Thiruchchikkaaran's Blog

இந்து ம‌த‌த்தை எதிர் நோக்கி உள்ள‌ பிர‌ச்சினைக‌ள் என்ன‌?

Posted on: March 8, 2010


இந்து ம‌த‌ம் ச‌ரியான‌ வ‌ழியில் செல்லுவ‌து இந்தியாவிற்க்கு முக்கிய‌மான‌ ஒரு விட‌யமாக இருக்கிற‌து. அதோடு ச‌ம‌ர‌ச‌க் க‌ருத்துக்களை உடைய‌ ம‌த‌மாக‌ இந்து ம‌த‌ம் இருப்ப‌தால், உல‌கம் முழுமைக்கும் ச‌ம‌ர‌ச‌க் க‌ருத்துக்க‌ளை ப‌ர‌ப்ப‌ வேண்டிய‌ பொறுப்பும் அந்த‌ ம‌த‌த்திற்கே உள்ள‌து என்ப‌தால், இந்து ம‌த‌ம் ச‌ரியான‌ வ‌ழியில் செலுத்த‌ப் ப‌ட‌ வேண்டிய‌து மிக‌ அவ‌சிய‌மான‌ விட‌ய‌மாக‌ உள்ள‌து.

இந்து ம‌த‌ம் ச‌ரியான‌ வ‌ழியில் செல்வ‌து என்றால், அதை அத‌ன் வ‌ழியில் விட்டால், அதுவே அத‌ன் அமைதியான‌ வ‌ழியில் ச‌ரியாக‌ சென்றுவிடும். இந்து ம‌த‌ம் இன்றைக்கு உயிரோட்ட‌த்துட‌ன் இருக்கிற‌து என்றால் அத‌ற்க்கு கார‌ண‌ம் அதை பின்ப‌ற்றும் சாதார‌ண‌ இந்துதான். ஒரு சாதார‌ண இந்துவுக்கு அவ‌னுக்கு தேவையான‌ இந்து ம‌த‌ம் அவ‌ன் சிறுவ‌னாக‌ இருக்கும் போதே  அவ‌ன் வீட்டிலே, அவ‌ன் வ‌சிக்கும் இட‌த்தில் உள்ள‌ கோவிலிலேயே கிடைத்து விடுகிற‌து. அதற்க்கு மேல் ப‌ட்டு அவ‌ன் வ‌ள‌ர‌ வள‌ர‌ இந்து ம‌த‌த்தின் முக்கிய‌ நூல்க‌ளாக‌ க‌ருத‌ப் ப‌டும் உப‌நிட‌ங்க‌ள், கீதை, சித்தர் பாடல்கள்  ….இப்ப‌டி பல‌ வ‌கையான‌ நூல்க‌ளையும் அவ‌ர‌வ‌ர் விருப்ப‌த்துக்கு ஏற்றார் போல‌ ப‌டித்து தெரிந்து கொள்கின்ற‌ன‌ர்.

இதிலே முக்கிய‌மான‌ விட‌ய‌ம் என்ன‌வென்றால் எந்த‌ ஒரு இந்து ம‌த‌ நூலும், பிற‌ ம‌த‌த்தின‌ர் தெய்வ‌ங்க‌ளாக‌ வ‌ழி ப‌டுப‌வ‌ரை இக‌ழ்ச்சியாக‌ப் பேச‌ சொல்லவில்லை. என‌வே அமைதியான‌ ம‌த‌மாக‌வே இந்து ம‌த‌ம் இருந்து வ‌ருகிற‌து. இந்து ம‌த‌த்தின் மீது வைக்க‌ப் ப‌டும் ஒரே குற்ற‌ச் சாட்டு அதைப் பின்ப‌ற்றும் பெருவாரியான் இந்துக்க‌ள், சாதி அடைப்ப‌டையிலான‌ ச‌முதாய‌மாக‌ வாழ்கின்ற‌ன‌ர் என்ப‌தும், அந்த‌ சாதி ச‌முதாய‌ முறையால் சில‌ பிரிவின‌ருக்கு அநீதி இழைக்க‌ப் ப‌ட்ட‌து என்ப‌துமே. இந்திய‌ ச‌முதாயத்தில் சாதிக‌ள் எவ்வாறு தோன்றின‌ என்ப‌து ப‌ற்றி ப‌ல விள‌க்க‌ங்க‌ள் அளிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. இந்திய‌ ச‌முதாய‌த்தில் பிற‌ ம‌த‌ங்க‌ளிலும் சாதி முறை இருந்து வ‌ருகிற‌து என்ப‌தோடு, வெளி நாட்டின‌ர் சாதிக‌ள் இல்லாம‌லே இந்து ம‌த‌த்தை பின்ப‌ற்றி வ‌ருவ‌தும் குறிப்பிட‌த் த‌க்க‌து.
என‌வே எந்த‌ அளவுக்கு சாதிக‌ள‌ற்ற‌ ச‌ம‌த்துவ‌ ச‌முதாய‌ம் உருவாக்க‌ முடியுமோ அந்த‌ அளவுக்கு ந‌ல்ல‌து. சாதி வேறுபாடுக‌ள் கணிச‌மாக‌ குறைந்து வ‌ரும் வேலையில் யாராவ‌து இந்து ம‌த‌ம் த‌ங்க‌ளின் சாதி உண‌ர்வுக்கு ஒரு க‌ருவியாக‌ இருக்கும் என‌ யாராவ‌து க‌ருதினால் அது ப‌க‌ல் க‌ன‌வே.

சாதி உண‌ர்வுக‌ளை தூண்டி விட்டு குழ‌ம்பிய‌ குட்டையில் மீன் பிடிக்க‌ விரும்பினால், அப்ப‌டிப்ப‌ட்ட‌ வியாபாரிக‌ளின் க‌ன‌வும் ப‌லிக்காது.

இவ்வாறாக‌ இந்து ம‌த‌த்தை வ‌ழி ந‌ட‌த்த‌ த‌னியாக‌ ஒரு த‌லைவ‌ர் யாரும் தேவை இல்லை. இந்து ம‌த‌ம் என்ப‌தே எந்த‌ ஒரு த‌னி ம‌னித‌ராலும் உருவாக்க‌ப் ப‌ட‌வில்லை. உண்மையை தேடுவ‌தும், உண்மையை அடைவ‌துமே இந்து ம‌த‌த்தின் முக்கிய‌மான‌ அடிப்ப‌டைக‌ளுள் ஒன்றாக‌ இருக்கிர‌து. அதே நேர‌ம் இந்து ம‌த‌ம்  அதில் கூற‌ப் ப‌ட்டுள்ள‌ முடிவுக‌ளை ச‌ரி பார்த்துக் கொள்ளும் அளவுக்கு ஒரு ம‌னித‌ன் ம‌ன‌ உய‌ர்வு பெற‌ முடியும் என்ப‌தையும், சுத‌ந்திர‌மான‌ ம‌னித‌னாக‌ வாழ் முடியும் என்ப‌தையும் கூறுகிற‌து. அவ்வ‌ழியே ப‌ட்டின‌த்தார், புத்த‌ர், ச‌ங்க‌ர‌ர், விவேகான‌ந்த‌ர் உட்ப‌ட‌ ப‌ல‌ரும் சொத்து, சுக‌ங்க‌ளின் மேல் உள்ள‌ ஆசையை விட்டு விட்டு துற‌வு வாழ்க்கை வாழ்ந்த‌ன‌ர். இவ‌ர்க‌ளைப் போல‌ உண்மையான் ஆன்மீக‌ம் உள்ள‌வ‌ர்க‌ள் இந்து ம‌த‌த்தை அவ்வ‌ப் போது செம்மைப் ப‌டுத்தி வ‌ந்த‌து அவ‌சிய‌மான‌ ஒன்றே. அப்ப‌டிப்ப‌ட்ட‌ உண்மையான‌ ஆன்மீக‌ வாதிக‌ள் கிடைத்தால் அவ‌ர்க‌ளுக்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுக்க‌லாம். இல்லையேல் ச‌ரியான‌ ஆன்மீக‌ வாதிக‌ள் இல்லை என்றால் ம‌க்க‌ளே பார்த்துக் கொள்வார்க‌ள்

ஆனால் ச‌மீப‌ காலமாக‌ துற‌வு, ஆன்மீக‌ம் என்ற‌ பெய‌ரால் சொத்து குவிப்ப‌தும், உல்லாச‌ சுக‌ போக‌ங்க‌ளில் திளைப்ப‌தும் வ‌ழ‌க்க‌மாகி விட்ட‌து. சில‌ர் அதையும் ப‌ரவாயில்லை, அவ‌ங்க‌ளும் ம‌னுச‌ந்த‌னே என‌ ஒத்துக் கொள்ளும்   ம‌ன‌ நிலைக்கு சென்று விட்ட‌ன‌ர். இதுதான் இந்து ம‌தத்தை எதிர் நோக்கி இருக்கும் முக்கிய‌ ச‌வால்.

ஆதி கால‌ முனிவ‌ன், சித்த‌ன்,புத்த‌ன் முத‌ல்,  போன‌ நூற்றாண்டு இராம‌கிருட்டின‌ர், விவேகான‌ந்த‌ர், தியாக‌ராச‌ர் வ‌ரை ப‌ண‌ம் இல்லாம‌ல் வாழ‌ந்து, மிக‌ப் பெரிய‌ ஆன்மீக‌ செய‌ல்பாட்டை செய்து விட்டு சென்று விட்ட‌ன‌ர். ஆன‌ல் திடீரென்று நூறு வ‌ருட‌ங்க‌ளுக்குள் ஆட‌ம்ப‌ர‌ ப‌ங்க‌ளா, மெர்சிடிஸ் கார், பில்லிய‌ன் க‌ண‌க்கில் சொத்துக்க‌ள் இவை எல்லாம் இல்லாம‌ல் துற‌வி வாழ‌ முடியாது என்று ஒரு க‌ருத்தாக்க‌த்தை ஏற்ப‌டுத்திய‌து எப்ப‌டி?

சுதந்திரமானது இந்து மதம்! அதன் மிக முக்கிய வழிகாட்டிகளாக உபநிடதங்களும், பகவத் கீதையும் உள்ளது. அதோடு சங்கரர், தியாகராசர், பட்டினத்தார், அப்பர், விவேகானந்தர் … இப்படிப் பலர் வெவேறு மொழிகளில் இந்து மதக் கருத்துக்களை பாடி வழிகாட்டி உள்ளனர்.

மார்க்கண்டேயன், பிரகாலாதன், துருவன்… என்று இந்து மதத்தைப் பின்பற்றி சிறப்பாக வாழ்ந்து காட்டியவர்கள் அநேகர்.

இந்து மதத்தை பின் பற்றும் எவரும் அதன் மதக் கருத்துக்கள் சரியா என்று கேட்கலாம். தாங்களே அது சரியா என்று சோதனை பார்த்துக் கொள்ளலாம். தாங்களும் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபடலாம். தங்களுக்கு கிடைத்த அனுபவங்களை வெளியிடல்லாம்.

இப்படிப்பட்ட அருமையான ஒரு மார்க்கத்தை, சில சுயநலமிகளும், மூடர்களும் கடத்தி சில ஸ்தாபனங்களுக்குள் அடைத்து அழிக்க பார்க்கின்றனர்.

இவர்களின் செயல் முறை என்னவென்றால் வரலாற்றில் சிறந்து விளங்கிய ஏதாவ‌து ஒரு புகழ் பெற்ற இந்து மத அறிங்கரை தேர்ந்து எடுப்பது,

அவருக்கு நாங்க தான் ஏஜென்ட்டு என்று பட்டா, பத்திரம் இருப்பது போல அடித்து சொல்வது,

கூட சில அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் சேர்ப்பது,

அவர்களை வைத்து அரசாங்கத்திலும், சமூகத்திலும் சில வேலைகளை செய்து முடிப்பது,

சரி, இவரிடம் போனால் வேலை எளிதாக முடியும் என்று இன்னும் அதிக அளவில் அராசாங்க அதிகாரி, பணக்கார முதலாளி, அரசியல் வாதி, தனியார் நிறுவன் அதிகாரி என்று அதிக பேர் வர, போக இருப்பது,

இத‌னால் பிரும்மாண்ட‌மாக ப‌ண‌க் குவிய‌ல், சொத்து, ம‌ருத்துவ‌ம‌னை, க‌ல்லூரிகள் சேர்க்க‌ப் ப‌டுத‌ல் சேர்க்க‌ப் ப‌டுத‌ல்,

இத‌னால் மேலும் அதிக‌ அர‌சிய‌ல் செல்வாக்கு, ச‌மூக‌ செல்வாக்கு, இன்னும் அதிக‌
ப‌ண‌க் குவிய‌ல், சொத்து,

அசைக்க‌ முடியாத‌ நிலையை அடைத‌ல்!

இத்த‌னையும் மீறி எவ‌னாவ‌து அசைக்க‌ப் பார்த்தால், அசைக்க‌ முடியாத‌ ப‌டிக்கு அணை க‌ட்டுகிறார்க‌ள்.

துற‌வி என்றால் யார்? எல்லாவ‌ற்றையும் துற‌ந்த‌வ‌ன் தானே?

இவ்வ‌ள‌வு காசு இவ‌ர்க‌ளுக்கு எத‌ற்க்கு?

புத்த‌ர், ச‌ங்க‌ர‌ர், அப்ப‌ர், விவேகான‌ந்த‌ர் ஆகியோர் த‌ங்க‌ள் ஆன்மீக‌ப் ப‌ணியைத் துவ‌க்கிய‌ போது அவ‌ர்க‌ளிட‌ம் ப‌ண‌ம், அர‌சிய‌ல் செல்வாக்கு இருந்த‌தா?

அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் வாழ்க்கையில் ப‌ணத்தையோ, செல்வாக்கையோ ந‌ம்பிய‌து உண்டா? ப‌ணமோ, த‌ங்க‌மோ, செல்வாக்கோ, ப‌த‌வியோ-இந்த‌ உல‌கத்தில் ம‌க்க‌ள் அடைய‌ விரும்பும் எந்த‌ பொருளும்- அவ‌ர்க‌ளைக் காக்க‌ முடியாது என்ப‌து தானே ஆன்மீக‌த்தின் அடிப்ப‌டை?

மார்க்கண்டேயன், பிரகாலாதன், துருவன், புத்தர்,சங்கரர், தியாகராசர், பட்டினத்தார், அப்பர், விவேகானந்தர்…..இவ‌ர்க‌ளை எல்லாம் உதைத்து கீழே த‌ள்ளி விட்டு அந்த‌ இட‌த்திலே ப‌ண்ணையார்க‌ள வைக்கீறார்க‌ள்!

கேட்டால் “ப‌ண‌த்தை வ‌ச்சு ச‌மூக‌ சேவை செய்தொம்” அப்ப‌டீன்கீறார்க‌ள்!

அப்ப‌ த‌ன்னார்வ‌ தொண்டு நிருவ‌ன‌ங்க‌ளுக்கும்,  உன‌க்கும் என்ன வித்யாச‌ம்?

Wall Mart அதிப‌தி த‌ன் சொத்துல‌ பாதியை ச‌மூக‌ சேவைக்கு குடுக்கிறார். அப்ப‌ அவ‌ரு க‌ட‌வுளின் பிர‌திநிதி என்று அவ‌ரை காலில் விழுந்து வ‌ண‌ங்க‌ப் போறோமா? இத்த‌னைக்கும், அவ‌ரு த‌ருவ‌து அவ‌ர் ச‌ம்‌பாரித்த‌ ப‌ண‌ம்! இவ‌ர்க‌ளிட‌ம் உள்ளது பிற‌ர் குடுத்த‌ ப‌ண‌ம்! ந‌ல்ல‌து செய்ய‌ நாலு பேர் குடுத்த‌ ப‌ண‌த்துல‌ (இல்ல‌ அன்ப‌ளிப்பு என்ற‌ பெய‌ரில் வ‌ந்த‌ க‌மிச‌னோ)கொஞ்ச‌ம் ச‌மூக‌ சேவைக்கு குடுத்து விட்டு, க‌ட‌வுள் பிர‌திநிதி ப‌ட்ட‌மா?

சமூக சேவை செய்வது நல்லது தான். அவசியம் தான். மிக அவசியம் தான்.

ஆனால் சமூக சேவையால் கிடைத்த செல்வாக்கை, புகழை வைத்து பெரிய ஆன்மீகவாதி போல, ஞானி போல சித்தரித்துக் காட்ட உபயோகப் படுத்துவைத் தான் கண்டிக்கிறோம்.

சமூக சேவை செய்ய யாராலும் முடியும். ஆன்மீக வழிகாட்டல் செய்ய எல்லாராலும் முடியுமா?

ஆன்மீக வாதியின் கடமை என்ன? ஒரு ஹிட்லரைப் போல, அல்லது அலெக்சாந்தரைப் போல உருவாகியிருக்கக் கூடிய அசோகரை – குளங்களை வெட்டுவித்தார், சாலைகளைக் கட்டுவித்தார், சாலையின் இரு மருங்கும் நிழல் தரும் மரங்களை நட்டுவித்தார் – என்னும் நிலைக்கு மாறும் படியான கருத்துக்களை உருவாக்கியதுதான் புத்தரின் பணி!

புத்தர் வந்து மடம் வைத்து, பணம் சேர்த்து, டெண்டர் விட்டு, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை குழாய் போட்டாரா?

மடங்கள் என்ற அமைப்பை நாம் எதிர்க்கவில்லை. எதிர்க்க வேண்டிய அவசியமும் இல்லை. மடங்கள் எப்படி நடத்தப் பட வேண்டுமோ அப்படி நடத்தப் பட்டால், நல்லதுதான், வரவேற்கிறோம்.

ஆனால் இந்து மதத்தின் உயிர் நாடி மடங்கள் தான் என்றோ, மடங்கள் இல்லாவிட்டால், இந்து மதம் அழிந்து விடும் என்றோ நான் நினைக்கவில்லை.

புத்தருக்கு முன் இந்தியாவில் மடங்கள் என்ற அமைப்பு கிடையாது. ஆனால் அப்போதும் இந்து மதம் சிறப்பாக கடைபிடிக்கப் பட்டுத்தான் வந்தது.

ஆனால் மடங்கள் என்ற அமைப்பை நான் அழிக்க விரும்பவில்லை.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை பல மடங்கள் சிறப்பாக செயல் பட்டு வந்தன- அவை ஆன்மீக சிந்தனைக்கு அதிக இடமும், பணத்துக்கு மிக்க குறைவான இடமும் அளித்தன.

ஆனால் இப்போது பணம், பணம் தான் முக்கியமாக உள்ளது. இதச் சொன்னால் நம்மை வைகிறார்கள்.

 பல‌ர் ஒருவ‌ரைப் புக‌ழ‌ந்து அவ‌ர் காலில் விழுந்தால், உட‌னே தாமும் அங்க‌ வ‌ஸ்திர‌த்தை அவிழ்த்து இடுப்பில் க‌ட்டிக் கொண்டு, படேல் என்று நெடுஞ்சான் கிடையாக‌ விழுகின்ற‌ன‌ர்‍ – அவ‌ர் உண்மையான‌ ஞானியாக‌ இருந்து விட்டால், ஒரு வேளை வீட்டிற்க்குப் போகும் போது வீட்டிலே திடீரென அதிர்ஷ்ட‌ம் அடித்து இருந்தால் ந‌ல்ல‌துதானே –  காசா, ப‌ண‌மா என்று காலில் விழுகின்ற‌ன‌ர்.  ஆனால் அவ‌ர் போலித் துற‌வியாக‌ இருந்து மாட்டிக் கொண்டால், தான் காலில் விழுந்த‌து முட்டாள் த‌ன‌ம் ஆகி விடுமே என்ற‌ ப‌தைப்பிலே, அவ‌ர் ந‌ல்ல‌வ‌ர்தான் இந்த‌ வூட‌க‌ங்க‌ள் பொய் செய்தியை ப‌ர‌ப்புகின்ற‌ன‌ என்று ஆவேச‌ப் ப‌டுகின்ற‌ன‌ர். இந்து ம‌த‌த்தை எதிர் நோக்கியிருக்கும் பெரிய‌ பிர‌ச்சினை  இந்த ஆவ‌லாதிக்கார‌ர்க‌ளின் அவ‌ச‌ர‌ம் தான்.  

என‌வே இந்து ம‌த‌த்தைப் பற்றிக் க‌வ‌லைப் ப‌டுப‌வ‌ர்க‌ள், அவ‌ர்க‌ளின் க‌வ‌லை உண்மையான‌தாக‌ இருந்தால்‍ அவ‌ர்க‌ள் செய்ய‌ வேண்டிய‌ முக்கிய‌மான‌ வேலை, ச‌ரியான‌ ஆன்மீக‌த்தைப் புரித‌ல் செய்து, அதை எல்லா ம‌க்க‌ளிட‌மும் கொண்டு செல்வ‌துதான். அதை நீங்க‌ள் செய்ய‌ முடியாவைட்டாலும் பர‌வாயில்லை, சாதார‌ண‌ ம‌க்க‌ள் ஏற்கென‌வே ச‌ரியான‌, அமைதியான‌ ஆன்மீக‌த்தில் தான் செல்கிறார்க‌ள். அவ‌ர்க‌ளே எல்லாவ‌ற்றையும் பார்த்துக் கொள்வார்க‌ள்.  நீங்க‌ள் இந்து ம‌தத்தை க‌ருவியாக‌ வைத்து த‌ன் சொந்த‌ சுக‌ம் பெற‌ உப‌யொக‌ப் ப‌டுத்துப‌வ‌னுக்கு ப‌ல்ல‌க்கு தூக்கி , பாய் விரிக்காம‌ல் இருந்தால் ச‌ரி. அயோக்கிய‌த் த‌ன‌ம் செய்யும் போலித் துற‌விக‌ளை ம‌ன‌ப்பூர்வ‌மாக‌ க‌ண‌டிக்க‌த் த‌யங்குவ‌து, நீங்க‌ள் இந்து ம‌த‌த்திற்க்கு செய்யும் துரோக‌மா இல்லையா என்ப‌தை உங்க‌ள் மன‌சாட்சியிட‌மே கெட்டுக் கொள்ளுங்க‌ள். ப‌ர‌வாயில்லை, ந‌ம்முடைய‌ ப‌தவிதான் முக்கிய‌ம் இந்து ம‌த‌ம் ஒன்றும் ஆகி விடாது என்ற‌ நம்பிக்கையில் யாராவ‌து இருந்தால், த‌ய‌வு செய்து உங்க‌ள் மன‌சாட்சியை விழிப்ப‌டைய‌ செய்யுங்க‌ள்.

அதிக‌மாகிக் கொண்டிருக்கும் போலித் துற‌விக‌ளால் ஏற்ப‌ட்ட‌ இன்ன‌ல்க‌ளை க‌ளைய‌ இந்து ம‌த‌த்திற்க்கு இப்போது அவ‌சிய‌ தேவை விவேகான‌ந்த‌ர், ச‌ங்க‌ர‌ர் போன்ற‌வ‌ர்க‌ளே.  போலிக‌ளுக்கு ஜால்ரா போட்டு ப‌ல்ல‌க்கு தூக்குவ‌தை நிறுத்தி விட்டு, போலிக‌ளை வில‌க்குங்கள், உண்மையான‌ ஆன்மீக‌ வாதிக‌ள் தாம‌காவே உருவாகுவார்க‌ள்.

ஒன்றுமே ந‌ட‌க்காத‌து போல‌ பேசிக் கொண்டிருப்ப‌தால் ப‌ல‌ன் இல்லை.

Advertisements

3 Responses to "இந்து ம‌த‌த்தை எதிர் நோக்கி உள்ள‌ பிர‌ச்சினைக‌ள் என்ன‌?"

திருச்சிக்காரர் அவர்களே,

மிகச் சிறந்த ,அருமையான காலத்திற்கு ஏற்றக் கட்டுரை.

திரு. தனபால் அவர்களே,

இந்தக் கட்டுரையின் முக்கியத்துவத்தை அறிந்து நீங்கள் பின்னூட்டம் இட்டதற்கு என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

போலித் துறவிகள் இந்து மதத்தை துளைத்து வாழ்வதை, அவர்களால் இந்து மதத்திற்கு கெடுதல் தான் என்பதை தைரியமாக சொல்வேன்.

இந்து மதத்துக்கு கெடுதல் வருவதைப் பற்றிக் கவலைப் படாமல் போலித் துறவிகளிடம் சரணாகதி அடைந்தவரை , விழித்து எழ செய்வோம்.

இந்து மதம் சார்ந்த ஒரு தெளிவான சிந்தனையை உங்கள் கட்டுரையின் மூலம் காண முடிகிறது. உங்கள் வலை பனி சிறக்க என் வாழ்த்துக்கள்.

///// இந்து ம‌த‌ம் ச‌ரியான‌ வ‌ழியில் செல்வ‌து என்றால், அதை அத‌ன் வ‌ழியில் விட்டால், அதுவே அத‌ன் அமைதியான‌ வ‌ழியில் ச‌ரியாக‌ சென்றுவிடும். இந்து ம‌த‌ம் இன்றைக்கு உயிரோட்ட‌த்துட‌ன் இருக்கிற‌து என்றால் அத‌ற்க்கு கார‌ண‌ம் அதை பின்ப‌ற்றும் சாதார‌ண‌ இந்துதான். ஒரு சாதார‌ண இந்துவுக்கு அவ‌னுக்கு தேவையான‌ இந்து ம‌த‌ம் அவ‌ன் சிறுவ‌னாக‌ இருக்கும் போதே அவ‌ன் வீட்டிலே, அவ‌ன் வ‌சிக்கும் இட‌த்தில் உள்ள‌ கோவிலிலேயே கிடைத்து விடுகிற‌து. அதற்க்கு மேல் ப‌ட்டு அவ‌ன் வ‌ள‌ர‌ வள‌ர‌ இந்து ம‌த‌த்தின் முக்கிய‌ நூல்க‌ளாக‌ க‌ருத‌ப் ப‌டும் உப‌நிட‌ங்க‌ள், கீதை, சித்தர் பாடல்கள் ….இப்ப‌டி பல‌ வ‌கையான‌ நூல்க‌ளையும் அவ‌ர‌வ‌ர் விருப்ப‌த்துக்கு ஏற்றார் போல‌ ப‌டித்து தெரிந்து கொள்கின்ற‌ன‌ர்.///////

அதன் வழியில் மதத்தை விடுவது தான் சிறந்தது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: