Thiruchchikkaaran's Blog

இந்தியர்க‌ள் இந்தியாவின் பூர்வ‌ குடிக‌ளா?

Posted on: April 1, 2010


இன்று காலை ஒரு தொலைக்கட்சி நிகழ்ச்சியில் இந்த பொருள் பற்றி கருத்துக் கூறப் பட்டதால், நண்பர்களின் சிந்தனைக்காக இக் கட்டுரையை மீள் பதிவு செய்கிறோம்.

//இந்தியர்க‌ள் இந்தியாவின் பூர்வ‌ குடிக‌ளா? //

இப்போது இந்தியாவில் வ‌சிக்கும் ம‌க்க‌ள் இந்தியாவின் பூர்வ‌ குடிக‌ள் அல்ல‌ என்றும், அவ‌ர்க‌ள் கைப‌ர் போல‌ன் க‌ன‌வாய் வ‌ழியாக‌ ம‌த்திய‌ ஆசியாவில் இருந்து இந்தியாவுக்கு  வ‌ந்த‌வ‌ர்க‌ள் என்றும் கூற‌ப் ப‌டுகிற‌து அல்ல‌வா?

ஆரியர்கள் ருஷியாவிலே இருந்து வந்தார்கள், மத்திய ஆசியாவிலே இருந்து வந்தார்கள், சுவிட்சர்லாந்திலே இருந்து வந்தார்கள் என்கிறார்களே, நல்லா கவனிங்க,

அலெக்சாந்தரைப் போல, பாபரைப் போல ஒரு அரசன் தன் படையுடன் மட்டும் வரவில்லை. முழு சமூகமாக குயவர்கள், தச்சர்கள், நெசவாளர்கள், சலவைத் தொழிளாளிகள், மருத்துவர்கள், சமையல் காரர்கள், பாடகர்கள், புலவர்கள், சேனாதிபதிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட மிகப் பெரிய சமூகம் இடம் பெயர்ந்து உள்ளது என்று கூறப் படுகிரதே,

அப்படியானால் அந்த சமுதாயம் உருவாக பல ஆயிரம் ஆண்டுகள் ஆகியிருக்குமே, அப்படி அவர்கள் சமூகமாக உருவெடுத்த நிலப் பிரதெசம் எது? ருஷியாவா? மத்திய ஆசியாவா? ருஷியாவிலோ, மத்திய ஆசியாவிலோ ஆரியர்கள் பல்லாயிரம் வருட காலம் வாழ்ந்து ஒரு சமூகமாக உருவான வரலாறு, உலக வரலாற்றின் பக்கங்களில் இல்லையே!

நைல் ஆற்று நாகரீகம், மஞ்சள் ஆற்று நாகரீகம், இதை எல்லாம் விட பழைமையான நாகரீகம் சிந்து சமவெளி நாகரீகம் என்றால், அவர்களை 5000 வருடங்களுக்கு முன்பு விரட்டி அடித்ததாகக் கூறப் படும் ஆரிய சமுதாயம், கைபர் போலன் கனவாய் வழியாக வருமுன் சுவிட்சர்லாந்திலே இருந்தார்கள் என்றால், கைபர் போலன் கனவாய் வழியே அந்த சமுதாயம் இந்தியாவுக்குள் நுழையும் வரையிலே, அந்த சமூகத்தின் சுவிட்சர்லாந்து வரலாறு அல்லது ருஷியா வரலாறு அல்லது மத்திய ஆசிய வரலாறு ( 5000 வருடங்களுக்கு முந்தைய வரலாறு), ஏன் பதிவு செய்யப் படவில்லை?

ஆரியர்கள் சுவிட்சர்லாந்திலே அல்லது ருஷியாவிலே அல்லது மத்திய ஆசியாவிலே எப்படி வாழ்ந்தார்கள், ஒரு சமூகமாக உருவானார்கள் என்பது பற்றி ஒரு வார்த்தை கூட உலக வரலாற்றின் பக்கங்களில் இல்லையே?

நைல் ஆற்று நாகரீகம், மஞ்சள் ஆற்று நாகரீகம் போல, ரைன் நதி நாகரீகம் என்றோ, வோல்கா நதி நாகரீகம் என்றோ ஒரு சிறு குறிப்பு கூட இல்லையே?

 உலகின் மிகப் பழைமையான இலக்கியங்களில் பலவற்றை உள்ளடக்கிய மொழி அவர்களின் மொழி – அந்த இலக்கியங்களில் இந்தியாவைத் தவிர வேறு நாடுகள் பற்றிய குறிப்பு ஒன்று கூட இல்லையே?

என‌வே இந்தியர்க‌ள்  இந்தியாவின் அச்சு அசலான, ஆதி குடிகள் என்பதை உறுதி செய்ய வேண்டிய அளவுக்கு சாத்தியங்கள் உள்ளன.

Advertisements

20 Responses to "இந்தியர்க‌ள் இந்தியாவின் பூர்வ‌ குடிக‌ளா?"

// இந்தியர்க‌ள் இந்தியாவின் அச்சு அசலான, ஆதி குடிகள் என்பதை உறுதி செய்ய வேண்டிய அளவுக்கு சாத்தியங்கள் உள்ளன…//

பூசி மெழுகி பொத்தாம்பொதுவில் “இந்தியர்கள்” என்று குறிப்பிடப்படும் சமூகம் யார்?

ஒரு தேசமானது இந்தியாவைப் போன்ற பல்வேறு சமுதாயக் கலாச்சாரக் குழுக்களால் அமைக்கப்படவே முடியாது;

ஆனால் இந்தியா இந்த காரியத்தில் உலக அதிசயமாக விளங்குகிறது;இந்த ஆயிரக்கணக்கான மக்கள் குழுக்களில் ஒவ்வொரு குழுவும் மற்றொன்றின் மீது ஆதிக்கம் செய்ய முயலுவது மனித இயல்பாகும்;

அதில் வெற்றி பெற்ற சமுதாயம் எது,
எதன் வேர் எது,
அது மேற்கொள்ளச் செய்த தந்திரம் என்ன,
அதன் பாதிப்பு என்ன, என்பதே ஆராய்ச்சியாகும்;

இதனைக் குறுகிய மனப்பான்மையுடனோ சுயநலத்துடனோ அணுகினால் தீர்வையடைய முடியாது;

நண்பர் வேறு பெயரில் எழுத வேண்டிய அவசியம் இல்லை. பழைய பெயரிலே எழுதலாம்.

ஐயோ, இந்தியா பழம் பெரும் நாடாக இருக்கிறதே, வெவேறு மொழி பேசும் இந்திய மக்கள் ஒரே சிந்தனை, எண்ணம் செயல்பாடு உடையவர்களாக இருக்கிறார்களே என்பதைப் பொறுக்கமாட்டாமல் தவிப்பது போல இருக்கிறது. . குறுகிய சிந்தனைகளை விட்டு வெளியே வாருங்கள்!

இதனை முழுமையாக ஆராய பண்டைய வரலாற்றின் இந்தியக் குடிகளின் அமைப்பையும் எல்லைகளையும் ஆராய வேண்டும்;அதற்கொரு உதாரணம் இந்த வரைபடத்தைச் சுட்டும் தொடுப்பு..!

http://picasaweb.google.com/aroop.k.banerjee/ZHistoricalMaps#

தெ(ளி)ரிந்து விட்டேன் என்பது மேலும் அறிந்துக் கொள்ளத்தடையாக உள்ள மாயமாகும்;எனவே ஒவ்வொரு அறிஞர்களின் கூற்றையும் காழ்ப்புணர்ச்சியுடன் ஒதுக்காமல் பொறுமையாக அலசி ஆராயவேண்டும்.

அப்துல்லாவை க்ளிக் செய்தாலே சில்சாம் வந்துவிடுகிறது. ஏன் இவ்வளவு கஷ்டம் பெயரை மாற்றி எழுத? பன்னினாலும் நாசூக்கா பண்ணனும். பருத்திவீரன் டைலாக்.

ஆதிக்கம் செலுத்துவது, இன அழிப்பு செய்வது, இனப் படுகொலை செய்வது இந்த சிந்தனைகளில் இருந்து மீண்டு வாருங்கள்.

ஒருவர் மற்றவரை அழித்து வாழ்வது மிருக குணம்.

எல்லோரும் இணைந்து பங்கிட்டு வாழ்வது நாகரீக சமுதாயம்.

திரு அப்துல்லாஹ் அவர்களே,

///தெ(ளி)ரிந்து விட்டேன் என்பது மேலும் அறிந்துக் கொள்ளத்தடையாக உள்ள மாயமாகும்///

நீங்கள் கூறியது மிகச் சரியான, அற்ப்புதமான வாக்கியமாகும்.

///எனவே ஒவ்வொரு அறிஞர்களின் கூற்றையும் காழ்ப்புணர்ச்சியுடன் ஒதுக்காமல் பொறுமையாக அலசி ஆராயவேண்டும்///

அந்த அறிஞர்களின் கூற்றுக்களைக் கூறினால் நாங்கள் ///காழ்ப்புணர்ச்சியுடன் ஒதுக்காமல் பொறுமையாக அலசி ஆராய/// தயாராக இருக்கிறோம்.

அதே போல் ஆரியர்கள் இந்தியர்களே,அவர்கள் எங்கிருந்தும் படைஎடுத்தோ, ஆடு, மாடுகளை மெயத்துக்கொண்டோ , நாடோடிகளாக கைபர்,போலன் கனவை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவவில்லை,இது ஒரு புனையப்பட்டக் கதை என்பதற்கு சான்றாக அகழ்வாராய்ச்சி, புவியியல், நாணயவியல் ஆதாரங்கள், மற்றும் இந்திய, மற்றும் மேலைநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் பலரின் ஆய்வு முடிவுகள், மட்டும்,விவேகானந்தர்,அரவிந்தர், டாக்டர்.அம்பேத்கர் போன்றவர்களின் கருத்துக்கள் போன்றவற்றையும் ///காழ்ப்புணர்ச்சியுடன் ஒதுக்காமல் பொறுமையாக அலசி ஆராய வேண்டும்/// என்றுக் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

மாயமில்லே மந்திரமில்லே…
பெரியார்தாசன் வழியில் சில்சாம்…
அவ்வளவே……….!

கலக்குறீங்க நண்பரே. நீங்கள் பெரியார் தாசன் வழியில் சென்றது உண்மையானால் நீங்கள் அப்பெயரில் எழுதுவது தவறில்லை. அதை உறுதி செய்யுங்கள்.

வெறுமனே இசுலாமியப் பேரில் எழுதினால் இசுலாமிய சகோதரர்கள் மனம் வருத்தம் அடையக் கூடும். நீங்கள் அறியாதது அல்ல.

// வெறுமனே இசுலாமியப் பேரில் எழுதினால்… //

வேற இன்னா பண்ணனும்..?

அதா கன்டி, abdullah ன்னா- அல்லாவுக்கு அடிமை, அல்லாங்குற கடவுளுக்கு அடிமை னு அர்த்தம் .

லா இலாஹா இல்லல்லாஹு , முகமது ரசூலல்லாஹு அப்படிங்கிற கொள்கையை நீங்க ஒத்துக்கறதா அறிவித்து விட்டு abdullahங்கற பேர்ல எழுதினா சர்யா இய்க்கும் ! இப்ப நான் ஜார்ஜு, ஜோசப்பு ங்கிற பேர்ல எழுதினா சரியா இருக்குமா?

இன்னா நான் சொல்றது சர்யா?

அப்துல்லா என்ற பெயரில் நண்பர் கேட்ட கேள்வி நியாயமானதாகவே தோன்றுகிறது. அதற்க்கு பதில் வந்தபாடில்லை, அதைவிட்டுவிட்டு அவரை அல்லாவின் அடிமை ஆக்க திருச்சி ஐயா முயற்சி செய்வது ஏன்?

//லா இலாஹா இல்லல்லாஹு , முகமது ரசூலல்லாஹு அப்படிங்கிற கொள்கையை நீங்க ஒத்துக்கறதா அறிவித்து விட்டு abdullahங்கற பேர்ல எழுதினா சர்யா இய்க்கும் ! இப்ப நான் ஜார்ஜு, ஜோசப்பு ங்கிற பேர்ல எழுதினா சரியா இருக்குமா? //

இந்திய மொழிகளில் பெயர் வைத்தால் அவன் இந்துமதத்தை சேர்ந்தவன் என்றும், ஆங்கில பெயர் வைத்தால் அவன் கிறிஸ்துவன் என்றும், அரபி பெயர் வைத்தால் அவன் முஸ்லிம் எனவும் உங்களுக்கு யார் சொல்லிக்கொடுத்தது?
திருச்சிக்காரன் என்பது வேண்டுமானால் காரணப்பெயராக இருக்கலாம். ஆனால், பலர் தங்கள் வாழ்வில் வைத்திருப்பது இடுகுறி பெயர்தான். இந்த அப்துல்லாஹ் முஸ்லிமாக இருக்க வேண்டிய அவசியமில்லை, அதைப்போல சாலமன் என்று பெயர் வைத்திருப்பவர் கிறிஸ்துவராக இருக்க வேண்டியதில்லை. கணேசன் கூட இந்துவாக இருக்கவேண்டியதில்லை.

பெயர் அல்ல, பிறப்பு அல்ல, வளர்ப்பு அல்ல, உடை அல்ல, மொழி அல்ல, ஒருவரது மனமே, அந்த மனதின் நம்பிக்கையே அவரது மதத்தை முடிவு செய்கிறது.

Hard Truth

Dear Mr. Hard Truth,

The comments of our brother Mr. Chillsam alias Abdullaah are first of all not relevent to the subject of the article. The Subject of the Article is that the Present day Indians are the Original inhabitants of India. The Indians may speak different languages, but their Character , nature are same. Some other people like Farsis, Turks, Baluchisthaanis, Afghans have also come and settled in India, they are also our brothers, They are also Indians. But our Main point is that the majority of the people in India’s ancestors were the original inhabitants of Indis. We have provided points on supporting that. That is the subject of the article.

Second, coming to name Abdulla, If I go to Islamic sites and write in the name of Joseph – it is not correct. Our brother Mr. Chill Sam is already writing in his own name, in our site. What is the needc to write in another name?

Mr. Hard Truth, I would have appreciated, If you dont interfere in this “Abdullaah” matter or you should have told as what is proper. Instead your comments are like that of making politics.

I hope Mr. Chill sam understands this, and take our friendly suggestion in the right sense.

அண்மையில் ஒரு ந்ண்பரை சந்தித்தேன்;அவருடைய பெயரைக் கேட்டால் ரூபன் என்றார்;ஆனால் அவர் கிறிஸ்தவரல்ல;அவருடைய தகப்பனார் தனது உயிர்த் தோழன் நினைவாக அந்த பெயரை தனது மகனுக்கு வைத்தாராம்..!

Dear Mr. Chill sam,

When religious matters are discussed, when one person is strongly advocating one Religion, its nor proper to write in the name used by other Religion.

I have explained enough. You are matured and learned.

திரு HARD TRUTH அவர்களே,

///இந்த அப்துல்லாஹ் முஸ்லிமாக இருக்க வேண்டிய அவசியமில்லை, அதைப்போல சாலமன் என்று பெயர் வைத்திருப்பவர் கிறிஸ்துவராக இருக்க வேண்டியதில்லை. கணேசன் கூட இந்துவாக இருக்கவேண்டியதில்லை.///

ஏன் இவர்கள் மூவரும் ஆணாக இருக்கவேண்டிய அவசியம் கூட இல்லை.ஒரு பெண் ஏன் தன்னை கணேசன் என்றோ,அப்துல்லா என்றோ,சாலமன் என்றோ பெயர்வைத்து கொள்ளக் கூடாது???

ஏன் இந்த மூன்று பெயர்கொண்டவர்களும் மனிதர்களாக இருக்கவேண்டிய அவசியம் கூட இல்லை..விலங்குகளாகக் கூட இருக்க வாய்ப்பிருக்கிறது. ஏற்கெனவே,,ஜென்சி, ரோஸி, மணி, சுப்பிரமணி(மூன்றாம் பிறைப் படத்தில் ) போன்ற பெயர்களில் நாயையும்,ராமா என்ற பெயரில் குரங்கையும் அழைக்கிறோம்.(அடிரா ராமா,அடிரா ராமா என்று சொல்லி குரங்காட்டி குச்சியை வைத்து குரங்கை பல்ட்டி அடிக்க வைப்பதும் நாம் பார்த்த ஒன்று தானே..)

சில்சம் அவசியமின்றி தன் பெயரை மாற்றிக் கொண்டதாகவே கருதுகிறேன்.அப்படி மாற்றும் போது போக்கிரி படத்தில் வடிவேலு பல கெட்டப்பில் மாறுவேசம் போட்டுவந்தாலும் அவர் கொண்டையை மறைக்கதாதால் அடையாளம் காணப்பட்டது போல்,சில்சமும் அவருடைய தளம்,ஈமெயில் முகவரியை மறைக்காததால் அடையாளம் காணப்பட்டார்.அதுவும் ஒரு பெரிய விசயமோ,தவறோ அல்ல.மேலும் பெயர் மாற்ற வேண்டிய அவசியமே இல்லை.இப்படி பெயர் மாற்றிய விஷயம் தெரியாவிடில் தன்னை இஸ்லாமியராகவே அடையாளம் காணப்படுவதை அவர் தடுக்க மாட்டார் என்றே கருதுகிறேன் (ஏனெனில் அவர் தான் பெயரை மாற்றும் எண்ணம் இருந்ததால்!!!) .மேலும் சில சமயங்களில் விவாதம் (கிருஸ்தவ மதம் பற்றி செல்லுவது போல்) இஸ்லாமிய மதம் பற்றி திசை திரும்பும் வாய்ப்பு அதிகம் உள்ளது.அதில் அவருக்கு புலமை இருக்கும் பட்சத்தில் பரவாயில்லை.இல்லை தன்னை இஸ்லாமியர் இல்லை என்று ஒத்துக்கொள்ளும் பட்ச்சத்தில் பரவாயில்லை.ஆனால் அவர் அப்படி சொல்லும் வாய்ப்புக் குறைவு.அப்படி ஒத்துக்கொள்பவர் பெயர் மாற்றும் செய்ய மாட்டார் என்றே நான் கருதுகிறேன்.

///மாயமில்லே மந்திரமில்லே…
பெரியார்தாசன் வழியில் சில்சாம்…
அவ்வளவே……….///

என்று அவரே கூறியிருக்கிறார்.பெரியார் தாசன் இஸ்லாமியராக மதம் மாறினார்.

///பெரியார்தாசன் வழியில் சில்சாம்…அவ்வளவே……….///

என்று சொல்லும் போது பெரியார் தாசன் வழியில் இவரும் இஸ்லாத்தை தழுவினாரா???இல்லையே.அப்பறம் ஏன் அவ்வாறுக் கூறவேண்டும்.பெரியார் தாசன் இஸ்லாமியரானார்.பெயரும் இஸ்லாமிய பெயரை வைத்து அனைவருக்கும் அறிவித்தார்.ஆனால் சில்சம் பெயரை மட்டும் ,அதுவும் இந்த தளத்தில் மட்டும்,அதுவும் இந்த கட்டுரையின் பின்னூட்டத்தில் மட்டும் மாற்றிக் கொண்டார். இது நீங்கள் கூறிய ///இந்த அப்துல்லாஹ் முஸ்லிமாக இருக்க வேண்டிய அவசியமில்லை, அதைப்போல சாலமன் என்று பெயர் வைத்திருப்பவர் கிறிஸ்துவராக இருக்க வேண்டியதில்லை. கணேசன் கூட இந்துவாக இருக்கவேண்டியதில்லை./// என்ற வாக்கியத்திற்குப் பொருந்தாது.

Mr.Trichy,
There is one Mr.Ashok kumar GANESAN who used to advocate for Christianity in your site. Usaully that name refers to a Hindu name, (just like you are considering Joseph as Christian name).

//If I go to Islamic sites and write in the name of Joseph – it is not correct. //
Do you mean that a person with Muslim name (either from a real muslim background or not) should not advocate other religion?

//What is the needc to write in another name? //
Good question, might be Abdullah or Chillsam can answer this. I cannot, because I dont see a need for that.

//The Indians may speak different languages, but their Character , nature are same.//
I dont agree on this. Because you can very well see every person is unique. Also, being a tamilian, seeing what has happened to us in other states of India to my fellow tamilians, I cannot accept this.

//Mr. Hard Truth, I would have appreciated, If you dont interfere in this “Abdullaah” matter or you should have told as what is proper. Instead your comments are like that of making politics.//
Mr.Trichy, what ever comes to public will be commented. More over, I dont do anything for your appreciation. It is up to you for publish my comments or not.
By the way, which statement of mine is like that of making politics???

Hard Truth.

Dear Mr. Hard Truth,

Mr. Ashok Kumar Ganesan has been writing in the same name for more than one year in many blogs and he had explained that it was his natural name.

//Also, being a tamilian, seeing what has happened to us in other states of India to my fellow tamilians, I cannot accept this. //

When Indhira Gandhi was killed more than 2000 sikhs were murdered. Fortunately, tamils were safe in Delhi, after Rajiv Gandhi was killed.

Last year in mumbai, Tamils were safe, when North Indians were targeted By Tahckarey goons. I condemn Thackareys , I wrote separate article on the same. But tamil were not targeteed , because tamils did not try to bring Tamil nadu politics to Maharashtara.

India is the only Miracle in the world, where people spaeking different languages live amicably. We know that very few Indians does not like this unity. But this unity is made by the people, hence it is strong.

//I dont agree on this. Because you can very well see every person is unique. //

Every one is unique only. But we share common habits also. If you see how an average Indian reacts in a particular situation, that will be same for most of the Indians.

//By the way, which statement of mine is like that of making politics???//

Mr. Chill sam is wrting in another name. That also in the name , which is almost exclusively used by people belongs to Islam. If Mr. Chillsam is writing in the name of Abdullah, and if he make a hurting remark against Hinduism, then readers belong to Hindu Religion may start abusing Islam as retaliation. Your support for Mr. Chillsam , on this matter – What else can we assume other than politics?

We are arguing healthily. Almost all the comments are published. Let it continue.

திரு HARD TRUTH அவர்களே,

///பெயர் அல்ல, பிறப்பு அல்ல, வளர்ப்பு அல்ல, உடை அல்ல, மொழி அல்ல, ஒருவரது மனமே, அந்த மனதின் நம்பிக்கையே அவரது மதத்தை முடிவு செய்கிறது///

என்ன!!! ஒரு அருமையான, அழகான வரிகள்.!!!அழகாகப் அச்சிட்டு பிரேம் போட்டு சுவற்றில் மாற்றிவைத்துக் கொள்ளலாம்.நடைமுறையில் இல்லாத பல தத்துவங்கள் சுவற்றில் மட்டும் தொங்கிக்கொண்டு உள்ளது.

//Mr. Ashok Kumar Ganesan has been writing in the same name for more than one year in many blogs and he had explained that it was his natural name. //
Do you mean to say that Mr.Ashok Kumar Ganesan born with that name? Probably someone (might be parents) would have given him that name. Name is always someone’s decision. I like myself to be called as “Hard Truth” for this site. You like to be called as Thiruchchikkaaran. Like the say way, he wanted to be called as Abdullah for that comment. Please make a note that he never commented anything about any religion. You cannot assume that Mr.Chillsam will abuse Hinduism with Abdullah’s name and create religious riot.

//India is the only Miracle in the world, where people spaeking different languages live amicably. //
I was there in Bangalore when kannada activists attacked tamilians. It is easy to comment any thing sitting in some safe place.

Hard Truth

Dear Mr. Hard Truth,

திரு. சில்சாம் என்னுடைய நீண்ட நாள் நண்பர். இந்த விடயத்தில் அவருக்கு ஏதாவது மனத் தாங்கல் இருந்தால் அவரே நேராக எனக்கு எழுதும் படிக்கான நட்பு எங்களிடையே உண்டு. நீங்கள் கருத்துக்களைப் பற்றி விவாதியுங்கள்.

நான் மக்களுடன் சேர்ந்து வாழ்பவன்தான். இனவாதத்தை , மத வெறியை, மொழி வெறியை நீக்கி நாகரிக சமுதாயம் அமைப்பதே நமது நோக்கம். பெங்களூரில் தமிழர்கள் தாக்கப் பட்டார்கள், அது வருத்தமான நிகழ்வே. அவர்களை தாக்கியது என்னைத் தாக்கியது போலவே. அதே நேரம் நான் தமிழர்கள் டில்லி, மும்பை, கொல்கட்டா, ஐதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் பாது காப்பாக வாழ்வதை சுட்டிக் காட்டி இருக்கிறேன். இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் தமிழர்கள் பாது காப்பாக , மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர். இந்தியர்களின் ஒற்றுமையை, பண்பாட்டை, கலாச்சாரத்தை உலகமே புரிந்து வைத்து இருக்கிறது. எப்படியாவது இந்தியாவை சிதைத்து, குட்டையைக் குழப்பி மீன் பிடிக்கலாமா என்று எண்ணுவோரின் திட்டம் பலிக்காது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: