Thiruchchikkaaran's Blog

“நித்யா இனிமேல் செய்ய வேண்டியது என்ன?” – இதைப் பற்றி விவாதிக்க வேண்டிய அவசியம் நமக்கு என்ன?

Posted on: March 24, 2010


நித்யா இனிமேல் செய்ய வேண்டியது என்ன? – சில நண்பர்கள் இந்தக் கவலையால் பீடிக்கப் பட்டவர்களாய், நமக்கும் இது பற்றிய அக்கறையை உருவாக்க முயல்கின்றனர்.

 நித்யா இனிமேல் செய்ய வேண்டியது என்ன?- நான் சொல்வேன், இதைப் பற்றி விவாதிக்க வேண்டிய அவசியம் நமக்கு என்ன?

தமிழக, தென்னிந்திய  மக்களிடையே பட்டி தொட்டி எங்கும் அறிமுகமானவர்  அண்ணன் நித்யா. அவருக்கு இப்போது சிறிது பின்னடைவும் கஷ்டமும் ஏற்ப்பட்டு உள்ளது.

எந்த ஒருவரும் கஷ்டப் படும் போது அதில் நாம் மகிழ்வு அடையக் கூடாது. அது நாகரீகமல்ல.  அது மனிதத் தன்மையும் அல்ல.விரைவில் நித்யாவும் அமைதி பெற நாம் வாழ்த்துவோம். 

ஒரு தனி மனிதனின் அந்தரங்கம் அம்பலப் படுத்தப் படும் போது உருவாகும் வேதனை கடுமையானது. புகழின் உச்சியில்  இருப்போர் இகழ்ச்சி அடையும் நிலை வருவது மிகவும் வேதனையானதே.  எனவே ஒரு தனி மனிதன் என்ற வகையிலே நித்யா அவர்கள் தன வேதனைகளில் இருந்து விடுபட்டு, நம்மைப் போல (சின்ன சின்ன தொல்லைகளை மட்டும் பட்டு), இயல்பு வாழ்க்கை  வாழ வேண்டும் என்பதே நமது  அவா. இது ஒரு விடயம். 

அதே நேரம், நித்யா அவர்கள் இப்போது செய்ய வேண்டியது என்ன என்பது பற்றி கவலைப் படவோ, அக்கறை கொள்ளவோ வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறதா, என்றால்

செய்தி தாள்களைப் புரட்டினால் பல செய்திகள் வருகின்றன.  அரிசி கடத்தல், பைனான்ஸ் மோசடி,  கள்ளக் காதல், விபசாரத்தில் சிக்கி பிடிபடுதல் இப்படி பல செய்திகள் வருகின்றன. இது போன்ற சம்பவங்களில் சம்பந்தப் பட்ட ஒவ்வொருவரும் அந்த பிரச்சினையில் இருந்து வெளிவர கன்சல்டன்சி கொடுக்க வேண்டிய பொறுப்பு, இந்திய சிந்தனையாளர்களுக்கு இருக்கிறதா? 

அருமை அண்ணன் நித்யாவினால், இந்திய சமுதாயத்திற்கும், மக்களுக்கும் , இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான மக்களால் பின்பற்றப் படும் இந்து மதத்திற்கும் ஏற்பட்ட பாதிப்பின் அளவு என்ன? அது சரி செய்வது எப்படி? – இதை எல்லாம் ஆராய்வதை விட்டு நித்யாவின் கிழித்து போன பல்லக்கு துணியை ஒட்டுப் போட்டு தைத்து, அவரை ஒய்யாரமாக தூக்கிச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம், இந்திய மக்களுக்கு இல்லை.

நித்யா வை  மீட்க  விரும்புவோர்  தனியே சங்கம் அமைத்துக் கொள்ளலாம். அதை எல்லா மக்களுக்குமான   பொது பிரச்சினை ஆக்க முயலாதீர்கள்.

 மக்களை முட்டாள்கள் என்று சிலர் நினைக்கலாம். ஆனால்  மக்கள் முட்டாள்கள்  அல்ல, அது மட்டுமல்ல, இந்திய நாட்டில் உள்ள பெரும்பானமையான மக்கள் மானத்தை முக்கியமாகக் கருதுபவர்கள் என்பதை நான் தெளிவாக சொல்வேன்.

Advertisements

5 Responses to "“நித்யா இனிமேல் செய்ய வேண்டியது என்ன?” – இதைப் பற்றி விவாதிக்க வேண்டிய அவசியம் நமக்கு என்ன?"

Sorry. There has been an overdose of blogs on Nithya. The blog-readers deserve a break.

Dear Thumbi Sir,

Our thanks for your visit and your valuable comments.

We are left with no choice but left to write about these as efforts are made to twist the mode of Hinduism to cover up the scandals.

We can see the continuoes sex scandals emanating from those who involve in Spiritual, Religious activites.

This has a deleterious effect on our Soceity, and on our religion as well.

Our intention is to highlight the dangers faced by Hindu religion.

We are not discussing about the sensual part,

We are worried about the Philosophy of Hinduism being twisted.

We request your further visits and comments!

“சிவ சூத்திரத்தின் தாந்திரீக வழிமுறை…”அப்டீன்னா இன்னா..?

பிளாட்பார ஆசாமி கேட்கிறான்..!

Dear Mr. Glady,

Its true that Nithya episode has gone akward. But we have to maintain our decorum. We have a lot of respect for you.

அன்பு சகோதரர் அவர்களுக்கு தாங்கள் என்மீது வைத்துள்ள மரியாதைக்கு நன்றி;ஆனாலும் நான் கோபத்துடன் குறிப்பிட்ட வரிகளைத் தணிக்கை செய்த பிறகு தங்கள் கடைசி வரியானது தேவையற்றதாகிவிட்டது; இதுபோன்ற அக்கிரமங்களை தாங்கள் கண்டிக்கக்கூடாதா?

வெளிப்படையாக நிகழ்த்தப்பட்ட ஒரு விபச்சாரத்துக்கு இத்தனை அலங்காரங்கள் தேவையா?

காந்திஜியும் தாகூரும் கூட இதுபோன்ற வழிமுறைகளைத் தான் பின்பற்றினார்களா?

தாங்கள் தமிழ் ஹிந்து வின் நன்மதிப்பைப் பெறவேண்டி மனசாட்சியை விற்றுவிட்டு மென்மையான போக்கைக் கடைபிடிக்கிறீர்களோ என்ற ஐயம் எழுகிறது;அதனைத் தாங்கள்தான் விளக்கவேண்டும்;மற்றபடி நான் கொடுத்த “லிங்க்”கை தவிர்த்திருக்கவேண்டாம்;

http://www.tamilhindu.com/2010/03/what-should-nithyananda-do-now-rajiv-malhotra-2/

மேலும் ஒரு வேண்டுகோள்:
நான் முன்பே குறிப்பிட்ட வண்ணமாக என்னை ‘மிஸ்டர்'(Mr) என்றோ ‘மிஸஸ்'(Mrs) என்றோ குறிப்பிடவேண்டாம்;நான் இரண்டும் அல்ல என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்;தாங்களே ஒருமுறை ‘சகோதரி’ என்று குறிப்பிட்டதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்;நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: