Thiruchchikkaaran's Blog

“என‌வே ம‌ண‌ம‌க்க‌ள் இருவ‌ரும் இணைபிரியாமால் இன்று போல் என்றும் வாழ‌ வாழ்த்துகிரோம்….. ”

Posted on: April 7, 2010


“என‌வெ ம‌ண‌ம‌க்க‌ள் இருவ‌ரும் இணைபிரியாமல் இன்று போல் என்றும் வாழ‌ வாழ்த்துகிரோம்…..”

க‌ண‌வ‌ன், ம‌னைவி இருவ‌ரும் இணை பிரியாம‌ல் க‌டைசி வ‌ரை சேர்ந்தே வாழ‌வ‌துதான் இந்திய‌ப் ப‌ண்பாடு.

ஆனால் மேற்க‌த்திய‌ நாக‌ரீக‌த்தைப் பின்ப‌ற்றும் ச‌முதாய‌ங்க‌ளுக்கு இந்த‌க் கொள்கை பிடிக்க‌வில்லை. நாளொரு திரும‌ண‌ம், பொழுதொரு விவாக‌ர‌த்து என‌ வாழ்கின்ர‌ன‌ர்.

மேலை நாடுகளில் கடைப் பிடிக்க  பட முடியாத குடும்ப வாழ்க்கை ஆசிய நாடுகளில்  மட்டும் எப்படி சாத்தியம் ஆகிறது?

வாழ்க்கை என்பதன் அடிப்படை அன்புதான். அந்த அன்பு தான் விட்டுக் கொடுப்பதை, அனுசரித்து  வாழ்வதை உருவாக்குகிறது. அந்த அன்புதான் கணவன் மனைவிக்கான இடையில் இணைப்பை உருவாக்குகிறது. அந்த அன்புதான் குடும்பத்தை உருவாக்குகிறது. அந்த அன்புதான் சமுதாயத்தை உருவாக்குகிறது. அன்பு இல்லாத குடும்ப வாழ்க்கை சீட்டுக் கட்டுகளைனால கட்டப் பட்ட கோட்டையைப் போல சரிந்து விடும்.

அப்படியானால் விவாகரத்துகள் ஏன் நடக்கின்றன? சிறுவர்கள் வளர்க்கப் படும் போதே அன்பின் அடிப்படையில்  வளர்க்கப் பட வேண்டும் . ஆனால் அவர்கள் முரட்டுப் பிடிவாதக் கருத்துக்களுடன் வளர்க்கப் பட்டால்  அவர்களுடைய ஈகோ அதிகமாகி விடுகிறது. அது விட்டுக் கொடுக்கும் தன்மையை குறைத்து விடுகிறது.

இந்த‌ விவாகரத்து வாழ‌க்கை முறை ந‌ல்ல‌தா? க‌ண‌வ‌ன் ம‌னைவி கூடி வாழ்ந்து பிள்ளைக‌ளைப் பெற்று விட்டு பிரிந்து விடுகின்ற‌ன‌ர். பிள்ளைக‌ளுக்கு அப்பா, அம்மா இருவ‌ருட‌னும் சேர்ந்து வாழும் உரிமையை ப‌றிப்ப‌து ச‌ரியா?

க‌ண‌வ‌னுக்கு ம‌னைவியோ, ம‌னைவிக்கு க‌ண‌வ‌னொ அவ‌சிய‌ம் இல்லாம‌ல் இருக்க்லாம். ஆனால் சிறு பிள்ளைக‌ளுக்கு அப்பாவும் , அம்மாவும் இருவ‌ரும் அவ‌சிய‌மாக‌ இருக்கிற‌தே!

கணவன் தன்னுடைய மாமனார் வீட்டில் இருந்து தொடர்ந்து பணத்தையும், சொத்தையும் எதிர் பார்க்கக் கூடாது. திருமணம் நடக்கும் முன்பே மண மக்கள் சந்தித்தித்துப் பேசிக் கொள்கிறார்கள். வெளியே பல இடங்களுக்கும் சென்று வருகின்றனர். ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. ஒருவரின் குறை நிறைகளை புரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது.அப்படி இருக்கையில் திருமணம் நடந்த பின் திடீரென பிரச்சினை ஏன் உருவாக வேண்டும்?விட்டுக் கொடுத்துப் போவதுதான் வாழ்க்கை.
பெரும்பாலான இந்தியர்கள், தங்கள் மனைவியை கடைசி வரை பிரியாமல் வாழ்கின்றனர்.  இந்தியாவின் பெரும்பாலனவர்கள் , “பிரியாமல் சேர்ந்து வாழும்” கருத்தை பல்லாயிரக் கணக்கான வருடங்களாகவே பின்பற்றி வருகிறார்கள் என்பதயும், தொடர்ந்து பின்பற்றுவார்கள் என்பதாகவும் தெரிகிறது.
Advertisements

4 Responses to "“என‌வே ம‌ண‌ம‌க்க‌ள் இருவ‌ரும் இணைபிரியாமால் இன்று போல் என்றும் வாழ‌ வாழ்த்துகிரோம்….. ”"

//ஆனால் மேற்க‌த்திய‌ நாக‌ரீக‌த்தைப் பின்ப‌ற்றும் ச‌முதாய‌ங்க‌ளுக்கு இந்த‌க் கொள்கை பிடிக்க‌வில்லை. நாளொரு திரும‌ண‌ம், பொழுதொரு விவாக‌ர‌த்து என‌ வாழ்கின்ர‌ன‌ர்.
//
நன்றாக பழகிய ஒரு நண்பர், சில கருத்து வேறுபாடு காரணமாக நம்மை பிரிந்தால் நம் உள்ளம் வருந்துகிறதல்லவா? அப்படி இருக்க, ஒருவது வாழ்க்கை துணை அவர்களை பிரியநேர்ந்தால் எவ்வளவு வேதனை இருக்கும். இந்த வேதனை இந்தியர்க்கு மட்டுமல்ல மனித குலத்துக்கே உள்ள ஒரு வேதனை (புத்தி பேதலித்த அரசியல், சினிமா, விளையாட்டு பிரபலங்களை கணக்கில் கொள்ள வேண்டாம்).
இந்தக்கட்டுரை, விவாகரதானவர்களை தவறாக விமர்சிப்பதாக உள்ளது. நான் விவாகரத்தின் ஆதரவாளன் அல்ல. என்னை பொறுத்தவரை, மணவாழ்க்கை உடைந்தவர்கள் ஊனமுற்றவர்கள். அந்த ஊனத்தின் வேதனையை நாம் விமர்சிக்க வேண்டாம். அந்த ஊனத்தின் காரணம் பல சமயம் தவிர்க்க முடியாத விபத்தாக கூட இருக்கலாம். பல சமயம், திமிரினால் விளைந்த பலனாக இருக்கலாம். இதை அறியாமல், பொத்தாம் பொதுவில் நியாயம் தீர்க்ககூடாது.
//மேலை நாடுகளில் கடைப் பிடிக்க பட முடியாத குடும்ப வாழ்க்கை ஆசிய நாடுகளில் மட்டும் எப்படி சாத்தியம் ஆகிறது?//
இந்தியாவில் ஒருவருக்கு விவாகரத்து கிடைக்க சில வருடங்களாவது ஆகும்.
நிறைய பெண்கள், தன் சொந்தக்காலில் நிற்க பலமில்லாமல் உள்ளனர்.
இதை போல பல காரணங்களால் இந்தியாவில் விவாகரத்து குறைவாக உள்ளது. மேலும்,இந்தியாவில் பெண் அடிமைத்தனமே பெரும்பாலும் விவாகரத்தை தவிர்த்து இருக்கிறது. கல் ஆனாலும் கணவன் என்று வாழ்ந்து(??) மாண்டார்கள்.
அதற்காக, இந்தியர்கள் அனைவரும் வேசி மார்க்கத்தவர் என்று நான் சொல்லவில்லை. மற்றவரை நியாயம் தீர்க்கும் முன், பல விடையங்களை யோசித்து, காழ்ப்புணர்ச்சி இல்லாமல் முடிவெடுங்கள் என்று சொல்கிறேன்.
சர்க்கரை வியாதி, அதிகமாகி அதனால் உயிர்க்கு ஆபத்து வரும்போது, பாதிக்கப்பட்ட காலை வெட்டி, ஊனமுற்றவராக பலர் வாழ்கிறார்கள். அதை போன்ற சூழ்நிலையில்தான் பலர் விவாகரத்து செய்கிறார்கள். விவாகரத்து விளையாடல்ல.
தனக்கும், தன்னை சார்ந்தவர்க்கும் நல்ல வாழ்க்கை கிடைத்துவிட்டதால், மற்றவரை இப்படி சாதாரணமாக குற்றப்படுத்தலாமா?
ஒரு விவாகரத்து, ஒரு ‘ஸ்டவ்’ வெடித்த மருமகள் மரணத்தை தடுக்கமானால், அந்த விவாகரத்து நல்லதா என்று அந்த பெண்ணின் தந்தை ஸ்தானத்தில் இருந்து யோசித்து பாருங்கள்.

Hard Truth

//இந்தக்கட்டுரை, விவாகரதானவர்களை தவறாக விமர்சிப்பதாக உள்ளது. //

மறுபடியும் ஒருமுறை கட்டுரையை படியுங்கள். விமரிசிக்க அல்ல, உதவவே இந்தக் கட்டுரை எழுதப் பட்டுள்ளது.

//இந்தியாவில் ஒருவருக்கு விவாகரத்து கிடைக்க சில வருடங்களாவது ஆகும்.
நிறைய பெண்கள், தன் சொந்தக்காலில் நிற்க பலமில்லாமல் உள்ளனர்.
இதை போல பல காரணங்களால் இந்தியாவில் விவாகரத்து குறைவாக உள்ளது. மேலும்,இந்தியாவில் பெண் அடிமைத்தனமே பெரும்பாலும் விவாகரத்தை தவிர்த்து இருக்கிறது. கல் ஆனாலும் கணவன் என்று வாழ்ந்து(??) மாண்டார்கள்.//

இந்தக் கருத்தை நாம் ஒப்ப இயலாது. இந்தியாவில் உள்ள குடும்பப் பெண்கள் ( மனைவிகள்) ஏதோ கட்டாயத்தின் அடிப்படையில் , வேறு வழியில்லாமல் கணவனோடு வாழ்வது போல சித்தரித்து உள்ளீர்கள். இந்தியாவில் மனைவிக்கும் கணவனுக்கும் இடையே உள்ள அன்பை நீங்கள் உணராமல் போனது எப்படி என்று வியப்பாக உள்ளது.

பெரிய வங்கி அதிகாரியாக உள்ள பெண்கள், கணவனை விட பெரிய அதிகாரியாக உள்ள பெண்கள், வீட்டுலே வேலை செய்ய வேலைக்காரர் இருந்த போதும், மாலையில் கணவனுக்கு தானே காபி கலந்து கொடுப்பதை, நானே நண்பர்கள் வீட்டில் பார்த்து இருக்கிறேன். அது அன்பின் அடிப்படியில் ஆனது.

//அந்த ஊனத்தின் காரணம் பல சமயம் தவிர்க்க முடியாத விபத்தாக கூட இருக்கலாம்.////

ஒவ்வொரு ஆணும் பெண்ணும் எந்த அளவுக்கு நாகரீகமான கனவானாக, சீமாட்டியாக இருக்கிறாரோ , அந்த அளவுக்கு குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். யாராவது ஒருவர் நாகரீகம் இல்லாத கொடுமைக்காரராக இருந்து விட்டால் வாழ்க்கை நரகம் தான். எனவே தான் நாம் நாகரிக சமுதாயம் அமைப்பதில் முனைப்பு காட்டுகிறோம். எனவே தான் சிறுவர்களை, சிறுமியரை வளர்க்கும்போதே நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்பதை நான் கட்டுரையில் தெளிவாக எழுதி இருக்கிறேன்.

//சிறுவர்கள் வளர்க்கப் படும் போதே அன்பின் அடிப்படையில் வளர்க்கப் பட வேண்டும் . ஆனால் அவர்கள் முரட்டுப் பிடிவாதக் கருத்துக்களுடன் வளர்க்கப் பட்டால் அவர்களுடைய ஈகோ அதிகமாகி விடுகிறது. அது விட்டுக் கொடுக்கும் தன்மையை குறைத்து விடுகிறது// சரியான கருத்து. இப்போதெல்லாம் குழந்தைகளிடமிருந்து டி வி ரிமோட்டை வாங்குவது கூட கஷ்டமாக இருக்கிறது. சுதந்திரம் என்ற பெயரில் குழந்தைகளை பிடிவாதக்காரர்களாக ஆக்கி விடுகின்றனர்.

//மறுபடியும் ஒருமுறை கட்டுரையை படியுங்கள். விமரிசிக்க அல்ல, உதவவே இந்தக் கட்டுரை எழுதப் பட்டுள்ளது.
//

Your intention might be good, but not the content.

//க‌ண‌வ‌ன், ம‌னைவி இருவ‌ரும் இணை பிரியாம‌ல் க‌டைசி வ‌ரை சேர்ந்தே வாழ‌வ‌துதான் இந்திய‌ப் ப‌ண்பாடு.//
Is that mean that who ever got divorced spoiling Indian culture???

//ஒவ்வொரு ஆணும் பெண்ணும் எந்த அளவுக்கு நாகரீகமான கனவானாக, சீமாட்டியாக இருக்கிறாரோ , அந்த அளவுக்கு குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். யாராவது ஒருவர் நாகரீகம் இல்லாத கொடுமைக்காரராக இருந்து விட்டால் வாழ்க்கை நரகம் தான்.//
U urself is saying that if ONE person is bad, then the life will be hell.
For eg: a wonderful lady got married to a sadistic psycho man. Do u expect her to be in the marriage and die? Here the woman can be innocent, just because she got married to him, do u think that her life should be spoiled.

//இந்தக் கருத்தை நாம் ஒப்ப இயலாது. இந்தியாவில் உள்ள குடும்பப் பெண்கள் ( மனைவிகள்) ஏதோ கட்டாயத்தின் அடிப்படையில் , வேறு வழியில்லாமல் கணவனோடு வாழ்வது போல சித்தரித்து உள்ளீர்கள். இந்தியாவில் மனைவிக்கும் கணவனுக்கும் இடையே உள்ள அன்பை நீங்கள் உணராமல் போனது எப்படி என்று வியப்பாக உள்ளது. //
I am sorry, if my words mean that to u. What I am trying to say is different.
I am not telling about every woman. I myself know about a wonderful woman, who lives with a sick husband (this man has got a rare skin disease and he will stink to worst). There r many hotels in Hydrabad, who didn’t allow this guy inside to eat. But, for this lady, that guy is a KING. She treats him just like a KING. And that is out of pure love.
I know the love and care I got from my wife, also I have seen similar things with my parents and others.
What I am tring to say is, there some marriages, which was already broken (in India). But, officially they didn’t get divorce ( I am given those reasons). But, in foreign countries, they make it official. So, the statistics looks huge.
More over in India itself. Out of 1000 marriages, 13 ends up in divorce. And this is not a small propotion.

Hard Truth

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: