Thiruchchikkaaran's Blog

கொள்கைக் குன்று, அஞ்சா நெஞ்சன், அன்பரசன் குகன்

Posted on: March 26, 2010


வரலாறு பெரும்பாலும் அரசியலையும், சமூகங்களின் நாகரீகத்தைப் பற்றிய தாகவும் உள்ளது. எனவே வரலாறு பெரும்பாலும் மன்னர்கள், போர்  வீரர்கள்,  சாதனையாளர்கள் இவர்களைப் பற்றியே விவரிக்கிறது. அதில் சில  சமயங்களில் பொது மக்களை சார்ந்த சிலரும் தம் தனித்துவத்தை வெளிப்படுத்தி இடம் பெறுகின்றனர்.

அவ்வகையில், தன் நல்ல குணத்தால்,  கொள்கை உறுதியால், நெஞ்சுறுதியால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் மதிப்பிற்கும், மரியாதைக்கும், வணக்கத்துக்கும் உரிய குகன் .

இராமன் அயோத்தியை விட்டு காடு செல்லும் போது வழியிலே கங்கை கரையில் முதல் நாள் தங்க நேரிடுகிறது. குகன் அந்தப் பகுதில் வசிக்கும் மக்களின் தலைவன்.

ஆட்சியை விட்டு விலகி காட்டு வாழ்க்கையை மேற்கொண்ட இராமனை சந்தித்து அன்பு பாராட்டி இருக்கிறார் குகன்.  ஒருவர் ஆட்சியில், அதிகாரத்தில் இருக்கும் போதும், செல்வந்தராய் இருக்கும் போதும் பலரும் வந்து நட்பு பாராட்டுவர்.  அதே நபர் ஆட்சியை இழந்து  விட்டால் அற்ற நீர்க் குளத்தே அறு நீர்ப்பறவை   போல  விலகி சென்று விடுவது உலக நடப்பு.

ஆனால் அன்பு  உள்ளமும், இரும்பு இதயமும் கொண்ட குகனோ,  ஆட்சியை விட்டு மரவுரி தரித்து வந்த இராமரிடம் முழு அன்பையும் செலுத்தி அவருக்கு ஒரு மொரேல் பூஸ்டர் ஆக இருந்திருக்கிறார். இராமன் 14  வருட வன வாச காலத்தையும் தங்களுடனே கழிக்கலாம் என்கிற அன்புக் கோரிக்கையையும் வைத்து இருக்கிறார். வன வாசம் நியதிப் படி சமுதாயத்தில் வாழக் கூடாது  என்கிற காரணத்தால் இராமன் குகனுக்கு நன்றி செலுத்தி விட்டு வனப் பகுதிக்கு செல்லுகிறான்.

இராமரிடத்தில் ஆட்சியை ஒப்படைக்க விரும்பிய பரதன், அயோத்தியில் இருந்து புறப்பட்டு இராமனைத் தேடி செல்லுகிறான்.  இராமரைத் தேட தனக்கு உதவியாக அயோத்தி இராச்சியத்தின் மாபெரும் படையை தன்னுடன் அழைத்து செல்லுகிறான்.  இராமனைத் தேடி வரும் போது, பரதனும் குகனை சந்திக்கிறான். இராமன் எந்த வழியில் சென்றான் என, குகனை பரதன் வினவுகிறான்.

gugan

பரதனோ மிகப் பெரிய நாட்டின் சக்கரவர்த்தி. அவனுடைய படையோ மிகப் பெரியது. அப்படிப்பட்டவன் தன்னிடத்திலோ இராமன் சென்ற வழியைக் கேட்டால், நானாக இருந்தால், “இதோ இந்த வழியா போனாருங்க, எங்க  ஆளு தான் அவர ஓடத்துல கொண்டு போய் கங்கையின் அக்கறைக்கு விட்டாருங்க. அதே ஓடக் காரனை உங்க கூட அனுப்பறேன் சாமி, இராமர் இறங்கின இடத்தைக் காட்டுவார்ந்க. அப்பால நீங்க பார்த்து போய்க் கிடுங்க”,  என்று சொல்லி இருப்பேன்.

ஆனால் அந்த நேரத்திலே குகன் சிந்திக்கிறான். இந்த பரதனின் அன்னையோ, இராமனிடம் இருந்து  ஆட்சியைப் பறித்ததோடு அவன் நாட்டிலே தங்கவும் விடாமல் காட்டுக்கு அனுப்பியவள். அவளின் மகனாகிய பரதன் எதற்காக இராமரைத் தேடி வந்து இருக்கிறான்? ஒரு வேலை இராமனை ஒரே அடியாக ஒழித்துக் கட்டி , அயோத்தி இராச்சியம் எப்போதும் தனக்கே சொந்தமாக வேண்டும் என திட்டம் தீட்டி வந்து  இருக்கிறானா? அதற்காகத்தான் இப்படி ரத, கஜ, துரக, பாதாதி எனும் நால்வகை சேனையும் கூட வந்து இருக்கிறது போல இருக்கிறதோ, என்னும் ஐயம் குகனின் மனத்திலே உருவானது.

இந்த நேரத்திலே தன்னுடைய நெஞ்சுரத்தையும், முழு வீரத்தையும் வெளிப்படுத்துகிறார் குகனார். “நீங்கள் இராமனைத் தேட  வேண்டிய அவசியம் என்ன?” என்று வெளிப்படையாகப் பரதனைக் கேட்கிறார் குகனார்.

தனக்கு எந்த  ஆபத்து நேர்ந்தாலும், இராமனுக்கு ஆபத்து வந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார் குகனார்.

இராமனைக் காக்க அவர் அயோத்தியின் பெரும் படையையும் எதிர் கொள்ள தயாராக இருந்திருக்கிறார்.

பரதன் வந்தது  இராமனைத் தாக்க அல்ல, இராமனுக்கு இராச்சியத்தை மீண்டும் அளிக்கவே, பரதனால் இராமனுக்கு எந்த ஆபத்தும் வராது என்பதை உறுதி செய்த பிறகே குகனார்  இராமன் சென்ற வழியை பரதனுக்கு கூறினார்.

முதலில் இராமனிடம் அன்பு பாராட்டிய போது அன்புக்கரசனாக திகழ்ந்த குகனார்,  பிறகு இராமரைக் காக்க அயோத்தியின் பெரும்படையும் தன்னை எதிர்த்தாலும் சரி,   இராமனுக்கு ஆபத்து வரக் கூடாது என்கிற விடயத்தில் தன நெஞ்சுறுதியை, அஞ்சா  நெஞ்சத்தை வெளிப்படுத்தி கொள்கைக் குன்றாக விளங்கியிருக்கிறார்.  காருள்ளளவும், கடல் நீருள்ளளவும், குகனும் மக்களின் நெஞ்சில் நீக்கமற நிறைந்தவராகி விட்டார்.  இராமரின் கொள்கையை மனதில் நிறுத்துவோர், குகனாரின்  அன்பையும், நெஞ்சுறுதியையும்  தங்கள் மனதிலே நிலை நிறுத்தி தங்களை செம்மைப் படுத்திக் கொள்ள தவறக் கூடாது.

” இன்று உன்னுடன் சேர்ந்து நாங்கள் சகோதரர்கள் ஐவரானோம்”, என இராமரின் சகோதரன் ஆன குகனாரையும், இராமருக்கு மரியாதை செலுத்துவதைப் போலவே குகனாருக்கு மரியாதை செலுத்துவது அவரின் கொள்கைகளை நினைவுறுத்த உதவும்.

Title: கொள்கைக் குன்று,  அஞ்சா நெஞ்சன், அன்பரசன் குகன்

Advertisements

9 Responses to "கொள்கைக் குன்று, அஞ்சா நெஞ்சன், அன்பரசன் குகன்"

//“ இன்று உன்னுடன் சேர்ந்து நாங்கள் சகோதரர்கள் ஐவரானோம்”, என இராமரின் சகோதரன் ஆன குகனாரையும், இராமருக்கு மரியாதை செலுத்துவதைப் போலவே குகனாருக்கு மரியாதை செலுத்துவது அவரின் கொள்கைகளை நினைவுறுத்த உதவும்.//
So, you want to bring one more deity to the Indian crowd, which is already confused with so many Gods and partitions. OK OK Carry on.

Hard Truth

Mr. Hard Truth,

I thank you for your visit to our blog, having read the article and passed your comments.

But its surprising as why you can not understand Guha.

I had explained very clearly the merits of the great Ghuhan, which you never bothered to look neutrally. We respect the selfless people , Who are ready to sacrifice for good principles & for the welfare of others.

We respect Gandhi, We respect Buddha, We respect Harichandhra….. etc.. similaraly, we can respect Guhaa also and imbibe his good principles and grit. I dont find any reason at all for any confusion.

Indians have many deities and each deity has one philosophy. If people can take good principles from each deity, what is your problem! Guhan also has good principles, people can get benefitted from his principle.

You view everything with hatredness for others and in your fundementalistic approach. Hence you can not view any thing neutrally.

You are always talking about God – whom the world never see – you neither give any verifiable proof nor shown the existance .

If you are so keen about God, if you can make full moon on all the days continuously for 6 months (mentioning the dates of starting and date of ending) , I would accept your God is existing and probagate the same.

Its better to respect Gandhi, Buddha, , Guha …etc rather than worshipping those who planned and executed Genocide!

I hope that you will soon turn suave , and work along with us to acheive amicable civilised soceity.

brother thiruchchikkaarar,
very good artical sir,

Dear Brother Dhanabal,

Its very pleasure to see your comments. Many thanks for your visit and comments.

I really dont know whether Rama lived or not. I like many of the principles shown in Ramayana. But, do you think that people follow his principle? They rather worship him as deity. People doesn’t show their respect by following their principles, rather they are worshiping them. On one December 6th they showed their respect in a great way.
I do like the character of Guhan in Ramayana. I do love that selfless attitude. I have seen such a loving attitude from the people in my village too. I respect them.
But, do you want people to “Respect” Guha also like Rama? Shall we build a temple for Guha also? (certainly I am not interested).

Hard Truth

Dear Mr. Hard Truth,

//But, do you think that people follow his principle? They rather worship him as deity. People doesn’t show their respect by following their principles, rather they are worshiping them. On one December 6th they showed their respect in a great way.//

Your observations are correct to an extent. People worship deities with their own requests and demands, at the same time the deities remind the people of their principles. Any one who stand near the Rama, Sita, Laxman, Hanuman can not forget that Rama Sita … all were virtueous, Sita was abducted, the efforts put by Hanuman and others to rescue her. That message can not left un noticed.

So whenever a person stand near Rama, he should remember to remove his desire for other women, others money and also remember as not to harm others.

I condemned the demolition of Babri Masjid , I wrote an article about the same , in this blog Dec ‘ 2009. If you go to that month in Archives, you can find that article. The Babri masjid demolition was done due to political factors, by the politicians.

//But, do you want people to “Respect” Guha also like Rama? Shall we build a temple for Guha also? (certainly I am not interested).//

No need to have a separate for Guha. Guha can be respected along with Rama and others. Guha is identified with Rama always, and any Ramayan is incomplete without Guha.

//Your observations are correct to an extent. People worship deities with their own requests and demands, at the same time the deities remind their principles. Any one who stand near the Rama, Sita, Laxman, Hanuman can not forget that Rama Sita … all were virtueous, Sita was abducted, the efforts put by Hanuman and others to rescue her. That message can not left un noticed.
So whenever a person stand near Rama, he should remember to remove his desire for other women, others money and also remember as not to harm others.//
What do u mean by stading with Rama?
Also, if these are virtues that you are looking for. Having a MGR temple would be a better one. Most of his movies have lot of great things.
They can be a great son, husband, citizen, king, and what not.
But, anyways, I like the character of Guha. Happy?

Hard Truth.

The roles of MGR in the films were impeccable, and that is one of the reason why he became CM.

In personal life also, we can say MGR was very kind and helping for poor. But MGRs personal life can not be considered as impeccable as that one of his film roles.

I thank you for having understood Guha. You please note that the more one is neutral and broad minded, the more he becomes greater and can understand every thing in their true perspective.

Often, when an incident or history is passed thro generations, (Ramayan is estimated to be around 7000 BC or so, and that wud mean circa 150 generations since) exaggeration/biased reporting/extrapolations/gaps in understanding/inability in articulation/want of means of preervation over generations wud distort several facts or characters.

Two, there is always a ‘confusion’ among the ignorat or the partially-initiated about the treatment to be given to the other characters in the mythology. Are they to be treated as Gods? Does he become “He”? It is true that there have been ‘gods’ like Hanuman, another character in Ramayan. I honestly believe that the author did not intend this to be a discussion on a religious topic, rather as a discussion on an epic poetry – ramayan – and treat Guha, as a character and not to confuse with the religious part of Ramayan.

True, in other religions, which are more recent origin, the roles are distinct between the God and other characters. (Old Testament should have such situations, maybe of lesser degree).

Sorry to continue the discusion in English on a Tamil blog

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: