Thiruchchikkaaran's Blog

அவ‌ர்தான் பெரியார்…. பார் அவ‌ர்தான் பெரியார்….

Posted on: April 4, 2010


“அவ‌ர்தான் பெரியார்…. பார், அவ‌ர்தான் பெரியார்…. ” சிறுவனாக இருக்கும் போது, தெருவில் கட்டப் பட்ட ஒலி பெருக்கியில் இந்தப் பாடலைக் கேட்டது நினைவில் உண்டு. த‌மிழ் நாட்டை உலுக்கிய‌ ஒரு பெய‌ர் பெரியார்.

சிறுவனாக பள்ளிக்கு செல்லும்போது ,  எழுத்துக் கூட்டிப் படிக்க கற்றுக் கொண்டோம். அப்போது தெருவிலே இருக்கும் கடைகளின் பெயரை எல்லாம் எழுத்துக் கூட்டிப் படிப்போம்.  ஒரு நாள் ஒரு தெருவிலே செல்லும் போது  வழியிலே ஒரு வயதானவரின் சிலை   வைக்கப்   பட்டு இருந்தது. அதன் கீழே

 கடவுள் இல்லை,

கடவுள் இல்லவே இல்லை,

கடவுளைக் கற்ப்பித்தவன்  காட்டுமிராண்டி,

கடவுளை நம்புபவன் முட்டாள்,

கடவுளை பரப்புபவன் அயோக்கியன்

என்று எழுதப் பட்டு இருந்ததை படித்தேன்.

 அதைப் படித்து விட்டு வீட்டிற்கு வந்து எனது அம்மாவிடம்  இப்படி எழுதி இருக்கிறதே, என்று கேட்டேன்.  நீ பள்ளிக்கு நேராப் போகாமல், வூரெல்லாம் சுற்றுகிறாயா என்று வைதார்கள்.  பள்ளியில் இருந்து வரும்போது , ஆடி அசைந்து, புதுப் புது ரூட்டு கண்டு பிடித்து வருவது வெளிப் பட்ட தால்  கேள்வியை அப்படியே விட்டு விட்டு வந்து விட்டேன். பிறகு பெரியாரின் பல நூல்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவ‌ரிட‌ம் இருந்து நான் ப‌ல‌ விட‌ய‌ங்க‌ளை அறிந்து கொண்டேன். அவருடைய துணிச்சல் ஆச்சரியகரமானது.

பின்னாளில் மாணவப் பருவத்தில் விவேகானந்தர், புத்தர், சாக்ரடீஸ், ஆதி  சங்கரர், பட்டினத்தார் உள்ளிட்ட பல சிறந்த  பகுத்தறிவாளர்களை அறியும் வாய்ப்பு கிடைத்தது. 

 பெரியாரை ஒரு முதிர்ச்சி அடைந்த பகுத்தறிவுவாதியாக கருத முடியாதென்றாலும், தமிழ் நாட்டில் பகுத்தறிவு என்கிற வார்த்தையை பிரபலப் படுத்தியவர் பெரியாரே.

பெரியாருக்கு குடுக்க வேண்டிய முக்கியத்துவததையும், மரியாதையையும் நாம் குடுக்கிற அதே நேரத்திலே, அவரைப் பற்றி விமரிசிப்பது தவறல்ல என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

பெரியாரின் கருத்துக்கள் தொடர்பாக பல கட்டுரைகள் நமது தளத்திலே வெளியாகும்.

Advertisements

3 Responses to "அவ‌ர்தான் பெரியார்…. பார் அவ‌ர்தான் பெரியார்…."

திருச்சிக்காரர் அவர்களே,

///பெரியாரை ஒரு முதிர்ச்சி அடைந்த பகுத்தறிவுவாதியாக கருத முடியாதென்றாலும்,///

சரியான,உண்மையான வாக்கியம்.

///பெரியாருக்கு குடுக்க வேண்டிய முக்கியத்துவததையும், மரியாதையையும் நாம் குடுக்கிற என்று சொல்கிற அதே நேரத்திலே, அவரைப் பற்றி விமரிசிப்பது தவறல்ல என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.///

ஏற்கெனவே பெரியாரைக் கடவுளாக்கிவிட்டார்கள் அவருடைய வெறித்தனமான பக்தர்கள்.எல்லா கடவுளையும் மோசமாக விமர்சிக்கும் அவர்கள்,தன் கடவுளான பெரியாரைப் பற்றி உண்மையான சின்ன விமர்சனத்தைக் கூட தாங்க முடியாமல் மிக மோசமான வார்த்தைகளால் அர்ச்சனை செய்வார்கள்.கொஞ்சம் கவனமாக இருங்கள் சார்.

///பெரியாரின் கருத்துக்கள் தொடர்பாக பல கட்டுரைகள் நமது தளத்திலே வெளியாகும்.///

ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

அன்புக்குரிய திரு. தனபால் அவர்களே, உங்களின் மேலான கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

பெரியாரை அதிகம் விமரிசித்தது பெரியாரிடம் பயின்றவர்கள் தான். அவர்கள் ராபின்சன் பூங்காவில் கூட்டம் போட்டு பெரியாரை விமரிசிக்கும் போது இந்த மோசமான வார்த்தைகளை உபயோகித்தவர்கள் எந்த மூலையிலே உட்கார்ந்து இருந்தார்கள். இப்போது நாம் விமரிசித்தால மட்டும் வீரம் வருகிறது.

நானும் பெரியாரின் பாசறையில் பயின்றவன் தான்.

நாம் பெரியாரை பாராட்டுவதோ, விமரிசிப்பதோ எதுவாக இருந்தாலும் அது கருத்து, கொள்கை, செயல் பாட்டின் அடிப்படையில் தானே தவிர, காசுக்காகவோ, பதவிக்காகவோ அல்ல என்பதை நான் இங்கே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

விநாயகரை திட்டும் போது ஏற்படும் வருத்தம் பெரியாரை திட்டும் போது ஏற்படுவதற்கு சமமல்ல. ஏனெனின் பெரியாரை வாழும் போதே கண் முன் பார்த்தவர்கள் தான் கோபப்படுகின்றார்கள். அதேபோல் விநாயகர் வாழும் போது இருந்தவர்கள் கோபப்படுங்கள் உங்கள் உரிமையில் நாங்கள் தலையிடவேயில்லை …..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 32 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: