Thiruchchikkaaran's Blog

க‌ட்டி த‌ங்க‌ம் வெட்டி எடுத்து, காத‌ல் என்னும் சாறு பிழிந்து த‌ட்டி த‌ட்டி சிற்பிக‌ள் செய்த‌ உருவ‌ம‌டா!

Posted on: March 17, 2010


 

ந‌ண்ப‌ர்க‌ளே,

ஆன்மீக‌த்தை அளிப்ப‌தாக‌ கூறி அட்ட‌காச‌ சி.டி.க‌ள் அளிக்கும் “ச‌மூக‌ சேவ‌க‌ர்க‌ள்” அதிக‌மாகி விட்ட‌ நிலையிலே, நாம் ம‌ட்டும் சும்மா இருக்க‌ முடியுமா, ந‌ம்ம‌ பிலாகு ம‌ட்டும் என்ன‌ குறைந்த‌தா,  என‌வே பெண்க‌ளை வ‌ர்ணித்தும் புக‌ழ்ந்தும் க‌வி பாட‌ ஆர‌ம்பித்து விட்டோம்.  த‌லைப்பிலே அருமையான‌ ஒரு காத‌ல் பாட்டை போட்டு இருக்கிறோம்.

க‌ட்டி த‌ங்க‌ம் வெட்டி எடுத்து, காத‌ல் என்னும் சாறு பிழிந்து, த‌ட்டி,த‌ட்டி சிற்பிக‌ள் செய்த‌ உருவ‌ம‌டா என்று த‌மிழ் திரைப் ப‌ட‌ப் பாட‌ல் இருக்கிற‌த‌ல்ல‌வா,

அழ‌கிய‌ பெண்க‌ள் ப‌ற்றிய‌ மீதி வ‌ர்ண‌னையை இங்கே தொட‌ர்கிரோம்.

இந்த‌க் க‌விதையை எழுதிய‌வ‌ர் (நான் இல்லை) பெரிய‌ புல‌வ‌ர்,  ப‌டிக்க‌ கொஞ்ச‌ம் சிர‌ம‌மாக‌ தோன்றினாலும், உண்மையில் அதிக‌ சிர‌ம‌ம் இல்லை. இது த‌மிழ் இல‌க்க‌ண விதிப்ப‌டி எழுத‌ப் ப‌ட்ட‌ க‌விதை. இதை உங்க‌ளால் ப‌டிக்க‌ இய‌ல‌வில்லை என்றால், (க‌வ‌லைப் ப‌டாதீர்க‌ள், உங்க‌ளை த‌மிழ‌ர் இல்லை என்று நான் சொல்ல மாட்டேன்) … அத‌ற்க்கு ப‌த‌வுரை , விள‌க்க‌வுரை எழுதும் பொருப்பு எனக்கு வ‌ந்து சேரும்….. ப‌டியுங்க‌ள்.

மானிடர்க் கெல்லாம் யானெடுத் துரைப்பேன்;
விழிவெளி மாக்கள் தெளிவுறக் கேண்மின்,
முள்ளுங் கல்லு முயன்று நடக்கும்
உள்ளங் காலைப் பஞ்சென வுரைத்தும்
(Beauty of foot)
வெள்ளெலும் பாலே மேவிய கணைக்கால் 10

துள்ளும் வராலெனச் சொல்லித் துதித்தும் (beauty of leg)

 
தசையு மெலும்புந் தக்ககன் குறங்கை
இசையுங் கதலித் தண்டென வியம்பும்
நெடுமுடல் தாங்கி நின்றிடு மிடையைத்
துடிபிடி யென்று சொல்லித் துதித்தும்
15 (beauty of waist)
மலமும் சலமும் வழும்புந் திரையும்
அலையும் வயிற்றை யாலிலை யென்றும் (Beauty of stomach)


சிலந்தி போலக் கிளைத்துமுன் னெழுந்து
திரண்டு விம்மிச் சீப்பாய்ந் தேறி
உகிராற் கீற வுலர்ந்துள் ளுருகி 20

நகுவார்க் கிடமாய் நான்று வற்றும்
முலையைப் பார்த்து முளரிமொட் டென்றும்
(bosom)
குலையுங் காமக் குருடர்க் குரைப்பேன்;

 
வேர்வையு மழுக்கு மேவிய கழுத்தைப்
பாரினி லினிய கமுகெனப் பகர்ந்தும்
(neck)
வெப்பு மூத்தையு மேவிய வாயைத்
துப்பு முருக்கின் தூய்மல ரென்றும் 30
(beauty of mouth)
அன்னமுங் கறியு மசைவிட் டிறக்கும்
முன்னிய பல்லை முத்தென மொழிந்தும்
( tooth)
நீருஞ் சளியு நின்றுநின் றொழுகும்
கூரிய மூக்கைக் குமிழெனக் கூறியும்

நீட்டவு முடக்கவு நெடும்பொருள் வாங்கவும்
ஊட்டவும் பிசையவு முதவியிங் கியற்றும் 25
அங்கையைப் பார்த்துக் காந்தளென்றுரைத்தும் (hands)

 
தண்ணீர் பீளை தவிரா தொழுகும் 35

கண்ணைப் பார்த்துக் கழுநீ ரென்றும்

 
உள்ளுங் குறும்பி யழுகுங் காதை
வள்ளைத் தண்டின் வளமென வாழ்த்தியும்

 
கையு மெண்ணெயுங் கலவா தொழியில்
வெய்ய வதரும் பேனும் விளையத் 40
தக்க தலையோட் டின்முளைத் தெழுந்த
சிக்கின் மயிரைத் திரண்முகி லென்றும்
(hair)

 
சொற்பல பேசித் துதித்து நீங்கள்
நச்சிச் செல்லு நரக வாயில்


தோலு மிறைச்சியுந் துதைந்துசீப் பாயும் 45
காமப் பாழி, கருவிளை கழனி
தூமைக் கடவழி, தொளைபெறு வாயில்
எண்சா ணுடம்பு மிழியும் பெருவழி,
மண்பாற் காமங் கழிக்கு மறைவிடம்,


நச்சிக் காமுக நாய்தா னென்றும் 50
இச்சித் திருக்கு மிடைகழி வாயில்;

திங்கட் சடையோன் திருவரு ளில்லார்
தங்கித் திரியுஞ் சவலைப் பெருவழி
புண்ணிது வென்று புடவையை மூடி
உண்ணீர் பாயு மோசைச் செழும்புண், 55
மால்கொண் டறியா மாந்தர் புகும்வழி;
நோய்கொண் டொழியா நுண்ணியர் போம்வழி;
தருக்கிய காமுகர் சாரும் படுகுழி
செருக்கிய காமுகர் சேருஞ் சிறுகுழி
பெண்ணு மாணும் பிறக்கும் பெருவழி 60
மலஞ்சொரிந் திழியும் வாயிற் கருகே
சலஞ்சொரிந் திழியுந் தண்ணீர் வாயில்
இத்தை நீங்க ளினிதென வேண்டா
பச்சிலை யிடினும் பத்தர்க் கிரங்கி
மெச்சிச் சிவபத வீடருள் பவனை 65
முத்தி நாதனை மூவா முதல்வனை
அண்ட ரண்டமு மனைத்துள புவனமும்
கண்ட வண்ணலைக் கச்சியிற் கடவுளை
ஏக நாதனை, இணையடி யிறைஞ்சுமின்
போக மாதரைப் போற்றுத லொழிந்தே! 70

இந்த‌ பாட‌லை  இய‌ற்றிவ‌ர் ப‌ட்டின‌த்தார்!

 

ந‌ண்ப‌ர்க‌ளே, இந்த‌ப் பாட‌ல் ஒரு துற‌வியால் எழுத‌ப் ப‌ட்டது, துற‌விக‌ள் மாத‌ரைப் ப‌ற்றி எப்ப‌டி நினைப்பார்க‌ள் என்ப‌தை இதை உண‌ர்த்துகிற‌து என்ப‌தைக் காட்ட‌வே நாம் இதை காட்டினோம். இந்த‌ப் பாட‌ல் இல்ல‌ற‌த்தாற்க்காக‌ எழுத‌ப் ப‌ட்ட‌த‌ல்ல‌.

இந்த‌ப் பாட‌ல் பெண்களை குறை கூறி எழுதப் ப‌ட்ட‌ பாட‌ல் அல்ல‌ என்ப‌தையும், பெண்கள் என்றாலே வெறும் போக‌ப் பொருளாக‌ என்னும் ஆண்க‌ளின் காம‌ எண்ண‌த்தை க‌ண்டித்து எழுத‌ப் ப‌ட்ட‌ பாட‌ல் என்ப‌தையும் சுட்டிக் காட்ட‌ விரும்புகிறோம்.

Advertisements

2 Responses to "க‌ட்டி த‌ங்க‌ம் வெட்டி எடுத்து, காத‌ல் என்னும் சாறு பிழிந்து த‌ட்டி த‌ட்டி சிற்பிக‌ள் செய்த‌ உருவ‌ம‌டா!"

இதப்படிச்சா பெண்ணாசையே போய்டும். ஆத்தி…நான் கொஞ்சம் அனுபவிக்கனும் சாமி. இதுக்கு அப்பறமா வரேன். நன்றி.

‘அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது அதனினும் அரிது பெண்டிராய் பிறத்தல்’ என்றும் ஒரு கவிஞன் கூறினான்;

கவிஞரைப் பெற்றவரும் பெண்தானே?

தன் “இயலாமையால்” ஒரு சில ஆண்கள் பெண்களை இதுபோல இழிவாக நினைத்தால் அதற்காக யாம் வருத்தப்படப்போவதில்லை;

இத்தனை அழுக்குகளைக் காட்டிலும்
அழுக்காறு கொண்ட ஆண் மகனை
அழகனெனக் கட்டியணைத்து
அவன் பிள்ளை சுமந்து
அவள் தசை தளர்ந்து போன நிலையை
ஒரு ஆண் கவிஞன்
அருவருப்பாக வர்ணிக்கும் நிலையை
அடையும் பெண்மையை நான் போற்றுவேன்,பராபரமே..!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: