Thiruchchikkaaran's Blog

இராவ‌ண‌ன்

Posted on: January 4, 2010


இராவ‌ண‌ன் என்ப‌வ‌ன் ஒரு ச‌ர்வாதிகாரியாக‌, காமக் கொடூர‌னாக‌ இருந்திருக்கிறான். சிங்க‌ள‌ அர‌ச‌னாக‌ இருந்த‌ இவ‌ன் பிற‌ன் ம‌னை நோக்காப் பெருந்த‌கையாளனாக‌ இல்லாம‌ல் – பிற‌ன் ம‌னையை வ‌ற்புறுத்திப் பெண்டாளும் மிருக‌ குண‌ம் கொண்ட‌வ‌னாக‌ இருந்திருக்கிறான்.

 மிக‌வும் வ‌ல்ல‌மை உடைய‌ அர‌ச‌னாக‌, த‌ன்னைத் த‌ட்டிக் கேட்க‌ ஆள் இல்லை என்ற‌ ம‌ம‌தையில், ப‌ல‌ பெண்க‌ளின் வாழ்க்கையை சூறையாடி இருக்கிறான் இந்த‌ குடி கேடி இராவ‌ண‌ன்.

த‌ன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள‌ வேட‌ங்களைப் போட்டு, துற‌வி போல‌ ந‌டித்து, இப்ப‌டியாக‌ ப‌ல‌ வ‌ழிக‌ளிலும் கோழைத் த‌னமாக‌ செய‌ல் ப‌ட்டு பெண்க‌ளைக் க‌வ‌ர்ந்து சென்று இருக்கிறான்.
 
ஒவ்வொரு பெண்ணுக்கும் அவ‌ர் விரும்பும் வாழ்க்கை துணையுட‌ன் வாழும் உரிமை உள்ள‌து.

எந்த‌ ஒரு பெண்ணிட‌மும், அவ‌ருடைய‌ விருப்ப‌த்துக்கு மாறாக ச‌ல்லாப‌ம் செய்ய‌ முய‌ல்வ‌து காட்டுமிராண்டித் த‌ன‌த்தை விட‌ கொடுமையான‌ குற்ற‌ம், நாக‌ரீக‌ ச‌மூக‌த்துக்கு எதிரான‌து.

ந‌ம் உள்ள‌ங்க‌ளில் இராவ‌ண‌த்த‌னமான‌ எண்ண‌ங்க‌ள் எழ‌ நாம் என்றும் இட‌ம் த‌ர‌க் கூடாது.

***                                                                                                        

ச‌கோத‌ர‌ர் அசோக்ஜியின் ஒரு பின்னூட்ட‌த்துக்கு நான் அளிக்க‌ விரும்பும் விள‌க்க‌த்தை க‌ட்டுரையுட‌னே சேர்த்து இருக்கிறேன்.

அசோக்ஜியின்  பின்னூட்ட‌ம்:

//நண்பரே,
இராவணன் மீது பரிதல் காட்டினால், அவன் நல்லவன் ஆவான் என்றால், அவன் மீது பரிதல் காட்டினால் தவறில்லை. மேலும் உண்மையை நாம், பச்சாதாபம் இல்லாமல் நோக்க வேண்டும். நானறிந்த வரையில், இராவணன், சீதையை தன் தங்கை சூர்ப்பனகையின் நிமித்தம், கடத்தி இருக்கிறான். மேலும், அவன் சைவ நெறியில் வளர்ந்த ஒரு சிறந்த சிவபக்தன். பல நல்ல குணநலன்கள் நிறைதவன் என்றுதான் புராணங்கள் கூறுகிறது.
நீங்கள் ஆதாரமில்லாமல் இப்படி ராவணனை குற்றப்படுத்தி உங்கள் ராமபக்தியை காட்ட தேவையில்லை.
மேலும் இராவணன் தமிழனே என்றுதான் புராணங்கள் கூறுகிறது. சிங்களனோ, சிங்கபூர்காரரோ அல்ல.
//சிங்க‌ள‌ நாட்டை ஆண்ட‌ இராவ‌ண‌னை சிங்க‌ப்பூர்க்கார‌ன் என்றா சொல்ல‌ முடியும்//
தமிழ்நாட்டை தமிழனேவா ஆட்சிசெய்தான்? இலங்கை, ஆதியில் இருந்தே சிங்கள நாடா என்ன?
//ப‌ண்டைய‌ த‌மிழ‌ர்க‌ள் பிற‌ன் ம‌னை நோக்காப் பெருந்தகையாள‌ராக‌வே வாழ்ந்து இருக்கின்ற‌ன‌ர்//
இப்படி நீங்கள் அனைத்து பண்டைய தமிழர்களுக்கும் உத்திரவாதம் தர முடியுமா? ஆதாரம் கேட்டால், என்னென்னமோ சொல்கிறீர்களே. ஆதாரம் இல்லாவிட்டாலும், நக்கலுக்கு ஒன்றும் குறைவில்லை.
நன்றி,
அசோக்//

//இராவணன் மீது பரிதல் காட்டினால், அவன் நல்லவன் ஆவான் என்றால், அவன் மீது பரிதல் காட்டினால் தவறில்லை. மேலும் உண்மையை நாம், பச்சாதாபம் இல்லாமல் நோக்க வேண்டும்//

ஒருவ‌ன் மீது ப‌ரித‌ல் காட்டுவ‌து த‌வ‌றில்லை. ந‌ம்மிட‌ம் வாங்கிய‌ க‌ட‌னை திருப்பிக் கொடுக்காத‌வ‌ன் மீது ப‌ரித‌ல் காட்டி அவ‌னுக்கு இன்னும் அதிக நேர‌ம் கொடுக்க‌லாம், அல்ல‌து க‌ட‌னையே த‌ள்ளுப‌டி செய்து பண‌த்தை திருப்பித் த‌ர‌ வேண்டாம் என்று கூட‌ சொல்ல‌லாம்.

ஆனால் ஒருவ‌ரின் ம‌னைவியை ஒரு க‌ய‌வ‌ன் தூக்கி சென்று விட்ட போது என்ன‌ ப‌ரிவு காட்ட‌ முடியும்? ம‌னைவியை விட்டு விடு என்று கேட்கலாம். அவ‌ன் அப்ப‌டி விடாவிட்டால், என்ன‌ வ‌கையான‌ ப‌ரிவு காட்ட‌ச் சொல்கிறீர்க‌ள்? ப‌ண‌த்தை த‌ர‌ வேண்டாம், நீயே வைத்துக் கொள் என்று விடுவ‌தைப் போல‌, மனைவியை நீயே வைத்துக் கொள் என்று விட‌ முடியுமா?

 ப‌ல பெண்களை தூக்கி சென்று மிர‌ட்டுவ‌தை த‌ன் வ‌ழ‌க்க‌மாக‌ வைத்து இருந்திருக்ககிரான் இந்த‌ இராவ‌ண‌ன். திருந்துவ‌து ப‌ற்றி எண்ண‌வேயில்லை. சீதையை தூக்கி சென்ற‌ போது, அனும‌ன் சீதையை விட்டு விடும்ப‌டி கோரியிருக்கிறான். ஆனால் இராவ‌ணன் விட‌ த‌யாராக‌ இல்லை. அனும‌ன் கேட்ட‌ போதே இராவ‌ண‌ன் சீதையை திருப்பிக் கொடுத்து இருந்தால், அவ‌ன் திருந்திவிட்டான் என்று பாராட்ட‌லாம். ஆனால் க‌டைசி வ‌ரை அவ‌ன் சீதையை திருப்பி த‌ர‌ த‌யார் இல்லை. 

என் ம‌னைவியை அல்ல‌து உங்க‌ள் ம‌னைவியை யாராவ‌து தூக்கிப் போனால் அவ‌ர்க‌ளை நாம் ப‌ரித‌ல் செய்து,  ம‌னைவியை இப்போது திருப்பிக் கொடுக்காவிட்டாலும் ப‌ர‌வாயில்லை, அவ‌ன் என்றைக்காவ‌து ம‌ன‌ம் திருந்தி திருப்பிக் கொடுக்க‌ட்டும், அது வ‌ரையிலே அவ‌னுடைய‌ இச்சையை தீர்க்கும்ப‌டி ம‌னைவியை சித்திர‌வ‌தை செய்தாலும், க‌ட்டாய‌ப் ப‌டுத்தினாலும் ப‌ர‌வாயில்லை என்று நீங்க‌ளோ, நானோ விடுவோமா?  ந‌ம‌து பொண்டாட்டி என்றால் ப‌த்திர‌மாக‌ இருக்க‌ வேண்டும், வூரான் வூட்டு பொண்டாட்டி என்றால் தூக்கி போனால் ப‌ர‌வாயில்லை என்று இருந்தால், நேற்றைக்கு இன்னொருத்த‌ன் பொண்டாட்டியை தூக்கிய‌வ‌ன் நாளைக்கு ந‌ம்ம‌ வீட்டுக்கு வ‌ருவான். நாம் ஆதரிப்பதோ, எதிர்ப்பதோ கொள்கை அடிப்ப‌டையிலே தானே த‌விர‌, நாம் யாருக்கும் ப‌ச்சாத‌பம் பார்க்க‌வில்லை என்ப‌து தெளிவு. 

//மேலும், அவன் சைவ நெறியில் வளர்ந்த ஒரு சிறந்த சிவபக்தன். பல நல்ல குணநலன்கள் நிறைதவன் என்றுதான் புராணங்கள் கூறுகிறது.//

சிவ‌ ப‌க்த‌ன் – ச‌ரி.  என்ன‌ ந‌ல்ல‌ குண‌ம் இருந்த‌து? ச‌ர்வாதிகார‌ காம‌க் கொடூர‌ குண‌ங்க‌ள் ந‌ல்ல‌ குண‌ங்க‌ளா? இராம‌னும் சிவ‌னை வ‌ழி ப‌ட்ட‌ சிவ‌ ப‌க்த‌ன் தானே? ஆனால் த‌ன் ம‌னைவியை த‌விர‌ வேறு பெண்ணை நோக்காத‌ இராம‌னை விட்டு விட்டு அவ‌ன் ம‌னைவியை தூக்கி சென்ற‌ இராவ‌ண‌னுக்கு இவ்வ‌ள‌வு ஆத‌ர‌வு காட்டுவ‌து ஏன்? சிவ‌ ப‌க்த‌ன் ஒழுங்கான‌வ‌னாக‌ இருந்தால் அவ‌னை க‌ட்ட‌ம் க‌ட்ட‌ வேண்டும் என்ப‌துவும், சிவ‌ப‌க்த‌ன் க‌ற்ப்ப‌ழிப்புக் க‌ய‌வ‌னாக‌ இருந்தால் அவ‌னை ஆத‌ரிக்க‌ வேண்டும் என்ப‌துவும் உங்க‌ள் கொள்கையா? இராம‌னையும் சீதையையும் இந்துக்க‌ள் கட‌வுளாக‌ வழிபடுவதால், ம‌த‌க் காழ்ப்புண‌ர்ச்சி கார‌ணமாக‌ சீதையை தூக்கி சென்ற‌ இராவ‌ண‌னை நீங்க‌ள் ஆத‌ரிப்ப‌தாக‌ ப‌டிப்ப‌வ‌ர்க‌ள் க‌ருத‌க் கூடும்.

//மேலும் இராவணன் தமிழனே என்றுதான் புராணங்கள் கூறுகிறது. சிங்களனோ, சிங்கபூர்காரரோ அல்ல.//

இராவ‌ணன் சிவ‌னை வணங்கிய‌ சிவ‌ ப‌க்த‌ன் என்று நீங்க‌ள் குறிப்பிட்டுள்ள‌து ச‌ரியே. ஆனால் அவ‌ன் சைவ‌ சித்தாந்த‌ முறையை சேர்ந்த‌வ‌னாக‌ குறிப்புக‌ள் இல்லை.  அவ‌ன் வேத‌ங்க‌ளை க‌ற்று வேத‌ங்க‌ளின் அடிப்ப‌டையில் வேள்விக‌ளை செய்த‌வ‌ன், சிவ‌ வ‌ழிபாடு செய்த‌வ‌ன் என‌வும் குறிப்பிட‌ப் ப‌ட்டு உள்ளது. 

 த‌மிழ்ப் பேர‌ர‌ச‌ர்க‌ளைப் ப‌ற்றி அவ‌ர‌வ‌ர்க‌ள் வாழ்ந்த‌ கால‌த்திலே எழுத‌ப் ப‌ட்ட‌ த‌மிழ் பாட‌ல்க‌ள் உள்ள‌ன‌.

க‌ரிகால‌னைப் ப‌ற்றி ப‌ட்டின‌ப்பாலையில் விரிவாக‌ கூற‌ப் ப‌ட்டுள்ள‌து. க‌லிங்க‌த்துப் ப‌ர‌ணியில் இராசேந்திர‌ சோழ‌னைப் ப‌ற்றி குறிப்பிட‌ப் ப‌ட்டுள்ள‌து.

தோல்வியுற்ற‌ அர‌ச‌ர்க‌ளைப் ப‌ற்றிக் கூட‌க் குறிப்பிட‌ப் ப‌ட்டுள்ள‌து. போரில் ச‌ண்டையிடும் போது எதிரி வீசிய‌ வேல், மார்பிலே பாய்ந்து முதுகு வ‌ழியாக‌ வெளியேறியும் ஒரு மன்ன‌ன் ம‌ர‌ண‌ம் அடையவில்லை. ஆனாலும், முதுகிலே ஏற்ப்பட்ட‌ புண்ணை இழிவாகக் க‌ருதி உண்ணா நோன்பிருந்து உயிர் துற‌ந்த‌ அந்த‌ ம‌ன்ன‌னைப் ப‌ற்றிக் குறிப்புக‌ள் உள்ளன‌. 

இன்னொரு ம‌ன்ன‌ன் எதிரியால் பிடிக்க‌ப் ப‌ட்டு, சிறையில் அடைக்க‌ப் ப‌ட்ட‌தாக‌வும், தாக‌த்துக்கு நீர் கேட்ட‌ போது, சிறைக் காவ‌ல‌ன் இழிவாக‌ப் பேசிய‌தால் அவ‌ன் அளித்த‌ த‌ண்ணீரை ப‌ருகாம‌ல் உயிர் விட்ட‌ அர‌ச‌னைப் ப‌ற்றிக் குறிப்புக‌ள் உள்ள‌ன‌.

ஆனால் பெரும் வெற்றிக‌ளைக் குவித்து, பேர‌ர‌ச‌னாக‌ வாழ்ந்த‌ இராவ‌ண‌னிப் ப‌ற்றி எந்த‌ ஒரு சிறு குறிப்பும் எந்த‌ ப‌ண்டைய‌ த‌மிழ் இல‌க்கிய‌த்திலும் காணப் படவில்லையே? இராவ‌ண‌ன் வாழ்ந்த‌ கால‌த்தில் அவ‌னைப் ப‌ற்றி ஒரு த‌மிழ்ப் புல‌வ‌ரும் ஒரு பாட‌லும் எழுத‌வில்லை.

இராவ‌ண‌ன் த‌மிழ‌னாக இல்லாத‌ கார‌ண‌த்தால், அவ‌ன் எவ்வ‌ள‌வு வெற்றி பெற்ற‌ போதிலும் அவ‌னைப் பாடுவ‌தில்  த‌மிழ்ப் புல‌வ‌ர்க‌ள் க‌வ‌ன‌ம் செலுத்த‌வில்லை என்ப‌தே உண்மை. என‌வே இராவ‌ண‌னுக்கும் த‌மிழ்  ச‌முதாய‌த்துக்கும் யாதொரு தொட‌ர்பும் இருப்ப‌தாக‌ எந்த‌வொரு ஆத‌ராமும் இல்லை.

என‌வே இராவ‌ண‌ன் த‌மிழ‌ன் என்ற‌ ச‌ற்றும் ச‌ம்ப‌ந்த‌மில்லாத‌ ஒரு க‌ருத்தாக்க‌த்தை நீங்க‌ள் அளித்து விட்டு, என்னிட‌ம் ஆதார‌ம் கேட்டால் நான் என்ன‌ செய்ய‌ முடியும்? ஆதார‌த்தை அளிக்க‌ வேண்டிய‌து நீங்க‌ள் தான்.

//நீங்கள் ஆதாரமில்லாமல் இப்படி ராவணனை குற்றப்படுத்தி உங்கள் ராமபக்தியை காட்ட தேவையில்லை//

 இராவ‌ண‌னை கொள்கை அடைப்ப‌டையிலே எதிர்க்கிறோம். இதிலே இராம ப‌க்தி எங்கே வ‌ந்த‌து? இந்த‌ த‌ளத்திலே, பாப்ரி ம‌ஸ்ஜீத் ‍பிர‌ச்சினை ப‌ற்றி நான் க‌ட்டுரை எழுதி அதிலே ம‌சூதியை இடித்த‌து த‌வ‌று என்று குறிப்பபிட்டு இருக்கிறேன். ஆனால் நீங்க‌ளோ  ம‌த‌ காழ்ப்புண‌ர்ச்சிக்கு, ம‌த‌ துவேச‌த்துக்கு ம‌ன‌திலே இட‌ம் குடுத்த‌தால், இப்ப‌டி காம‌க் கொடூர‌ ச‌ர்வாதிகாரி கொடிய‌வ‌னுக்கு ஆத‌ர‌வு தெரிவிக்கும் அளவுக்கு சென்று விட்டீர்க‌ள்.

//நானறிந்த வரையில், இராவணன், சீதையை தன் தங்கை சூர்ப்பனகையின் நிமித்தம், கடத்தி இருக்கிறான்.//

சூர்ப்ப்னகையார் காடுகளில் அங்கேயும் இங்கேயும் திரிந்து வந்த போதினிலே இராமனைக் கண்டு மனதைப் பறி கொடுத்தது தவறு அல்ல. இராமனிடம் காதல் விண்ணப்பமும் அளித்தார். அதுவும் தவறு அல்ல.

ஆனால் யாருடைய காதல் விண்ணப்பத்தையும் ஏற்றுக் கொள்ளும் நிலையிலே இராமன் இல்லை. அதையும் அவன் அப்போதே சூர்ப்பனகையாரிடம் தெளிவாக விளக்கி விட்டான். தான் கொள்கைகளை முக்கியமாக கருதி வாழ்பவன் என்றும், அதனாலேயே இராச்சியத்தை விட்டு காட்டிலே வசிக்கவும் செய்பவன் என்றும், அந்த அளவுக்கு கொள்கையிலே உறுதியாக இருக்கும் போது, ஒரே மனைவி என்கிற கொள்கையிலும் பிடிப்புடன் உறுதியாக இருப்பதாக கூறி விட்டான்.

ஆனால் இந்த கொள்கை விளக்கத்தை எல்லாம் புரிந்து கொள்ளும் நிலையிலே சூர்ப்ப்னகையார் இல்லை. விரும்பியது கிடைக்கவில்லை என்று தெரிந்ததும் விதியை நொந்து விட்டு இடத்தை விட்டு சென்று இருக்கலாம்.

ஆனால் அவர் இராமனையோ, இலக்குவனையோ , சீதையையோ புரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லை. சீதை அழகியாக இருப்பதால், இராமன் தன்னிடம் கவனம் செலுத்தவில்லை என்று நினைத்து விட்டார்.

சீதை உயிருடனே இருந்தால் தானே இராமன் சீதையை நினைப்பான், சீதையை விண்ணுக்கு அனுப்பி விட்டால், இராமனுடன் தான் கொண்ட காதல் நிறைவேறும் என்று தப்புக் கணக்கு போட்டு விட்டார். சீதையைக் கொல்லப் பாய்ந்து இருக்கிறார்.

நல்ல தனமாகக் கூறியும் கேட்கவில்லை. அதோடு சீதையைக் கொல்லவும் பாய்கிறார். எனவே அவரின் புயல் வேகப் பாய்ச்சலைக் கட்டுப் படுத்தவே, அவரின் மூக்கையும், காது மடல்களையும் அறுத்து, அவரின் வேகத்தை கட்டுப் படுத்த வேண்டிய நிலைக்கு இலக்குவன் தள்ளப் பட்டார்.

ஒருவ‌ர் காம‌ உண‌ர்ச்சியால் உன்ம‌த்த‌ம் அடைந்த‌ நிலையிலே அவ‌ரைக் காய‌ப் ப‌டுத்தினாலோ, நெருப்பால் சுட்டாலோ, அவ‌ருடைய‌ மூளையிலே உள்ள‌ சிந்த‌னையான‌து த‌ன் உட‌லுக்கு நேர்ந்த‌ துன‌ப‌த்தைப் ப‌ற்றி எண்ண‌ ஆர‌ம்பித்து, காம‌ சிந்த‌னையை பின்னுக்கு த‌ள்ளி விடும். எனவே சூர்ப்ப்னகையாரின் புயல் வேகப் பாய்ச்சலைக் கட்டுப் படுத்தவே, அவரின் மூக்கையும், காது மடல்களையும் அறுத்து, அவரின் வேகத்தை கட்டுப் படுத்த வேண்டிய நிலைக்கு இலக்குவன் தள்ளப் பட்டான்.

நீங்கள் என்னவோ சூர்ப்பனகையார் ஒரு பாவமும் அறியாத சிறுமி போலவும், தானுன்டு, த‌ன் வேலையுண்டு என்று அமைதியாக‌ வாழ்ந்து வ‌ந்த‌ நிலையிலே இராமனும், இலக்குவனும் வ‌லிய‌ச் சென்று அவரை ஈவ் டீசிங் செய்து அவரின் மூக்கையும் காதையும் அறுத்து விட்டது போலவும், வ‌க்கால‌த்து வாங்குவ‌து நியாய‌மா?

விப‌ச்சார‌ம் செய்ய‌க் கூடாது , ஒரு பெண்ணை த‌வ‌ றான‌ எண்ண‌த்துட‌ன் நோக்க‌க் கூட‌ கூடாது, த‌ன் ம‌னைவியைத் த‌விர‌ வேறு எந்த‌ப் பெண்ணையும் ம‌ன‌தாலும் விரும்ப‌ மாட்டேன் என்ற‌ கொள்கையின் அடிப்ப‌டையிலே இராம‌ன் வாழ்ந்த‌து த‌வ‌றா? இந்த‌க் கொள்கை த‌வ‌றான‌து என்று நீங்க‌ள் நினைக்கிறீர்க‌ளா?

சூர்ப்ப‌ன‌கையாரோ, அவ‌ரை ஒத்த‌ இய‌ல்பு உடைய‌வ‌ரோ, உங்க‌ளிட‌ம் வ‌ந்து, த‌ன்னுட‌ன் உற‌வு கொள்ளுமாறு அழைத்தால், நீங்க‌ள் என்ன‌ செய்வீர்க‌ள்? விப‌ச்சார‌ம் செய்வ‌து த‌வ‌று என்ற‌ அடிப்ப‌டையிலே, நீங்க‌ள் அந்த‌ப் பெண்ணிட‌ம் உற‌வு கொள்ள‌ ம‌றுத்தால், அந்த‌ப் பெண்  உங்க‌ள் ம‌னைவியைக் கொல்ல‌ப் பாய்ந்தால் அப்போது உங்க‌ள் மனைவியைக் காக்க‌ அந்த‌ப் பெண்ணை நீங்க‌ள் த‌டுக்க‌ மாட்டீர்க‌ளா?

சூர்ப்ப‌ன‌கையின் மூக்கை அறுத்த‌து இல‌க்குவ‌ன் தானே! ப‌திலுக்கு இராவ‌ண‌ன் இல‌க்குவ‌ணையோ, இராம‌னையோ மூக்கையும் காதையும் அறுத்தோ, கொன்றோ இருந்தால் கூட‌ ச‌ரி என்று சொல்ல‌லாம். அதை விட்டு விட்டு, த‌ன்னுடைய‌ காம‌ வ‌க்கிர‌த்தை நிறைவேற்றிக் கொள்ள‌ சீதையை ஏமாற்றி தூக்கி சென்று இருக்கிறான் இராவ‌ண‌ன். அதையும் நீங்க‌ள் நியாய‌ப் ப‌டுத்த‌ முனைவ‌து, ம‌த‌க் காழ்ப்புணர்ச்சியும், பிற‌ ம‌த‌ங்க‌ளின் மீதான வெறியும் ஒரு ப‌டித்த‌ ம‌னித‌ரை எந்த‌ அளவுக்கு காட்டுமிராண்டிக் காமக் கொடூர‌த்தை ஆத‌ரித்து நாக‌ரீக‌ ச‌முதாய‌த்துக்கு பின்ன‌டைவு ஏற்ப்ப‌டுத்தும் நிலைக்கு அழைத்து செல்ல‌ முடியும் என்ப‌த‌ற்க்கு ஒரு உதார‌ணமாக‌  உங்க‌ள் பின்னூட்ட‌ம் இருக்கிற‌து.

ந‌க்க‌ல் செய்வது நான‌ல்ல‌, க‌ற்ப்ப‌ழிப்பு க‌ய‌வ‌னை க‌ன‌வான் ரேஞ்சுக்கு சித்த‌ரிக்க‌ முய‌லும் உங்க‌ள் பின்னூட்ட‌மே ந‌க்கலாக‌ க‌ருத‌ப் ப‌ட‌க் கூடும்.

நாம் காழ்ப்புண‌ர்ச்சி அடிப்ப‌டையில் இராவ‌ணனை குறை கூற‌வில்லை. இராவ‌ண‌ன் ந‌ல்ல‌வ‌னாக‌ இருந்திருந்தால் நாம் அவ‌னைக் குறை சொல்ல‌ப் போவ‌தில்லை. ப‌ல‌ர் புத்தி சொல்லியும் இராவண‌ன் திருந்த‌வில்லை. ப‌ல‌ பெண்க‌ளின் வாழ‌க்கையை அவ‌ன் கெடுத்து இருக்கிறான். த‌ன் அதிகார‌ வெறியில், வ‌லிமை உள்ள‌து என்ப‌த‌ற்காக‌ த‌ன் க‌ண்ணில் ப‌ட்ட‌ பெண்க‌ளில் த‌ன‌க்கு விருப்ப‌மான‌வ‌ர்க‌ளை தூக்கி சென்று, த‌ன்னுடைய‌ காம‌ வெறிக்கு இணங்கும் ப‌டி க‌ட்டாய‌ப் ப‌டுத்தி இருக்கிறான். இந்த‌ விட‌ய‌த்தில் இராம‌னை விட‌ நாம் தான் இராவ‌ண‌னிட‌த்தும், இராவ‌ண‌த் த‌ன‌த்துட‌ன் செய‌ல்படுபவர்களிடத்தும்  எச்ச‌ரிக்கையாக‌ இருக்க‌ வேண்டும். ஏனெனில் இராம‌ன், இராவ‌ண‌னை போரிலே ச‌ந்த்தித்து அவ‌னுட‌ன் போரிடும் திற‌மையும் வ‌லிமையும் உள்ளவனாக‌ இருந்திருக்கிறான்.

ஆனால் ந‌ம்மில் ப‌ல‌ரோ சாத‌ர‌ண‌ தெரு ர‌வுடியை கூட‌ எதிர்த்து போராடும் அளவுக்கு, வ‌லிமையோ, ப‌ண‌ செல்வாக்கொ, அர‌சிய‌ல் செல்வாக்கோ இல்லாம‌ல் சாமானிய‌ராக‌ இருக்கிறோம்.

என‌வே சாமானிய‌ ம‌க்க‌ளை, வ‌லிமை மிக்க‌ காம‌க் கொடூர‌ ப‌ண்ணையார்க‌ளிட‌மிருந்து காக்க‌வே இராவ‌ணத்த‌ன‌த்தை, இராவ‌ண‌ன்க‌ளை வ‌ன்மையாக‌ க‌ண்டிக்கிறோம், முழு ம‌ன‌துட‌ன் எதிர்க்கிறோம்.

Advertisements

24 Responses to "இராவ‌ண‌ன்"

நண்பர் திருச்சிக்காரரே,
எந்த அடிப்படையில் இராவணன் மேல் இத்தனை குற்றச்சாட்டுக்கள்? சீதையை அவன் கவர்ந்து சென்றது உண்மைதான். ஆனால் அவன் எப்போது பல பெண்களின் வாழ்க்கையை கெடுத்தவன் ஆனான்.
இதைத்தவிர, அவனை எப்படி சிங்களன் என்று சொல்லுகிறீர்கள்?
உங்களிடம் இதற்க்கெல்லாம் வரலாற்று ஆதாரமோ இல்லை புராண ரீதியான ஆதாரமோ இருக்கிறதா?
அன்புடன்,
அசோக்

பெண்களின் விருப்ப‌த்திற்க்கு மாறாக‌ அவ‌ர‌கள் க‌த‌ற‌க் க‌த‌ற‌த் தூக்கி சென்று, த‌ன்னுடைய‌ உட‌ல் இச்சையைத் தீர்த்து வைக்குமாறு வற்புறுத்திய‌ காம‌க் கொடூர‌ன் இராவ‌ண‌னுக்கு, அன்புக்குரிய‌ அசோக்ஜியார் இவ்வ‌ள‌வு ப‌ரித‌ல் காட்டுவ‌து விய‌ப்பை அளிப்ப‌தாக‌ உள்ள‌து. சீதையைக் க‌வ‌ரும் முன்னேயே இராவ‌ண‌ன் பல‌ பெண்களை ப‌ல‌வ‌ந்த‌மாக‌ க‌வ‌ர்ந்து சென்று, அவ‌ர்க‌ளை அத‌ட்டி மிர‌ட்டி த‌ன்னுடைய‌ ஆசைக்கு அடி ப‌ணிய‌ வைத்த‌தாக‌ ப‌ல‌ நூல்க‌ளிலும் தெளிவாக‌ எழுத‌ப் ப‌ட்டுள்ள‌து.

//இதைத்தவிர, அவனை எப்படி சிங்களன் என்று சொல்லுகிறீர்கள்?//

சிங்க‌ள‌ நாட்டை ஆண்ட‌ இராவ‌ண‌னை சிங்க‌ப்பூர்க்கார‌ன் என்றா சொல்ல‌ முடியும்?
இராவ‌ண‌ன் சிங்க‌ள‌ நாட்டை ஆண்ட‌ சிங்க‌ள‌னாக‌வே இருந்திருக்கிறான். ப‌ண்டைய‌ த‌மிழ‌ர்க‌ள் பிற‌ன் ம‌னை நோக்காப் பெருந்தகையாள‌ராக‌வே வாழ்ந்து இருக்கின்ற‌ன‌ர். த‌மிழ் நாட்டிற்க்கு அண்டைய‌ ப‌குதியில் வாழ்ந்த‌ சிங்க‌ள‌ர் காட்டு மிராண்டித் த‌ன‌ம் உடைய‌வ‌ராக‌, பெண்களை க‌ற்ப்ப‌ழித்து ம‌கிழும் க‌ய‌வ‌ர்க‌ளாக‌வே இருந்திருக்கின்ற‌ன‌ர்.

//உங்களிடம் இதற்க்கெல்லாம் வரலாற்று ஆதாரமோ இல்லை புராண ரீதியான ஆதாரமோ இருக்கிறதா?// வ‌ர‌லாறு என்ப‌தே அந்த‌ந்த‌ கால‌ க‌ட்ட‌ங்க‌ளில் எழுத‌ப் ப‌டும் நூல்க‌ளில் இருந்தும், அக‌ழ்வாராய்ச்சியில் கிடைக்கும் பொருள்க‌ளில் இருந்து வூகிக்க‌ப்ப‌டுவ‌த‌ன் மூல‌மும்தான் எழுத‌ப் ப‌ட்டுள்ள‌து. அந்த‌ வ‌கையிலேதான் ஆதார‌ம் உள்ள‌தாக‌ க‌ருத‌ இய‌லும்.

மொத்தத்தில் ராவணன் காஞ்சி குருக்கள் போலவும் சங்கராச்சாரியார் போலவும் இருந்திருக்கிறான்.

சகோதரர் சங்கர் அவர்களே,

பெண்களை பலவந்தப்படுத்தி, தங்கள் ஆசையை தீர்த்துக் கொள்ள முனைபவர்கள் எல்லோரும் இராவணத் தனம் உடையவர்களாகவே கருத முடியும்.

ஒரு அறிங்கர் உரையாற்றும் போது, “நம்மில் பெரும்பாலானவர் இராவணத் தன்மை உடையவர்களாக இருக்கிறோம், ஆனால் இராவணன் அளவுக்கு வலிமை இல்லை” என்று குறிப்பிட்டார்.

காமக் கொடூரர்கள் எந்த அளவுக்கு வலிமை உடையவர்களாக இருக்கிறார்களோ அந்த அளவுக்கு அப்பாவி பொது மக்களுக்கு ஆபத்து. பெண்களுக்கு மட்டும் அல்ல. ஆண்களுக்கும் ஆபத்து.

அரசியல் செல்வாக்கு, மத செல்வாக்கு, சாதி செல்வாக்கு, பண செல்வாக்கு உடையவன்- சாதாரண மனிதன் வீட்டு பெண்களை தூக்கி சென்றால்- அந்த சாதாரண மனிதனால் அந்த செல்வாக்குள்ள நபருக்கு எதிராக செயல் பட்டு தன் வீட்டுப் பெண்களை காத்துக் கொள்ள முடியுமா?

ஒரு செல்வாக்கும் இல்லாத காஞ்சி குருக்கள் தேவநாதனே இவ்வளவு ஆட்டம் போட்டு விட்டான். அப்படியானால் செல்வாக்கு உடையவர் கையில் சாதாரண மனிதன் வீட்டுப் பெண்கள் சிக்கினால் என்ன ஆகும்? இது நமது எல்லோருக்குமான பிரச்சினை. இராவணத் தனத்துக்கு எதிராக மனப் பூர்வமான பிரச்சாரம் செய்தால் அது நம்மைப் போன்றவர்களுக்குத்தான் நல்லது.

நம்ம எல்லோரின் குடும்பமும் பிரச்சினை இல்லாமல் இயல்பு வாழ்க்கை வாழ, இராவணத் தனத்தை எதிர்த்துப் போரிடுவது அவசியம்.

சகோதரர் சங்கர் அவர்களே,

நீங்கள் “சங்கராச்சாரியார்” என்று எழுதி இருக்கிறீர்கள்.

இந்திய வரலாற்றை படித்துப் பார்த்தால் அதில் ஒரே ஒரு சங்கராச்சாரியாரை மட்டுமே குறிப்பிட்டு உள்ளனர். கி.பி. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த அவர் சங்கராச்சாரியார் என்றும், ஆதி சங்கரர் என்றும் அழைக்கப் பட்டு உள்ளார். அவர் மீது புகார் எதுவும் இல்லை.

இப்போது சிலர் பில்லியன் கணக்கில் சொத்துக்களை சேர்த்துக் கொண்டு, அரசியல செல்வாக்கு , மத செல்வாக்கு, ஊடக செல்வாக்கு ஆகியவற்றின் துணையுடன், தங்களை பலரும் சங்கராச்சாரியார் என்றும் அழைக்கும் படி செய்து, ஆதி சங்கரரின் புகழிலே மஞ்சக் குளிக்கின்றனர்.

ஒவ்வொருவருக்கும் ஒரு பெயர் இருக்கிறது, அந்தப் பெயரை வைத்து அழைப்பதுதான் சிறந்தது.

அவர்கள் ஓவர் பில்டப் செய்து கொள்ள, நாமே உதவியாக இருக்க கூடாது.

நீங்கள் சொல்வது சரிதான்.சங்கரசாரியனோ யாரோ நாம் பேசி அவனை பில்டப் கொடுக்கவில்லை.சாதியின் பெயரால் அவனை கும்பிடுவதும் அவன் வரும்போது தீப ஆராதனை காட்டுவதும் ,பெண்கள் ,படித்த பெரிய பதவிகளில் இருக்கும் பெண்கள் கூட பக்தி என்கிற பெயரில் அவன் ஆசி பெற செல்வதும் இந்த நிகழ்வுகள் தான் அவனை தூக்கி நிறுத்துகிறது.

சகோதரர் சங்கர் அவர்களே,

//சாதியின் பெயரால் அவனை கும்பிடுவதும் அவன் வரும்போது தீப ஆராதனை காட்டுவதும் ,பெண்கள் ,படித்த பெரிய பதவிகளில் இருக்கும் பெண்கள் கூட பக்தி என்கிற பெயரில் அவன் ஆசி பெற செல்வதும் இந்த நிகழ்வுகள் தான் அவனை தூக்கி நிறுத்துகிறது//

அத‌ற்க்குதான் ச‌ரியான‌ ஆன்மீக‌த்தை மாற்றாக‌ முன் வைக்க‌ வேண்டும். 600 கோடிப் பொன்னை துற‌ந்து சென்ற பட்டின‌த்தார், ஏழ்மை நிலையிலும் ம‌ன்ன‌ன் அளித்த‌ செல்வ‌த்தை வாங்க‌ ம‌றுத்து ‘நிதி சால‌ சுக‌மா’ என்று பாடிய‌ தியாக‌ராஜ‌‌ர், ப‌க்தியின் உச்ச‌த்துக்கு சென்ற‌ க‌ண்ண‌ப்ப‌ர், ந‌ந்த‌னார், மக்க‌ளின் துன்ப‌ங்க‌ளுக்கு விடிவு காண‌ முய‌ன்ற‌ க‌ருணை உள்ள‌ம் உடைய‌ புத்த‌ர் ஆகிய‌வ‌ர்க‌ளின் உண்மை ஆன்மீக‌த்தை ம‌க்க‌ளின் முன் நிறுத்த‌ வேண்டும்.

நண்பரே,
இராவணன் மீது பரிதல் காட்டினால், அவன் நல்லவன் ஆவான் என்றால், அவன் மீது பரிதல் காட்டினால் தவறில்லை. மேலும் உண்மையை நாம், பச்சாதாபம் இல்லாமல் நோக்க வேண்டும். நானறிந்த வரையில், இராவணன், சீதையை தன் தங்கை சூர்ப்பனகையின் நிமித்தம், கடத்தி இருக்கிறான். மேலும், அவன் சைவ நெறியில் வளர்ந்த ஒரு சிறந்த சிவபக்தன். பல நல்ல குணநலன்கள் நிறைதவன் என்றுதான் புராணங்கள் கூறுகிறது.
நீங்கள் ஆதாரமில்லாமல் இப்படி ராவணனை குற்றப்படுத்தி உங்கள் ராமபக்தியை காட்ட தேவையில்லை.
மேலும் இராவணன் தமிழனே என்றுதான் புராணங்கள் கூறுகிறது. சிங்களனோ, சிங்கபூர்காரரோ அல்ல.
//சிங்க‌ள‌ நாட்டை ஆண்ட‌ இராவ‌ண‌னை சிங்க‌ப்பூர்க்கார‌ன் என்றா சொல்ல‌ முடியும்//
தமிழ்நாட்டை தமிழனேவா ஆட்சிசெய்தான்? இலங்கை, ஆதியில் இருந்தே சிங்கள நாடா என்ன?
//ப‌ண்டைய‌ த‌மிழ‌ர்க‌ள் பிற‌ன் ம‌னை நோக்காப் பெருந்தகையாள‌ராக‌வே வாழ்ந்து இருக்கின்ற‌ன‌ர்//
இப்படி நீங்கள் அனைத்து பண்டைய தமிழர்களுக்கும் உத்திரவாதம் தர முடியுமா? ஆதாரம் கேட்டால், என்னென்னமோ சொல்கிறீர்களே. ஆதாரம் இல்லாவிட்டாலும், நக்கலுக்கு ஒன்றும் குறைவில்லை.
நன்றி,
அசோக்

Dear Brother Ashokji,

My clarifications for your latest comments are attched as an addendum to the article itself.

Dear Brother Thiruchikkaaran,
I was not trying to say that Ravana is a good man. Ofcourse he is a evil element. But what I am trying to say is, you are exagerating his evilness.
I am aware that he is neither a tamilian nor a Sinhala, but a fiction. But, as per “Ravana Kaviyam” written by Pulavar Kuzhandhai, he is a tamilian.
And regarding showing Grace to Ravana, if he is repenting (hope you understand what is repenting), there is nothing wrong. It is not necessary to punish someone who is ready to repent. But ofcourse Ravana didn’t repent and got his judgement.
And thank you so much for showing ur color. 😉

Thanks and Love,
Ashok

நண்பர் Ashok kumar Ganesan அவர்களுக்கு வாழ்த்துக்கள்;

இராமாயணமே ஒரு கற்பனை நன்னெறி காவியம்;அதன் கதாநாயகனை தெய்வமாக்கியது முன்னோர்களின் அறியாமை;

ஆந்திராவில் என்டிஆர் அதிகமாக கிருஷ்ண வேடமிட்டு நடித்ததால் ஏழை படிப்பறிவில்லாத மக்கள் அவரை தெயவமாகவே பாவித்து ஆட்சிபீடத்திலேயே அமர்த்தினர்;இது அண்மைக்கால வரலாறு.

அன்புக்குரிய சகோதரர் அசோக்ஜி அவர்களே,

இராமாயணம் ஒரு கற்பனை நிகழ்வாக இருக்க சாத்தியங்கள் உள்ளன.

அதே நேரம் இராமாயணம் ஒரு வரலாற்று நிகழ்வாக இருக்க அதை விட அதிகமான சாத்தியங்கள் உள்ளன. வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையிலே, அறிவியல் அடிப்படையிலே இராமாயணம் உண்மை நிகழ்வாக இருந்திருக்க வலுவான சாத்தியங்கள் உள்ளன.

வரலாறு என்பதே அந்தந்த கால கட்டங்களில் எழுதப் பட்ட நூல்களையும், அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்த பொருட்களை வைத்து யூகிப்பதன் மூலமும் தான் உருவாக்கப் படுகிறது.

உலகின் மிகப் பண்டைய சமுதாயங்களில் இந்திய சமுதாயமும் ஒன்று. அது மிகப் பழமையான சமுதாயமாக கருதப் படுகிறது. இராமாயணத்துக்கு நூல் ஆதாரமாக இராமயணக் கால கட்டத்திலேயே எழுதப் பட்ட வால்மீகியின் இராமாயணம் உள்ளது. அதில் குறிப்பிட நிகழ்ச்சி போல கடலைக் கடக்க அறிவியல் முறைப் படி பாலம் அமைத்து சென்று இருப்பதாக குறிப்பிடப் பட்ட பாலம் உள்ளது. இராமாயண நிகழ்வுகள் பற்றி விரிவாக எழுதுவோம்.

இப்படி அறிவியல் பூர்வமாக சான்றுடன் அமைந்த பழமையான சமுதாயத்தின் வரலாற்று நிகழ்வை, சற்றும் சிந்திக்காமல், உண்மையாக இருக்க வாய்ப்பு இருக்கிறதா என்று ஆராயாமல், மதக் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவசரம் அவசரமாக கற்பனை என்று கட்டப் பஞ்சாயத்து செய்கிறீர்கள்.

அதே நேரம் யூதர்களுக்கு வரலாற்று ஆதாரம் எதுவும் இல்லை – உலகின் பண்டைய நாகரீகங்களில், பண்டைய வரலாற்றில் யூதர்களின் நாகரீகம், சமுதாயம் பற்றிக் குறிப்பிடப் படவில்லை.

அறிவியலுக்கு புறம்பான வகையிலே, கடல் இரண்டாகப் பிளந்து நீர் இரண்டு பக்கமும் சுவர் போல நிற்க நடுவிலே பீடு நடை போட்டு சென்றார்கள் என்று கூறப் படுவதை, அப்படியே கை கட்டி , வாய் பொத்தி கேட்டுக் கொள்ள வேண்டும் என்கிறீர்கள் (அறிவியல் அடிப்படையில் பாலம் அமைத்து கடலைக் கடந்தால் அது கட்டுக் கதை என்று உடனே சொல்ல வேண்டும் ).

ஆனாலும் நாங்கள் உங்களைப் போல கட்டப் பஞ்சாயத்து செய்யவில்லை, ஏனெனில் நாங்கள் பகுத்தறிவின் அடிப்படையில், மதக் காழ்ப்புணர்ச்சி இல்லாமல், ஆக்க பூர்வமான நோக்கங்களுடன் செயல படுகிறோம்.

யூதர்களின் வரலாறு, மதம் பற்றி, அதில் எவ்வளவு உண்மை இருக்கிறது, எவ்வளவு நன்மை இருக்கிறது என்று ஆராய்வோம்.

என்னுடைய நிறம் தெரிந்து விட்டதாக எழுதி இருக்கிறீர்கள். அவசரப் பட வேண்டாம். இயேசு கிறிஸ்து உட்பட உலகில் உள்ள எல்லா அறிஞர்களும் கூறிய நல்ல கருத்துக்களை விளக்கி கட்டுரைகள் இங்கே வரும். கருத்துக்களின் தன்மை அடிப்படையில் அவை மதிக்கப் படும், ஆராயப் படும் விதங்களைப் பாருங்கள்.

உலகில் உள்ள மதங்களுக்கிடையேயான பிரிவினைகள் மறைந்து விடுமோ, மதக் காழ்ப்புணர்ச்சி மறைந்து விடுமோ, உண்மையை தேடி அறியும் பாதைக்கு மக்கள் சென்று விடுவார்களோ என்ற அச்சம் அப்போது உங்களுக்கு வருமானால்,

அப்போது என்னுடைய நிறத்தை முழுதும் காட்டியதாக வருத்தப் பட்டு எழுதலாம். அவையும் நிச்சயம் பிரசுரிக்கப் படும்.

நண்பர் திருச்சிக்காரன் அவர்களுக்கு, நீங்கள் மெய்யாகவே சமதர்ம சமுதாயம் அமைய விரும்புவது உண்மையானால் “நீங்கள்” “நாங்கள்” “உங்கள்” “எங்கள்” போன்ற வார்த்தைகளைத் தவிர்க்கப் பாருங்கள்; நானே அப்படி எழுதினாலும் அது தவறுதான்;

நாமெல்லாருமே ஒரு சுரங்கத்துக்குள் சென்று ஏதோ ஒன்றைத் தேடிக் கொண்டிருக்கிறோம்;

சிலர் பொன்னையும் வைரத்தையும் சிலர் வெறும் நிலக்கரியையும் சிலர் தண்ணீரையும் அடைந்திருக்கலாம்;

இப்படி ஒவ்வொருவருடைய அனுபவமும் வெவ்வேறாக இருக்கலாம்;
ஆனால் ஒவ்வொன்றுமே விசேஷமானதே.

ச‌கோத‌ர‌ர் chillsam அவ‌ர்க‌ளே,

//நண்பர் திருச்சிக்காரன் அவர்களுக்கு, நீங்கள் மெய்யாகவே சமதர்ம சமுதாயம் அமைய விரும்புவது உண்மையானால் “நீங்கள்” “நாங்கள்” “உங்கள்” “எங்கள்” போன்ற வார்த்தைகளைத் தவிர்க்கப் பாருங்கள்; நானே அப்படி எழுதினாலும் அது தவறுதான்;

நாமெல்லாருமே ஒரு சுரங்கத்துக்குள் சென்று ஏதோ ஒன்றைத் தேடிக் கொண்டிருக்கிறோம்;//

ந‌ன்றி, உங்க‌ளைப் பாராட்டுகிறேன்.

இது ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம். நாம் எல்லோரும் ஒரே ஜ‌ன‌ம் தான் என்று முன்பே எழுதி இருக்கிறேன்.

நான் “நாங்க‌ள்” என்று குறிப்பிட்ட‌து ப‌குத்த‌றிவின் அடைப்ப‌டையிலே சிந்தித்து, ந‌ல்ல‌ க‌ருத்துக்க‌ள் எங்கிருந்தாலும் வ‌ர‌வேற்று, நாகரீக‌ ச‌முதாய‌த்தின் குடிம‌க‌னாக‌, எல்லா ம‌க்களையும் இணைக்கும் வ‌கையிலே, அன்புக் க‌ருத்துக்க‌ளைப் ப‌ர‌ப்பி, வெறுப்பு க‌ருத்துக்க‌ளை வில‌க்கும் சிந்த‌னை உடைய‌வ‌ர்க‌ளைக் குறிக்க‌வே நாங்க‌ள் என்று எழுதினேன்.

யாரோ சில‌ர் தொகுத்து வ‌ழ‌ங்கிய‌ க‌ருத்துக்க‌ளை அப்படியே ஒத்துக் கொண்டு, அதை ந‌ம்பியே ஆக‌ வேண்டும், நிலை நிறுத்தியே ஆக‌ வேண்டும் என்கிற‌ ஒரு நிலைப் பாட்டிலே சிக்கிக் கொண்டு, அதற்காக அறிந்தோ அறியாம‌லோ, புரிந்தோ புரியாம‌லோ வெறுப்பு க‌ருத்துக்க‌ளை ப‌ர‌ப்பும் நிலைக்கு, ம‌க்க‌ளைப் பிரிக்கும் நிலைக்கு த‌ள்ள‌ப் ப‌ட்டு விட்ட‌வ‌ர்க‌ளையும் நாம் வெறுக்க‌வில்லை.

அவ‌ர்க‌ளுக்கு அன்பின் வ‌ழியிலே, அறிவின் வ‌ழியிலே விளக்க‌ம் அளித்து, அவ‌ர்க‌ளையும் இணைத்து, எல்லோரும் சேர்ந்து நாக‌ரீக‌ ச‌ம‌த்துவ‌ ச‌முதாய‌த்தை உருவாக்கும் குறிக்கோளில் நேர்மையாக‌ இருக்கிறோம்.

அப்படியானாலும் கூட உங்களை எதிர்ப்பவர்கள் அறிவில்லாதவர்கள் என்றாகிவிடுமே;

எனது வேதம் அறிவைக் குறித்த கொள்கையாக முதலாவதாகக் குறிப்பிடுவதே,தெய்வத்தைக் குறித்த அறிவைத் தான்..!

“ஆண்டவருக்கு பயப்படுவதே ஞானம்,பொல்லாப்பைவிட்டு விலகுவதே புத்தி” என்று இன்றைக்கு சுமார் 5000 வருடமுன்பு பெரும் செலவந்தராக வாழ்ந்த‌ பிரபலமான புனிதரான யோபு என்பவர் கூறுகிறார்;

இதற்கு மேல் நான் என்ன சொல்ல..?

ச‌கோத‌ர‌ர் chillsam அவ‌ர்க‌ளே,

//அப்படியானாலும் கூட உங்களை எதிர்ப்பவர்கள் //

என்னை யாரும் எதிர்க்க வேண்டிய அவசியம் என்ன? அமைதியாக வழிபாடு செய்வதை நான் குறை கூறவோ, தடுக்கவோ இல்லையே. பல்வேறு கட்டளைகளைப் போட்டு, எல்லோரும் வணங்கித்தான் ஆக வேண்டும், இப்படி தான் வணங்க வேண்டும், பிறர் வணங்குவது எல்லாம் தவறு, அவர்கள் வணங்கும் முறைகளைக் கண்டிப்போம், அவர்கள் வணங்கும் தெய்வங்களை திட்டுவோம் என்று ஆர்ப்பாட்டம் செய்து, வெறுப்பு கருத்துக்களை பரப்பி, ரத்த ஆறு ஓட விட வேண்டாம் என்றுதானே சொல்கிறேன். அமைதியான முறையிலே வணங்குங்கள், நல்லிணக்கத்தின் அடிப்படையிலே , நாகரீக சமூகத்தவன் என்ற முறையிலே நானும் வழி பாட்டில் கலந்து கொள்கிறேன் என்றும் சொல்லி இருக்கிறேன். யாரும் கூப்பிடும் முன்னரே அவர்களின் சுமைகளை தானே இரண்டு மைல் தூரம் சுமந்து வர தயாராக இருப்பது போன்ற நிலைப்பாடுதான் இந்த நிலைப்பாடு. என்னை எந்த அடிப்படையிலே எதிர்க்க வேண்டும்?

//உங்களை எதிர்ப்பவர்கள் அறிவில்லாதவர்கள் என்றாகிவிடுமே;//

நான் யார் அறிவையும் குறை சொல்லவில்லை. நான் சாதாரணமானவன், தாழ்மையானவன், அறிவு என்பது எல்லோருக்கும் இருக்கிறது, என்னை விட அதிகமாகவே இருப்பதாக கருதலாம்

எல்லோருமே அறிவுள்ளவர்கள்தான், தயவு செய்து இதயத்திலே அன்புக்கு இடம் கொடுங்கள் அறிவையும் உபயோகப் படுத்துங்கள் என்றுதான் கேட்டுக் கொள்கிறேன்.

//“ஆண்டவருக்கு பயப்படுவதே ஞானம்,பொல்லாப்பைவிட்டு விலகுவதே புத்தி” என்று இன்றைக்கு சுமார் 5000 வருடமுன்பு பெரும் செலவந்தராக வாழ்ந்த‌ பிரபலமான புனிதரான யோபு என்பவர் கூறுகிறார்;//

செலவந்தரும் புனிதருமான யோபு குறிப்பிடுவதைப் போல நீங்கள் கடவுளுக்கு பயந்தால் அதை யாரும் குறை கூறவில்லையே. ஆனால் நான், கடவுள் இருக்கிறாரோ , இல்லையோ என்பது ஒருபுறம் இருக்கட்டும், பயத்தின் அடிப்படையிலே இல்லாமல் அன்பின் அடிப்படையிலே, இந்த உலகத்தின் எல்லா ஜீவ ராசிகளையும் சிநேகத்துடன் நோக்கி, யாரிடமும் வெறுப்புக் கட்டாமல், அன்பு செய்து வாழ்ந்தால் அதில் என்ன தவறு? கடவுளே, கடவுளே என்று கூறுவதை விட நல்ல கற்பிதங்களை கைக்கொள்ளுவதுதான் முக்கியம் என்று கூறப்பட்டதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

//பொல்லாப்பைவிட்டு விலகுவதே புத்தி//

இப்போது பொல்லாப்புக்கு போவது யார்? யாரவது புனிதரான யோபுவையோ, இயேசு கிறிஸ்துவையோ இகழ்கிரார்களா? கோவிலுக்கு செல்பவர்கள் தான் காக்கப் பட வேண்டும் என்று அமைதியாக வணங்கி விட்டுப் போகிறார்கள். அவர்கள் பிற மார்க்கக் கடவுள்களை இகழ்வதில்லை. ஆனால் கோவிலில் அவர்கள் கடவுளாக வணங்குபவர்களை பேய்கள், பிசாசுகள் என்று திட்டி பொல்லாப்பு செய்து, வம்புக்கிழுப்பது யார்?

எதிர்ப்பது என்று கொள்வதைவிட நாகரீக- சமதர்ம- விஞ்ஞானக் கொள்கைகளுக்கு அதாவது திருச்சிக்காரனுடைய வழிகளுக்கு எதிர் கருத்துடையவர்கள் என்று கொள்ளவும்; அவர்களுக்கெல்லாம் பகுத்தறிவு கொள்கைகளைப் பரப்ப வந்த விடிவெள்ளியே நீங்கள் தான்…!

வணங்குவதல்ல,பிரச்சினை;இணங்குவதே..!

யாருக்கோ தீது பொல்லாப்பு செய்வதல்ல,பிரச்சினை;மனிதன் தனக்கே கேடு செய்துக் கொள்வதே..!

//யாருக்கோ தீது பொல்லாப்பு செய்வதல்ல,பிரச்சினை//

பிற‌ருக்கு தீங்கு செய்வ‌து பிர‌ச்சினை இல்லை என்கிறீர்க‌ள், இதை எப்ப‌டி ஒத்துக் கொள்ள‌ முடியும்?

பிற‌ருக்கு தீது பொல்லாப்பு செய்வது உங்க‌ளைப் பொருத்த‌வ‌ரையில் பிர‌ச்சினை இல்லை – ஆனால் ம‌க்க‌ள் ச‌முதாய‌த்துக்கு அது முக்கிய‌ பிர‌ச்சினை. எந்த‌ அளவுக்கு பிறருக்கு தீங்கு நினைக்காத‌ ம‌க்கள் அதிக‌ எண்ணிக்கையில் வாழ்கிறார்க‌ளோ, அந்த‌ அள‌வுக்கு அந்த‌ ச‌மூக‌ம் நாகரீக‌ ச‌முதாய‌மாக‌ இருக்கும்.

//யாருக்கோ தீது பொல்லாப்பு செய்வதல்ல,பிரச்சினை;மனிதன் தனக்கே கேடு செய்துக் கொள்வதே..!//
பிறருக்கு தீங்கு நினைக்காம‌ல் இருந்தால் போதும், அவ‌னுக்கும் தீங்கு வ‌ராது.

வெறுப்புண‌ர்ச்சியை தூண்டி, ம‌க்க‌ளிடையே மோத‌லை உருவாக்காம‌ல் அமைதியான‌ வாழ‌க்கை வாழ்ப‌வ‌ன் த‌ன‌க்கு தானே ந‌ல்ல‌து செய்து கொண்ட‌வ‌ன் ஆவான்.

பிற‌ரை வெறுக்காத‌வ‌ன், இக‌ழாத‌வ‌ன் த‌ன‌க்கு தானே ந‌ல்ல‌து செய்து கொண்ட‌வ‌ன் ஆவான்.

பிற‌ரை அன‌பு செய்ப‌வ‌ன் த‌ன‌க்கு தானே ந‌ல்ல‌து செய்து கொண்ட‌வ‌ன் ஆவான்.

த‌ன்னைப் போல‌ பிற‌ரையும் நேசிப்ப‌வ‌ன் த‌ன‌க்கு தானே ந‌ல்ல‌து செய்து கொண்ட‌வ‌ன் ஆவான்.

நீங்க‌ள் விடி வெள்ளி என்று அழைத்த‌ நகைச்சுவையை ர‌சிக்கிரேன்.

வாழ்த்துக்கள் சகோதரர் சில்சாம் அவர்களே,
நன்றாக சொன்னீர்கள். நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை.
நண்பர் திருசிக்காரரே,
நீங்கள் கடவுளையே கண்ணால் பார்த்தால்தான் நம்புவேன் என்கிறீர்கள். மற்றபடி கடவுள் ஒரு கான்செப்ட் என்கிறீர்கள். சரி, அந்த கான்செப்ட் படி, கடவுள் அனைத்து அதிகாரமும் உடையவர் அல்லவா… அவரும் இயற்பியல் விதிகளுக்கு கட்டுபட்டவரா? அப்பிடிப்பட்ட சக்தி வாய்ந்த கடவுள், மனித வாழ்க்கையில் இடை படும்போது, கடல் இரண்டாக பிளப்பது போன்ற அற்புதங்கள் நடக்கத்தான் செய்யும். இப்படி இயற்ப்பியல் விதிகளையும் மீறி இவை நடப்பதால்தான் இவற்றை அற்புதங்கள் என்கிறோம், தெய்வச்செயல் என்கிறோம்.
உங்கள் அறிவியல் கூறும் முறைப்படி இருப்பதால் அனைத்தும் உண்மை அல்ல. பல விஷயங்களில் இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள், எதிர்காலத்தில் தவறு என்றும் நிரூபிக்கப்படும். பல முந்தைய கண்டுபிடிப்புகள் இன்று நிராகரிக்கப்படுவதில்லையா…
அறிவியலால் அறியமுடியாதது பல உண்டு.

நன்றி,
அசோக்

நண்பர் அசோக் அவர்களுக்கு நன்றி;எனது தளத்துக்கும் வந்து செல்லலாமே..!

//யாருக்கோ தீது பொல்லாப்பு செய்வதல்ல,பிரச்சினை// chillsam

// பிற‌ருக்கு தீங்கு செய்வ‌து பிர‌ச்சினை இல்லை என்கிறீர்க‌ள், இதை எப்ப‌டி ஒத்துக் கொள்ள‌ முடியும்? //thiruchchikkaaran

இத்தனை குறுகிய பார்வை எழுத்தாளருக்கு இருத்தல் கூடாது;ஒரு சிறந்த வாசிப்பவரே எழுத்தாளராகிறார்;எனவே நான் சொல்ல வரும் கருத்தை உணர்ந்து அதற்கேற்ற கருத்தினை வெளிப்படுவதிலேயே தங்கள் திறமை தெரியவரும்;

தீவிரவாதமும் கொடூரங்களும் ஏற்கனவே சமுதாயத்திலிருக்கிறது; அதனை யாராலும் மறுக்கவோ நிறுத்தவோ இயலாது; ஆனால் ஒரு தனி மனிதன் தனக்குத் தான் கேடு செய்வதை நிறுத்தினாலே மற்றவருக்குக் கேடு செய்யாத உயர்நிலையினை அடைவான்;

//யாருக்கோ தீது பொல்லாப்பு செய்வதல்ல,பிரச்சினை;மனிதன் தனக்கே கேடு செய்துக் கொள்வதே..!//‍chillsam

// பிறருக்கு தீங்கு நினைக்காம‌ல் இருந்தால் போதும், அவ‌னுக்கும் தீங்கு வ‌ராது.//thiruchchikkaaran

எனது அன்புக்குரிய நண்பர் திருச்சிக்காரனை எதிர்த்து எழுதுவது எனக்குத் தொழிலல்ல; தங்களது “தனக்குத் தானே” தொடர் மிகவும் அருமை;ஆனாலும் என்னால் உண்மையினை மறைத்து வாழ முடியாது எனவே தொடருகிறேன்;

பெரியவர்கள் மிக எளிமையாகச் சொல்லுவார்கள்;
உலை வாயை மூடலாம்; ஊர் வாயை மூடமுடியாது;
எனது வேதமும் கூறுகிறது, “உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி” ஆம்,தன்னை உணர்ந்தவன் பிறருக்கு தீங்கிழைக்க மாட்டான்;

கீழ் வானில் உதிக்கும் சூரியன் உச்சிக்கு வரவர பிரகாசிப்பது போலவே இறைவனின் நீதி நியாயங்களுக்குத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவன் மற்றவருக்கு வெளிச்சமாவான்; இதுவும் வேதப் பிரமாணமே…!

1.ராவணன் ஒரு தமிழன்.
2.ராவணனின் பரம்பரையினர் இன்னும் இருக்கின்றார்கள்.
3.ராவணன் தன் கைப்பட தமிழை எழுதியுள்ளான்.
4.தமிழர்களின் முறைப்படி கவர்ந்து சென்று திருமணம் செய்வது வழக்கம்.
5.ராவணன் பிராமணன் இல்லை.
6.ராவண காவியத்தை படிக்கவும்.
7.ராவணன் தான் உண்மையாக சீதையை காதல் செய்தவன்.
8.ராவணன் சீதையை வன்புணர்ச்சி செய்யவில்லை.

http://sagotharan.wordpress.com/

Dear Brother Mr. Sakotharan,

Thanks for visiting our blog and registered your comments.

1.ராவணன் ஒரு தமிழன் – இராவணன் ஒரு தமிழன் இல்லை.

இராவணன் தமிழன் என்றால் அவனைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு கூட சங்க இலக்கியனக்களில் இல்லாதது ஏன்?

த‌மிழ்ப் பேர‌ர‌ச‌ர்க‌ளைப் ப‌ற்றி அவ‌ர‌வ‌ர்க‌ள் வாழ்ந்த‌ கால‌த்திலே எழுத‌ப் ப‌ட்ட‌ த‌மிழ் பாட‌ல்க‌ள் உள்ள‌ன‌.

க‌ரிகால‌னைப் ப‌ற்றி ப‌ட்டின‌ப்பாலையில் விரிவாக‌ கூற‌ப் ப‌ட்டுள்ள‌து. க‌லிங்க‌த்துப் ப‌ர‌ணியில் இராசேந்திர‌ சோழ‌னைப் ப‌ற்றி குறிப்பிட‌ப் ப‌ட்டுள்ள‌து.

தோல்வியுற்ற‌ அர‌ச‌ர்க‌ளைப் ப‌ற்றிக் கூட‌க் குறிப்பிட‌ப் ப‌ட்டுள்ள‌து. போரில் ச‌ண்டையிடும் போது எதிரி வீசிய‌ வேல், மார்பிலே பாய்ந்து முதுகு வ‌ழியாக‌ வெளியேறியும் ஒரு மன்ன‌ன் ம‌ர‌ண‌ம் அடையவில்லை. ஆனாலும், முதுகிலே ஏற்ப்பட்ட‌ புண்ணை இழிவாகக் க‌ருதி உண்ணா நோன்பிருந்து உயிர் துற‌ந்த‌ அந்த‌ ம‌ன்ன‌னைப் ப‌ற்றிக் குறிப்புக‌ள் உள்ளன‌.

இன்னொரு ம‌ன்ன‌ன் எதிரியால் பிடிக்க‌ப் ப‌ட்டு, சிறையில் அடைக்க‌ப் ப‌ட்ட‌தாக‌வும், தாக‌த்துக்கு நீர் கேட்ட‌ போது, சிறைக் காவ‌ல‌ன் இழிவாக‌ப் பேசிய‌தால் அவ‌ன் அளித்த‌ த‌ண்ணீரை ப‌ருகாம‌ல் உயிர் விட்ட‌ அர‌ச‌னைப் ப‌ற்றிக் குறிப்புக‌ள் உள்ள‌ன‌.

ஆனால் பெரும் வெற்றிக‌ளைக் குவித்து, பேர‌ர‌ச‌னாக‌ வாழ்ந்த‌ இராவ‌ண‌னிப் ப‌ற்றி எந்த‌ ஒரு சிறு குறிப்பும் எந்த‌ ப‌ண்டைய‌ த‌மிழ் இல‌க்கிய‌த்திலும் காணப் படவில்லையே? இராவ‌ண‌ன் வாழ்ந்த‌ கால‌த்தில் அவ‌னைப் ப‌ற்றி ஒரு த‌மிழ்ப் புல‌வ‌ரும் ஒரு பாட‌லும் எழுத‌வில்லை.

இராவ‌ண‌ன் த‌மிழ‌னாக இல்லாத‌ கார‌ண‌த்தால், அவ‌ன் எவ்வ‌ள‌வு வெற்றி பெற்ற‌ போதிலும் அவ‌னைப் பாடுவ‌தில் த‌மிழ்ப் புல‌வ‌ர்க‌ள் க‌வ‌ன‌ம் செலுத்த‌வில்லை என்ப‌தே உண்மை. என‌வே இராவ‌ண‌னுக்கும் த‌மிழ் ச‌முதாய‌த்துக்கும் யாதொரு தொட‌ர்பும் இருப்ப‌தாக‌ எந்த‌வொரு ஆத‌ராமும் இல்லை.

2.ராவணனின் பரம்பரையினர் இன்னும் இருக்கின்றார்கள். – யார் வேண்டுமானாலும் தன்னை இராவணன் பரம்பரை என்று சொல்லிக் கொள்ளலாம். இராவணன் என்ற பெயரை உடைய நண்பர்களுடன் நான் பள்ளியில் படித்து இருக்கிறேன்.

3.ராவணன் தன் கைப்பட தமிழை எழுதியுள்ளான்.
அந்த நூலின் பெயர் என்னவோ ? ஒரு தோட்டமும் சில பூக்களும் என்ற ஹைக்கூ கவிதை தொகுப்பா?

//4.தமிழர்களின் முறைப்படி கவர்ந்து சென்று திருமணம் செய்வது வழக்கம்.//

அடுத்தவன் மனைவியைக் கவர்வது தமிழரின் பண்பாடு இல்லை. பிறன் மனை நோக்கப் பெருந்தன்மையே தமிழர் பண்பாடு.

//5.ராவணன் பிராமணன் இல்லை.// இராவணனின் தந்தை பார்ப்பன முனிவர் என்றே சொல்லப் பட்டுள்ளது. தாயார் அரக்கர் குலம் என்று கூறப்பட்டுள்ளது. சிங்கள அரக்கர் குலமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

//6.ராவண காவியத்தை படிக்கவும்.// இராவணன் நல்லவனாக வாழ்ந்திருந்தால் அவனுக்கு நானே காவியம் பாடி இருப்பேன். அதிகார மமதையில் , ஆசை வெறியில் தவறான வழியில் வாழ்ந்து இருக்கிறான்.

//7.ராவணன் தான் உண்மையாக சீதையை காதல் செய்தவன்.//அது சரி அடுத்தவன் மனைவியைக் காதலிப்பதில் உண்மை இருந்தால் என்ன? பொய் இருந்தால் என்ன?

//8.ராவணன் சீதையை வன்புணர்ச்சி செய்யவில்லை.// ஆனாலும் சீதைக்கு உருவான கெட்ட பேர் அவள் வாழ்க்கையை நாசமாக்கி விட்டது. காம வெறி பிடித்த கயவர்களால் அப்பாவிப் பெண்களுக்கு எவ்வளவு கஷ்டம் வருகிறது என்பதை நாம் தெரிந்து கொள்கிறோம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: