Thiruchchikkaaran's Blog

நாக‌ரீக‌ ச‌முதாய‌ம்

Posted on: January 6, 2010


நாக‌ரீக‌ ச‌முதாய‌ம்,  என்ப‌து ம‌க்க‌ளால் உருவாக்க‌ப் ப‌டும் ச‌முதாய‌ம் ஆகும். அத‌னை ஆணையிட்டு உருவாக்க‌ முடியாது.

ஒரு ச‌மூக‌த்தில் எந்த‌ அள‌வுக்கு ம‌க்க‌ள் கண்ணிய‌மும், நேர்மையும்,  சுய‌ம‌ரியாதையும், பிற‌ரை ம‌திக்கும் த‌ன்மையும் , சார்ப‌ற்ற‌ சிந்த‌னையும் உடைய‌வ‌ர்களாக‌ இருக்கிறார்க‌ளோ, அந்த‌ அளவுக்கு அந்த‌ ச‌முதாய‌ம் நாக‌ரீக‌ ச‌முதாய‌மாக‌ இருக்கும்.

நாகரீக‌ ச‌முதாய‌ம் அத‌ன் உறுப்பின‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் முழு பாதுகாப்பு, ம‌ரியாதை, ச‌ம‌ வாய்ப்பு, ச‌ம‌ அந்த‌ஸ்து வ‌ழ‌ங்குவ‌தாக‌வும், ம‌க்க‌ளை இணைக்கும் அமைப்பாக‌வும், அன்பை வ‌ள‌ர்க்கும் அமைப்பாக‌வும், வெறுப்பைக் குறைக்கும் வ‌கையிலும் இருக்கும்.

எந்த‌ அள‌வுக்கு ஒரு ச‌மூக‌த்தில் வ‌ன்முறை நிக‌ழ்வுக‌ள் அதிக‌மாக‌வும், நீதி புற‌க்க‌ணிக்க‌ப் ப‌ட்டு அநீதி நில‌வுவ‌தாக‌வும் உள்ள‌தோ அந்த‌ அளவுக்கு அந்த‌ ச‌மூக‌ம் அநாக‌ரீக‌ ச‌மூக‌மாக‌ இருக்கும்.

ஒரு ச‌மூக‌த்தில் எந்த‌ அளவுக்கு பெண்க‌ளுக்கு ச‌ம‌ வாய்ப்பும், முழு பாதுகாப்பும், பால‌டிப்ப‌டையிலான‌ வேறுபாடு இல்லாலும் இருக்கிற‌தோ அந்த‌ அளவுக்கு அந்த‌ ச‌மூக‌ம் நாக‌ரீக‌மான‌ ச‌மூக‌மாக‌ இருக்கும்.

நாக‌ரீக‌ ச‌முதாய‌த்தில் எல்லா ம‌த‌த்தின‌ரும் அமைதியான‌ முறையிலே வ‌ழிபாடு செய்து கொள்வ‌தை த‌டை இல்லாம‌ல் அனும‌திக்கும். வ‌ழிபாட்டுத் த‌ல‌ங்க‌ளுக்கு பாதுகாப்பு அளிக்கும்.

முழுமையான‌ ம‌த‌ சுத‌ந்திர‌ம் அளிக்கும், அதே நேர‌த்தில் ம‌த‌ சுத‌ந்திர‌ம் என்ற‌ பெய‌ரால் வெறுப்புக் க‌ருத்துக்க‌ளை, இர‌த்த‌ வெறிக் க‌ருத்துக்க‌ளை ப‌ர‌ப்புவ‌தை நாகரீக‌ ச‌முதாய‌ம் அனும‌திக்காது.

பிற‌ப்பு அடிப்ப‌டையிலே ஒருவ‌ர் பிற‌க்கும்போதே தாழ்ந்த‌வ‌ர் என‌க் கூறும் அநீதியை நாக‌ரீக‌ ச‌முதாய‌ம் அனும‌திக்காது.

நாக‌ரீக‌ ச‌முதாய‌ம் சுற்றுப் புற‌ சூழ் நிலைக்கு கேடு விளைவிக்காம‌ல், இயற்க்கையை பாதுகாக்கும்.
நாக‌ரீக‌ ச‌முதாய‌ம் எல்லா உயிரின‌ங்க‌ளின் மீதும் அக்க‌றை உள்ள‌தாக‌ இருக்கும்.

நாம் நாக‌ரீக‌ ச‌முதாய‌ம் அமைவ‌தற்க்கான‌ அன்புக் க‌ருத்துக்க‌ளை இந்த‌ தள‌த்திலே தொட‌ர்ந்து எழுதுவோம்.

நாக‌ரீக‌ ச‌முதாய‌த்தின் உறுப்பின‌ருக்கு இல‌க்க‌ண‌மாக‌ இந்த‌க் க‌ருத்துக்க‌ளை முன் வைக்கிறோம்.

அத்வேஷ்டா (வெறுப்பு இல்லாத‌வ‌னாய்),

ச‌ர்வ‌ பூதானாம் மைத்ர‌ (எல்லா உயிர்க‌ளிட‌மும் ந‌ட்புட‌னும், சினேக‌ பாவ‌த்துட‌னும்),

க‌ருண‌ ஏவ‌ ச‌ (க‌ருணை இத‌ய‌ம் உள்ள‌வ‌னாக‌),

 நிர்ம‌மோ நிர‌ஹ‌ங்காரா (திமிரும், அக‌ந்தையும் இல்லாத‌வ‌னாக‌).

Advertisements

5 Responses to "நாக‌ரீக‌ ச‌முதாய‌ம்"

அத்வேஷ்டா (வெறுப்பு இல்லாத‌வ‌னாய்),

ச‌ர்வ‌ பூதானாம் மைத்ர‌ (எல்லா உயிர்க‌ளிட‌மும் ந‌ட்புட‌னும், சினேக‌ பாவ‌த்துட‌னும்),

க‌ருண‌ ஏவ‌ ச‌ (க‌ருணை இத‌ய‌ம் உள்ள‌வ‌னாக‌),

நிர்ம‌மோ நிர‌ஹ‌ங்காரா (திமிரும், அக‌ந்தையும் இல்லாத‌வ‌னாக‌).

இப்படியே கடவுள் ஆதியில் மனிதனைப் படைத்தாராம்;
ஆனால் இறைவன் தனக்குக் கொடுத்த சுயாதீனத்தையே விலையாக்கிவிட்டு அடிமையானானாம்; இது நிச்சயமாக வெறுப்பு கருத்து அல்ல; ஒரு பிரச்சினையின் ஆணி வேர்; அதனை அறிந்தாலே பிரம்மத்தையறிய இயலும்..!

நன்றி திரு. Chillsam அவர்களே,

நாம் எல்லா மார்க்கங்களையும் ஆக்க பூர்வமான கண்ணோட்டத்துடன் அணுகுவோம்.

மனித சமுதாயத்தை நாகரீக சமுதாயம் ஆக்க உதவக் கூடிய கருத்துக்களை – அது எந்த மார்க்கத்தில் இருந்தாலும் அவற்றை சுட்டிக் காட்டிப் பாராட்டுவோம்.

அதே நேரம் மக்கள் சமுதாயத்தை அழிக்கக் கூடிய, வெறுப்புக் கருத்துக்களையும் மக்களுக்கு சுட்டிக் காட்டி எச்சரிக்கை செய்வோம்.

நீங்கள் கூறிய கருத்து (இப்படியே கடவுள் ஆதியில் மனிதனைப் படைத்தாராம்;
ஆனால் இறைவன் தனக்குக் கொடுத்த சுயாதீனத்தையே விலையாக்கிவிட்டு அடிமையானானாம்) மனித சமுதாயம் நாகரீகம் அடைய உதவி செய்யுமா என்று ஆராய்வோம்.

ஆனால் இதை விட சிறப்பான நாகரீகக் கருத்துக்களை இயேசு கிறிஸ்து கூறி இருக்கிறார். அவைகளை நீங்கள் மேற்கோள் காட்டி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஆங்கிரசர், நசிகேதஸ், கிருட்டிணர், புத்தர், சாக்ரடீஸ், இயேசு கிறிஸ்து, விவேகானந்தர், சங்கரர், முகமது உள்ளிட்ட பல அறிங்கர்கள் கூறிய கருத்துக்களை மேற்கோள் காட்டி நாம் இங்கே கட்டுரைகளை வெளியிடுவோம்.

தொடர்ந்து தளத்தை பார்வை இட்டு வாருங்கள்.

“ஆதிபகவன் முதற்றே உலகு” என்கிறான் வள்ளுவன்;அந்த “பகவன்”தம் சிருஷ்டியான மனிதன் தன்னிலையறிய பிரம்மத்தையறிய வேண்டும்;

படைத்தவன் இருக்க படைப்பு என்ன செய்யும், என்ன செய்தும் என்ன பயன்?நாகரீகம் என்பதே ஏக இறைவனின் சிருஷ்டியிலிருந்து தோன்றியதுதானே?

சிருஷ்டிகர் இல்லாமல் சிருஷ்டி என்ன செய்யும்?

படைப்பெல்லாம் படைத்தான் மனுவுக்காக அந்த மனுவைப் படைத்தான் தனக்காக என்று பெரியோர் சொல்ல கேள்வி..!

ஐயா, கடவுள் என்று சொல்லப் படும் கான்செப்டால் நாகரீகம் உருவானால் நல்லதுதான்.

ஆனால் நிரூபிக்கப் படாத, காட்டப் படாத கடவுளின் பெயரால் பல கட்டளைகளைப் போட்டு, பிற மார்க்கத்தவர் வணங்கும் கடவுள்களை பேய்கள் என்று சொல்லி மதங்களுக்கு இடையிலே சண்டையை உருவாக்குகிறார்கள்.

மனிதர்களுக்கிடையே சண்டை உருவாக்கி, கோடிக்கணக்கான மனிதர்களைக் கொன்று விட்டனர்.

அடுத்தவன் எப்படியோ கும்பிட்டு விட்டுப் போகிறான் என்று விட வேண்டியது தானே.

அவனவன் கடவுள் என்று நினைப்பதை அமைதியாக வணங்கி விட்டுப் போனால் அதைக் குறை சொல்லவில்லை.

அப்படி இல்லாமல் வெறுப்பு கருத்துக்களை உருவாக்கி பல இனங்களை அழித்ததுதான், இந்தக் கடவுள் பிரச்சாரகர்களால் கிடைத்த விடயம்.

உலகம் நாகரீக சமுதாயத்தை நோக்கிப் போகாமல் தடுத்து காட்டு மிராண்டி தனத்தை நோக்கி செல்ல வைக்க இந்தக் கடவுள் பிரச்சாரகர்கள் அறிந்தோ அறியாமலோ காரணமாக உள்ளனர். இது பற்றி தனியாக கட்டுரைகள் எழுதுவோம்.

இந்தப் படைத்தவன் என்பது எல்லாம் ஒரு கற்பனை அல்லது யூகம் தான். அதை அடிப்படையாக வைத்து மக்களிடையே பகையை உருவாக்கி இரத்த ஆறு ஓட விடுவது நாகரீகமா?

‘இரத்த ஆறு ஓடக் காரணமானது கடவுள் பிரச்சாரம்’ என்பது உண்மைக்கு மாறானதொரு கூற்றாகும்;

அரசியல்,பொருளாதார,கலாச்சார,வர்க்கரீதியிலான ஏற்றத்தாழ்வுகளே உலகின் அனைத்து போர்களுக்கும் கலகங்களுக்கும் தீவிரவாதங்களுக்கும் காரணமாக அமைந்துள்ளது;

ஒரு மசூதியை இடித்துவிட்டு கோவில் கட்டவேண்டும் என்று சிலர் நினைத்ததே இந்தியாவின் சாபக் கேடான நிலைக்குக் காரணமாக இருந்தது;

இதற்குக் காரணம் இராம பக்தியல்ல,கீழ்த்தரமான அரசியல்..!

இதுபோல இஸ்ரேல் நினைத்திருந்தால் ஒரு நொடியில் தங்களது பாரம்பரிய ஆலயத்தை எருசலேம் நகரில் கட்டிவிட முடியும்;

அதுவும் நடைபெறத்தான் போகிறது; அப்போது இந்த உலகம் தெரிந்துக் கொள்ளும், இயேசுதான் உண்மையான இறைத் தூதர் என்று; ஏனெனில் இவற்றையெல்லாம் 2000 வருட முன்பே சொல்லிச் சென்றுவிட்டார்;

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: