தீவில் சிந்து நதி ஓட வில்லையே!

இந்து ம‌தத்தைப் ப‌ற்றியோ இந்து என்றால் என்ன‌ என்றோ ஒரே ஒரு வாக்கிய‌த்தில் முடித்து விட‌ முடியாது.

கீழ்க்காணும் க‌ருத்துக்க‌ளை எந்த‌ அளவுக்கு ஒருவ‌ன் பின்ப‌ற்றுகிறானோ அவ‌ன் அந்த‌ அள‌வுக்கு சிற‌ந்த‌ இந்து என‌க் க‌ருத‌ப்ப‌ட‌லாம், என்ப‌தை ஆரம்ப‌க் க‌ருத்தாக‌ இங்கே சொல்கிறோம்.

//அத்வேஷ்டா ( மனதிலே வெறுப்புணர்ச்சி இல்லாதவனாக , பகைமை இல்லாதவனாக)

சர்வ பூதானம் மைத்ரா (எல்லா உயிர்களிடனும் சினேக பாவத்துடன்)

நிர்மமோ, நிரஹங்கார (அகந்தையும் திமிரும் இல்லாதவனாக )

ஸம – துக்க ஸுக (இன்பத்தையும் , துன்பத்தையும் ஒன்றாகக் கருதுபவனாய்)

 க்ஷமீ (பொறுமை உடையவனாய்)

ஸந்துஷ்ட : ஸததம் (எப்போதும் மகிழ்ச்சி உடையவனாக )

யோகி (யோக நெறியில் நிற்பவன்)

யதாத்மா (அமைதியான ஆத்மா நிலையில் நிற்பவன்)

த்ருட நிச்சய (திடமான உறுதி உடையவன்)

மய்யர்பித மனோ புத்திர் ( மனதையும் புத்தியையும் என்னிடம் அர்ப்பித்தவன்)

யோ மத் பக்த ( எவன் என்னிடம் பக்தி செய்பவனாக )

ஸ மே ப்ரிய (அவன் எனக்கு பிரியமானவன்).//

இந்த‌ க‌ருத்துக்க‌ளை எந்த‌ அளவுக்கு ஒருவ‌ன் பின்ப‌ற்றுகிறானோ அவ‌ன் அந்த‌ அள‌வுக்கு  இந்து தன்மை உடையவன் ஆகக் கருதப் பட முடியூம். இந்தக் கொள்கைகளைளில் இருந்து எந்த அளவுக்கு விலகி நிற்கிறானோ அந்த அளவுக்கு அவன் இந்து தன்மை குறைந்தவன் ஆகக் கருதப் படமுடியும், என்ப‌தை ஆரம்ப‌க் க‌ருத்தாக‌ இங்கே சொல்கிறோம்.

மேலும் நாத்தீகர்களுக்கு இடம் அளிக்கும் மதங்கள் புத்தமும், இந்து மதமும் மாத்திரமே. பல  மதங்களில் நாத்தீகர்களுக்கு மரண தண்டனையே வழங்கப்  படுகிறது.

அந்த வகையில் நாத்தீகர்கள் இந்து மற்றும் பவுத்த மதங்களுக்கு நன்றி உடையவராக இருந்தால் ஆச்சரியமில்லை.  
அன்புக்குரிய நண்பர்  நண்பர் ரசின் அப்துல் ரஹ்மான்அவர்கள் தன்னை இந்து என அழைத்துக் கொள்வதை நான் வரவேற்கிறேன்.
 நண்பர் ரசீனை நான் நன்கு அறிவேன். மிதவாதப் போக்கும், நாகரீகமும் உடையவர். அவருடைய  கட்டுரயை மத நல்லிணக்கப் பதிவு என்று அவரே குறிப்பிட்டுள்ளார். 
 
 மத நல்லிணக்க அடிப்படையில் நான் நண்பர் ரசீனுடன் சேர்ந்து மசூதியில்  தொழவும், ரமதான் மாதத்தில் நோன்பு இருக்கவும் தயார்.
 
அதே போல ரசீன் அவர்களும் விரைவிலே நம்முடன் சேர்ந்து சர்ச்சிலே பிராத்தனை நடத்தவும், இந்து மத விழாக்களில்  கலந்து கொள்ளவும் படிக்கான அமைதியான, அன்பான உண்மை நல்லிணக்க நிலைக்கு வருவார் என நம்புகிறேன்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 32 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: