Thiruchchikkaaran's Blog

மொழி வெறி + மத வெறி = தாக்கரேக்கள்.

Posted on: February 2, 2010


இந்தியாவிலே தங்களுடைய அரசியல் ஆதாயத்திற்காக மக்களிடையே சாதி, மத, மொழி, இன வெறியைத் தூண்டி விட்டு அப்பாவை மக்களை அல்லல் படுத்தும் அரசியல் வாதிகளுக்கு குறைவில்லை.  அவர்களில் குறிப்பிட்டு சொல்லப் படக் கூடிய அசிங்க அரசியல் வாதிகள் ராஜ் தாக்கரேயும் அவருடைய மாமா பால் தாக்கரே, மச்சான் உத்தவ் தாக்கரே ஆகியோர்களும்.

இந்தியாவின் வர்த்தகத் தலை நகரமான  மும்பையில் பிற மாநிலத்தவரையும், இசுலாமியர்களையும்   தாக்கும் ரவடி கும்பல்களுக்கு தலைமை தாங்கி நடத்துபவர்கள் இந்த “மாபெரும்” அரசியல் தலைவர்கள்.

மும்பை நகரம் தீவிரவாதிகளால் தாக்கப் பட்டபோது, தீவிரவாதிகளுடன் போராடி  தங்கள் உயிரை தியாகம் செய்தவர்கள் வட நாட்டவர்கள் தானே, மக்களைக்  காக்க தாக்கரே குடும்பத்தினர் வந்தார்களா? என்று கேள்விகள் எழுப்பப் படுகின்றனர். இது ஒரு புறம் இருக்கட்டும். 

அண்ணல் அம்பேத்கர் தந்த இந்திய அரசியல் சாசனம் என்ன சொல்லுகிறது?  இந்தியர்கள் யார் வேண்டுமானாலும்,  இந்தியாவின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் செல்லவும், அங்கே வாசிக்கவும், தொழில் செய்யவும் உரிமை இருக்கிறது என்பதை அடிப்படை உரிமையாக எல்லா இந்தியருக்கும் தருகிறது.

தங்களின் அரசியல் ஆதாயத்திற்ககாகவும், தங்களின் குண்டர் தொழிலை நிலை நிறுத்தவும் பிற மாநிலத்தவரை மிரட்டும் உரிமையை இந்த தாக்கரேக்களுக்கு யார் கொடுத்தது? மும்பை என்ன இவர்களின் பாட்டன் வீட்டு சொத்தா?

மும்பையின் சிறப்பு என்ன? அது இந்தியாவின் வர்த்தகத் தலை நகராக இருக்கிறது. இதில் முக்கிய வார்த்தை என்ன வென்றால் – இந்தியாவின் வர்த்தகத் தலை நகர்இந்தியாவின் 120  கோடி இந்திய மக்கள் உள்ள இந்திய சந்தையின் முக்கிய கேந்திரமாக அது விளங்குகிறது.

வெறுமனே மகாராஷ்டிர மாநிலத்துக்கு மட்டுமே வர்த்தக தலை நகராக இருந்தால் இவ்வளவு முக்கியத்துவம் இந்த மும்பைக்கு கிடைத்து இருக்குமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.  

 

மும்பையில் உற்பத்தி செய்யப்படும்  பொருட்களை பிற மாநிலத்தவர் வாங்காமல் பகிஷ்கரிப்பு செய்தால் அப்போது மும்பையின் நிலை என்ன? மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் வணிக நிறுவனங்களை புறக்கணிப்பு செய்ய மக்கள் முடிவு செய்தால் அப்போது மும்பையின் நிலை என்ன ?

தான் உறபத்தி செய்யும் பொருட்களை மகாராஷ்டிர மாநிலத்திலே மட்டுமே விற்க வேண்டும் என்ற நிலை வந்தால் மும்பை தன பொலிவு, சிறப்பு எல்லாம் இழந்து அபலையைப் போல நிற்கும். மும்பையின் பெருமைக்கும்   சிறப்புக்கும் காரணம் இந்தியாவின் 120  கோடி மக்கள்  தான்.

இந்தியாவில் எந்த ஒரு மாநிலமும் தனித்து இயங்க முடியாது. தமிழ் நாட்டை  தட்டினால் தங்கம், வெட்டினால் வெள்ளி என்றார் பேரறிஞர் அண்ணா.  அலுமினியம்  ஜார்க்கண்ட்டில்   இருந்து வருகிறது. இரும்பு பீகாரில் இருந்து வருகிறது. நிலக்கரி கூட ஒரிசாவில் இருந்து வருகிறது.  எந்த இடத்தில் வெட்டி தங்கத்தையும் வெள்ளியையும் எடுக்க சொன்னார் என்று தெரியவில்லை. ஒருவேளை தங்கத்தையும், வெள்ளியையும் யாரவது வெட்டி எடுத்துக் அவர்களது வீட்டுக்கு  கொண்டு போய் விட்டார்களா?

 கேரளாமாநிலத்திற்குகாய்கறி,முட்டை பால் தமிழ் நாட்டில் இருந்துதான் செல்லவேண்டும்.  தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கேரளாவில் இருந்து வருகிறது. சென்னையிலே பல ஆட்டோமொபைல் பாகத் தயாரிப்பு நிறுவனங்களும், பல கார் தயாரிப்பு கம்பெனிகளும் உள்ளன. அவற்றில் உருவாகும் பொருட்கள் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப் படுகின்றன. அதனால் தமிழ் நாட்டிலே வேலை வாய்ப்பு கிடைக்கிறது. 

இந்தியாவின் எல்லா மாநிலங்களும் ஒன்றை ஒன்று சார்ந்தே உள்ளன.

குறுகிய எண்ணத்துடன், சுயநல லாபத்துக்காக சாதி வெறி, இன வெறி, மொழி வெறி, மத வெறியை தூண்டும் அனைவரையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மத வெறி , இனவெறி, மொழி வெறியை தூண்டி விட்டு  குண்டர் தொழில் செய்து பிழைக்கும் பயங்கரவாதிகள் ராஜ் தாக்கரே, பால் தாக்கரே, உத்தவ் தாக்கரே ஆகியோரை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

Advertisements

12 Responses to "மொழி வெறி + மத வெறி = தாக்கரேக்கள்."

தாக்கரேக்கள் போன்ற மனிதர்கள் மாநிலத்துக்கு ஒருவர் இருந்தால் போதும், இந்தியா விளங்கிவிடும்!! இவர்களை கைது செய்து களி தின்ன வைத்தால் தான் நல்லது, அப்படியும் புத்தி வருமா ந்பது சந்தேகமே. மகன் பெரியவனா, அண்ணன் மகன் பெரியவனா என்ற இவர்களது குடும்ப சண்டையில் மகாராஷ்டிரா பாவம் திணறுகிறது. இப்படி உள்ளுக்குள்ளேயே இனவெறி இருக்கும் போது ஆஸ்திரேலியாவை பார்த்து குற்றம் சொல்வது எப்படி நியாயமாகும். ஆஸ்திரேலியாக்காரன் கைகாட்டி சிரிக்கமாட்டான், எல்லாம் நேரம்.

Very good comments by Mr. Joseph.

I agree that its pathetic and ironical that as we blame the Australa for Racial chuavanism, we have Linguistic Chuvanism in India itself.

But we cant soft pedal on Australian racial chuanism. Australian universities came to India, Canvassed to enroll students. The Australian Government had given Visa to Indian students. They should protect our students.

Else we have reduce commercial cooperation with Australia. We should reduce the import of coal and other minerals from Australia and can buy from else where.

Australia is recently curbing such activities. I mean they agree that many university lays down false claims.
I am not supporting Australia but when I was there for sometime, not even ine australian behaved differently to me
They were very friendly and helpful.It is sad that such a racially diverse country is now finding hard to cope with the attacks. If we stop getting coal from Aus then we may have to get it from China who are our Arch foes in south Asia.

The attacks while they cannot be justified by any means but a kind of “you take away my job” attitude is there among the Aussie youth. In western countries they don’t bother abt Jobs, I mean they don’t look for white collar jobs alone but are ready to do any job that fills their pockets. So when Indian students take such jobs like bartending, supplying etc, they feel that they are pushed to the corner. Also cost of living there is high and students have to take up long travel in the wee hours to earn which puts them in a dangerous situation. So the situation is so complex that India and Australia had to take a mature approach to tackle this. Imagine the cover ups taken in Goa to protect a bigshot who raped a Russian woman. We have to rather clean our own house. Afterall Ours is the only country who proclaim “Aditi Devo Bhava”

The stand taken by BJP/RSS in this case of Marathi Manoos is commendable. It is high time they reduce the 10% gap that they feel exists with them and the minorities. Thanks to Gadkari, the BJP leader who makes real sense when he speaks

இந்த லூஸு தாக்கரேக்கள் இந்தியர்கள் என்று அழைப்பது முடியாவிட்டால் குறைந்த பட்சம் இந்துக்கள் என்ற முறையிலாவது மக்களை ஒருங்கினைப்பதை விட்டுவிட்டு மொழி ரீதியாக பிரிவினை செய்யும் முட்டாள்தனம். கருணாநிதி பரவாயில்லை. தார்பூசி எழுத்தழிப்பு வேலை மட்டும் செய்கிறார். ஆனால் இவர்கள் தொழில் இடங்களை அழிப்பதும் வன்முறையில் ஈடுபடுவதும் தொடர்ந்து சகிக்கவே முடியாத முட்டாள்தனங்கள். ஆனால் காங்கிரஸ் இதை கண்டு கொள்ளாமல் இருப்பதும் சுயநலமே. தாக்கரேக்களின் செயலால் மக்கள் கோபமுற்றால் தங்களுக்கு தான் நல்லது என்பதால் அதை கடுமையாக எதிர்க்காமல் விடுகிறார்கள். இப்படி கேவலமான அரசியல் வாதிகள் இருக்கும் வரை.. fill up the blank urself.

RAM,
In this matter, all the politicians were dillydallying to take a stance. In this Regard Mr. Rahul Gandhi has taken a claer stand, an appreciable one. He told that each and every part of India belongs to every Indian. Now BJP is also taking a simailar stanad. We need a strong leadership to resist these Thackrys. We dont have a Charismatic leadership After Mahatama Ghandhi. Nehru was popular to an extent. Indira Gandhi, though criticised for her authoritarian, corrupt practices considered as the strongest prime minister India had ever seen. I think it seems,that Rahul is abit bolder than others – this does not mean I gave a claen chit to Rahul, he may be criticised inthis same blog , if required.

ஹிந்தி மொழி எதிர்ப்பு,பார்ப்பன எதிர்ப்பு ,குடுமி அறுப்பு,ராமர்,பிள்ளையார் போன்ற இந்து கடவுள் சிலைகள் அவமதிப்பு ஆகியவற்றின் மூலம் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த திராவிட கட்சிகளின் ராஜதந்திரத்தையே இப்போது இந்த ராஜ் தாக்கரே செய்கிறார்.இந்த ராஜதந்திரத்தை இந்தியாவிற்கு முதலில் அரங்கேற்றியப் பெருமை நம் தமிழகத்தையே சாரும்.

மொழிவெறி + மதவெறி தாக்கரேக்கள் படித்தேன்.
பொதுவாக “மண்ணின் மைந்தர்கள்” புறக்கணிக்கப் படும்போது என்ன நடக்குமோ அதுவே மாராட்டியத்தில்
நடக்கிறது. அரசு வேலைவாய்ப்புகள் மற்ற மாநிலத்தவர்கள் வசம் அதிகம் போகும் போது மண்ணின் மைந்தர்கள் தாங்கள் புறக்கணிக்கப் படுவதாக கருதுகிறார்கள். இந்தப் பிரச்சினையை அரசியல் வாதிகள் தங்கள் சொந்த ஆதாயத்துக்காகப் பயன் படுத்திக் கொள்கிறார்கள். மத்தியில் ஆளும் காங்கிரஸ் முதல்
அனைத்து கட்சிகளும் அடக்கியே வாசிப்பது வோட்டு பயம் காரணமாகத் தான்.
தவிர இந்திரா காந்திக்குப் பிறகு அனைவரையும் ஒருங்கிணைக்கக் கூடிய ஒரு தலைவர் மத்தியில் இல்லை.
பல குறைகள் பலவீனங்கள் இருந்தாலும் எடுத்த முடிவில் பின்வாங்காத ஒரு போர்க்குணம் அவரிடம் இருந்தது.
இந்திராவுக்குப் பின் மாநிலக் கட்சிகள் மத்தியில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து இருக்கின்றன. இதன் விளைவாக மாநிலத்தில் என்ன நடந்தாலும் சரி.. மத்தியில் தங்கள் ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு செயல்படும் போது உறுதியான நடவடிக்கை எப்படி இருக்கும்.?
மொத்தத்தில் ஏற்கெனவே எவ்வளவோ சீரழிவுகளை நாம் சந்தித்தாகி விட்டது. கலாசார சீரழிவு, மத நம்பிக்கை சீரழிவு என்று .. இப்போது மாநில ஒற்றுமையையும் பலி கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.
இதற்காகவா பாடு பட்டு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார்கள் நமது முன்னோர்கள்.
நாம் ஒரு ஐந்தாறு நண்பர்கள் கூடிப் பேசி கலைவதால் என்ன மாற்றம் சம்பவித்துவிடப் போகிறது?.
மராட்டிய மாநில சகோதரர்கள் சிந்திக்கவேண்டும். வீர சிவாஜி பிறந்த மண் என்று பெருமைப் பட்டால் மட்டும் போதாது. மாற்று ஆதிக்கத்தை வெற்றி கொண்டபோது அவர் காட்டிய நிதானம், கண்ணியம் இவைகளை காற்றில் பரக்கவிட்டுக்கொண்டிருப்பது சரியா என்று “தாக்கரேக்கள்” தாக்குவதற்கு முன்னால்
யோசிக்கவேண்டும். இனியாவது யோசித்து நிதானம் காட்டாவிட்டால் தேசிய ஒருமைப்பாடு கேள்விக்குறி ஆகிவிடும்.

Dear Maniyan Sir,

//பொதுவாக “மண்ணின் மைந்தர்கள்” புறக்கணிக்கப் படும்போது என்ன நடக்குமோ அதுவே மாராட்டியத்தில்
நடக்கிறது. அரசு வேலைவாய்ப்புகள் மற்ற மாநிலத்தவர்கள் வசம் அதிகம் போகும் போது மண்ணின் மைந்தர்கள் தாங்கள் புறக்கணிக்கப் படுவதாக கருதுகிறார்கள்.//

I dont understand as why the taxi drivers are attacked, if the Government Jobs are taken by “other” people.

Government Job means , is it state Government or central Goveernment jobs?

For state Government Jobs, I think the state public service commission examinations are conducted in Marathi language. Then how other state people can join?

Marathi brothers should understand that Mumbai is nothing if it were not the Commercial capital of India. I explained this in the article. The Maarathi Brothers should reday to work hard and smart enough to compete.

Already many companies are moving out from Mumabai. Most of the new Automobile companies are not keen to establish their factories in Mumbai.

OTIS suffered a lot and their modern new plant is in Karnataka.

Slowly people will kove out, and Mumbai will become an Industrial desert like Calcutta.

From whom this Thackaerys will collect their Maamaool then?

இந்த தலைப்பு இந்தியர்கள் அனைவருக்கும் ஆர்வம் உள்ளது என்றாலும், வெளி மாநிலத்தில் உள்ள என்போன்றவர்களுக்கும், வெளி நாடுகளில் பணி புரியும் தமிழர்களுக்கும், தமிழ் நாட்டில் உள்ள பிற மொழி, பிராந்திய வர்களுக்கும் குறிப்பாக ஆர்வம் உள்ள விஷயம்.

அரசு வேலைகள் என்றில்லை, semi-skilled மற்றும் unskilled வேலைகளுக்கு கூட வெளி மாநிலத்தவர் வந்தால் தாக்கரேக்கள் சீறுவது — மன்னிக்கவும் — நியாயமோ எனத் தோன்றுகிறது. இது பல நூற்றாண்டுகளாக நடந்து வருவது தான். ஆனால் விடுதலைக்குப் பின் unskilled வேலைகளுக்கு கூட இன்னொரு மாநிலத்திற்கு செய்யும் அளவு சொந்த மாநில நிலை இருப்பது பரிதாபம். சிற்றுந்தி ஓட்டுனர் வேலைக்கு துபாய் செல்லும் மலையாளிகள், தமிழர்கள் போலே தான். (இல்லை என்றால் வடிவேலு பார்த்திபன் கூட வரும் படத்தில் சொல்லும் வேலை : கக்கூசு கழுவுவது ). அந்த நாடுகளிலே மக்கள் தொகை குறைவாக இருக்கும் பொது இதை ஏற்றுக்கொள்ளுபவர்கள், உள்ளூரில் இந்த தொழிலை செய்வதற்கு நபர்கள் இருக்கும் பொது வேற்று மாநிலத்தவர்கள், நாட்டவர்கள் வருவதால், ஒன்று கூலிகள்/சம்பளம் குறைகிறது; ( கீழ்வெண்மணி ) அல்லது உள்ளூர் காரர்களுக்கு வேலை இல்லா திண்டாட்டம் . தாக்கரேயும் ரிசர்வ் பேங்க் கவர்னர் தம் மாநிலத்தவர் இல்லை என்று சொல்லவில்லை; டாக்சி ஓட்டுபவர்கள், முடி திருத்துபவர்கள், சாலை தொழிலாளர்கள் பீகார், ஜார்கண்ட், உத்தர் பிரதேஷ் முதலிய மாநிலத்திலிருந்து வந்து, தம் ஊரில் உள்ள சமூதாயத்தில் கீழ் நிலையில் உள்ளவர்களுக்கு இடைஞ்சல் என்று சொல்வதில் பெரும் தவறு இல்லை; அவர் சொல்லும் விதம், எரியும் கல் தான் வலியை ஏற்படுத்துகிறது. இதனால் மராட்டிக் காரர்களுக்கு பொருள் ஈட்டும் வாய்ப்புகள் குறைந்து உள்ளது கண்கூடு. பொருள் ஈட்டும் நிமித்தம் வேற்று ஊர்களுக்கு, மாநிலங்களுக்கு, நாட்டிற்கு, கண்டத்திற்கு செல்வது வட இந்தியர் ( ஆப்ரிகா, பிஜி, யு.கே, அமெரிக்கா மேற்கு இந்திய தீவுகள், மௌரீஷியஸ்), சர்தார்ஜி / பஞ்சாபிகள் : லண்டன், கனடா, தமிழர்: இலங்கை, மலேய, பர்மா, விஎட்நாம், தென் ஆப்ரிகா, மேற்கு இந்திய தீவுகள், மௌரீஷியஸ்,; ஒரியாக் காரர்கள் : இலங்கை; எனப் போயிருந்தபோதும் மாராட்டியர்கள் பெரும் எண்ணிக்கையில் போகவில்லை என நினைக்கிறேன்; அதாவது பொருள் ஈட்டுவதற்காக தொலை தூரம் செல்லும் வழக்கம் அவர்களிடம் ரத்தத்தில் இல்லை எனக் கொள்ளலாம்.
சரி’ இப்போது என்ன செய்யலாம் ?
1. வேற்று மாநில அரசுகள் தம் மாநிலத்திலேயே வேலை வாய்ப்புகள் அதிகரிக்க உருப்படியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
2. மும்பையில் சாலைகள், வீட்டு வசதி, குடி நீர், கழிவு போன்ற கட்டமைப்புகள் இவர்கள் அங்கு வந்து குடியேறுவதால் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது; ஆகவே, அவர்கள் (பீகார், உத்தர் பிரதேஷ், அரசுகள் மராட்டி மாநிலத்திற்கு மானியம் வழங்க வேண்டும்.
3. ஒரு குறிப்பிட்ட அளவு ஊதியத்திற்கு கீழே வெளி மாநிலத்திவர்களை வேலைக்கு எடுத்துக்கொள்ள கூடாது என சட்டம் செய்வதில் தவறு இல்லை.
4. வரி விலக்குகள் முதலியவை வழங்கி எதிர் காலத்தில் தொழில்கள் வேறு பகுதிகளில் தொடங்க மைய அரசு வகைசெய்ய வேண்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 32 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: