Thiruchchikkaaran's Blog

இந்து ம‌த‌த்தை என‌க்குப் பிடிக்க‌வில்லையே….. “ந‌ற‌ ந‌ற… ர்…ர் …”

Posted on: March 10, 2010


 இந்து ம‌த‌த்தை என‌க்குப் பிடிக்க‌வில்லை, அத‌னால் “‘இந்து ம‌த‌த்ததில் ஒன்றுமே  இல்லை” என‌ ச‌த்த‌ம் போட்டால் அதில் ஒன்றும் இல்லாம‌ல் ஆகி விடுமா?  ஒரு ம‌த‌த்தைப் ப‌ற்றி விம‌ரிசிக்கும் முன்னால் அத‌ன் அடிப்ப‌டைளைக் கொஞ்ச‌மாவ‌து புரிந்து கொள்ள‌ வேண்டும். த‌ன‌க்கு க‌ண‌க்கு பாட‌ம் வ‌ர‌வில்லை என்ப‌தனால் க‌ண‌க்கு பாட‌த்தையே ஒழிக்க‌ வேண்டும் என‌ப் போராட்ட‌ம் ந‌ட‌த்தினால் எப்ப‌டி? 

சில‌ த‌ள‌ங்க‌ளில் இந்து ம‌த‌த்தைப் ப‌ற்றி விம‌ரிசிக்கிறார்க‌ள். அத‌ற்க்கு ப‌தில் விள‌க்க‌ம் குடுத்தால் அதை ம‌ட்டுறுத்தி விடுகின்ற‌ன‌ர். நாம் தவறான வார்த்தைகள் எதுவும் உபயோகிக்காமல் கண்ணியமாக எழுதிய போதும் நம்முடைய பின்னூட்டம் நிறுத்தப் பட்டுள்ளது. எனவே அந்தப் பின்னூட்டத்தை ந‌ம‌து தளத்தில் வெளியிடுகிறேன்.

உண்மையை சந்திக்க தயங்காதவர்கள் ந‌ம‌து தளத்தில் வந்து விவாதிக்கலாம். இங்கே யாருடைய கருத்தும் மட்டுறுத்தப் படவில்லை. அசிங்க வார்த்தைகள், ஆபாச வார்த்தைகள், சாதாரண திட்டுக்கள், கேவலமான திட்டுக்கள் – இவை மட்டும்( அந்த வார்த்தைகள் மட்டும்) மட்டுறுத்தப் படும்.

இந்து மதத்தின் மீதான தவறான புரிதலில் உள்ள சிலர் இந்திய சமுதாயத்தில் உள்ள சாதி சமூகத்தை, இந்து மதமாக சித்தரிக்க முயலுகின்றனர்.

நாம் ஏற்கென‌வே சொன்ன‌து போல‌, சாதி அடையாள‌ங்க‌ளைக் க‌ளைந்து, ச‌ம‌த்துவ‌ ச‌முதாய‌ம் அமைக்க‌வே உழைக்கிறோம். என‌வே நூற்றாண்டு ப‌ழைய‌ சாதிப் ப‌ட்ட‌ங்களை உப‌யோக‌ப் ப‌டுத்த‌ வேண்டாம் என்ப‌தே ந‌ம் க‌ருத்து. சாதி என்ப‌து இந்திய‌ ச‌மூக‌த்தின் ஒரு அம்ச‌ம். அது இந்து ம‌த‌த்தின் மீது சும‌த்த‌ப் ப‌ட்டு விட்ட‌து. பாலித் தீவில் இந்து ம‌த‌ம் இல்லையா? தென் கிழ‌க்கு ஆசியாவில் இந்து ம‌த‌ம் இல்லையா? இந்திய‌ நாட்டில் சாதிக‌ளுக்கு இடையிலான‌ வேறுபாடுக‌ள் வேகமாக‌க் குறைந்து வ‌ருகின்ற‌ன‌. அதை இன்னும் வேக‌ப் ப‌டுத்துவொம். சாதிக‌ள் உள்ள‌ ச‌முதாய‌ம் எப்ப‌டி இந்து ம‌த‌த்தைப் பின்ப‌ற்றிய‌தோ, சாதிக‌ள‌ற்ற‌ இந்திய‌ ச‌முதாய‌ம் அதை விட‌ சிற‌ப்பாக‌வே இந்து ம‌த‌த்தைப் பின் ப‌ற்றும்.

Kindly refer https://thiruchchikkaaran.wordpress.com/2009/12/08/casteless-homogenious-soceity-1/

ம‌ற்ற‌ ப‌டி எந்த‌ ஒரு த‌த்துவ‌மாக‌ இருந்தாலும், அதை ஓர‌ள‌வுக்காவ‌து புரிந்து கொண்டு விம‌ரிச‌ப்ப‌தே ந‌ல்ல‌து. உல‌கிலே பிற‌ ம‌த‌ங்க‌ளின் மீது வெறுப்புக் க‌ருத்துக்க‌ளைப் பர‌ப்பாத‌, பிற‌ மார்க்க‌த்த‌வ‌ர் வ‌ண‌ங்கும் தெய்வ‌ங்க‌ளை இக‌ழ சொல்லாத‌ ஒரே ம‌த‌மாக‌ இந்து ம‌த‌மே உள்ள‌து.

என‌வே உல‌க‌த்தில் ம‌த‌ங்க‌ளுக்கு இடையிலான‌ போர‌ட்ட‌த்தை மித‌மாக்கி ச‌ம‌ர‌ச‌ப்ப‌டுத்த‌ ஒரே வாய்ப்பாக‌ இந்து ம‌த‌மே உள்ள‌து.  ந‌ம்முடைய‌ த‌ள‌த்திலே இது ப‌ற்றி விவ‌ர‌மாக‌ எழுதி இருக்கிறோம். ப‌குத்த‌றிவு அடைப்ப‌டையிலே , ப‌குத்த‌றிவு அடைப்ப‌டையிலே ம‌ட்டுமே ஆன்மீக‌த்தை அணுகி இருக்கிறோம். https://thiruchchikkaaran.wordpress.com/2009/12/16/rationalism/

 https://thiruchchikkaaran.wordpress.com/2010/01/06/civilised-soceity/

இவ‌ற்றை எல்லாம் ப‌டித்து விட்டு உங்க‌ள் க‌ருத்தை எழுதுங்க‌ள். நான் அம்பேத்கரை பாராட்டியே எழுதியிருக்கிறேன். பெரியாரையும் பார‌ட்டி இருக்கிறேன், பெரியாரை விம‌ரிச‌ன‌மும் செய்து இருக்கிறேன், ஆனால் என் விம‌ரிச‌ன‌ங்க‌ளில் பெரியார் மீது காழ்ப்புண‌ர்ச்சி இருக்காது. பெரியாரிட‌ம் இருந்தும் நான் ப‌ல‌ விட‌ய‌ங்க‌ளைக் க‌ற்ற‌வ‌ன்.

இந்து என்றால் என்ன‌ என்று கேட்கிரார்க‌ள் இந்து ம‌தத்தைப் ப‌ற்றியோ இந்து என்றால் என்ன‌ என்றோ ஒரே ஒரு வாக்கிய‌த்தில் முடித்து விட‌ முடியாது.

கீழ்க்காணும் க‌ருத்துக்க‌ளை எந்த‌ அளவுக்கு ஒருவ‌ன் பின்ப‌ற்றுகிறானோ அவ‌ன் அந்த‌ அள‌வுக்கு சிற‌ந்த‌ இந்து என‌க் க‌ருத‌ப்ப‌ட‌லாம், என்ப‌தை ஆரம்ப‌க் க‌ருத்தாக‌ இங்கே சொல்கிறோம்.

//அத்வேஷ்டா ( மனதிலே வெறுப்புணர்ச்சி இல்லாதவனாக , பகைமை இல்லாதவனாக)

சர்வ பூதானம் மைத்ரா (எல்லா உயிர்களிடனும் சினேக பாவத்துடன்)

நிர்மமோ, நிரஹங்கார (அகந்தையும் திமிரும் இல்லாதவனாக )

ஸம – துக்க ஸுக (இன்பத்தையும் , துன்பத்தையும் ஒன்றாகக் கருதுபவனாய்)

க்ஷமீ (பொறுமை உடையவனாய்)

ஸ ந்துஷ்ட : ஸததம் (எப்போதும் மகிழ்ச்சி உடையவனாக )

யோகி (யோக நெறியில் நிற்பவன்)

யதாத்மா (அமைதியான ஆத்மா நிலையில் நிற்பவன்)

த்ருட நிச்சய (திடமான உறுதி உடையவன்)

மய்யர்பித மனோ புத்திர் ( மனதையும் புத்தியையும் என்னிடம் அர்ப்பித்தவன்)

யோ மத் பக்த ( எவன் என்னிடம் பக்தி செய்பவனாக )

ஸ மே ப்ரிய (அவன் எனக்கு பிரியமானவன்).//

இந்த‌ க‌ருத்துக்க‌ளை எந்த‌ அளவுக்கு ஒருவ‌ன் பின்ப‌ற்றுகிறானோ அவ‌ன் அந்த‌ அள‌வுக்கு சிற‌ந்த‌ இந்து என‌க் க‌ருத‌ப்ப‌ட‌லாம், என்ப‌தை ஆரம்ப‌க் க‌ருத்தாக‌ இங்கே சொல்கிறோம்.

மேலும் தொட‌ர்ந்து அதிக‌ விள‌க்க‌ங்க‌ள் கொண்ட‌ பல‌ க‌ட்டுரைக‌ள் வெளியிட‌ப் ப‌டும்.

உண்மையை சந்திக்க தயங்காதவர்கள் ந‌ம‌து தளத்தில் வந்து விவாதிக்கலாம். இங்கே யாருடைய கருத்தும் மட்டுறுத்தப் படவில்லை.

Advertisements

15 Responses to "இந்து ம‌த‌த்தை என‌க்குப் பிடிக்க‌வில்லையே….. “ந‌ற‌ ந‌ற… ர்…ர் …”"

நண்பரே,
//பாலித் தீவில் இந்து ம‌த‌ம் இல்லையா? தென் கிழ‌க்கு ஆசியாவில் இந்து ம‌த‌ம் இல்லையா?//
இது எனக்கு புதிய தகவல். நன்றி.
//உல‌கிலே பிற‌ ம‌த‌ங்க‌ளின் மீது வெறுப்புக் க‌ருத்துக்க‌ளைப் பர‌ப்பாத‌, பிற‌ மார்க்க‌த்த‌வ‌ர் வ‌ண‌ங்கும் தெய்வ‌ங்க‌ளை இக‌ழ சொல்லாத‌ ஒரே ம‌த‌மாக‌ இந்து ம‌த‌மே உள்ள‌து. //
அடுத்தவன் எக்கேடோ கேட்டு போகட்டும் இருப்பவர்களும். பிறர் மீது கண்டிதமான கருத்துக்களை சொல்வதில்லையே.
உங்கள் பார்வையில் மதம் என்றால் என்ன?

நன்றி,
அசோக்

நண்பர் அசோக் குமார் கணேசன் அவர்களே,

//உங்கள் பார்வையில் மதம் என்றால் என்ன?//

மதம் என்பதின் முக்கிய நோக்கமானது – மனிதனின் உயிரைப் பற்றிய ஆராய்ச்சிக்கு, அதைப் பற்றிய உண்மைகளை அறிய ஒரு வழிகாட்டியாக இருப்பது, மனிதனின் உயிரை துனபங்களில் இருந்து விடுவித்து துன்பங்களற்ற நிலையை அடைய உதவுவது, மனிதன் நாகரீகமான வாழ்க்கையை வாழ வழிகளை வகுத்துக் கொள்ள உதவுவது, கடவுள் என்று ஒருவர் தனியாக இருக்கிறாரா … இது போன்ற கருத்துக்களைப் பற்றி விவாதிக்கும் பொருளே மதம்.

//அடுத்தவன் எக்கேடோ கேட்டு போகட்டும் இருப்பவர்களும். பிறர் மீது கண்டிதமான கருத்துக்களை சொல்வதில்லையே.//

மேலும் மதம் பற்றி விவாதிக்கலாமா என்றால், ஒரு மதத்தின் கருத்துக்களை எடுத்து சொல்லி அது சரியா , நியாயமா என விவாதிக்கலாம். உதாரணமாக இசுலாத்தை எடுத்துக் கொண்டால் அதிலே வட்டி வாங்கக் கூடாது, சூதாடக் கூடாது, மது அருந்தக் கூடாது, இப்படிப்பட்ட மனித நேயக் கருத்துக்கள் உள்ளன. அதே நேரம் ஒரு கணவன் தன மனைவியின் விருப்பத்தைக் கேட்காமலே, அவளை விவாக ரத்து செய்து விட முடியும், அந்தப் பெண் தன்னுடைய குசந்தைகளியும் விட்டு விட்டு, அந்தக் குடும்பத்தையும் விட்டு விட்டு செல்ல வேண்டும் என்றால் இது நியாயமான கருத்தா என்பதை அவரவர் மனசாட்சசிக்கே விட்டு விடுகிறோம்.

எனவே ஒரு மத்தைப் பற்றியோ, கோட்பாட்டைப் பற்றியோ விமரிசிப்பதானால் அதன் கருத்துக்களை எடுத்துக் காட்டி , இது இந்த வகையில் தவறு என சிந்தனை அடிப்படையில் சுட்டிக் காட்டலாம். ஆனால் வெறுமனே காழ்ப்புணர்ச்சி அடிப்படையில், எப்படியாவது நம்முடைய கற்பனைகளை மட்டுமே இந்த உலகில் எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்ற ஆவலின் அடிப்படையில் வெறுமனே கண்டனங்களை, வெறுப்புக் கருத்துக்களை பரப்புவது சமூகங்களுக்கு இடையிலே மோதலை உருவாக்கி, அமைதியைக் கெடுத்து, இரத்த ஆறை ஓட வைக்கிறது.

அமெரிக்காவில் வெளியூர்களுக்கு செல்லும் போது, வழிகாட்டியாக நாங்கள் GPS device , வைத்துக் கொள்கிறோம். நல்ல தரமான GPS device தெளிவாக, நாம் இந்த இடத்தில் இருக்கிறோம், நாம் செல்லவேண்டிய இடம் இந்த திசையில், இவ்வளவு தூரத்தில் உள்ளது, இந்த சாலையில் சென்றால், இந்தந்த இடத்தில் திரும்பி சென்றால்,நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லலாம் என்று தெளிவாக காட்டுகிறது. நாம் பாதை மாறிபோனால், ஒலி எழுப்பி, நமக்கு எச்சரிக்கை தருகிறது. நாம் வழி தப்பி போனாலும், சரியான வழிக்கு வருவதற்கு பாதை காட்டுகிறது.
இப்படி ஒரு தரமான GPS உடன் நான், என் இலக்கு நோக்கி பயணம் செய்யும் போது. ஒரு நெடுஞ்சாலை சந்திப்பில் என் நண்பர் ஒருவர் நான் செல்லும் இடத்திற்கு செல்வதாக நினைத்துக்கொண்டு வேறு பக்கம் சென்றால், அவர் போகும் பாதை தவறு என்று எச்சரிப்பது தவறா?
காழ்ப்புணர்ச்சியா? அப்படி கூறுவது அன்பினால் வரும் கருத்தா அல்லது வெறுப்பு கருத்தா?
மேலும் அந்த தவறான பாதையில் முன்பொருமுறை நான் சென்று பல இன்னல்களை அனுபவித்ததினால், எனக்கு அந்த நண்பர் மேல் அதீத அக்கறை வராதா?
மேலும் அந்த நண்பரின் பயணம் நன்றாக அமைய நான் உபயோக படுத்தும் அதே brand தரமான GPS ஐ அவருக்கு இலவசமாக கொடுத்தால் அது அன்பான சேவையா, அல்லது multi level marketting ஆ??
இன்னும் பல கேள்விகளுடன்,
அசோக்

///இப்படி ஒரு தரமான GPS உடன் நான், என் இலக்கு நோக்கி பயணம் செய்யும் போது. ஒரு நெடுஞ்சாலை சந்திப்பில் என் நண்பர் ஒருவர் நான் செல்லும் இடத்திற்கு செல்வதாக நினைத்துக்கொண்டு வேறு பக்கம் சென்றால், அவர் போகும் பாதை தவறு என்று எச்சரிப்பது தவறா?
காழ்ப்புணர்ச்சியா? அப்படி கூறுவது அன்பினால் வரும் கருத்தா அல்லது வெறுப்பு கருத்தா?
மேலும் அந்த தவறான பாதையில் முன்பொருமுறை நான் சென்று பல இன்னல்களை அனுபவித்ததினால், எனக்கு அந்த நண்பர் மேல் அதீத அக்கறை வராதா?
மேலும் அந்த நண்பரின் பயணம் நன்றாக அமைய நான் உபயோக படுத்தும் அதே brand தரமான GPS ஐ அவருக்கு இலவசமாக கொடுத்தால் அது அன்பான சேவையா, அல்லது multi level marketting ஆ??
இன்னும் பல கேள்விகளுடன்,அசோக்///

திரு அசோக் குமார் கணேசன் அவர்களே,

நீங்கள் கூறியது உதாரணமாக இருந்தாலும் ,உங்கள் நண்பர் GPS பயன்படுத்த வில்லை என்று தெரிகிறது.அப்படிப்பட்டவர்களுக்கு நீங்கள் உபயோக படுத்தும் அதே brand தரமான GPS ஐ அவருக்கு இலவசமாக கொடுத்தால் அது அன்பான சேவையே.

ஆனால்,அவரிடமும் ஒரு தரமான GPS இருந்து,– சரியானப் பாதையில் சென்று கொண்டிருக்கும் உங்கள் நண்பரை,– தரமில்லாத brand GPS -ஆல் தான் தவறான வழியில் செல்வதாக,நீங்கள் தவறாக நினைத்து,– உங்கள் brand GPS மட்டுமே சரியான வழிகாட்டுவதாக நினைத்து,– உங்கள் brand GPS மீது உள்ள அதீத நம்பிக்கையால்,– மற்றவரும் உங்கள் brand GPS ஐ பயன்படுத்துவதை நீங்கள் மிகவும் விரும்பி,– அவர் ஏற்கனவே பயன்படுத்திய தரமான brand GPS ஐ,நீங்கள் தரமற்றது என்று எண்ணியதால் –உங்கள் நண்பரிடம் அவர் ஏற்கனவே பயன்படுத்திய தரமான brand GPS ஐ தரமற்றது என்று நீங்கள் கூறி ,உங்கள் brand GPS ஐ நீங்கள் இலவசமாகக் குடுத்தால் அது AGMARK MALTI LEVAL MARKETING தான் சார்,

///மேலும் அந்த தவறான பாதையில் முன்பொருமுறை நான் சென்று பல இன்னல்களை அனுபவித்ததினால், எனக்கு அந்த நண்பர் மேல் அதீத அக்கறை வராதா?//

அந்த தவறானப் பாதை,இந்துப் பாதையா?,இஸ்லாமிய பாதையா?புத்தப் பாதையா?அல்லது வேறு பாதையா?எந்தப் பாதையில் சென்று, நீங்கள் அனுபவித்ததாக கூறிய பல இன்னல்கள் என்னென்ன என்று கூற முடியுமா?

//உங்கள் பார்வையில் மதம் என்றால் என்ன?//

‘மதம்’ என்பது ஆங்கிலப் பொருளின் அடிப்படையில் ஒருவன் தான் உறுதியாக நம்பும் ஒரு கொள்கையை விடாமல் பற்றிக் கொள்வதைக் குறித்துச் சொல்லுகிறது..!

//உங்கள் பார்வையில் மதம் என்றால் என்ன?//

‘மதம்’ என்பது ஆங்கிலப் பொருளின் அடிப்படையில் ஒருவன் தான் உறுதியாக நம்பும் ஒரு கொள்கையை விடாமல் பற்றிக் கொள்வதைக் குறித்துச் சொல்லுகிறது..!

//

அது ஆங்கிலேய‌ரின் க‌ருத்து. ஆங்கிலேய‌ரை நான் குறை சொல்ல‌வில்லை, வெறுக்க‌வில்லை, அவ‌ரும் என‌து ச‌கோத‌ர‌ரே. அதே நேர‌ம் ஆங்கிலேய‌ர்க‌ள் ச‌முதாய‌மாக‌ உருவாகும் முன்னே, அவ‌ர்க‌ள் வ‌ர‌லாறு ஆர‌ம்பிக்கும் முன்னே, ந‌மது நாட்டிலே மூன்று முக்கிய‌ ம‌த‌ங்க‌ளை உருவாக்கி இருக்கிறோம். என‌வே க‌ற்றுக் கொடுப்ப‌து ந‌ம‌து இன‌ம். ந‌ம‌க்கு க‌ற்றுக் கொடுக்க‌ வேண்டும் என‌ அவ‌ர்க‌ள் நினைத்தால் அது அறிவீன‌ம் என‌ப‌தைத் தாழ்மையுட‌ன் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘GPS’ கருவி என்பது இடத்துக்கு இடம் ஆளுக்கு ஆள் மாற்றி காட்டாது;அது ஒன்றையே காட்டும்; பொருள் விளங்கக் கூறப்பட்ட உதாரணத்தையே பின்பற்றிச் சென்று மெய்ப் பொருளை அடையமுடியும் என்று தோன்றவில்லை;

மாறாக “GPS” கருவி ஒன்றையே காட்டுவது போல பரம்பொருளை அடைவதே நோக்கமானால் அதற்கான வழி ஒன்றாகவே இருக்கும்;

“சத்தியம்” என்பது எதனுடன் ஒத்துப்போகாததும் எல்லாராலும் பகைக்கப்படுகிறதாகவுமே இருக்கும் என்பது மாறாத விதியாகும்;அதனை ஏற்பவர்கள் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கும்.

GPS க‌ருவியை காரிலே பொருத்தி இருந்தால் அது ச‌ரியான‌ வ‌ழியைக் காட்டும். GPS க‌ருவி ந‌ல்ல க‌ருவிதான். ஆனால் சில‌ருக்கு கிடைத்த‌ GPS க‌ருவியான‌து டேம்ப‌ர் (tamper) செய்ய‌ப் ப‌ட்டு அளிக்க‌ப் ப‌ட்டு விட்ட‌து. ஒரிஜின‌ல் GPS க‌ருவி ந‌ல்ல க‌ருவிதான். ஆனால் அதை கொடுத்த‌வ‌ர்க‌ள் அதை த‌வறாக‌ புரொகிராம் செய்து கொடுத்து விட்டார்க‌ள்.

என்வே அந்த‌ GPS க‌ருவியை ந‌ம்பி காரை ஓட்டினால், அவ‌ச‌ர‌மாக‌ ஒருவ‌ரை ம‌ருத்துவ‌ம‌னைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்ல முய‌ன்றால், அந்த‌ க‌ருவி ம‌ருத்துவ‌ம‌னை என்ற‌ பெய‌ரிலே த‌வ‌றாக‌ இடு காட்டுக்கு கொண்டு போய் விட‌க் கூடும். என‌வே ம‌ருத்துவ‌ம‌னைக்குப் ப‌திலாக‌ க‌ல்ல‌றைக்கு வ‌ழி காட்டும் GPS க‌ருவிக‌ளை எல்லொரிட‌மும் கொடுக்க‌ வேண்டாம் என‌க் கேட்டுக் கொள்கிரோம்.

எனவே நீங்க‌ள் அவ‌ச‌ர‌ப் ப‌டாதீர்க‌ள். உங்க‌ள் GPS க‌ருவியை நாங்க‌ளே ச‌ரி செய்து செப்ப‌னிட்டு த‌ருவோம். நாங்க‌ள் GPS க‌ருவியை ச‌ரி செய்யும் Professioalக‌ள்.

உங்க‌ள் GPS க‌ருவி ந‌ல்ல‌ க‌ருவிதான். ஆனால் அது டேம்பெர் (tamper) செய்ய‌ப் ப‌ட்டு உள்ள‌து. சிறிது பொறுங்க‌ள். ச‌ரி செய்து த‌ருவோம்.

திரு சில்சம் அவர்களே,

///‘GPS’ கருவி என்பது இடத்துக்கு இடம் ஆளுக்கு ஆள் மாற்றி காட்டாது;அது ஒன்றையே காட்டும்;///

மிகச் சரியாகச் சொன்னீர்கள் சில்சம்,எல்லா brand GPS கருவியும் ஒன்றையே காட்டும்.அதைத் தான் இந்துமதமும் சொல்கிறது.எல்லா வழியும் இறைவனை அடையும் பாதைகளே.

மதம் என்பதை மார்க்கம் என்றும் கூறுகிறோம். மார்க்கம் என்றால் வழி. இறைவனை அடையும் வழி. இதில் பிரதானமாய் இருப்பது, இறைவன், மற்றும் இறைவனுக்கும் நமக்கும் இருக்கும் உறவு.
ஆனால், திருசிக்காரனுடைய பிரதான நோக்கம் மனித நாகரீகம். இதை நான் குறை கூறவில்லை. இந்த உலகமும், உலக வாழ்க்கையும், மனிதனும், மனித நாகரிகமும், நிலையில்லாதவை. நித்தியமான இறைவனை தேடி ஓடுவதை பற்றி நான் பேச விழைகிறேன். ஆனால் நிலையில்லாத, பிற விஷயங்கள்தான் முக்கியம் என்று திருச்சிக்காரன் கூறுகிறார்.
மதம் என்ற வார்த்தையின் புரிதலே நம் இருவருக்கும் வெவ்வேறாக உள்ளது.
என் வார்த்தைகள் கடுமையாய் இருந்தால் மன்னியுங்கள்.
உங்கள் மனம் நித்யம் அல்லாத மாயையான உலக விஷயங்களையே நாடுகிறது. நிலையான தேவனை நாட வில்லை.
அன்புடன்,
அசோக்

அசோக் அவர்களே,

//ஆனால், திருசிக்காரனுடைய பிரதான நோக்கம் மனித நாகரீகம்//

கண்டிப்பாக மனித நாகரீகம் எனது முக்கியக் குறிக்கோள். எந்த ஒரு மனிதனோ, ஜீவராசியோ, மத, இன, மொழி… வேறுபாடுகளின் அடிப்படையில் துன்புறுத்தப் படக் கூடாது, வெறுக்கப் படக் கூடாது, என்பது நமது தெளிவான குறிக்கோள். அதே நேரம் ஒவ்வொரு உயிரும் இயற்கையின் கையில் அடிமையாக இருக்கும் நிலையில் இருந்து விடுதலை பெற்று முழு சுதந்திரம் அடியும் வகையில் படிப்படியாக தங்களுடைய மன வலிமையை தாங்களே அதிகரிக்கும் வாய்ப்பு பற்றியும் நாம் முக்கியமாக ஆராய்கிறோம். நாங்களும் நிலையான நிலையை அடைய முடிவதர்க்கான வாய்ப்பு, சாத்தியங்கள் பற்றியே ஆராய்கிறோம், முயற்ச்சியும் செய்கிறோம் – பகுத்தறிவின் அடிப்படையில்.

//அடுத்தவரை தொந்தரவு செய்யாமல், சாலை விதிகளை பின்பற்றி சென்றால் போதும், எந்த வழியாக சென்றாலும் அந்த இடத்திற்கு செல்லலாம் என்று கூற ஒரு GPS தேவையே இல்லை. என்னை பொறுத்தவரை, திருச்சிக்காரன் கூறும் இந்துமதம் அதைதான் செய்கிறது.//

நீங்கள் இந்து மதம் என்ன சொல்கிறது என்பதை முதலில் புரிந்து கொள்ளங்கள். இந்து மதத்தின் கருத்தை மேற்கோள் காட்டி தெளிவாக சொல்லுங்கள் அசோக் அவர்களே. பொத்தாம் பொதுவாக சொன்னால் எப்படி?

உங்களிடம் இருப்பதோ வெறும் நம்பிக்கை மாத்திரமே. எந்த நிரூபணமும் கிடையாது. பகுத்தறிவு அடிப்படையில் சிந்திக்க நீங்கள் தயாராக இல்லை. தன் மதம் மட்டுமே உண்மையை சொல்கிறது , பிற மதங்கள் எல்லாமே பொய் என்கிற கருத்தாக்கத்தில் சிக்கிக் கொண்டால் எப்படி சார்பின்றி ஆராய முடியும்.

//Who tampered it? Where it is tampered? Can you please show those tampered parts? And How are you going to fix that?//
Kindly watch our future articles.

//எல்லா வழியும் இறைவனை அடையும் பாதைகளே.//
சில இடங்களுக்கு செல்ல ஒரே ஒரு பாதை மாத்திரமே இருக்கும். சரியான GPS அதை காண்பிக்க வேண்டும். அடுத்தவரை தொந்தரவு செய்யாமல், சாலை விதிகளை பின்பற்றி சென்றால் போதும், எந்த வழியாக சென்றாலும் அந்த இடத்திற்கு செல்லலாம் என்று கூற ஒரு GPS தேவையே இல்லை. என்னை பொறுத்தவரை, திருச்சிக்காரன் கூறும் இந்துமதம் அதைதான் செய்கிறது.
Thanks,
Ashok

//எனவே நீங்க‌ள் அவ‌ச‌ர‌ப் ப‌டாதீர்க‌ள். உங்க‌ள் GPS க‌ருவியை நாங்க‌ளே ச‌ரி செய்து செப்ப‌னிட்டு த‌ருவோம். நாங்க‌ள் GPS க‌ருவியை ச‌ரி செய்யும் Professioalக‌ள். //
நாகரீகமாய், சாலைவிதிகளை பின்பற்றி போனால் போதும், நாம் போகவேண்டிய ஊர் வந்துவிடும் என்று கூறுகிறீர்கள். நீங்கள் எப்படி???
//உங்க‌ள் GPS க‌ருவி ந‌ல்ல‌ க‌ருவிதான். ஆனால் அது டேம்பெர் (tamper) செய்ய‌ப் ப‌ட்டு உள்ள‌து. சிறிது பொறுங்க‌ள். ச‌ரி செய்து த‌ருவோம்.//
Who tampered it? Where it is tampered? Can you please show those tampered parts? And How are you going to fix that?

Love,
Ashok

//அந்த தவறானப் பாதை,இந்துப் பாதையா?,இஸ்லாமிய பாதையா?புத்தப் பாதையா?அல்லது வேறு பாதையா?எந்தப் பாதையில் சென்று, நீங்கள் அனுபவித்ததாக கூறிய பல இன்னல்கள் என்னென்ன என்று கூற முடியுமா?//
நான் சென்ற பாதை, இயேசு இல்லாத பாதை. இயேசு இல்லாத எந்த பாதையும் ஒன்றுதான். அதன் முடிவு ………

Thanks,
Ashok

////Who tampered it? Where it is tampered? Can you please show those tampered parts? And How are you going to fix that?//
Kindly watch our future articles.//

என்னங்க திருச்சிக்காரரே, உங்க future articles ல இது பத்தி ஒண்ணுமே சொல்லலை. எல்லாம் சாமியார் சமாச்சாரமா இருக்கு.

Love,
Ashok

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: