Thiruchchikkaaran's Blog

கதைவைத் திற காற்று வரும்…..

Posted on: March 3, 2010


……………அய்யோ கண்ணைக் கட்டுதே.   இந்த காவியைக் கட்டிக் கொண்டு வேடம் போடும் நபர்களின் தொல்லை தாங்கலைடா  சாமி.

 
போன மாதம் தான் காஞ்சி அசிங்க அர்ச்சகர் பற்றி கட்டுரையை வெளியிட்டு அது சம்பந்தமான பின்னூட்டங்களும் வந்து முடிந்தன. சரி வேறு நல்ல விடயங்களைப் பற்றி எழுதுவோம் என ஆரம்பித்தால் அதற்குள் பரமஹம்சர்   என்ற பட்டத்தையும் தனக்குத் தானே சூடிக் கொண்ட ” நித்யானந்தாவின்”  லீலா வினோதங்கள்   வெளியாகி இருக்கிறது. 
இவர்களைப் பற்றி கட்டுரை வெளியிடவே நேரம் போதாது போல உள்ளதே.
 
சாமியார் என்ற பெயரிலே காவியைக் கட்டிக் கொண்டு இந்து மத தத்துவங்களை அள்ளி விட்டு சமாதி நிலையை அடைந்ததாகக் கதை விடும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
 
 சமீப காலங்களில் மிகவும் பாப்புலராகக் கலக்கியவர் அண்ணன் நித்யானந்தா. திருவண்ணமலையில் ஆரம்பித்து,  பெங்கலோர்  லாஸ் ஏஞ்சல்ஸ்… , என கிளைகள் வைத்து கலக்கியவர். இவருடைய ஆன்மீக கருத்துக்கள் பற்றிய வீடியோ சுட்டி- அதாவது ஆன்மீகப் பெருரை –  ஒன்றினை சமீபத்தில் பார்க்க நேரிட்டது.  பல்வேறு பில்டப்புகளுடன் இருந்த அந்த ஆன்மீக உரையையை கேட்கும் போதே இவருடைய விக்கெட் எப்போது விழுமோ என்று நினைத்தேன்.
 
 இவர்களைப் போன்றவர்களுக்குத்தான்   ஒரு கவலையும், நியமும் இல்லையே தவிர நமக்கு கட்டுப்பாடு, காலாச்சாரம்  எல்லாம் இருக்கிறது. ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் என்று வேறு வள்ளுவர் சொல்லி இருக்கிராரரே. எனவே பின்னூட்டங்கள் அனுப்பும் சகோதரர்கள் அவர்களுடைய ஆத்திரத்தையும், வருத்தத்தையும் வார்த்தையிலே கொட்டி எழுதினாலும் தங்களுக்கு தாங்களே பின்னூட்டங்களை மட்டுறுத்தி   அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
Advertisements

24 Responses to "கதைவைத் திற காற்று வரும்….."

ரொம்ப தெறந்திட்டாரு. அவர் நாத்தம் வெளியே வந்திடுச்சி.

இவனை போல போலி ஆன்மிகவாதிகளை நம்பி மோசம் போகும் மக்கள் நிலை தான் இப்பொழுது பரிதாபமாக உள்ளது.மாட்டிக்கொண்டவன் இவன் .மாட்டாதவர்கள் யார்?யாரோ?

மாட்டிக்கிட்டாரா? பாவம்யா இந்த ஆளு. இனி எல்லோரும் அவரை பற்றி கிழி கிழின்னு கிழிப்பீங்க. அவர் என்னவோ, முழுமனதுடன் இப்படி பண்ணி இருப்பார் என்று தோன்றவில்லை. இப்படி மக்களை ஏமாற்றவேண்டும் என்று நினைத்தா இந்த மனிதன் துறவி ஆகி இருப்பார்? அவரையும் மீறிய ஒரு சக்தி அவருக்குள் இருந்து இப்படி ஆட்டி படைக்கிறது என்றே நான் நினைக்கிறேன்.
இந்த காரியத்தை செய்ததால் அவர் பாவி அல்ல. அவர் பாவியாக இருந்த காரணத்தாலே இந்த காரியத்தை செய்தார். பாவம் அவருக்குள் இருந்து அவரை இப்படியாக செய்யவைத்து இருக்கிறது. அவர் போதாதவேளை இப்போது மாட்டிக்கொண்டுவிட்டார்.
அன்புடன்,
அசோக்

திரு. அசோக் குமார் கணேசன் அவர்களே,

கட்டுரையைப் படித்து கருத்து தெரிவித்தற்கு நன்றி.

திரு, நித்யானந்தம் எனப் படும் ராஜ சேகரனார், துறவியாக இருந்திருந்ந்தாலும், அவருக்கு குடும்ப வாழ்க்கையில், விருப்பம் ஏற்பட்டு இருந்தால் முறைப்படி ஒரு பெண்ணை மணந்து இல்லறத்தில் ஈடுபட்டு இருந்திருந்தால் அதை யாரும் தவறு என்றோ, குற்றம் என்றோ பாவம் என்றோ சொல்லி இருக்கப் போவதில்லை.

ஒருவர் துறவற நிலை ஏற்ற பின் மறுபடியும் இல்லறத்துக்கு திரும்புதில் எந்தப் பிழையும் இல்லை. பலரும் அப்படி செய்தும் இருக்கிறார்கள்.

அவர் துறவியைப் போலத் காட்டிக் கொண்டே இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவது இந்திய மக்களுக்கு ஒப்பான ஒரு செயல் அல்ல.

இந்து மதத்திலே துறவறம் பூண்டுதான் ஆன்மீகப் பணி செய்ய முடியும் என்று இல்லை. தியாகராசர், பாரதியார போன்றவர்கள் இல்லறத்தில் ஈடு பட்டுக் கொண்டே ஆன்மீக பணி செய்தவர்கள் தான்.

நித்யானந்தர் மக்களும் ஆன்மீ க தேடலை தனக்கு சாதகாமாக ஆக்கிக் கொண்டு அதை வைத்து தனது வாழ்க்கை வளங்களை பெருக்கிக் கொண்டு இருக்கிறார். அவர் திருமணம் செய்து கொண்டு ஆன்மீகப் பணியில் ஈடுபட்டு இருந்தால் யாரும் அவரைக் குறை சொல்லப் போவது இல்லை. அவருக்கு நேர்மையாக வாழும் எண்ணம் இல்லை. ஏமாற்றி பணமும் புகழும் சேர்த்து யாரும் அறியாமல் தவறுகளை மறைத்து விடலாம் என்று எண்ணியோ செயல் பட்டு விட்டார். அவருக்கு வழி கட்டியவர்கள் சரியாக வழி காட்டவில்லை. அதோடு வூடகங்கள் ஏதாவது ஆன்மீகம் சம்பந்தப்பட்ட செய்திகளை வெளியிட வேண்டும் என்று, யாராவது ஒருவரை பெரிய ஆன்மீக வாதி போல சித்தரித்து தங்களின் வியாபாரத்தைப் பெருக்க இவருக்கு அதிக விளம்பரம் கொடுத்து விட்டன.

அவருக்கு குடும்ப வாழ்க்கையில் நாட்டம் உள்ளதா என்று தெரியவில்லை. ஆனால் உடல்ப்பசி இருந்து இருக்கிறது. ஒருவர் துறவதிலும் நாட்டம் கொண்டு, காமப்பசியோடும் இருந்தால் (கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பது போல்) என்னதான் செய்வார்.
அவர் செய்தது சரி என்று நான் வாதிடவில்லை. அவரை குற்றம் கூறும் முன் நம்மை நாம் நிதானித்து அறிவோமாக.
தன் மனைவியை தவிர எந்த ஒரு பெண்ணையையும் (சினிமா நடிகைகள் உட்பட) இச்சையோடு பார்ப்பவன் எவனும், இவரை குற்றப்படுத்த தகுதி இல்லாதவன். உங்களை நீங்களே இந்த கேள்விகளை கேட்டுக்கொள்ளுங்கள். பலரும் வாய்ப்பு அமையாதவரை நல்லவராகவே இருப்பார். வாய்ப்பு அமைந்தால்????
இன்னும் பலர், மாட்டிக்கொள்ளாததாலேயே நல்லவராக தெரிகிறார்கள்.

இந்த சாமியாருக்கு அமைந்த வாய்ப்பும், வசதிகளும், சூழ்நிலைகளும் மற்றவர்க்கு அமைந்திருந்தால், எத்தனைபேர் தேறி இருப்பார்களோ??

நன்றி,
அசோக்

சினிமா நடிகைகளை ஆசையோடு பார்ப்பதும் தவறுதான். ஆனால் அதை ஒருவன் வெளிப்படையாக சொல்லி தான் இப்படிப் பட்டவன் என்று மக்கள் முன் அறிக்கை பண்ணி விட்டால் மக்களிடம் உண்மையை சொன்னவன் ஆகிறான். மேலும் எந்த அளவுக்கு ஒருவன் சினிமா நடிகைகளை ஆசையோடு பார்க்கிறானோ அந்த அளவுக்கு அவன் தன் மன வலிமையை இழக்கிறான். இதைப் புரிந்து கொண்டவன் நாளடைவில் முன்னேறுகிறான். எப்படியாயினும் தான் செய்வதை மறைக்கதவனை சமூகம் இப்படிப்பட்டவன் என்று தெரிந்து கொள்கிறது.

ஆனால் நித்யானந்தர் முற்றும் துறந்த முனிவறக்க தன்னைக் காட்டிக் கொண்டு ஆனால் உண்மையில் வேஷதாரியாக இருந்திருக்கிறார். அவரை பழி வாங்க வேண்டும், என்றோ, தண்டிக்க வேண்டும் என்றோ யாரும் சொல்லவில்லை. அவரே தன் உண்மைகள் வெளி வந்ததால் மக்களை சந்திக்க பயந்து தலை மறைவாகி விட்டார்.

நண்பர் அசோக் அவர்கள் அற்புதமான கருத்துக்களை வேதத்தின் அடிப்படையில் எழுதியுள்ளார்;அவர் எழுதியுள்ள குறிப்பிட்ட

//தன் மனைவியை தவிர எந்த ஒரு பெண்ணையையும் (சினிமா நடிகைகள் உட்பட) இச்சையோடு பார்ப்பவன் எவனும்,//

எனும் இந்த வரிகள் அந்த காட்சிகளை தொலைக்காட்சியில் செய்தி என்ற போர்வையில் பார்த்த நான் உட்பட அனைவரையும் குற்றவாளி வட்டத்தில் நிறுத்திவிட்டது என்பதே உண்மை;

// அவரையும் மீறிய ஒரு சக்தி அவருக்குள் இருந்து இப்படி ஆட்டி படைக்கிறது என்றே நான் நினைக்கிறேன்;இந்த காரியத்தை செய்ததால் அவர் பாவி அல்ல;அவர் பாவியாக இருந்த காரணத்தாலே இந்த காரியத்தை செய்தார் //

இவையும் கூட பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்படத்தகுந்த அருமையான வரிகள்..!

ஆம்,பாவத்தில் விழுந்தவன் (பிறந்தவன்)அதற்கு அடிமையாகிறான்;அவனல்ல,அவனுக்குள்ளிருந்து பாவமே அனைத்தையும் நிறைவேற்றுகிறது;எனவே நன்மையைக் குறித்த விருப்பம் இருந்தும் அதனை நிறைவேற்றமுடியாத மற்றொரு மாயத்தினால் மனிதன் பிடிபட்டிருக்கிறான்..!

சரி..சரி,கதவை திறங்க…நாற்றம் போகட்டும்..!

சகோதரர் சில்சாம் அவர்களே,

கருத்துக்கு நன்றி. அசோக் குமாரும் , நீங்களும் எழுதிய //தன் மனைவியை தவிர எந்த ஒரு பெண்ணையையும் இச்சையோடு பார்ப்பவன் எவனும்,// கருத்து, சிறப்பான கருத்தே. கிறிஸ்து கூறிய கருத்து ஆயிற்றே!

ஆசையினால் தூண்டப்பட்டு ஒருவன் பாவத்தை செய்கிறான். ஆசை அறிவை மறைக்கிறது.

எது சரி எது தவறு என்னும் அறிவு மேல் எழுந்து, ஆசையை கட்டுப் படுத்தும் வகையில் வாழும் ஒருவன் தன்னைக் காத்துக் கொள்ளலாம்.

பாவத்தில் சிக்கும் நிலையில் இருக்கும் ஒருவன், தன்னுடைய மன வலிமையை அதிகரித்து ஆசையை வெல்லும் திறன் பெற்றவன் ஆவதே ஆன்மீக முன்னேற்றம்.

அந்த நிலையை அடையாமலே நித்யானந்தர், ஆசையை வென்ற நிலையை அடைந்தவர் போல வெறுமனே வேடம் மட்டும் இட்டு நடித்து இருக்கிறார். அவர் மனம் திருந்தி, சொத்து சுகம் மேல் உள்ள ஆசையை விட்டு, உண்மையான துறவியாகி மக்களிடம் உணவை மட்டும் பிச்சை பெற்று உண்டு மரத்தடியில் உறங்கி, உண்மை யான துறவியாக வாழ்த்துவோம்.

இப்படிப்பட்டவர்களின் முகமுடி கிழிவது இந்து மதத்திற்கு தான் நல்லது.நம் தோட்டத்தில் உள்ள ஒரு விஷ செடி வெட்டப்படுவது நமக்கு நல்லதுதானே???இதில் அதிகம் சந்தோசப்பட வேண்டியவர்கள் மற்றவர்களைவிட இந்துக்களே.

http://karutukal.blogspot.com/2010/03/blog-post_05.html

நண்பர் தனபால் அவர்களே, மேற்கண்ட தொடுப்பிலுள்ளவை உண்மையோ கற்பனையோ இந்த விளக்கத்தைப் பார்த்துவிட்டு ஏதாவது நியாயமிருந்தால் முன்வைக்கலாமே..!

Dear Sir,

This article very nice.

Thanking you
P.Selvaraj

திரு. செல்வ‌ராஜ் அவ‌ர்க‌ளே, த‌ள‌த்தைப் பார்வை இட்டு உங்க‌ளின் க‌ருத்தை தெரிவித்த‌த‌ற்க்கு மிக்க ந‌ன்றி. தொடர்ந்து த‌ளத்தைப் பார்வை இட்டு உங்க‌ளின் க‌ருத்துக்க‌ளை தெரிவிக்குமாறு கோருகிறென்.

திரு சில்சம் அவர்களே,

ஒரு ராஜசேகர் இப்படி நடந்திருந்தால் யாரும் கேட்கப் போவதில்லை.அந்த வீடியோவும் இப்படி உலகம் முழுதும் ஒரே நாளில் பிரபலம் ஆகியிருக்காது.அந்த ராஜசேகர் ஒரு யோகா ஆசிரியராக இருந்து இப்படி நடந்திருந்தால் கூட அப்பொழுதும் இந்தப் பாதிப்பு ஏற்ப படப் போவதில்லை.ஆனால் இந்த ராஜசேகர் பரமஹம்ச நித்யானந்த சுவாமி ஆகி,தான் ஒரு கடவுள் அவதாரமாக போலியாக அவதரித்து,அந்த போலி அவதாரத்தின் லீலைகள் தெரிந்ததாலேயே அவன் இப்பொழுது சிக்கலில்.இன்னும் திருந்திய பாடில்லை,”நான் சட்ட ரீதியாக எந்தத் தவறும் செய்ய வில்லை.”என்று இப்பொழுது கூறுகிறார்.அதாவது ,அவன் செய்தது ஆன்மீக(துறவு) தர்மத்தின் படி மிகப் பெரியக் குற்றமே.மீண்டும் அவர் முன்பு போலவே ஆசிரமத்தையும்,அவதாரத்தையும் தொடரும் எண்ணமே இப்படி அறிக்கையை சொல்ல வைக்கிறது.எனதருமை இந்துக்களே,மீண்டும் இந்த ராஜ சேகர் ,பரமஹம்ச நித்யானந்த சுவாமி ஆக திட்டமிட்டு காய் நகர்த்திக் கொண்டுள்ளான். ஆண் -பெண் சம்மதத்துடன் அவன் செய்த செயலுக்கு சட்டத்தின் மூலம் தண்டிக்க இயலாது.மக்களாகிய நாம் தான் தண்டிக்க வேண்டும்.நம் சாஸ்திரத்தில் இருந்து சில யோக முறைகளைத் திருடி தன்னுடைய தாகக் கூறியதை ,அவரின் சீடர்கள் செய்து பலனடைந்துள்ளவர்கள்-அவர்கள் இந்த யோக முறையை தொடரலாம்.ஏனென்றால் அவை நம் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டவைதான்.அதற்காக அந்த ராஜசேகரை நித்யானந்தம் ஆக்க நினைக்க வேண்டாம் என்று அவருடைய பக்தர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த BLUE – FILM நம் குடும்பத்தினர்,குழந்தைகள்,பெண்கள் ஆகிய எல்லோருக்கும் காட்டி,ஒரு விபச்சாரி போல்,நடந்து கொண்ட SUN TV ,VASANTH TV ,மற்றும் நக்கீரன் பத்திரிகை,போன்றவர்களை என்னவென்று சொல்வது.இந்த SUN TV ,VIJAY TV ,கலைஞர் TV போன்றவற்றில் வரும் பெரும்பாலான நிகழ்ச்சிகள் ஆபாசத்தின் உச்சம்.

திரு சில்சம் அவர்களே,நான் காசியைப் பார்த்ததில்லை,அகோரிகளையும் பார்த்ததில்லை.SUN TV,VIJAI TV யில் காட்டப்பட்ட காட்சிகளை வைத்தப் பார்க்கும் பொது அவர்கள் இந்து மதத்தை கேவலப் படுத்தும் முயற்சி தெரிந்தாலும்,அவர்கள் காட்டியதை முழுதும் நிராகரிக்க முடியாது.அகோரிகள் பிணம் தின்றால் நமக்கோ(உங்களையல்ல),நம் இந்து மதத்திற்கோ எந்த இழிவும் ஏற்படப் போவதில்லை.அந்த அகோரிகள் கூறியதிலிருந்து அதை ஒரு பிரசாதமாக உண்பதாகவும்,அதை எப்போதாவது அரிதாகத் தான் உண்பதாகவும் தெரிகிறது.அவர்கள் செய்வது அநாகரீகமாக இருந்தாலும் அதை,அவர்கள் பசிக்காகவோ,ஆசையின் காரணமாகவோ பிணத்தை சாப்பிடவில்லை ஆன்மீகத்தின் பொருட்டே இதைச் செய்கிறார்கள் என்று அந்த நிகழ்ச் சியின் மூலம் தெரிகிறது. அப்படி அவர்கள் பசிக்காகவோ,ஆசையின் காரணமாகவோ பிணத்தை சாப்பிடுபவர்களாக இருந்தால் அப்படி ஒரு நபரை அலைந்து தேடித் பிடித்தக் காட்ட வேண்டிய அவசியம் இருந்திருக்காது.அந்த பிணம் தின்னும் நபரிடம் அகோரிக்குள்ள அடையாளங்கள் காணப்படவில்லை.அகோரிகள் பிணம் தின்பவர்களாக இருந்தாலும் அதனால் இந்து மதத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை.நான் சில ஆண்டுகளுக்கு முன் AXN TV யில் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். அதில் அழுகிய ,நாற்றமெடுக்கும் பல்லிகளையும்,புழுக்களையும் பூச்சிகளையும்,வண்டுகளையும் திங்கச் சொல்லி வெற்றி பெற்றவர்களுக்கு பணப் பரிசு தருவார்கள்.வெறும் பணத்திற்காக அழுகிய,நாற்றமெடுக்கும் புழு,பூச்சிகளை உண்பவர்களை விட,ஆன்மிக நோக்கத்திற்காக அரிதாக பிணம் சாப்பிடுவது எவ்வளவோ மேல்.என்னினும் SON TV ,VIJAY TV போன்றவை ஒருவரின் வீட்டை காட்டுகிறேன் என்று கூறி அந்த வீட்டில் உள்ள கழிவறையை மட்டும் காட்டியது போலத்தான் காசியைக் காட்டிய நிஜம் நிகழ்ச்சி இருந்தது

பின்னூட்டத்திற்கு ஒரு பின்னூட்டம்.
நண்பர் தன்பால் அவர்களே,
உங்களை இந்த நிகழ்ச்சி எவ்வளவு பாதித்துள்ளது என்று உங்கள் பின்னூட்டம் காட்டுகிறது.
//மக்களாகிய நாம் தான் தண்டிக்க வேண்டும்.//
ஒருவனை தண்டிக்க நாம் யார்? கடவுளா??
//இந்த BLUE – FILM நம் குடும்பத்தினர்,குழந்தைகள்,பெண்கள் ஆகிய எல்லோருக்கும் காட்டி,ஒரு விபச்சாரி போல்,நடந்து கொண்ட SUN TV ,VASANTH TV ,மற்றும் நக்கீரன் பத்திரிகை,போன்றவர்களை என்னவென்று சொல்வது.//
இங்கே நீங்கள் விபச்சாரியை கொச்சை படுத்துகிறீர்கள். வாழ வழியில்லாமல் நாள்தோறும் நரகத்தை சுமந்து வாழ்பவர்களை, இவர்களோடு ஒப்புவைக்கவேண்டாம்.
//என்னினும் SON TV ,VIJAY TV போன்றவை ஒருவரின் வீட்டை காட்டுகிறேன் என்று கூறி அந்த வீட்டில் உள்ள கழிவறையை மட்டும் காட்டியது போலத்தான் காசியைக் காட்டிய நிஜம் நிகழ்ச்சி இருந்தது//
நம் வீடுகளில் கழிவறைகள் சுத்தமாக இல்லையா என்ன?
Thanks,
Ashok

ஜெயேந்திரன் – நித்தியானந்தா பரபரப்பு சந்திப்பு – ஸ்பாட் ரிப்போர்ட்!!

நித்யானந்தா: பெரியவா மன்னிக்கணும், அன்னிக்கு தீர்த்தம் கொஞ்சம் ஓவரா போயிடுச்சு, ஏதோ புத்தி கெட்டுட்டேன் பெருசு பண்ணாதிங்க, காப்பாத்தி வுடுங்க!

ஜெயேந்திரன்: தத்தி, இப்படியா பண்ணுவா! கதவத்திற காத்துவரட்டும்னு ஏதோ புத்திசாலித்தனமா கிறுக்கிண்டு கெடக்குறியேன்னு பாத்தேன், கடைசில கதவத் திறந்தா ரஞ்சிதால்ல வந்துட்டா ஹீ..ஹீ.. என் சமத்தல்லாம் பாத்தும் இப்படியா பப்ளிக் பாக்குற மாதிரி பண்றது! கிரகச்சாரம்! சரி சரி வுடு! ஆனானப்பட்ட விஸ்வாமித்திரனே அப்சரஸ்களை பாத்து அப்செட் ஆகுறப்ப,நீ ரஞ்சிதாவைப் பாத்தோன்னேயே இன்ஜின் ஜாம் ஆயிட்டே!

தொடர்ந்து படிக்க…
http://www.vinavu.com/2010/03/06/jeyandran-nithyanandha/

நண்பர் அசோக் குமார் கணேசன் அவர்களே,

***மக்களாகிய நாம் தான் தண்டிக்க வேண்டும்.***-///ஒருவனை தண்டிக்க நாம் யார்? கடவுளா??///நீங்கள் கூறுவது சரி தான்.ஒருவனை தண்டிக்க நாம் யார்?..இருந்தாலும் நான் சொல்ல வந்த கருத்து.மீண்டும் அந்த நித்யானதனை கடவுளாகப் பார்க்க வேண்டாம்,உதாசீனப் படுத்துவோம் என்ற செயலின் மூலமே அவனை தண்டிக்க வேண்டும் என்பதே நான் சொன்ன ///மக்களாகிய நாம் தான் தண்டிக்க வேண்டும்.///என்றதின் உள்ளர்த்தம்.

///இங்கே நீங்கள் விபச்சாரியை கொச்சை படுத்துகிறீர்கள். வாழ வழியில்லாமல் நாள்தோறும் நரகத்தை சுமந்து வாழ்பவர்களை, இவர்களோடு ஒப்புவைக்கவேண்டாம்///

சரியாக சொன்னீர்கள்.எனினும் செல்வ செழிப்புடன் வாழும் சிலர் கூட அதிக பண ஆசையால் அந்த வியாபாரத்தை செய்கிறார்களே அவர்களைக் குறிப்பிட்டு சொன்னதாக எடுத்துக் கொள்ளவும்.நான் குறிபிட்டதும் அவர்களைத்தான்.
///-//என்னினும் SON TV ,VIJAY TV போன்றவை ஒருவரின் வீட்டை காட்டுகிறேன் என்று கூறி அந்த வீட்டில் உள்ள கழிவறையை மட்டும் காட்டியது போலத்தான் காசியைக் காட்டிய நிஜம் நிகழ்ச்சி இருந்தது//
நம் வீடுகளில் கழிவறைகள் சுத்தமாக இல்லையா என்ன?///

காசியில் உள்ள பிற நல்ல இடங்களை,கோவில்களை காட்ட வில்லையே என்ற கருத்தைக் குறிப்பிடவே அவ்வாறு குறிப்பிட்டேன்.

கேள்விகளால் ஞானம் வளரும் என்பதை அனைவரும் ஒப்புகொள்வர்.

“கர்த்தருக்கு பயப்படுதல் ஞானத்தின் ஆரம்பம்” என்பதைதான் நிறைய பேர் ஒப்புகொள்வதில்லை.

//மேலும் எந்த அளவுக்கு ஒருவன் சினிமா நடிகைகளை ஆசையோடு பார்க்கிறானோ அந்த அளவுக்கு அவன் தன் மன வலிமையை இழக்கிறான்.//

//பாவத்தில் சிக்கும் நிலையில் இருக்கும் ஒருவன், தன்னுடைய மன வலிமையை அதிகரித்து ஆசையை வெல்லும் திறன் பெற்றவன் ஆவதே ஆன்மீக முன்னேற்றம்.//

ஒருவன் பிற பெண்களை பார்ப்பதால் மனவலிமை இழக்கிறானா? அல்லது, மனவலிமை இல்லாததால் பிற பெண்களை பார்கிறானா?

நல்லதை செய்யவும், பாவத்தை செய்யாதிருக்கவும், மனவலிமை அவசியம் என்றால், இந்த பிரபஞ்சத்தில் நம் வாழ்க்கை என்ன வெறும் பலப்பரிட்சைதானா?

அன்புடன்,
அசோக்

நண்பர் அசோக் குமார் கணேசன் அவர்களே,

//“கர்த்தருக்கு பயப்படுதல் ஞானத்தின் ஆரம்பம்” என்பதைதான் நிறைய பேர் ஒப்புகொள்வதில்லை.//

நீங்கள் கர்த்தர் மேல் மரியாதை வைத்திருப்பதை நாம் குறை சொல்லவில்லை.

கர்த்தருக்கு பயந்தோ அல்லது வேறு யாருக்கும் பயந்தோ – பயத்தின் அடிப்படையில் பாவத்தை தவிர்ப்பதை விட பொது நன்மையை முன்னிட்டு, நேர்மையின் அடிப்படையில், நியாயத்தின் அடிப்படையில் அன்பின் அடிப்படையில், பாவத்தை அதாவது குற்றத்தை செய்யாமல் தவிர்ப்பதே சிறப்பானது.

“நான் அடுத்தவன் பர்சை பிக் பாக்கெட் அடிக்க மாட்டேன், ஏனெனில் போலீசு என்னைப் பிடித்தால் என் முதுகுத் தோலை உரித்து விடுவானே” என்ற பயத்தின் அடிப்படையில் பிக் பாக்கெட் அடிக்காமல் இருப்பதை விட,

“ஒரு அப்பாவி எந்த முக்கிய செலவுக்காக தன்னுடைய பணத்தை எடுத்துப் போகிறானோ, அதை நாம் எடுத்தால் அவனுக்கு கடும் துயரம் உருவாகுமே” என்கிற அன்பின் அடிப்படையில், நியாய உணர்வின் அடிப்படையில் பிக் பாக்கெட் அடிக்காமல் இருப்பதே ஒருவனை இன்னும் மேலான நிலைக்கு கொண்டு செல்லும்.

//ஒருவன் பிற பெண்களை பார்ப்பதால் மனவலிமை இழக்கிறானா? அல்லது, மனவலிமை இல்லாததால் பிற பெண்களை பார்கிறானா?//

ஒருவன் டம்பெல்ஸ் முதலான பலவகையான எடைகளை தூக்கி தினமும் உடற்பயிற்ச்சி செய்கிறான். நாளடைவில் பெரிய எடைகளை அனாயசாயமாக தூக்கும் உடல் வலிமை பெற்றவன் ஆகி விடுகிறான். எடைகளைத் தூக்கி உடல் பயிற்சி செய்ததால் உடல் வலிமை பெறுகிறானா அல்லது உடல் வலிமை உள்ளதால் எரிய எடைகளை எளிதில் தூக்குகிரானா என்பத சிறிது சிந்தித்துப் பாருங்கள்.

//நல்லதை செய்யவும், பாவத்தை செய்யாதிருக்கவும், மனவலிமை அவசியம் என்றால், இந்த பிரபஞ்சத்தில் நம் வாழ்க்கை என்ன வெறும் பலப்பரிட்சைதானா?//

ஒருவன் தன்னைத் தானே உயர்த்திக் கொண்டால, தன் மன வலிமையை அதிகரித்து இந்த உலகத்தில் பிறருக்கு தீங்கு செய்யாத வகையில், சமுதாயத்துக்கு உதவியாக , வெறுப்புக் கருத்துக்களை நீக்கி, அன்புக் கருத்துக்களைக் கைக் கொண்டு நல்லவனாக வாழா முயன்றால் அது தவறா?

My Question is:
நல்லதை செய்யவும், பாவத்தை செய்யாதிருக்கவும், மனவலிமை அவசியம் என்றால், இந்த பிரபஞ்சத்தில் நம் வாழ்க்கை என்ன வெறும் பலப்பரிட்சைதானா?

Thanks,
Ashok

நண்பர் அசோக் குமார் கணேசன் அவர்களே,

//My Question is:
நல்லதை செய்யவும், பாவத்தை செய்யாதிருக்கவும், மனவலிமை அவசியம் என்றால், இந்த பிரபஞ்சத்தில் நம் வாழ்க்கை என்ன வெறும் பலப்பரிட்சைதானா?

Thanks,
Ashok//

//வாழ்க்கை என்ன வெறும் பலப்பரிட்சைதானா//

வாழ்க்கை என்பது என்ன? நம் உடல் இறந்தவுடன் உயிர் தொடர்ந்து வாழ்கிறதா ? நாம் பிறக்கும் முன்னே இந்த உயிர் இருந்ததா? இந்த உலக வாழ்க்கையில் நாம் ஏன் இத்தனை துன்பங்கள் அனுபவிக்கிறோம் – என்பது போன்றவற்றைப் பற்றிய ஆராய்ச்சி ஆதி காலம் முதலே தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

புலனடக்கம், மனக்குவிப்பு பயிற்ச்சி, அடுத்தவருக்கு தீங்கு செய்யாமை, பிறருக்கு நல்லது செய்தல், பலனை எதிர்பார்க்காமல் கடமையை செயலை சிறப்பாக செய்தல், இப்படி பல பயிர்ச்சிகளால் தன் மனவலிமையை அதிகரித்து, உண்மையை உணரவே மனிதன் பாடுபாடுகிறான்.

உண்மையை உணர்வதற்கான , துன்பம் இல்லாத நிலையை அடைவதற்கான போராட்டமே வாழ்க்கை. உலகின் ஒவ்வொரு உயிரும் துன்பத்தில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள, துன்பங்கள் தன்னை தாக்காத நிலையை வந்தடைய தன்னால் முடிந்த அளவு பாடுபடுகின்றன. இதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் முன்பே வெளியிட்ட கீழ்க்காணும் கட்டுரைகளை ஒரு முறை படிக்குமாறு கோருகிறேன்.

https://thiruchchikkaaran.wordpress.com/2009/12/16/rationalism/

https://thiruchchikkaaran.wordpress.com/2009/12/20/what-is-spiritualism/

கதவை திற.. கற்ப்பு போகட்டும்.. வாழ்நாளில் அதிகமாக சிரித்த காட்சிகள் அது.. நாண்பா..

கதவத் திறந்தா ரஞ்சிதால்ல வந்துட்டா ஹீ..ஹீ…
அதனால கற்பு போயிடுத்தோ என்ன எழவோ…

அது சரி யாருடைய கற்புன்னு சொல்லவேயில்லையே..?!

Dear trickikar,
First of all read or hear all teachings of nityananda then find that in any place he told that, it is wrong to have intimacy with a girl. There are various types of samiyars in the world. Hindu religion teaches one type of yoga known as “Tantric” which is based on sexual relationship. Sects are there to follow these methods. I don’t think that nityananda told about his decision about bramacharrya. But I can conclude that he is not a samiyar because he is not agreeing his action. Doing something (which is not assured by him) is not changes his position (although many people think so) but not agreeing his action removed him from the position of true man itself.

Moreover they are corporate samiyars telling methods to have peace, happiness and relaxation for rich people. They are their disciples and i think that they will not find fault on him.

Thank you Mr. Sandhosh, thanks for your visit to our blog and your comments.

Regarding Nithyaandha, First before we read or hear any thing, let us note the simple facts that

1) Adultry is a crime under Indian law.

2) Prostitution is a crime as per Indian law

3)Indian soceity generally encourage and prefers the relationship between huband and wife. Indian soceity does not encourage promiscuos sexual relationship.

Now I had seen one of his videos 5 months ago , he mentioned about the Spiritual heights he attained. As per Hinduism, one person can elevate his soul or spirit to higher levels, the more his soul is elevated, the more he will have better qulaities. And the heights he claimed to have risen, was the stage where desire was fully conquered.

There could manu sort “disciples” for him and their priority could be different!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 37 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: