Thiruchchikkaaran's Blog

சாமியாரா இருந்தா என்னய்யா…. அவனும் மனுசந்தானே ……லேட்டஸ்ட் பஞ்ச் டயலாக் கலக்கல்கள்!

Posted on: March 12, 2010


சாமியாரா இருந்தா என்னய்யா…. அவனும் மனுசந்தானே …… .

இது போன்ற ஆதரவு  பிளஸ் அனுதாப கலக்கல் பஞ்ச் டயலாக்குகள் தளங்களில் உலா வருகின்றன.

நித்யானந்தா விவகாரம் வெளியே வந்தாலும் வந்தது. துறவு, ஆன்மீகம், பிரம்மச்சாரியம் இவை பற்றி  எல்லாம் பலரும் அலசி ஆராய்ந்து வெளுத்துக் கட்டுகின்றனர். நம்முடைய நாடு, சமூகம் எல்லாமே ஜனநாயக முறையில் உள்ளது,  இந்து மதமும் ஜனநாயக மதம் ஆயிற்றே!

எனவே எல்லோரையும் பாராட்டி நாமும் கோதாவிலே இறங்கி  இது பற்றி கட்டுரை வெளியிட்டு விட்டோம்.

துறவி என்றால் என்ன? துறவு என்பது என்ன?

துறவு என்பது முதிர்ச்சி அடைந்த ஒரு மன நிலை.

இயற்கையுடன் மனிதன் நடத்தும் இறுதிப் போராட்டமே துறவு.

இல்லறத்தவரின் மன நிலை வேறு. அவர்களின் சிந்தனைத் தளங்கள் வேறு.  இல்லறத்தவர்கள் மனைவியை அல்லது காதலியை காணும் போது அவர்களுக்கு காதல் உணர்வு வருகிறது, அதை அவர்கள் தடுக்க விரும்பவில்லை, அவர்களால் தடுக்க முடியவும் இல்லை.  அதே போலத்தானே துறவிக்கும் இருக்கும் என சில பரந்த உள்ளம் படைத்தவர்கள் முடிவு கட்டி விடுகின்றனர். எனவே தான் “விடுய்யா … பாவம்…. நமக்கு ஆசை இல்லையா…. அதைப் போல அவனுக்கும் ஆசை இருக்குமையா” என,  நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்னும் வகையிலே கருத்து தெரிவிக்கின்றனர்.

ஆனால் ஒருவன் முதலில் எதற்காக துறவு நிலையை மேற்கொள்ள வேண்டும் என எண்ணிப் பார்க்க வேண்டும். புத்தர் எதற்க்காக துறவு நிலையை மேற்கொண்டார்.  ஒரு நாள் அவர் ஒரு மிக  வயதான  மனிதர், ஒரு பெரு நோயாளி , ஒரு பிணம் ஆகியவற்றிக் கொண்டார். துன்பங்களில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள முடியாத நிலையிலேயே மனிதன் இருப்பதாய் அவர் உணர்ந்து கொண்டு விட்டார். துன்பம் இல்லாத நிலையை அடைய அவர் உறுதியான முடிவு எடுத்து விட்டார். அந்த துன்பம் இல்லாத நிலையை, துன்பங்களில் இருந்து விடுபட்ட நிலையை அடைவதை தவிர வேறு எதுவும் தனக்கு அவசியமல்ல , முக்கியமல்ல  என்பதை புத்தர் நன்றாகப் புரிந்து கொண்டு விட்டார். அன்பு மனைவியை, அருமைக் குழந்தையை விட்டு விட்டு துறவு பூண்டு காட்டுக்குப் போனார்.

இந்த்ரியார்த்தேஷு வைராக்கிய – மன அஹங்கார எவ ச ஜன்ம  மிருத்யு ஜரா வியாதி சுக துக்க தோஷானு    அனுதர்ஷன (கீதை (13-8))

பிறப்பு இறப்பு மூப்பு   சாக்காடு உள்ள வாழ்க்கையை  உணர்ந்து புலன் இன்பங்களை விட்டு வைராக்கிய மன நிலை அடைபவன்!என்கிறது கீதை!

இந்த உலகத்தில் நாம் இன்பம் என்று கருதும் ஒவ்வொரு பொருளும், உண்மையில் நாம்  சிக்கிக் கொண்ட  கண்ணி வலையே (trap) என்பதே துறவியின் மன நிலை .

யாதனின் யாதனின் நீக்கியான் நோதல்

அதனின் அதனின் இலன் (குறள் – 341,  அத்தியாயம்  – துறவு)

ஒருவன் எந்தப் பொருளிலிருந்து எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கிறானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை என்கிறார் வள்ளுவர்.

தன சவுக்கியமு தா நெறுகக யொருலகு தகு போதன சுகமா? கனமகு புலி கோ ரூப மைதே தியாகராஜனுதன சிசுபாலு கல்குனோ ராமா நீ யெட

இந்த உலகத்தவர் சிலர் செல்வம் மற்றும் சுகங்களை தேடியவாறே வுபதேசமும் செய்கின்றனர்.  பசுத்தோல் போர்த்திய புலி பால் குடுக்குமா என்கிறார் தியாகராஜர்!

இயற்கையிடம் வாங்கிய அடி போதும்,  இயற்கையே இனி நீ குடுக்கும் இன்பமும் வேண்டாம், துன்பமும் வேண்டாம்,  உன்னிடம் அடிமையாக வாழாமல் விடுதலை பெற்று சுதந்திரம் அடைவேன் என,  வாங்கிய அடியின் வலியில், வேதனையின் மன  உறுதி பெற்று ஒருவன் மேற்கொள்வதே துறவு.

இந்தக் காலத்தில் துறவு சாத்தியமா என்கின்றனர் சிலர். இந்தக் காலத்தில் மனிதனின் அடிமை நிலை மாறி விட்டதா? தோல் சுருங்கி பார்வை மங்கி, செவி கேட்கும் திறன் இழந்து தள்ளாடும் முதுமை இப்போது மனிதனுக்கு இல்லையா? இந்தக் காலத்தில் மனிதனுக்கு மரணம்  வரவில்லையா? நோயால் துன்பப்  படுவதில்லையா?  இந்த Problems  அப்படியே இருக்கிறதே. அதற்க்கான Solutionம் அப்படியே தான் இருக்கிறது. இல்லையானால் புதிய தீர்வு இருக்கிறதா? மாற்று தீர்வு இருந்தால் சொல்லுங்கள். உங்களிடம் மாற்று தீர்வு இல்லை என்றால் , ஏற்க்கனவே இருக்கும் தீர்வை  உபயோகப் படுத்துவோம்.

இல்லறத்தாரை  பிரம்மசார்யம் கடைப் பிடிக்க சொல்லவில்லை. துறவிகள் பிரம்மசார்யம் கடைப் படிக்க வேண்டும் – முடியா விட்டால் திருமணம் செய்து இல்லறத்தார் ஆகி ஆன்மீகப்  பணி செய்யலாம். யாரும் தடுக்கவில்லை.

பெரிய சாமியார் போல வேடமிட்டு கள்ளக் காதல் செய்வது சரியா?

Advertisements

33 Responses to "சாமியாரா இருந்தா என்னய்யா…. அவனும் மனுசந்தானே ……லேட்டஸ்ட் பஞ்ச் டயலாக் கலக்கல்கள்!"

//அந்த துன்பம் இல்லாத நிலையை, துன்பங்களில் இருந்து விடுபட்ட நிலையை அடைவதை தவிர வேறு எதுவும் தனக்கு அவசியமல்ல , முக்கியமல்ல என்பதை புத்தர் நன்றாகப் புரிந்து கொண்டு விட்டார். அன்பு மனைவியை, அருமைக் குழந்தையை விட்டு விட்டு துறவு பூண்டு காட்டுக்குப் போனார்.//
மரணம்வரை துணையாய் இருப்பேன் இன்று கூறி மனந்துவிட்டி, கையில் கொழந்தையையும் கொடுத்துவிட்டு. ஒருவன் நள்ளிரவில் வீட்டை விட்டு போனால் என்ன சொல்லுவீர்கள்?
அப்படி வெளியே வந்த புத்தர் நோய், மூப்பு, மரணம் ஆகியவற்றை வென்றாரா?
எனக்கு தெரிந்தவரை, மரணத்தை வென்றவர் ஒருவரே.
அன்புடன்,
அசோக்

அசோக் அவர்களே,

புத்தர் எல்லா உலக மக்களின் நன்மைக்காக தன் குடும்ப நன்மையை விட்டு சென்றார். அது தன்னலம் கருதா தியாகம். சொத்து சேர்க்கவோ, நல வாழ்வு வாழவோ, வேறு பெண்ணுடன் குடித்தனம் நடத்த விரும்பியோ, குற்றச் செயல்களைப் புரியவோ தன் மனைவியைவிட்டு பிரியவில்லை.

இந்த உலகத்தில் பிறந்தவர் யாரும் இறக்காமல் இல்லை. எல்லோரும் இறந்துதான் போயுள்ளனர். எல்லோரின் உடலும் அழிந்து தான் போய் இருக்கிறது. ஆனால் உடல் அழியும் போதும் , உயிர் மீண்டும் இன்னொரு உடலைப் பெற்று மீண்டும் மரணம் அடைவதாகவும், இது தொடர்ச்சியாக பல பிறவிகள் எடுப்பதாகவும், ஒவ்வொரு வாழ்க்கையிலும் பல் துன்பங்களை அனுபவிப்பதாகவும் புத்தர் தன கோட்ப்பட்டை வகுத்துள்ளார் (அதாவது இது புத்தரின் கோட்பாடு). இப்படி பல இன்னல்களுக்கு காரணமாக இருக்கும் பிறப்பு இறப்பு சுழற்ச்சி சக்கரத்தில் இருந்து விடுபடவதே மரணத்தை வெல்வதாக இந்திய ஆன்மீக சிந்தனையாளர்களால் கருதப் படுகிறது.

//அப்படி வெளியே வந்த புத்தர் நோய், மூப்பு, மரணம் ஆகியவற்றை வென்றாரா?//

புத்தர் எந்த இன்னலும் தன்னை தாக்க முடியாத ஒரு நிலையை அவர் அடைந்ததாக, துன்பங்களை வென்றதாகவே குறிப்பிட்டு இருக்கிறார். மனித உடல் பிணி, மூப்பு , சாக்காடு அடைகிறது. அதே நேரம் புத்தர் கூறியது போல உடல் அழிந்த பின்னும் உயிர் வாழ்கிறது என்பது உண்மையானால், புத்தர் தன்னுடைய உயிர் இன்னொரு பிறப்பை அடையாத அளவுக்கு தன நிலையை தானே தீர்மானிக்கும் சுதந்திரம் அடைந்தவாராக இருந்திருந்தால் இருந்தால், அதனால் அவர் உடலை விட்ட பின் வேறு பிறப்புகளை எடுக்காமல், தன்னை பிணி மூப்பு , சாக்காடு துன்பம் தாக்காமல் காத்து, அவற்றை வென்றவராக கருதலாம் (qualified conclusion or conditional conclusion).

நாம் புத்தரை ஒரு உதாரணமாக காட்டியது துறவிகள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாக காட்டினோம்.

மக்கள் நலத்துக்காக புத்தர் துறவறம் சென்றார் என்பது அப்பட்டமான பொய். ஒரு சாம்ராஜ்யம் இவரின் கீழ் இருந்தது, ஒரு குடும்பம் இருந்தது. இரண்டையும் நிராகரித்து, அவர்களை பற்றி எந்த ஒரு கவலையும் இல்லாமல். தன் குழப்பம் தீர, ஓடி பொய், ஞானம் தேடுகிறேன் என்று தவம் இருந்து. பிறகு ஆசையே துன்பத்திற்கு காரணம் என்ற கருத்தை, அவரை பின் பற்றியவர்களுக்கு கொடுத்தார்.
Nothing much to spirituality from him as everyone thinks.
Ashok

திரு. அசோக் அவ‌ர்க‌ளே,

//மக்கள் நலத்துக்காக புத்தர் துறவறம் சென்றார் என்பது அப்பட்டமான பொய். ஒரு சாம்ராஜ்யம் இவரின் கீழ் இருந்தது, ஒரு குடும்பம் இருந்தது. இரண்டையும் நிராகரித்து, அவர்களை பற்றி எந்த ஒரு கவலையும் இல்லாமல். தன் குழப்பம் தீர, ஓடி பொய், ஞானம் தேடுகிறேன் என்று தவம் இருந்து. பிறகு ஆசையே துன்பத்திற்கு காரணம் என்ற கருத்தை, அவரை பின் பற்றியவர்களுக்கு கொடுத்தார்.//

சித்தார்த்த‌ர் துறவ‌ற‌ம் பூண்ட‌ போது, அர‌ச‌ராக‌ இல்லை. அர‌சின் எந்த‌ பொறுப்பிலும் இல்லை. என‌வே புத்த‌ர் துற‌வ‌ற‌ம் பூண்ட‌தால் நாட்டுக்கோ, ம‌க்க‌ளுக்கோ எந்த‌ வித‌ பாதிப்பும் இல்லை. அவ‌ர் துற‌வ‌ற‌ம் பூண்ட‌தால் அவ‌ருடைய‌ த‌ம்பி அர‌சராக‌ பொறுப்பேற்று இருக்கிறார்.

//Nothing much to spirituality from him as everyone thinks.//

முத‌லில் நீங்க‌ள் ஆன்மீக‌ம் என்றால் என்ன‌ என்று புரித‌ல் செய்து கொள்ளுங்க‌ள். அத‌ற்க்குப் பிற‌குதான் புத்த‌ர் ஆன்மீக‌வாதியா இல்லையா என்ப‌தை ப‌ற்றி உங்க‌ளால் ஆராய‌ இய‌லும். ஆன்மீக‌ம் என்ப‌து ஒருவ‌ன் த‌ன் ம‌ன‌ நிலையை உய‌ர்த்தி, ம‌ன‌ம் வ‌லிமை பெற்ற‌ நிலையை அடைவ‌தே ஆன்மீக‌ம். புத்த‌ரும் இன்னும் ப‌ல‌ அறிஞ‌ர்க‌ளும் த‌ங்க‌ள் புல‌ன‌ட‌க்க‌ம் மேற்கொண்டு, புல‌ன் இன்ப‌ சிந்த‌னைக‌ளை த‌விர்த்து, தியான‌ம் போன்ற‌ ம‌ன‌க் குவிப்பு ப‌யிற்சியை ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ள் கைக் கொண்டு த‌ங்க‌ளின் ம‌ன‌ நிலையை தாங்க‌ளே உய‌ர்த்தி அமைதியான‌ ம‌ன நிலையை அடைந்து இருக்கினற‌ன‌ர். அவ‌ர்க‌ளின் ம‌ன‌ அமைதியின் வ‌லைமை எந்த‌ அளவிற்க்கு இருந்த‌து என்றால் பெரிய‌ போர் வீர‌ர்க‌ளாக‌ இருந்த‌ பேர‌ர‌ச‌ர்க‌ளை கூட‌ அமைதி பாதைக்கு கொண்டு வ‌ரும் வ‌லிமை உடைய‌தாக இருந்த‌து. என‌வே ஆன்மீக‌ம் என்ப‌து ஏதொ ஒரு சில‌ நூல்க‌ளை வைத்துக் கொண்டு, அந்த‌ நூல்க‌ளில் சொல்ல‌ப் ப‌ட்ட‌தை அப்ப‌டியே ந‌ம்பியே ஆக‌ வேண்டும் என்று க‌ட்டாய‌ப் ப‌டுத்துவ‌து அல்ல. ஆன்மீக‌ம் என்ப‌து செய‌ல் முறையில் , பிராக்டிக‌லாக‌ உண‌ர‌க் கூடிய‌ ம‌ன‌தின் உய‌ர்த்த‌ப் ப‌ட்ட‌ நிலையே. அந்த‌ நிலையை இன்னும் உய‌ர்த்தி விடுத‌லை அடைந்த‌ நிலையை பெற‌ முடியும் என்ப‌தே புத்த‌ரின் கோட்பாடு.

ம‌திப்பிற்குரிய ச‌கோத‌ர‌ர் அசோக் குமார் க‌ணேச‌ன் அவ‌ர்க‌ளுக்கு, நான் உங்க‌ளிட‌ம் சொல்லிக் கொள்ள‌ விரும்புவ‌து என்ன‌ என்றால், நீங்க‌ள் பின் ப‌ற்றும் ம‌த‌ம் ம‌ட்டுமே உண்மையான‌து என்று எண்ணிக் கொண்டு, பிற‌ ம‌த‌ங்க‌ளின் க‌ருத்துக்க‌ள் எல்லாம் பொய்யான‌வை என‌ எப்ப‌டியாவ‌து அடித்து சொல்ல‌ வேண்டும் என்று அவ‌ச‌ரப் ப‌ட்டால், உண்மையை உங்க‌ளால் உண‌ர முடியாது. ஏதாவ‌து ஒரு சார்பு நிலையை எடுத்து விட்டால் ந‌டு நிலையாக‌ சிந்திக்க‌ இய‌லாது. என‌வே முத‌லில் ந‌டு நிலையாக‌ சிந்திக்கும் ம‌ன‌ப் போக்கை உருவாக்கிக் கொள்ளுங்க‌ள். அப்போது உண்மைக‌ளை தைரியமாக‌ எதிர் கொள்ளும் ம‌ன‌ப் ப‌க்குவ‌ம் உருவாகும். அப்போது உங்க‌ளின் க‌ருத்துக்க‌ளும் சிற‌ப்ப‌க‌ இருக்கும். இப்போது எழுதுவ‌தைப் போல‌, புத்த‌ரிட‌ம் ஒரு ஆன்மீக‌மும் இல்லை…. என்று சொல்வ‌தைப் போல‌ எல்லா ம‌த‌ங்க‌ளும் த‌வ‌றான‌வை, என் ம‌த‌ம் ம‌ட்டுமே உண்மையான‌து என்று கூரையில் நின்று கூவ‌லாம். ஆனால் ம‌க்க‌ள் நிதான‌மாக‌ சிந்திப்ப‌வ‌ர்க‌ள்.

We are living in a time when sensitivities are at the surface, often vented with cutting words. Philosophically, you can believe anything, so long as you do not claim it to be true. Morally, you can practice anthing, so long as you do not claim that it is a “better” way. Religiously, you can hold to anything, so long as you do not bring Jesus Christ into it.

Am I right???

Thanks,
Ashok

Dear Brother Ashok Kumar Ganesan,

//Philosophically, you can believe anything, so long as you do not claim it to be true.//

Philosophically, one can believe anything, but it can be claimed as true, if its verifiable.

//Morally, you can practice anthing, so long as you do not claim that it is a “better” way.//

Morally, one can practice anthing, as long as it does not create animosity within people, as long as it does not spread hatredness.

Morally, one can practice anthing, as long as they dont confront, agitate, abuse, debase others practices without any reason.

//Religiously, you can hold to anything, so long as you do not bring Jesus Christ into it. //

Jesus Christ is a Wonderful Philosopher, he worked for the cause of harmony, love and peace. We will explain in detail in these blog about Jesus Christ . We will try to release Jesus Christ from the clutches of hate spreaders, who prefer adamancy, hate and Confrontation.

இயேசுகிறிஸ்துவைக் குறித்து யாரெல்லாம் எழுதுவது என்று வரைமுறை கிடையாது என்று திருச்சி எண்ணுகிறது போலும்;தைரியமிருந்தால் முகமதுவைக் குறித்தும் எழுதிவைக்கட்டும்..!

சில்சாம் அவர்களே,

நான் இயேசு கிறிஸ்துவை குறித்து நான் எழுத வேண்டிய அவசியம் இருக்கிறது. ஏனெனில் இயேசு கிறிஸ்துவின் அன்புக் கருத்துக்களுக்கு, விட்டுக் கொடுக்கும் கருத்துக்களுக்கு எதிரான வெறுப்புக் கருத்துக்களை , முரட்டுக் கருத்துக்களை அவர் பெயரால் பலரும் பரப்பி வருகின்றனர். இயேசு கிறிஸ்துவின் கருத்துக்கு எதிரான கருத்தை அவர் பெயராலே பரப்பும் போது நாங்கள் வாளா இருக்க முடியாது.

முஹமது பற்றியும், இஸ்லாம் பற்றியும் பல கட்டுரைகள் வெளியாகும்.

எல்லா தைரியமும் இருக்கிறது. இந்துக்கள் பலரே என்னை எதிர்த்தும் திட்டியும் எழுதி வருகின்றனர். இன்னும் சொல்லப் போனால் எனக்கு மிகப் பெரிய எதிர்ப்பு இந்துக்களிடம் இருந்துதான் வருகிறது.

நண்பர் திரு. சில் சாம் அவர்களே,

//இயேசுகிறிஸ்துவைக் குறித்து யாரெல்லாம் எழுதுவது என்று வரைமுறை கிடையாது என்று திருச்சி எண்ணுகிறது போலும்;தைரியமிருந்தால் முகமதுவைக் குறித்தும் எழுதிவைக்கட்டும்..!//
என்னை அறிணையாக விளிக்கும் அளவுக்கு சினம் பொங்கி எழுதுகிறீர்களே.

இது வரையில் நான் எந்த இடத்திலும் இயேசுவை கொச்சைப் படுத்தியோ, இகழ்ந்தோ எழுதியது கிடையாதே. இயேசுவை பாராட்டியும், மரியாதை செய்துமே எழுதி இருக்கிறேன். அப்படி இருக்கையில் நீங்கள் என்னவோ, இப்படி பேசுவதைப் பார்த்தால் உங்களிடம் அனுமதி வாங்கிக் கொண்டுதான் எழுத வேண்டும் என்று சொல்வது போல இருக்கிறது.

இது ஒரு புறம் இருக்க நீங்களே பல இந்துக் கடவுள்களை இகழ்ந்தும், திட்டியும் எழுதி இருக்கிரீர்கள். இந்திய சமுதாயம் சகிப்புத் தன்மையான சமுதாயமாகவே உள்ளதால் அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல பொறுத்தல் செய்கிறது. ஒரு நண்பன் நம் குடுமபத்தை இகழ்ந்தால் நட்பு கருதி அதைப் பொறுப்பது போல,

நீங்களும் , உங்களைப் போல பிற மதத்தவரின் தெய்வங்களை இகல்பவர்களும் மனம் திருந்திய மாந்தராகி நாகரீகப் பாதைக்கு திரும்புவீர்கள் என வழியில் விழி வைத்துக் காத்து இருப்போம்.

நீங்கள் பிற மதக் கடவுள்களை திட்டுவது போல மற்றவர்கள் கிறிஸ்துவை திட்டுவார்கள் என எண்ண வேண்டாம், ஆத்திரத்தில் அவசரப் பட வேண்டாம். விவேகானந்தர், காந்தி, ராஜாஜி, பாரதி உள்ளிட்ட பல இந்திய சிந்தனையாளர்கள் இயேசு கிறிஸ்துவை பாராட்டி உள்ளனர்.

Mr.Trichy,
Again here I can see your double standardness. You are talking about the words of Jesus right…. Probably in your dictionary, the words of Love are sweet and pleasing YOU. Probably, you are thinking that the words of Love should be aligned with your thought process.
The same Jesus who spoke those sweet words of love, spoke the scorching words, which are real harsh. But both are words of love. Just like a father, who talks sweetly and also harsh, threatening words of evil effects of our bad deeds.
How do you know about Jesus? Thru the bible only right? Or you met him personally? When you are ready to believe Jesus and his few of sweet messages, why you are not ready to believe the other words in the bible? Is that because it is not going well with your thoughts?
You are one of the biggest hypocrite I know in the recent times. I will go thru all your articles and provide my feedbacks sir. I dont think my feedback are going to be pleasant ones. The worst sinners are acceptable that the hypocrites.

Hard Truth

//How do you know about Jesus? Thru the bible only right? Or you met him personally? When you are ready to believe Jesus and his few of sweet messages, why you are not ready to believe the other words in the bible? Is that because it is not going well with your thoughts?//

I did not belive any satement. I judge the merit in any statement based on the statement in it.

History is a deep ocean. I can not stand any Guarantee for the history of Jesus. That is the Job of the Historians.

We respect and appreciate the good things in Jesus statement.

“இன்று இந்தியா ஜெயித்தது” என்பது அஃறிணையா நண்பரே..? தங்கள் மீது எந்த நிலையிலும் காழ்ப்புணர்ச்சியுடன் நான் தாக்குதல் நடத்த விரும்பியதில்லை;

நான் தெய்வமாகத் தொழும் ஒருவரை நீங்கள் சாதாரணமான மகான் ரேஞ்சுக்குத் தாழ்த்திவிட்டு அதனை உயர்த்துவது என்றெண்ணினால் நான் ஒன்றும் செய்யமுடியாது; ஆனால் பரிதாபப்படுவேன்..!

இன்றைக்கு மனுக்குலம் சந்திக்கும் பிரச்சினைகள் அனைத்துக்கும் மூலக்காரணத்தைச் சொல்லி அதற்கும் தீர்வும் தரும் இயேசுபெருமானை முழுவதுமாக ஆராயாமல் நுனிப்புல் மேயும் வண்ணமாக நீங்கள் எதையோ எழுதினால் அதனை சகித்துக் கொண்டிருக்கமுடியாது;

நாம் எந்த தெய்வத்தையும் நிந்தித்ததில்லை;தெய்வத்தில் பன்மையும் கிடையாது;அவை தெய்வம் என்று எண்ணி மண்டியிட்டு தன்னைத் தொலைக்கும் என்னைப் போன்ற மனிதனை மீட்கவே போராடுகிறோம்; காரணம் அதன் கோடூர முகத்தையும் சூழ்ச்சியையும் முழுவதும் அறிந்திருக்கிறோம்;

உங்கள் அனைத்து தடுமாற்றங்களும் விதண்டாவாதங்களும் இணையத்தளத்தில் ஏற்கனவே கொட்டிக்கிடக்கிறது; அவை போதும்,நீங்கள் யாரென்று சொல்ல..!

//நான் தெய்வமாகத் தொழும் ஒருவரை நீங்கள் சாதாரணமான மகான் ரேஞ்சுக்குத் தாழ்த்திவிட்டு அதனை உயர்த்துவது என்றெண்ணினால் நான் ஒன்றும் செய்யமுடியாது; ஆனால் பரிதாபப்படுவேன்..! //

ஐயா, இயேசு கிறிஸ்துவை சர்ச்சுக்கு வந்து தொழா தயார் என்று பல முறை சொல்லி விட்டேன்.

//நாம் எந்த தெய்வத்தையும் நிந்தித்ததில்லை;தெய்வத்தில் பன்மையும் கிடையாது;அவை தெய்வம் என்று எண்ணி மண்டியிட்டு தன்னைத் தொலைக்கும் என்னைப் போன்ற மனிதனை மீட்கவே போராடுகிறோம்; காரணம் அதன் கோடூர முகத்தையும் சூழ்ச்சியையும் முழுவதும் அறிந்திருக்கிறோம்;//

இந்து தெய்வங்களை பேய், பிசாசு என்று இகழ்ந்து விட்டு, அவர்கள் தெய்வங்களே இல்லை என்பீர்கள். அதைப் போல கிறிஸ்துவர் அல்லாத பிற மதத்தவர் இயேசு கிறிஸ்துவை இகழ்ந்தால் என்ன செய்வீர்கள்? மோதல் தான் வரும், நாமோ யாரையும் இகழ வேண்டாம் என்கிற நல்லிணக்கத்தை வளர்க்கிறோம். இதுதான் வித்யாசம்.

தெய்வத்தில் பன்மை கிடையாது என்கிறீர்கள். இது வெறும் நம்பிக்கை தான். தெய்வம் என்பதே வெறும் நம்பிக்கை தானே. சண்டை போடாமல் அமைதியாக வணங்குங்கள் என்றால் உங்கள் நம்பிக்கையை பிறர் மேல் திணிக்க எத்தனித்து, மோதல் உருவாகிறது. சரி, ஒரே தெய்வம் தான் சொல்கிறீர்கள். முதலில் ஒரு தெய்வம் இருப்பத்திக் காட்டுங்கள். அதற்கு நிரூபணம் கொடுங்கள். நானே அவர்களிடம் உங்கள் சார்பாக பிரச்சாரம் செய்வேன்.

//தெய்வம் என்பதே வெறும் நம்பிக்கை தானே. //
The above statement is another . OK, I will ask the question in your own way? What is the proof you have to say that GOD is just a beliefe and nothing more?
// இயேசு கிறிஸ்துவை சர்ச்சுக்கு வந்து தொழா தயார் என்று பல முறை சொல்லி விட்டேன். //
. I cannot go and call each every person as “Father” or “Spouse” to maintain harmony. I am fine with just ONLY ONE FATHER, ONLY ONE SPOUSE and in the same way, ONLY ONE GOD.
People with multiple FATHERS and multiple SPOUSES are called with some unpleasant names. And the same (or even worse) applies, if they are having multiple GODS.

Hard Truth

MR. HARD TRUTH,

I did not insist you to visit other religions worshipping place.

I told that I would come and worship in Chrch to promote religious harmony. I also mentioned that I ma ready to worship in Mosques to promote Religious harmony.

This blog, and me try to create religious harmaony.

We know that funadamentalists wont be interested in religious harmony, and they will resisit

//What is the proof you have to say that GOD is just a beliefe and nothing more?//

If its more than belief, proove it. Show it!

Proof is required only to show that there is some thing. When it is nothing , nothing is there!

இரசா(ஆ)பாசம் உருவாக்குவதில் “கடின உண்மை” (Hard Truth) பெரிய ஆளாக்கும்…மீண்டும் மீண்டும் பலதார மேட்டரையே ‘டச்’ பண்றேளேன்னா..!

// ஐயா, இயேசு கிறிஸ்துவை சர்ச்சுக்கு வந்து தொழத் தயார் என்று பலமுறை சொல்லிவிட்டேன் //

நண்பரே,இயேசுகிறிஸ்துவைத் தொழுவதென்பது “முணுமுணு”வென்று எதையோ ஓதும் காரியமல்ல;

நான்கூட நேஷனல் பர்மிட் லாரியை ஓட்ட தயார்;ஆனால் ஸ்டியரிங்கை மட்டும் நீங்கள் பிடித்துக் கொள்ளுங்களேன்..!

இயேசுகிறிஸ்துவைத் தொழும் முன்பதாக அவர் என்னுடைய “கர்ம,கன்ம வினைகளைத் தீர்த்த விநாயகர்” என்பதையறியவும் அதனை ஏற்கவும் வேண்டும்; அதற்கான இடுபொருளாக தம் ஜீவனையே தந்தவர் என்று உணரவேண்டும்; முந்திய பாவ காரியங்களை இனி செய்யாதிருக்கும் உறுதி கொள்ளவேண்டும்; செய்தவற்றுக்காக வருந்தவும் வேண்டும்; மறுமை வாழ்வில் பங்கேற்கும் நம்பிக்கையினை ஏற்பதுடன் அதனை அடுத்தவருக்கு விளம்பவும் வேண்டும்;

இதையெல்லாம் செய்யாமல் செய்யும் எதுவும் குருட்டுப் பிச்சைக்காரனுடைய மாயத்தைப் போலவே முடியும்..!

இயேசு கிறிஸ்துவை சரியாகப் புரிந்து கொண்டவர் யார்?

கணவன் மனைவியை விவாகரத்து செய்யலாமா என்று கருத்துக் கணிப்பு நடத்துபவரா?

அல்லது விபச்சாரக் காரணத்துக்காக அல்லாமல் வேறு எந்த காரணத்துக்ககவும் மனைவியாய் தள்ளி வைக்கக் கூடாதே என்று சொல்லுபவரா?

இயேசுவை சரியாகப் புரிந்து கொண்டால் விவாகரத்து செய்யலாமா என கருத்துக் கணிப்பு நடத்துவதற்கு அவசியம் என்ன?

பெரும்பாலவர்கள், பல காரணங்களை சொல்லி விவாகரத்து செய்ய உரிமை வேண்டும் எனக் கேட்டால் அப்போது அந்தக் கருத்துக்கு ஏற்ப கிறிஸ்துவின் கொள்கை மாற வேண்டுமா?

நீங்கள் இயேசு கிறிஸ்துவைப் பற்றி சொல்ல நமக்கு தகுதி இருக்கிறதா என்று கேட்கிறீர்கள்.

இவர்கள் நமக்கு இயேசு கிறிஸ்துவைப் பற்றி போதிக்க வந்ததுதான் ” என்ன கொடுமை சரவணன் சார் இது! ”

குருட்டுப் பிச்சைக் காரனும், உடல் முழுதும் புண்ணால் நிரம்பி இருக்க நாய்கள் வந்து புண்களை நக்கும் லாசருவைப் போன்ற பிச்சைக் காரனுமாகவே நான் இருந்தாலும் எனக்கு அதில் வருத்தமில்லை.

//நண்பரே,இயேசுகிறிஸ்துவைத் தொழுவதென்பது “முணுமுணு”வென்று எதையோ ஓதும் காரியமல்ல;//

நண்பரே,இயேசுகிறிஸ்துவைத் தொழுவதென்பது “முணுமுணு”வென்று எதையோ ஓதும் காரியமல்ல;

அப்படியா ?
அப்படியானால் இயேசு கிறிஸ்து சொல்லிக் கொடுத்த தொழுகை முறை என்ன?

வீட்டு மாடியில் கூரை போட்டு, அதில் மைக் செட் கட்டி, ஞாயிற்றுக் கிழமைகளில் அந்த ஏரியாவே காதைப் பொத்தும் அளவுக்கு மைக் செட்டை முழுதும் அலற வைப்பது தான் இயேசு கிறிஸ்து சொல்லிக் கொடுத்த முறையா?

//முந்திய பாவ காரியங்களை இனி செய்யாதிருக்கும் உறுதி கொள்ளவேண்டும்; செய்தவற்றுக்காக வருந்தவும் வேண்டும்; மறுமை வாழ்வில் பங்கேற்கும் நம்பிக்கையினை ஏற்பதுடன் அதனை அடுத்தவருக்கு விளம்பவும் வேண்டும்; //

If we are law obiding, not harming others, further if we try to help others… what does it matter if “மறுமை வாழ்வு” was there or not!

இயேசு கூறினார்: இரண்டு எஜமான்களுக்கு ஒருவன் சேவகம் செய்ய முடியாது என்று.
என் எஜமான் இயேசு. அவருக்கே சேவை செய்ய விரும்புகிறேன். நீங்கள் இயேசுவை, அவர் வார்த்தைகளை மதிப்பவர் என்றால், ஒரு எஜமானுக்கே சேவை செய்ய வேண்டும். ஆனால், நீங்கள் பலருக்கு சேவை செய்ய நினைத்து உங்களையும் குழப்பி ஊரையும் குழப்புகிறீர்கள்.

ஒருவருக்கு உடன்பாடு இல்லாத விஷயத்தில், மற்றவர் மகிழ்ச்சிக்காக, உடன்பாடு உள்ளது போல நடிப்பதுதான், மதநல்லிணக்கமா?
Thanks,
Ashok

பிறரின் கடவுளை வணங்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தவும் இல்லை. வற்புறுத்தவும் இல்லை.

அவரவர்க்கு விரும்பிய கடவுளை அவரவர் வணங்கலாம். அடுத்தவர் கடவுளாக வணங்கும் தெய்வங்களை எந்த விதமான ஆதாரமுமும் இல்லாமல் இகழ்ந்து பேய் , பிசாசு என்று திட்டி, சமூகங்களுக்கு இடையில் மோதலை உண்டாக்க இரத்த ஆறு ஓட விடுவது இரக்கமற்ற வெறிச் செயலே. எனவே வெறுப்புக் கருத்துக்களை, பகைமை உணர்வை தூண்டும் கருத்துக்களை கை விட வேண்டும.

அதற்கு அடுத்த படியாக பிற மதத்தவரின் விழாக்களில் கலந்து கொள்வது நட்பை வளர்க்கும். நல்லிணக்கத்தை உருவாக்கும். பிற மதத்தவரின் விழாக்களில் கலந்து கொள்வது சமரசத்தை, நட்பைக் காட்டுவது.

இதற்கும் அடுத்த கட்டம் மனப் பூர்வமாக மரியாதை செய்வது. புத்தரின் அன்பையும், இராமரின் தியாகத்தையும், இயேசுவின் தியாகத்தையும் புரிந்து கொண்டவர்கள், மத இன மொழி, வர்க்க, ஜீவ வேறுபாடுகளை மறந்து தியாகத்துக்காக , நல்ல கொள்கைகளுக்காக அவர்களை மனப் பூர்வமாக வணங்குவார்கள். இது சிந்தனை முதிர்ச்சி அடைந்த மனநிலை உள்ளவர்களால் செய்யப் படக் கூடியதே.

இதில் என்ன குழப்பம் இருக்கிறது ? ஒரு குழப்பமும் இல்லை.

இந்த உலகத்திலே பலர் கொல்லப் பட்டு இரத்த ஆறு ஓடினாலும் பரவாயில்லை. தான் விரும்பும் கற்பனைகள மட்டுமே இந்த உலகில் எல்லோராலும் பின் பற்றப் பட வேண்டும் என நினைப்பவருக்குத்தான், சமரசக் கருத்துக்களை கேட்டால் கோவம் வரும்.

Sorry folks. I dont have any other option to make Mr.Trichy to understand few things.
Mr.Trichy,
peace and Harmony in the society is a nice thing to have. But at the cost of what??
Suppose if you are living in a place where “Lot” (cousin of Abraham) lived. Just to make peace with your surrounding people, would you have gone in their way? (I tried to put this is a most decent way, I could)
Also, I have seen Mr.Ashok’s comments. He is so soft that he didn’t want to hurt you by words. Do you think that such a person is going to be a reason for a disaster that you are talking about. Probably he might strong in his idiology, but that idiology is teaching him the love and probably such a person would give his life than taking others life.
I went to Mr.Chillsam’s site. I don’t see anything that dirty in his site. There is no hatred in his site. In your site, all your articles are about criticizing and accusing others. And there is no clear guidance that you have given any of your articles. You just open a complain box, thats all. I really don’t know why you are not realizing that you are full of unloving thoughts. Also, Mr.Chillsam is not giving any crappy ideology. He is dealing with real life problems. Divorce is not very rare in our country. Many are facing such difficult times in their lives. In many cases people are forced by the situations to take up divorce. And such a discussion will give some advices, which they usually doesn’t get from their friends.
It will better to know that drinking poison will kill, without the firsthand experiance (and not by trying to drink). But, you are so adament to take such a risk. If you are rebeling against GOD till the judgement day, surely on the judgement day, you will see the GOD, but it will be of no use. The proof and eyewitness you get about GOD will not do any good thing to you.
I am not trying to scare you. I know that you are not a small kid. What if the Christian belief is true??? Thats all, your eternity is screwed up. Endless and timeless hell and tormant is the worst thing that can happen to anyone.
The Christian message is message of HOPE. Not the message of condemnation. Even the worst sinner gets hope and became a changed man by Christ. People who had seen me understands this. There are many such witnesses living in the world. Their life is showing (not mere words)that GOD is alive and living.
This Truth might be hard to understand and believe. But, it is truth. Just taste the love of Jesus. You will know for sure that he is the true living GOD and Bible is his word and it is holy and true. He is waiting for you. Accept his forgiveness and Love. You know that you need forgiveness. You know that there are flaws in you and you know that you are not perfect. You know that you did something wrong in your life, where you could have did the right. Just try out his love. Ask HIM to talk with you. But, ask in faith. He will talk.
Hard Truth

Dear Mr. Exposer, sorry Mr. Hard Truth,

You became advocate for many of our friends.

Let them come out openly and say that they have not abused the Hindu Gods as “Pei”, ” Pisaasu”…etc.

They still insist that they have all the rights to abuse other Gods, putting the harmony in geoparady, uncare about the danger to peace.

As I told many times, If you or any one find peace or solace in Jesus’s love, I appreciate you. If one become more civilised due to Jesus , I appreciate it (but your comments are few of the rude comments, this blog ever seen, but you have other companions)

I criticise many people- not to find pleasure in it, but I mentioned the reasons.

I repeat that I mentioned the reasons- as why I criticise them.

If any one found me unreasonable, they can counter me. All comments are published here!

I may have flaws, I have room to improve, I publish all the comments criticising abusing me.

Regarding Jesus, I have all respect and revernce to him for his wonderful principles!

Finally you put your crap as follows

// You will know for sure that he is the true living GOD and Bible is his word and it is holy and true. //

I am ready to accept GOD, if you can give verifiable proof for the same.

Regarding the Bible, Let us take up it verse by verse and see its merit and demerits- without fear or Favour!

I assure all our friends that I will quote the Bible exactly.

//வீட்டு மாடியில் கூரை போட்டு, அதில் மைக் செட் கட்டி, ஞாயிற்றுக் கிழமைகளில் அந்த ஏரியாவே காதைப் பொத்தும் அளவுக்கு மைக் செட்டை முழுதும் அலற வைப்பது தான் இயேசு கிறிஸ்து சொல்லிக் கொடுத்த முறையா?//
நீங்கள் தொழுகையையும், பிரசங்கத்தையும் குழப்பிகொள்ளுகிரீர்கள். ஏசுவே மலைமீதேறி பிரசங்கம் பண்ணினவர்தானே? இவர்கள் வீட்டின்மேல் தானே கூரைபோட்டு பிரசங்கம் பண்ணுகிறார்கள்.
அப்படி மைக் போட்டு கூறியும் நல்ல விஷயங்கள் உங்கள் காதுகளில் விழுவதில்லையே.
Cancer Forum போன்ற தளங்களின் பயன்பாடு கான்செர் வந்தவர்களுக்குத்தான் தெரியும். அதேபோல், திருமணம் உடைந்து அல்லது உடையும் தருவாயில் உள்ளவர்க்குதான் சகோ.சில்சாமின் தலத்தில் உள்ள விஷயங்களின் பயன்பாடு தெரியும். நித்யானந்தரின் லீலைகளை எழுதுவதைவிட சில்சாம் எழுதும் விஷயங்கள் சமுதாயத்திற்கு பயனுள்ளவைகள்தான்.
அன்புடன்,
அசோக்

ஞாயிற்றுக் கிழமை காலைகளில் நடத்தப் படுவது தொழுகை இல்லையா? பிரச்சாரமா? பிரசாரத்தை மக்களின் காதைப் பிளக்கும் வண்ணம் செய்ய வேண்டுமா? இதை இயேசு கிறிஸ்து எங்கே சொன்னார் ?

இயேசு கிறிஸ்து மலை மேல் ஏறி பிரச்சாரம் செய்தார் , அவர் வாயினால் பேசினார். ஆம்பிளிபையர் , லவுட் ஸ்பீக்கர் எதையும் உபயோகப் படுத்தவில்லை.

மேலும் இந்த ” பிரச்சாரங்களில் கூறப் படும் செய்திகள் வெறும் அளப்பரைகளாக உள்ளதே அல்லாமல் நல்ல விடயங்கள் எதையும் காணவில்லையே.

நல்ல விடயம் என்றவுடன் நீங்கள் கூறிய ” நல்ல” விடயம் //அதேபோல், திருமணம் உடைந்து அல்லது உடையும் தருவாயில் உள்ளவர்க்குதான் பயன்பாடு தெரியும்// நினைவுக்கு வருகிறது.

நாமோ பகுத்தறிவு வாதிகள். நிரூபணம் இல்லாமல் எதையும் நம்புவது இல்லை. எனினும் இயேசு கிறிஸ்து மீண்டும் பூமிக்கு வந்தால்( If it were so happened), நான் அவரைப் பார்க்க நேர்ந்தால், அவரிடம் இப்படி பல நண்பர்கள், திருமணம் உடைந்து அல்லது உடையும் தருவாயில் இருப்பதாகவும்,

எனவே “விபச்சாரக் காரணத்துக்காக அல்லாமல் வேறு எந்தக் காரணத்துக்காகவும் மனைவியைத் தள்ளி வைக்கக் கூடாதே” என்ற கற்பனையையே தள்ளி வைக்க வேண்டிய நிலையே உள்ளது, என்றும் உங்கள் சார்பாக நான் தெரிவித்து விடுகிறேன்.

ஆனாலும் இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான மக்கள் வாழ்க்கை முறை, ஒரு பெண்ணைத் திருமணம் செய்து சாகும் வரை அந்தப் பெண்ணுடனே வாழும் குடும்ப வாழ்க்கை முறை உள்ளது என்பதால் அவர் ஆறுதல் அடையக் கூடும்.

நித்யானந்தா போல இன்னும் பலர் புறப்படும் முன்னே மக்கள் அவர்களை அடையாளம் காணும் பொருட்டே, நாம் அதைப் பற்றி எழுதினோம். அது அவசியமே.

நாம் இந்த பின்னூட்டத்தை எழுதும் நிலையிலே விவாகரத்து அனுமதிக்கப் பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெறுவதையும், இன்னும் சில நண்பர்கள் அதற்கு ஆதரவு தெரிவிப்பதையும் அறிகிறோம். அனால் இந்தியாவின் பெரும்பாலனவர்கள் , “பிரியாமல் சேர்ந்து வாழும்” கருத்தை பல்லாயிரக் கணக்கான வருடங்களாகவே பின்பற்றி வருகிறார்கள் என்பதயும், தொடர்ந்து பின்பற்றுவார்கள் என்பதாகவும் தெரிகிறது.

இந்தியர்களும், இயேசு கிறிஸ்துவும் சமரசமாக, அன்புடன் ஒரே கொள்கையில் இருப்பதையுமே, இது காட்டுகிறது.

நேற்று பார்த்த ஒரு இந்தி திரைப் படத்திலே திருமணம் நடத்தி வைக்கும் பண்டிதர் “கட் பந்தன், நஹி டூட்டே, நஹி டூட்டே (Let the relation ship never be broken)” என்று உரக்க கூறியதை இங்கே எழுதுகிறேன்.

என் கற்பிதங்களைக் கைக் கொள்ளாமல் என்னைப் பார்த்து கர்த்தாவே என அழைப்பதால் பலன் இல்லை எனக் கூறியதாகச் சொல்லக் கேட்டு இருக்கிறேன்.

// கடவுளாக வணங்கும் தெய்வங்களை எந்த விதமான ஆதாரமுமும் இல்லாமல் இகழ்ந்து பேய்,பிசாசு என்று திட்டி //

ஒரு காலத்தில் நானே கடவுளாக வணங்கியதை பேய்,பிசாசு என்று சொல்வேனா?அதுபோல ஒருபோதும் சொல்வதில்லை;

ஆனால் உண்மை தெய்வத்தைவிட்டு திசைதிருப்பி சாதாரணமான கல்லையும் காவிய நாயகர்களையும் மிருகத்தின் சொரூபங்களையும் வணங்கச் செய்தவையே பிசாசின் சக்திகள்;

என்னைப் படைத்த தேவனை விட்டு நானே படைத்த தேவர்களை வணங்கச் செய்பவையே பேய்கள்..!

இந்த பேய்கள் படைத்த பரம்பொருளான தேவனை வணங்கினால் மட்டுமே கிடைக்கக்கூடிய மனநிம்மதிக்கு மாற்றாக மனம்போனபோக்கில் வாழும் துஷ்டத்தனமான வாழ்க்கை முறையினை அனுமதிக்கிறதினாலேயே சமுதாயத்தில் இத்தனை பிரிவினைகள்;

சாராயம் விற்பவனும் அதனைக் குடிப்பவனும் ஒரே சாமியை வணங்குகிறான்;அந்த கொடூரத்தை அந்த சாமி தடுக்கிறதில்லை;குறைந்தபட்சம் குற்ற உணர்வைக்கூட தருகிறதில்லை;காரணம் அவற்றுக்கு ஜீவனும் இல்லை;அவை தன்னை நாடி வந்திருக்கும் ஆத்மாவை படைக்கவுமில்லை; அவனுக்காக ஜீவனைத் தரவும் இல்லை;

இதுபோலவே கலைச்சேவை என்ற பெயரில் விபச்சாரத்தொழில் செய்யும் சினிமாக்காரனும் அதே யானை முகத்தோனை வணங்கியே தன் தொழிலைத் துவங்குகிறான்;

இந்த பயங்கரங்களுக்கெல்லாம் மூலக்காரணத்தையறிந்ததாலேயே மிருகத்தைத் தொழும் மனிதனை எச்சரிக்கிறோம்;எச்சரிப்போம்..!

// இந்த உலகத்திலே பலர் கொல்லப் பட்டு இரத்த ஆறு ஓடினாலும் …//

இந்த உலகில் இரத்த ஆறு ஓடுவதற்கு மதம் காரணமல்ல;மெய்யான இறை அச்சம் இல்லாததும் பேராசையுமே காரணம்;இவற்றை சமூகத்தில் விதைத்ததும் பிசாசுகளே;

ஆனானப்பட்ட முகமதுவையே பிசாசு வஞ்சித்து அல்லா போல பேசி அந்த வாக்கியத்தை குரானில் இடம்பெறச் செய்திருக்கிறதாம்;அது தனி விவகாரம்..!

// சமரசக் கருத்துக்களை கேட்டால் //

இங்கே காந்திஜியைக் காட்டிலும் சமுதாய நல்லிணக்கத்துக்கு பாடுபட்டவர் யாரேனும் உண்டா? அவரோ இயேசுகிறிஸ்துவைப் போல சொந்த மக்களாலேயே கொல்லப்ப‌ட்டார்;ஆனால் இயேசுகிறிஸ்துவைப் போல அவர் மீண்டும் உயிர்த்தெழாததால் அவரை வணங்கமுடியாது;

செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் குறித்து இயேசுகிறிஸ்து மொழிந்ததுண்டு;அதுபோல இந்த சமுதாயத்தில் இறைவனின் பார்வையில் சமுதாயம் இரண்டாகப் பிரிக்கப்பட்டே தீரும்;அதனைத் தவிர்க்க எந்த கொம்பனாலும் முடியாது;

மனிதனின் வசதிக்கு- அவனுக்குத் தோன்றிய நியாயத்தில் சமூகம் சாதிரீதியாகவும் மதரீதியாகவும் மொழிரீதியாகவும் வர்க்கரீதியாகவும் கலாச்சாரரீதியாகவும் பிரிக்கப்பட்டுள்ளது;ஏன் இந்த பாவி மனிதன் கடலுக்கும் எல்லையை வகுத்திருக்கிறான்;

ஆனால் கடவுள் இந்த முழு உலகையும் இரண்டாகப் பிரித்து வைத்திருக்கிறார்;தன்னை அறிந்தவர் மற்றும் தன்னை அறியாதவர்;அறிந்தவர் மூலம் அறியாதோரை சந்திப்பதே இறைவனின் மாபெரும் திட்டம்;அது நிறைவேறியதும் புதியதோர் உலகம் படைக்கப்படும்;எந்த நிலையிலும் இந்த உலகம் அழியப்போவதில்லை;மனிதனுக்குக் கொடுக்கப்பட்டு மனிதனால் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த் வையத்தைக் காக்கவே இறைவன் இறங்கி வந்தார்;

இதையெல்லாம் விட்டுவிட்டு போலி மதச் சார்பின்மை என்பார்களே அதுபோல போலியான சமரசக் கருத்துக்களைக் கொணர்வதால் எந்த பயனும் இராது;ஏனெனில் மனிதனைக் குறித்த இரண்டு மாறாத பேருண்மைகள் இப்படியாகக் கூறுகிறது;ஒன்று மனிதன் தனக்குத் தானே நன்மை செய்துக் கொள்ளமுடியாதவனாக இருக்கிறான்;மற்றொன்று அவன் தன்னை நம்பும் இன்னொருவனுக்கு நன்மை செய்யமுடியாதவனாக இருக்கிறான்;

// வீட்டு மாடியில் கூரை போட்டு, அதில் மைக் செட் கட்டி, ஞாயிற்றுக் கிழமைகளில் அந்த ஏரியாவே காதைப் பொத்தும் அளவுக்கு மைக் செட்டை முழுதும் அலற வைப்பது தான் இயேசு கிறிஸ்து சொல்லிக் கொடுத்த முறையா? //

நண்பரே, மைக் செட்டை நாங்கள் கண்டுபிடித்ததே அதற்குத் தானே..!

நீங்கள் ஆடித் திருவிழாவுக்கும் பேடித்திருவிழாவுக்கும் அதனைப் பயன்படுத்துவதுதான் சட்டவிரோதம்;

அச்சுமுறை முதற்கொண்டு அனைத்து கண்டுபிடிப்புகளும் இறைவனின் மாபெரும் திட்டத்தைக் கொண்டுச் செல்லவே தோன்றியது;

நவீனக் கண்டுபிடிப்புகளை தீயசக்திகளும் பயன்படுத்துவதை நாகரீக சமுதாயத்தில்(..?) தவிர்க்கமுடியாதே என்ன செய்வது..?

எந்த ஒரு கிறிஸ்தவ வழிபாட்டுக் கூடமும் பொறம்போக்கு நிலத்திலோ பொது இடத்திலோ அமைக்கப்பட்டுள்ளதா?

மற்ற வழிபாட்டுக் கூடங்களுக்கு இருக்கும் உரிமையினை இந்த சமூகம் கிறித்தவர்களுக்கு வழங்குகிறதா?

மைக் செட் போட்டு ஒரு காரியத்தைச் செய்வது கொண்டாட்டத்தின் அடையாளம்தானே..?

அவர்கள் ஏக இறைவனைக் கொண்டாடுகிறார்கள்;உங்களையும் அழைக்கிறார்கள்;நீங்கள் எவ்வளவுதான் அவர்களை நெருக்கினாலும் ஒடுக்கினாலும் கிறித்தவ்ர்கள் தளராது உங்கள் சார்பில் அந்த படைப்புக் கடவுளை ஆராதிக்கிறாகள்;இந்த உலகில் அவரை ஆராதிப்போர் இல்லாவிட்டால் இந்த உலகம் அடுத்த நிமிடமே அழிந்துபோகும்;

// Mr.Chillsam is not giving any crappy ideology. He is dealing with real life problems. Divorce is not very rare in our country. Many are facing such difficult times in their lives. In many cases people are forced by the situations to take up divorce. And such a discussion will give some advices, which they usually doesn’t get from their friends >Hard Truth //

http://chillsam.activeboard.com/forum.spark?aBID=134567&p=3&topicID=33512237

எனது தளத்தைப் பார்வையிட்டு என்னாலும் முன்வைக்க இயலாத‌
ஒரு கருத்தை என் சார்பில் வெளியிட்ட நண்பர் Hard Truth
அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொளளுகிறேன்;

நீங்கள் இத்தனை வெளிப்படையாகக் கிறித்தவ மார்க்கக் கருத்துக்களைக் கூறுவது ஏற்றுக்கொள்ள சற்று சங்கடமாக இருக்கிறது;இங்கு முத்திரை குத்தி பரியாசம் செய்து எள்ளி நகையாடுவார்கள்;உங்களைப் போன்றவர்கள் அறிவுபூர்வமான காரியங்களையும் விவாதங்களையும் முன்வைத்து “பொதுவான” தளத்திலிருந்தே இன்னும் பல காரியங்களைச் சொல்லமுடியும்; இதற்குப் பிறகு என்ன நீங்கள் சொன்னாலும் அதனைக் கிறித்தவனுடைய கருத்தாகவே பார்த்து சம்பந்தமில்லாத வேறு கேள்விகளைக் கேட்டு திசைதிருப்புவார்கள்..!

இந்த தளத்தின் நிர்வாகியான நண்பருக்கு உதவியாக சில காரியங்களை விவாதம் திசைதிரும்பாதவண்ணம் நினைவூட்டுகிறேன்;இது சாமியார் சம்பந்தமான (தலைப்பை கவனிக்கவும்…)விவாதமாகும்;

ஆனால் இதனை கிறித்தவம் சம்பந்தமான விவாதமாக நடத்திக் கொண்டிருக்கிறோம்; நண்பர் “திருச்சி” அவர்கள் பெரிய மனது வைத்து கிறிஸ்தவம் தொடர்பான சரியான விவாதத்தைத் துவங்கினால் சரியான பதிலைக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்;

தேவைப்பட்டால் எமது நண்பர்கள் தளத்துக்கு வந்து இன்னும் புதிய நண்பர்களை சந்திக்கலாம்..!

http://tamilchristians.com/index.php?option=com_ccboard&view=postlist&forum=10&topic=1762&Itemid=287

//நாம் இந்த பின்னூட்டத்தை எழுதும் நிலையிலே விவாகரத்து அனுமதிக்கப் பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெறுவதையும், இன்னும் சில நண்பர்கள் அதற்கு ஆதரவு தெரிவிப்பதையும் அறிகிறோம். அனால் இந்தியாவின் பெரும்பாலனவர்கள் , “பிரியாமல் சேர்ந்து வாழும்” கருத்தை பல்லாயிரக் கணக்கான வருடங்களாகவே பின்பற்றி வருகிறார்கள் என்பதயும், தொடர்ந்து பின்பற்றுவார்கள் என்பதாகவும் தெரிகிறது.
//
Neither Christ nor me favours divorce. Let the married couple be together till the end. We love the life long married life.
I look into divorce as something like a ambutation. No one advocates for ambutation. But, we do ambutation sometimes to save life. Ambutation and divorce or not a fun, but a pain.

Hard Truth

Dear Mr. Hard Truth,

We will have a separate article to discuss about the amicable living of Husaband and wife.

Mr.Trichy,
//We will have a separate article to discuss about the amicable living of Husaband and wife.
//

I have a request for you. Please go and meet some people of various status, various cultures (within India), both living with Husband (happily and unhappily), divorced (for various reasons) and then write your article. You can certaily give a clear picture in that.

Others,
In my comment (30th comment for this article), please note that I made a spelling mistake. It is “amputation” and not “ambutation”.

Thanks,
Hard Truth

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: