Thiruchchikkaaran's Blog

போலி சாமியார்களால் இந்து மதத்திற்கு ஒரு பிரச்சினையும் கிடையாது – சில அறிவு ஜீவிகளின் அதிரடி தீர்ப்பு.

Posted on: March 11, 2010


போலி சாமியார்களால் இந்து மதத்திற்கு ஒரு பிரச்சினையும் கிடையாது – என சில அறிவு ஜீவிகள் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

காஞ்சி முதல் காஷ்மீர் வரை “(போலி) சாமியார்கள் ”  செய்யும் தவறுகளால் இந்து மதத்திற்கு பிரச்சினை இல்லையாம்.

சபரி மலை தாந்திரி  செக்ஸ் புகாரில் சிக்கியதால் இந்து மதத்திற்கு பிரச்சினை இல்லையாம்.

அசிங்க அர்ச்சகர் தேவநாதனின் கருவறை கலாட்டக்களால் இந்து மதத்திற்கு பிரச்சினை இல்லையாம்.

காவி துணியைக் கட்டிக் கொண்டு இந்து மத தத்துவங்களை உதிர்ப்பவர்களின்  உல்லாச சி.டி.க்கள் அவ்வப் போது வெளி வருவதால் இந்து மதத்திற்கு பிரச்சினை இல்லையாம்.

பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு.  இந்து மதத்திற்கு அதிக  பப்ளிசிட்டி கிடைக்கிறது என்று கூட சொல்வார்கள் போல இருக்கிறது.

ஒரு  வாரத்திலே எல்லாம் சரியாகி விடுமாம்.

ஆனால் கிட்டத்தட்ட ஒவ்வொரு மாதமும் ஒரு சாமியாரின்  சி.டி. வருகிறதே? 

 வின்னர் படத்திலே வடிவேலு கிட்ட ” போன மாசம் தானே உன்னை அடிச்சேன்” என்று சொல்லும் போது  “அது போன மாசம்” என்று   சொல்வதைப் போல “அது அடுத்த மாசம்” என்று சொல்வார்கள் போல இருக்கிறது.

அது மட்டுமல்ல “குரு” செய்யும் தவறுகளைக் கண்டு கொள்ள வேண்டியதில்லையாம். நாம ஒழுங்கா இருந்தா போருமாம். அதாவது சாதாரண ஆன்மிக தேடல் புரியும் சாதாரணமாவன் ஒழுங்கா இருந்தா போருமாம். குரு என்ன வேண்டுமானாலும் பண்ணுவாராம். அதை விமரிசிக்கக் கூடாதாம்.

 எப்படி எல்லாம்  அணை கட்டுகிறார்கள்!!!

 எப்போதாவது ஒரு போலி சாமியார் விவகாரம் வந்தால் சரி. அடிக்கடி வருகிறதே? நூறிலே பத்து சாமியார் கெட்டவனாக இருந்தால் புரிந்து கொள்ளலாம். நூறிலே அம்பது சாமியார் கெட்டவனாக இருந்தாலும் சமாளிக்கலாம். இன்னும் இன்னும் அதிகமாகுதே ஐயா,  சாமிகளே  – பிரச்சினையே இல்லையா?

Advertisements

17 Responses to "போலி சாமியார்களால் இந்து மதத்திற்கு ஒரு பிரச்சினையும் கிடையாது – சில அறிவு ஜீவிகளின் அதிரடி தீர்ப்பு."

// போலி சாமியார்களால் இந்து மதத்திற்கு ஒரு பிரச்சினையும் கிடையாது – சில அறிவு ஜீவிகளின் அதிரடி தீர்ப்பு.//
உங்கள் பதிவை படிக்கும் முன்னமே உங்கள் தலைப்பைக் கேட்டு சிரிப்பு வந்துவிட்டது. ஹிந்து மதம் ஒரு அழகான நெறியுடைய மதமாயினும், அதனுள் ஆயிரமாயிரம் சிக்கல்கள் பிணையுண்டு கிடக்கின்றன. நினைத்தவன் எல்லாம் சாமியார். நினைத்தவன் எல்லாம் கடவுள்.. ” தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் போல” சாமியார்கள் ஒழிந்தாலே ஹிந்துமதத்தின் உண்மை பலருக்கும் புரிய வாய்ப்புண்டு.. ஹிந்து மதத்தின் அடிப்படை வெட்கமே சாதி சமய பகிர்வுகள்தான். அதனுடன் அதனை வேரறுக்க நினைத்தாலும் இயலவிடாத வெறியர்களும்தான். எனது விருப்பம், இனி நீங்கள் அதன் முட்டாள்தனங்களை நேரடியாக வெளிக்கொணராமல், அதிலுள்ள மூட நம்பிக்கைகளையும், அதனால் மக்களின் பாதிப்புகளையும் தெளிவாக சாட்சிகளுடன் ( எடுத்துக்காட்டுடன்) கூறவேண்டும் என்பதே. போலி சாமியார்கள் மட்டுமே ஹிந்து மதத்தை அசிங்கப் படுத்துவது இல்லை ( ஆனாலும் அவர்களும்தான்) . மறைமுகமாக பல கேட்க்க முடியாத கேடுகள் மதத்தை நோக்கி சிதறவைக்க உள்ளது. பண்பாடு, கலாச்சாரம், சடங்குகள், சம்பிரதாயம்.. அனைத்தையும் தாண்டிய ஹிந்து மதத்தை எடுத்துரைக்கவேண்டிய கட்டாயம் உள்ளது… ஒரு விஷயம் தெரியாமல் அதை செய்வதைவிட.. அதனை செய்யும் காரணம் தெரிந்து செவோமாயின் அதன் நகர்வுகளில் புதுவித மாற்றமொன்று நிச்சயமாக தென்படும். மக்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருக்கும் ஹிந்துமதம் என்ற அழகான நெறியுடைய போர்வையின் உள் உள்ள மூட நம்பிக்கைகளை வெளிக்கொணர்ந்து, உங்களின் விருப்பம் ஹிந்து மதத்தை தெளிவு செய்வதென்றால்.. அதனை நோக்கிய உங்கள் பயணத்தை நீங்கள் தாரளமாக தொடர வாய்ப்புள்ளது.. எழுதுங்கள்… புரியட்டும்…. ஆத்திகம் நாத்திகம் கடந்து எழுதுங்கள்…. மக்களுக்கு புரியட்டும்..

ச‌கோத‌ர‌ர் ம‌ற‌வ‌ன் அவ‌ர்க‌ளே,

என்னுடைய‌ ந‌ன்றியையும் ம‌ன‌ப் பூர்வ‌மான‌ பாராட்டுத‌ல்க‌ளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்க‌ளுடைய‌ ஒவ்வொரு வ‌ரியும் வைர‌ வ‌ரிக‌ள்.

ப‌குத்தறிவாள‌ர்க‌ளே இந்து ம‌த‌த்தை அவ்வ‌ப்போது ச‌ரியான பாதைக்கு திருப்பி வ‌ந்துள்ள‌ன‌ர்.

“இறைவ‌னை நீங்க‌ள் பார்த்து இருக்கிறீர்க‌ளா, என‌க்கு காட்ட‌ முடியுமா” என்று தைரிய‌மாக‌க் கேட்ட‌ ந‌ரேந்திர‌ன் தான் விவேகான‌ந்த‌ர் ஆனார்.

வெறும‌னே ம‌ந்திர‌ங்க‌ளை ஒப்பிப்ப‌தால் ஒருவ‌ன் க‌ரையேற‌ முடியாது ‍ ”ந‌ஹி ந‌ஹி ர‌க்ஷ‌தி டுக்ருங்க‌ர‌னே” என்று கூறிய‌ சிந்த‌னையாள‌ர் ஆதி ச‌ங்க‌ர‌ர்.

உங்க‌ளுடைய‌ க‌ருத்துக்க‌ளைப் ப‌டிக்கும் போது என‌க்கு விவேகான‌ந்த‌ரும் , ஆதி ச‌ங்க‌ர‌ருமே நினைவுக்கு வ‌ருகின்ற‌ன‌ர். உங்க‌ளுடைய‌ சிந்த‌னைக‌ள் கூர்மையான‌வை. நீங‌கல் உங்க‌ள் சிந்த‌னைக‌ளை தொட‌ர்ந்து ப‌திவு செய்யுங்க‌ள் என‌க் கோருகிறேன். வெளிப்ப‌டையாக‌ விட‌ய‌ங்க‌ளை வைக்க‌ த‌ய‌ங்க‌ வேண்டாம்.

இந்தப் போலிச் சாமியார்கள்,நம் சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட யோக முறைகளை எடுத்து –என்னமோ,தானே அதைக் கண்டு பிடித்து உருவாக்கியது போல தினமும் இரண்டு மணி நேர,ஒரு வார பயிற்சிக்கு ரூ.1000 /= வரை பணம் பெறுகிறார்கள்.

பணமும்,மற்ற எல்லா வசதியும் ? பெறுவதற்காகவே சில யோக பயிற்ச்சியைக் கற்று,மீடியாவை பயன்படுத்தி விளம்பரப்படுத்தி,இன்று அவர்கள் அடிக்கும் கோட்டம் தாங்க முடியவில்லை,என்ன செய்ய.
நான் அவரிடம் சென்று ஆசி பெற்றதால்,என் தீராத நோய் தீர்ந்தது,…….வேலை,கிடைத்தது,…….கல்யாண ஆனது,……பரிட்சையில்,அதிக மதிப்பெண் கிடைத்தது…… என்று சிலர் மீடியாவில் விளம்பரப் படுத்தினால் ,அந்த சாமியார்களிடம் மிகவும் உஷாராக,ஏன்,அவர்களை நிராகரிக்கவேண்டும் என்பதே.என்கருத்து.

ஒழுக்கமான குரு,ஒரு சீடன் தவறு செய்தாலும், அந்த சீடனை,திருத்தி நல்வழிப் படுத்துவார்.ஆனால்,இங்கே சீடர்கள் பலர் ஒழுக்கத்தில்,,ஆனால் குருவோ பக்கா ஒழுங்கீனத்தில்.இனிமேல் சீடர்கள் தான் குருவுக்கு புத்தி சொல்ல வேண்டும் இப்படி, ”நித்தமும்,… கொஞ்சம்… கவனமா…!!!,கதவ,…கிதவ… சாத்திட்டு…!!!, காமெரா…, கீமரா…. இருக்கான்னு …சரிபாத்துட்டு…!!!, அப்பறமா… ஆனந்தமா இருங்க…. குருவே”” ….

ஒரு பிராமணனை அடித்தால் ஏழு ஜென்மத்துக்கும் பழியாம்…
இதுபோன்ற அரதப்பழசான அடிமைத்தன கருத்துக்களே “கண்டவனும்” கையில் தடியெடுக்கக் காரணம்;அதனை முதலில் ஒழிக்கவேண்டும்; அனைவரும் பூஜை செய்யவும் எல்லாரும் சமமாக நடத்தப்படவும் வேண்டும்;

“வேதமந்திரத்தை சூத்திரன் கேட்கக்கூடாது,மீறிக் கேட்டால் அவன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும்” என்று சொல்லப்படுவதை தவறு என்று அனைவரும் உணர்ந்து வேதத்தைக் கற்க முன்வரவேண்டும்.

வேத‌தைத்தைக் கேட்டால் ஈய‌த்தைக் காதில் இவை எல்லாம் இந்து ம‌த‌த்தின் க‌ருத்துக்க‌ள் இல்லை. இந்த‌க் க‌ட்ட‌ளைக‌ளைப் போட்ட‌வ‌ன் ம‌னு, மனு ஒரு அரசர், இந்த நாட்டை ஆண்டவர். ம‌னு போட்ட‌து அரசாங்க‌க் க‌ட்ட‌ளையே அல்லாம‌ல் ஆன‌மீக‌க் க‌ட்ட‌ளை அல்ல‌. அர‌சாங்க‌க் க‌ட்ட‌ளை அவ்வ‌ப்போது மாறும்.

இந்த மனு என்பவர் ஒரு அரசன். இது உங்களுக்குத் தெரியும்.

மனு இந்து மதத்தை ஸ்தாபித்தவரோ, அல்லது இந்து மதக் கடவுளோ அல்லது வியாசர், ஆதி சங்கரர், விவேகானந்தர் போல ஒரு குருவோ அல்ல.

//ஒரு பிராமணனை அடித்தால் ஏழு ஜென்மத்துக்கும் பழியாம்…//

”பிராம‌ண‌ர்”க‌ளை ம‌ட்டும் அல்ல‌ யாரையுமே அடித்தால் அது ப‌ழிதான், பாவ‌ம் தான். எத‌ற்க்காக‌ ஒருவ‌ரை அடிக்க‌ வேண்டும்? இதிலே அந்த‌க் கால‌த்திலே “பிராம‌ண‌ர்க‌ள்” என்று சொல்ல‌ப் ப‌ட்ட‌வ‌ர்க‌ள், ப‌தில் தாக்குத‌ல் ந‌ட‌த்தாத‌வ‌ர்க‌ளாக‌, அதாவ‌து நோஞ்சானாக‌ இருந்த‌தால் அவ‌ர்க‌ளைக் காக்க‌ வேண்டும் என்று இப்ப‌டி அவ‌ர்க‌ளைக் குறிப்பிட்டு சொல்லி இருக்க‌லாம்.

// மனு இந்து மதத்தை ஸ்தாபித்தவரோ, அல்லது இந்து மதக் கடவுளோ அல்லது வியாசர், ஆதி சங்கரர், விவேகானந்தர் போல ஒரு குருவோ அல்ல. //

நண்பரே,நீங்கள் ஒன்றும் அறியாதவரென்பது என் எண்ணமல்ல;
ஆனாலும் மனசாட்சியை விற்றுவிட்டோ அடகு வைத்துவிட்டோ பேசுகிறவர் என்று இப்போது தெரிந்துக்கொண்டேன்;

முதலில் மனுதர்ம சாஸ்திரத்தை முழுவதும் படித்துவிட்டு அதன் பாதிப்புகள் இந்து மார்க்கத்தில் எந்தளவுக்கு வேரூன்றியிருக்கிறது என்பதையும் சற்று ஆராய்ந்துவிட்டு பிறகு எதையாவது(….?) எழுதித் தள்ளுங்கள்;

ஆதிசங்கரரின் பிரதானப் பணியே மனுநீதி தர்மத்தைப் பிரசங்கிப்பதாகவே இருந்தது என்பதை நான் சொன்னாலும் நீங்கள் ஒப்புக்கொள்ளாமல் நான் காழ்ப்புணர்ச்சியுடன் எழுதுவதாக குற்றஞ்சாட்டுவீர்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்..!

ந‌ண்ப‌ர் சில்சாம் அவ‌ர்க‌ளே,

//ஆனாலும் மனசாட்சியை விற்றுவிட்டோ அடகு வைத்துவிட்டோ பேசுகிறவர் என்று இப்போது தெரிந்துக்கொண்டேன்;// இதைக் கேட்கும் போது
பார்த்த‌வ‌ன் குருட‌ன‌டி,
ப‌டித்த‌வ‌ன் மூட‌ன‌டி,
உண்மையை சொல்ப‌வ‌னே
உல‌க‌த்தில் பித்த‌ன‌டி
என்று க‌விஞ‌ர் க‌ண்ண‌தாச‌னின் பாட‌ல் என‌க்கு நினைவுக்கு வ‌ருகிற‌து.

நீங்க‌ள் நான் ம‌ன‌சாட்சி இல்ல‌த‌வ‌ன் என்று சொல்கிறீர்க‌ள். இதுவும் உங்க‌ள் அவ‌ச‌ர‌த்தினால் எழுத‌ப் ப‌ட்ட‌தே.

நீங்க‌ள் கூறும் கருத்து, உங்களுக்கு இந்து ம‌த‌த்தின் மீது உள்ள‌ ச‌ரியான புரித‌ல் இல்லாத‌த‌னால் இருக்க‌லாம்.

ம‌னு என்ப‌வ‌ர் ஒரு அரச‌ர். அவ‌ர் எழுதிய‌ மனு நீதி நூல் அவ‌ர் கால‌த்தில் அவ‌ர் ஆட்சியில் நீதி வ‌ழ‌ங்க‌ப் ப‌டுவ‌த‌ற்காக‌ எழுத‌ப் ப‌ட்ட‌ ச‌ட்ட‌ நூல். அது ம‌த‌ நூல் அல்ல‌.

ம‌னுவிற்க்கு ப‌ல்லாயிர‌ம் ஆண்டுக‌ளுக்கு முன்பே இந்து ம‌த‌ம் இருக்கிற‌து. இந்து ம‌த‌ நூல்க‌ளில் ம‌னு எழுதிய‌து போல‌ த‌ண்ட‌னைக‌ள் வ‌ழ‌ங்க‌ சொல்ல‌ப் ப‌ட‌வில்லை. இந்து ம‌த‌ நூல்க‌ள் ம‌னித‌ உயிர் துன்ப‌த்தில் இருந்து விடுத‌லை அடைவ‌து ப‌ற்றி, அத‌ற்க்கான‌ வ‌ழிக‌ள் ப‌ற்றி, ம‌னித‌ர் வாழ்க்கையை வாழும் முறை ப‌ற்றி க‌ருத்துக்க‌ள் உள்ள‌ன‌. அதைப் பின்ப‌ற்றியே இன்று வ‌ரை இந்தியாவில் குடும்ப‌ வாழ‌க்கை முறையும் , அமைதியான‌ ஆன்மீக‌மும் பின்ப‌ற்ற‌ப் ப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌.

ம‌னு சாஸ்திர‌த்தி தாக்க‌ம் இந்திய‌ ச‌முதாய‌த்தில் முன்பு இருந்த‌து. அவை இப்போது முற்றாக ஏற‌ க‌ட்ட‌ப் ப‌ட்டு விட்ட‌து. இப்போது இந்துக்க‌ள் யாரும் ம‌னுவைப் ப‌ற்றி நினைப்ப‌தும் இல்லை, அவ‌ரை ஒரு பொருட்டாக‌ ம‌திப்ப‌தும் இல்லை. இப்போது பிராமாண‌ர் என்று சொல்ல‌ப் ப‌டும் ச‌முதாய‌த்தை சேர்ந்த‌வ‌ பெண்க‌ள் , த‌லித் பிரிவு ஆண்க‌ளை திரும‌ணம் செய்வ‌து ச‌ர்வ‌ ச‌க‌ஜ‌மாக‌ ந‌ட‌க்கிற‌து. உப நிட‌த‌ங்க‌ள், கீதை உட்ப‌ட‌ இந்து ம‌த‌த்தின் முக்கிய‌ நூல்க‌ளை யார‌ வேண்டுமானாலும் ப‌டிக்க‌லாம், சிந்திக்க‌லாம், க‌ருத்து சொல்ல‌லாம‌. சாதிப் பிரிவினைக‌ளே ம‌றைந்து வ‌ருகின்ற‌ன‌.

இந்த‌ நேர‌த்திலே ம‌னுவை இன்னும் யாராவ‌து நினைக்கிறார்க‌ளா என்றால் அவ‌ர்க‌ள், இந்து ம‌த‌த்திலே ஏதாவ‌து குறை க‌ண்டு பிடிக்க‌ வேண்டும், அத‌ற்க்கு எதிராக‌ செய‌ல் ப‌ட‌ வேண்டும் என்கிற‌ க‌ட்டாய‌த்தில் இருப்ப‌வ‌ர்க‌ள் ம‌ட்டுமே என்ப‌தே உண்மை. ஏனெனில் இந்துக்க‌ளும், இந்திய‌ ச‌முதாய‌மும் ம‌னுவை ஏற‌ க‌ட்டி நூற்றாண்டுக்கு மேல் ஆகி விட்ட‌து.

ம‌னுவை சாஸ்திர‌ம் எழுத‌ சொல்லி இந்து ம‌த‌ம் சொல்ல‌வும் இல்லை. இந்து ம‌த‌த்தில் ம‌னு சாஸ்திர‌த்துக்கு இட‌மும் இல்லை. சாண‌க்கிய‌ன் எழுதிய‌ அர்த்த‌ சாஸ்திர‌ம் போல‌த்தான் , ம‌னு எழுதிய‌ ம‌னு சாஸ்திர‌மும்.

நித்யான‌ந்தாவையொ, க‌ல்கியையோ இந்து ம‌த‌ம் ஆஸ்ர‌ம் அமைக்க‌ சொல்லி யோ, அட்ட‌காச‌ம் செய்ய‌ சொல்லியோ இந்து ம‌த‌ம் சொல்ல‌வில்லை. ஆனால் நித்யான‌ந்தா, தேவ‌னாத‌ன் போன்றோர் செய்த‌ செய‌ல்க‌ளுக்கான‌ ப‌ழி இந்து ம‌த‌த்தின் மீது விழுகிற‌து. அவ்வாறே ம‌னு நூல் எழுதிய‌த‌ற்க்கான‌ ப‌ழியும் இந்து ம‌த‌தின் மீது சும‌த்த‌ப் ப‌ட்ட‌து.

ஆதி ச‌ங்க‌ர‌ரின் பணி என்ன‌, அவ‌ர் என்ன‌ செய்தார் என்ப‌தை தெரிந்து கொண்டால், அத‌ன் பிற‌கு அவ‌ருக்கும் ம‌னுவுக்கும் எந்த‌ ச‌ம‌ப‌ந்த‌மும் இல்லை என்ப‌தை புரித‌ல் செய்ய‌ இய‌லும். ஆதி ச‌ங்க‌ர‌ர் ப‌ற்றிய‌ ப‌ல‌ க‌ட்டுரைக‌ள் ந‌ம‌து த‌ள‌த்தில் வெளியாகும் , அதைப் ப‌டிக்கும் போது உங்க‌ளுக்கு அவ‌ரின் உண்மையான‌ ப‌ணி தெரிய‌ வ‌ரும்.

அப்டீனா அவுரா மீரு..???(அவனா நீ எனக் கேட்க தைரியமில்லை..!)

திரு. சில்சாம் அவர்களே,

//அப்டீனா அவுரா மீரு..???(அவனா நீ எனக் கேட்க தைரியமில்லை..!//

நீங்கள் சொல்ல வருவது என்ன? தெளிவாக சொல்லுங்களேன்.

திருச்சிக்காரன், நாட்டில் முக்கால்வாசி சாமியார் போலி என்று நீங்கள் சொல்வது சரி என்று முதலில் தோன்றியது. அப்புறம் இப்படியும் தோன்றுகிறது. “நல்ல” சாமியார் பற்றி யார் செய்தி வெளியிடுவார்? அதை எவன் படிப்பான்? நித்யானந்தா “உல்லாசமாக” இருந்தால்தான் செய்தி. சொத்துத் தகராறில் மாட்டினால்தான் செய்தி. ஜெயேந்திரர் கொலை வழக்கில், பெண் விஷயத்தில் மாட்டினால்தான் செய்தி. அவர் தலித்களுக்கு வேதம் சொல்லிக் கொடுத்தால் அது ஹிந்து பத்திரிகையில் ஒரு மூலையில் வரலாம். நாய் மனிதனைக் கடித்தால் அது செய்தி இல்லை, மனிதன் நாயைக் கடித்தால்தான் செய்தி. என்னையே எடுத்துக் கொள்ளுங்கள், எனக்கு நித்யானந்தா என்ற பேர் கூட இதற்கு முன் மூளையில் ரெஜிஸ்டர் ஆனதில்லை. நீங்கள் சொல்வது போல இல்லை, பேப்பரில் அடிபடும் சாமியார்களில் முக்கால்வாசி என்ன, 90% போலிதான் என்றுதான் சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

திரு. RV அவர்களே,

தளத்திற்கு வந்து கருத்து பதிவு இட்டதற்கு நன்றி.

நீங்கள் நித்யானந்தா பற்றிக் கேள்விப்பட்டதில்லை என்று சொல்கிறீர்கள். இது ஒரு ஆச்சரியமான விடயம்தான். ஏனெனில் கிட்டத் தட்ட மூன்று வருடங்களாக கதவைத் திற காற்று வரும் … தொடர் குமுதத்தில் வருகிறது. தமிழ் நாட்டில் பெட்டி கடைகளில் தொங்க விடப் பட்டுள்ள மாத , வார, நாளிதழ்களில் போன மாதம் வரை நித்யானந்தர் சிரிக்கிறார்( இப்போது வரும் படங்கள் வேறானவை).

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களிடையிலும் அவருக்கு பாப்புலாரிட்டி இருக்கிறது. ஐந்து மாதத்திற்கு முன் ஒரு நண்பர் எனக்கு நித்யானந்தாவின் சொற்பொழிவுகள் பற்றிய ஒரு சுட்டியை அனுப்பி அவர் நித்யானதாவை பின்பற்றப் போவதாகவும் , என் கருத்து என்ன என்றும் கேட்டு இருந்தார். நான் அவரிடம் ஒன்று மட்டும் சொன்னேன். அமைப்பு ரீதியாக நண்பர்கள் அவரை இணைய அழைத்ததால் காசைக் கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொள்ளுமாறு சொன்னேன்.

மற்றபடி இந்தியாவில் முன்பு சரியான ஆன்மீக வாதியை தேர்ந்து எடுத்து அவருக்கு உதவுவார்கள். தமிழ் நாட்டு மக்கள் இதில் சிறப்பானவர்கள். விவேகானந்தர் , தியாகராசர் இவர்களை சரியான நேரத்தில் அடையாளம் கண்டு சிறப்பு செய்தது தமிழகமே. இப்போது நிலைமை தலை கீழ். ஆன்மீகம் பற்றிய பல கட்டுரைகள் நம் தளத்தில் வெளியிடப் படும். தொடர்ந்து பார்வை இட்டு உங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் எனக் கோருகிறேன்.

நான் குமுதம் படிப்பதில்லை. 🙂 தமிழ் நாட்டில் இருந்திருந்தால் தெரிந்திருக்கலாம்.

திரு. சில்சாம் அவர்களே,

//அப்டீனா அவுரா மீரு..???(அவனா நீ எனக் கேட்க தைரியமில்லை..!//

>நீங்கள் சொல்ல வருவது என்ன? தெளிவாக சொல்லுங்களேன்<

திருச்சிக்காரன் என்பவர் பொதுவாக கடவுள் நம்பிக்கை இல்லாதவர்; ஆனாலும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை மதிப்பதுடன் மற்றவரும் அதுபோலவே ஒருவருக்கொருவர் சகிப்புத்தன்மையுடன் நடந்துக்கொள்ளவேண்டும் என்ற கருத்தையுடையவர் என்று எண்ணியிருந்தேன்;

ஆனால் இந்து மார்க்கத்தின் அடிப்படைகளை அறிந்து அதன் பாதிப்புகளிலிருந்து மீளாத நிலையில் அதனை நிலைநிறுத்த போராடும் போராட்டத்தை அறிய நேரிட்டதினால் அவ்வாறு குறிப்பிட்டேன்;

நீங்கள் எழுதுவேன்,எழுதுவேன் என்று சொல்லும் காரியங்களை எழுதும்போது அதன் பயங்கரமான மறுபக்கத்தை நானும் எழுதுவேன்; அப்போது வாசகர் உண்மை எது என்பதைப் புரிந்துக்கொள்ளுவார்.

திரு. சில் சாம் அவர்களே, இந்தக் கருத்துக்கு மாறு பட்ட வகையிலே நான் செயல் படவில்லையே!

//திருச்சிக்காரன் என்பவர் பொதுவாக கடவுள் நம்பிக்கை இல்லாதவர்; ஆனாலும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை மதிப்பதுடன் மற்றவரும் அதுபோலவே ஒருவருக்கொருவர் சகிப்புத்தன்மையுடன் நடந்துக்கொள்ளவேண்டும் என்ற கருத்தையுடையவர் என்று எண்ணியிருந்தேன்;//

இந்தக் கருத்துக்கு மாறு பட்ட வகையிலே நான் செயல் படவில்லையே!

நாம் ஒவ்வொரு மதத்தின் கருத்துக்களையும் ஆக்க பூர்வமாகவே அணுகுகிறோம். ஒவ்வொரு மதத்திலும் உள்ள மக்களுக்கு உதவும் கருத்துக்களை, சமூக முன்னேற்ற கருத்துக்களை நாம் வரவேற்கிறோம். மதங்களில் உள்ள வெறுப்புக் கருத்துக்கள் , பிற்போக்கு கருத்துக்களை மட்டுமே கண்டிக்கிறோம். எனவே நமக்கு எந்த மதத்தின் மீதும் காழ்ப்புணர்ச்சி இல்லை.

பிற மதக் கடவுள்களும் மரியாதை செய்யப் பட வேண்டும் என்ப நம் உறுதியான கொள்கை. யாரும் அல்லாஹ் வினை இழிவு செய்வதை நாம் ஒப்பவில்லை. இயேசு கிறிஸ்துவை யாராவது அவதூறு செய்தால் , அதற்க்கு எதிராக , இயேசு கிறிஸ்துவின் சார்பாக வலுவான வாதங்களை நானே முன் வைத்து இருக்கிறேன்.

கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்றால், கடவுளை நாங்கள் நம்பிக்கை அடிப்படையில் அணுக விரும்பவில்லை, பகுத்தறிவு அடிப்படையில் அணுகி , உண்மையில் கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா என்றே அறிய விரும்புகிறோம். காணாத வரையில், உணராத வரையில் வெறும் நம்பிக்கை அடிப்படையில் கடவுள் இருக்கிறார் என்று உறுதியிட்டு சொல்ல நான் தயார் இல்லை- நான் இப்படி சொல்வது இந்துக கடவுள்களுக்கும் பொருந்தும். இந்து மதக் கடவுள்களையும் சேர்த்துதான் சொல்கிறோம்.

யாரவது இயேசு கிறிஸ்துவை இழிவு படுத்தி பேசினால் பல இடங்களில் நான் கிறிஸ்து வை ஆதரித்து பேசி இருக்கிறேன். – இல்லை என உங்களால் நிரூபிக்க முடியுமா ?

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறோம், நீங்கள் எழுதுவாத நாங்கள் மட்டுருத்தவில்லையே, தொடர்ந்து நமது கட்டுரைகளைப் படித்து கருத்து தெரிவியுங்கள் எனக் கோருகிறோம். உங்கள் சிந்தனைகளை வெளிப்படுத்தியதற்கு நன்றி.

திரு சில்சம் அவர்களே,

///“வேதமந்திரத்தை சூத்திரன் கேட்கக்கூடாது,மீறிக் கேட்டால் அவன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும்” என்று சொல்லப்படுவதை தவறு என்று அனைவரும் உணர்ந்து வேதத்தைக் கற்க முன்வரவேண்டும்.///

மிகச் சரியாக சொன்னீர்கள்.நீங்கள் குறிப்பிட்டது ஸ்ம்ருதி ஆகும்.இது அந்த அந்த காலகட்டத்திற்கு தகுந்தவாறு எழும் விதிமுறைகளே ஆகும்.

இதைப் பற்றி விவேகானந்தர் கூறியது.(ஞான தீபம் 5 ,தலைப்பு இந்தியாவின் எதிர்காலம்.பக்கம் 230 -231 )

“”சில நூல்கள் இருக்கின்றன;அவற்றில்,”சூத்திரன் வேதத்தைக் கேட்டால் அவனது காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுங்கள்;ஒரு வரி கூட நினைவில் வைத்திருந்தாள் அவனுடைய நாக்கை வெட்டுங்கள்;.பிராமணனைப் பார்த்து ”எ,பிராமணா” என்று அவன் அழைத்தால் அவனுடைய நாக்கை வெட்டி விடுங்கள்; ” என்பது போன்ற கொடூரமான கருத்துக்கள் இருக்கின்றன.இவை மிருகத்தனமான பழங்காலக் காட்டுமிராண்டித்தனம்.அதில் சந்தேகமே இல்லை,இதை யாரும் சொல்ல வேண்டியதும் இல்லை.அதற்காக விதிமுறைகளை எழுதியவர்களைப் பழிக்காதீர்கள்.அவர்கள் அப்போது சமுதாயத்தின் ஏதோ ஒரு பகுதியில் நடைமுறையில் இருந்ததை அப்படியே குறித்து வைத்தார்கள்,அவ்வளவுதான்.முன்னோர்களுள்ளும் சிலவேளைகளில் இத்தகைய பிசாசுகள் தோன்றவே செய்தன.அத்தகைய பிசாசுகள் எங்கும்,எல்லா காலங்களிலும் இருந்தே வருகின்றன.””

விவேகானந்தர் கூறிய இந்தக் கருத்திலிருந்து இது ஏதோ ஒரு காலத்தில்,ஏதோ ஒரு பகுதியில் நடைமுறையில் இருந்த நடைமுறையின் பதிவு தானே தவிர இது இந்து மதத்தின் முக்கிய அங்கம் கிடையாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

Dear Brother Dhanapal,

We thank you for your appropriate and timely quote.

யப்பா.. எத்தனை யோக்கியர்கள் (என்னையும் சேர்த்து), இங்கே அடுத்தவன் குறைகளை பிரபல படுத்தவந்துவிட்டோம். ஆளுக்கு இன்னும் ரெண்டு கல் எடுத்து அந்த சாமியார் மேல வீசுங்க. நாமெல்லாம் தான் உத்தமர்கள்.

ரொம்ப உத்தமன்,
அசோக்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: