Thiruchchikkaaran's Blog

காஞ்சிபுரம் அசிங்க அர்ச்சகர் நிலைக்கு காரணம்?

Posted on: December 21, 2009


காஞ்சிபுரம்  அர்ச்சகர் தேவநாதன் பற்றி அறிமுகம் தேவை இல்லை.

கோவிலிலேயே தகாத செயலை இவர் செய்து இருக்கிறார். பல பெண்களின் வாழ்க்கையைக் கெடுத்து, கோவில் என்ற அமைப்பை அசிங்கம் செய்து, ஒழுக்கம்,  நியாயம், பொது நியதி, பக்தி, மானம் இவற்றை எல்லாம் அசிங்கப் படுத்திய இவர் இந்த நிலைக்கு வரக் காரணம் என்ன?

இது ஒரு தனி நிகழ்வு அல்ல, முன்பு சபரிமலை பூசாரி ஒருவ‌ர் , நிரம்ப செல்வம் படைத்த பூசாரி- ஒரு பாலியல் சர்ச்சையில் சிக்கினார்.

எனவே நம்முடைய இந்தக் கட்டுரை ஆன்மீக துறையில் இருப்பவர்கள் இப்படி செக்ஸ் நிகழ்ச்சிகளில் சிக்குவது ஏன்,  என்பதாக இருக்கும்.      எடுத்த எடுப்பிலேயே இதற்க்கு நாம் காரணமாக கருதுவதை சொல்லி விடுகிறோம்.  நம்முடைய கருத்து என்ன வென்றால் இன்றைக்கு கோவில், ஆன்மிகம் சம்பந்தப்பட்ட துறையில் பொறுப்பில் இருக்கும் பல முக்கிய பூசாரிகள், அதிபதிகள், இவர்களுக்கு உண்மையான ஆன்மீகம் என்பது என்ன என்று புரிய வைக்கப் படவில்லை, உணர்த்தப் படவில்லை என்பதே நம்முடைய கருத்து.

ச‌ரியான‌ ஆன்மீக‌த்தை அறிந்த‌வ‌ன், ச‌ரியாக‌ ஆன்மீக‌த்தை ப‌யிற்ச்சி செய்த‌வ‌ன் அவ்வ‌ளவு எளிதில் க‌ட்டுப்பாட்டை விட‌ மாட்டான். ஒருவ‌ன் எந்த‌ அளவுக்கு த‌ன் ம‌ன‌தில் ஆசை வ‌ராம‌ல் த‌டுக்கிரானோ அந்த‌ அள்வுக்கு அவ‌னுக்கு ஆன்மீக‌ முன்னேற்ற‌ம் இருப்ப‌தாக‌ க‌ருத‌லாம்.

ஆசையை அட‌க்குவ‌து எளிதா? எளிதுதான் –  உண்மையை புரிந்து கொண்டால்!

இந்த‌ உல‌க‌ம் இன்ப‌ ம‌ய‌மான‌து என்று எண்ணுப‌வ‌ர் ஆசையின் பின்னால் செல்வ‌ர். இய‌ற்கையான‌து பல‌ இன்ப‌ங்களை ந‌மக்கு காட்டுகிற‌து.

துண்டிலில் நெளியும் புழுவை உண்டு ம‌கிழ‌ ஆசைப் ப‌டும் மீனைப் போல‌ நாமும் அந்த‌ இன்ப‌ங்க‌ளை சுவைக்கிறோம். ஆனால் புழுவைக் க‌டிக்கும் போதே, துண்டில் முள் மீனீன் வாயில் சிக்குகிற‌து, துன்ப‌ம் ஆர‌ம்ப‌மாகிற‌து.                   அதைப் போல‌ இந்த‌ உல‌கில் நாம் ம‌கிழ்ச்சியாக‌ வாழ‌ முடியும் என‌ க‌ற்ப‌னை செய்து கொண்டு, இந்த‌ உல‌க‌ம் கொடுக்கும் இன்ப‌ங்களை அனுப‌விக்கிரோம்.  நோய், கிழட்டுத்த‌ன்மை ஆகிய‌வையும் இன்னும் ப‌ல‌வாகிய‌ ஆப்புக‌ளையும் இந்த‌ இய‌ற்க்கை ந‌ம‌க்கு அளித்து, க‌டைசியில் ம‌ர‌ண‌ம் என்னும் ம‌ஹா ஆப்பையும் அளிக்கிர‌து.

எங்கே வ‌ந்தோம் எங்கே போகிரோம் என்று தெரியாம‌லே ம‌ய‌க்க‌த்திலே சில‌ இன‌ப‌ங்களை அனுப‌வித்து, ப‌ல‌ ஆப்புக‌ளையும் வாங்கி,  இறுதியில்  சாகிறான் அப்பாவி ம‌னித‌ன்.

இதை எல்லாம் ஓர‌ளவுக்காவ‌து புரித‌ல் செய்து, துய‌ர‌ங்களில் இருந்து விடை பெற விரும்பிதான் ஆன்மீக‌த்தில் ஈடுப‌டுகிறான் ம‌னித‌ன். இது போன்ற‌ அடிப்ப‌டைகளைக் க‌ற்றுக் கொள்ளாம‌ல், வெறும‌னே ம‌ந்திர‌ங்க‌ளை முணுமுணுப்ப‌தை ம‌ற்றும் க‌ற்றுக் கொண்டால், ஆசைதான் துன்ப‌த்திற்க்கு கார‌ண‌ம் என்ப‌தையோ,ஆசையால் உந்த‌ப் ப‌ட்டு ஒருவ‌ன் பாவ‌த்திலே ஈடுப‌டுகிறான் என்ப‌தையும் ம‌றந்து விளக்கிலே விழும் விட்டில் பூச்சி நிலையை அடைந்து விடுவார்க‌ள். 

ச‌ரியான‌ ஆன்மீக‌த்தை எல்லா ம‌க்க‌ளுக்கும் வ‌ழ‌ங்குவ‌தே, இது போன்ற‌ அசிங்க‌ அர்ச்ச‌க‌ர்க‌ள் உருவாகாம‌ல் த‌டுக்கும்.

Advertisements

45 Responses to "காஞ்சிபுரம் அசிங்க அர்ச்சகர் நிலைக்கு காரணம்?"

//உண்மையை புரிந்து கொண்டால்!// உண்மை என்பது எது என்பது பற்றியும் புரிந்து கொள்வது எப்படி என்பது பற்றியும் தனிப்பதிவிட்டு விளக்கினால் நன்றாக இருக்கும்.

இந்து மதத்தில் தான் இந்த கொடுமைகள். இந்த மாதிரி பெண் பொறுக்கிகளை பற்றி பேசும் பொது பொதுவாக ஐயப்பன் கோவில் பூசாரி, முனியாண்டி பூசாரி … என்று பேசுவது சரியல்ல. இவரு பூசாரியல்ல காஞ்சி கோவிலின் குருக்கள் .குருக்கள் என்கிற வார்த்தையே இந்த தேவநாத குருக்கள் பொறுக்கித்தனத்தில் பயன்படுத்துவ தில்லை எவரும். இதே ஒரு இமாம் செய்திருந்தால் அந்த மக்களே அவனை விரட்டி இருப்பார்கள். இங்கு என்ன வென்றால் பிராமண சங்கம் வழக்கு நடத்த உதவுகிறதாம்.

சகோதரர் சங்கர் அவர்களே,

எல்லா மதங்களிலும், மத தலைவர்கள் மீது இப்படி செக்ஸ் புகார்கள் உள்ளன. ஆனால் இந்த கட்டுரை காஞ்சி அர்ச்சகர் பற்றியது என்பதால், நான் பிற மதங்கள் பற்றி இங்கே விலாவாரியாக எழுதவில்லை.

சபரிமலை பூசாரி என்று நாம் எழுதியது செக்ஸ் சர்ச்சையில் அடிபட்ட கண்டரரு மோகனரருவை வைத்துதான்.

எல்லா மதத்திலும் இது நடக்கிறது இல்லை என்று சொல்லவில்லை. தொழுகை நடத்தும் இடங்களிலோ, சர்ச்சில் ஏசுநாதரின் பக்கத்திலோ வைத்து நடந்ததில்லை. அப்படி நடந்திருந்தால் அவனை அங்கேயே வெட்டி இருப்பார்கள் அந்த சமுதாய மக்களே. ஆனால் இங்கு என்ன நடந்தது. கோவில் கற்ப கிரகத்துக்கு உள்ளேயே இவன் ,அதுவும் வீடியோ வேறு எடுத்திருக்கிறான். பிராமண சங்கம் உதவி செய்கிறது அவன் வழக்கு நடத்த.அதைதான் நான் சுட்டிக்காட்டினேன்.

/ /ஆசையால் உந்த‌ப் ப‌ட்டு ஒருவ‌ன் பாவ‌த்திலே ஈடுப‌டுகிறான் //

கோடி பெறுமான பொன்னான வரிகள்..!

ஆன்மிகத்தில் ஈடுபடுவது என்றால் என்ன?

அது புரியாததே பிரச்சினை;
சிலைகளே காம இச்சைகளைத் தூண்டுவதாக உள்ளது;
போதாக்குறைக்கு அ(வாள்)வர்களது உணவுப் பழக்கம்;
பூசாரியுடன் இருந்தால் பெருமாளுடன் இருப்பது போன்றது எனும் மூடநம்பிக்கை; இவையெல்லாம் சேர்ந்தே தவறு நடக்கிறது;

வேதகாலத்தில்- தேவலோகத்திலேயே தவறுகள் நடந்து அவாள் அவதாரமாக வந்து அருள் பாலித்து- அருள் பாலிக்கப்பட்டு மேலே சென்றதாக புராணங்கள் கூறுகிறதே;

அந்த தேவலோகத்திலேயே தவறு நடக்கமுடியுமானால் அந்த தேவர்களை பூஜிக்கும் கோவில்களில் தவறு நடக்கக்கூடாதா?

//சர்ச்சில் ஏசுநாதரின் பக்கத்திலோ வைத்து நடந்ததில்லை//

ஏன் நடக்கவில்லை சன்கர். கேரள கன்னியாஸ்திரி ஜெஸ்மியின் புத்தகம் பற்றி நெட்டில் தேடி படித்துப் பாருங்கள். பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகளின் ஓரினச்சேர்க்கை மற்றும் பாதிரியார்கள் க்ன்னியாஸ்திரிகளுடன் கற்பழிப்பு மற்றும் குடும்பம் நடத்துதல் என்று நிறைய இருக்கிறது. அவர்கள் இதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறார்கள். அதை ஒப்பிடும் போது காஞ்சி சம்பவம் ஒரு எக்ஸ்ட்ரீமிஸ்டின் செயல் தான் என்பதை புரிந்து கொள்வீர்கள். இந்து பூசாரிகளைப் பொறுத்தவரை எல்லோரும் அப்படி இருப்பதில்லை என்பது தெளிவு. இருப்பினும் இது போன்ற ஒன்றிரண்டு ஒழுங்கீனங்களும் களையப்பட வேண்டும்.

100% சுத்தமான சமூகம் என்று எதுவும் கிடையாது. ஆனால் இந்து மதம் பற்றிய சர்ச்சைகள் பற்றியே அதிகம் பறை கொட்டிக்கொண்டிருக்கிறது நம் ஊடகங்கள்.

மாற்றம் வரும். பொறுத்திருப்போம். ஆவன செய்வோம்.

///பிராமண சங்கம் உதவி செய்கிறது அவன் வழக்கு நடத்த.அதைதான் நான் சுட்டிக்காட்டினேன்./// எனக்கென்னமோ அதில் தவறில்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில் அவன் மீது தொடரப்பட்ட வழக்குகள் எல்லாம் பொய் வழக்குகளாகவே தெரிகிறது.

அவனது வீடியோவில் பார்த்தவரை பெண்கள் விரும்பியே **** ****** *******(this part edited). விருப்பத்தின் பேரில் உறவு கொள்வது சட்டப்படி தவறில்லை என்பதும், கோவில் கருவரையில் உறவு கொள்வது சட்டப்படி தண்டனைக்குள்ளாகுமா என்பதும் அவன் ஒழிக்கீன குற்றத்திலிருந்து தப்பிக்க வழிசெய்யும் என்பதால் அதீதமான ஒரு கற்பழிப்பு வழக்கை தொடுத்திருக்கிறார்கள்.

உண்மையாக அவன் செய்த குற்றத்திற்கு தண்டனை கொடுத்தால் ஏற்றுக்கொள்ளலாம். அதை விடுத்து பொய் வழக்குகள் புனைந்து ஒருவரை அளவுக்கு மீறிய குற்றவாளியாக சித்தரித்தால் அவனுக்கு அவன் சமூகம் உதவுவதில் தவறில்லை. அவனோடு சேர்ந்து சல்லாபித்த பெண்கள் மட்டும் பத்தினி தெய்வங்கள் ஆகிவிட்டார்களா? இதை ஒத்துக்கொள்ள முடியாது.

அப்சல் குருவுக்கும், கசாப்புக்கும் அவனைச் சேர்ந்தவர்கள் வழங்காத சப்போர்ட்டா இவனுக்கு கிடைத்து விடப்போகிறது. இவ்வளவுக்கும் அவர்கள் பிற உயிரைக் குடித்த தீவிரவாதிகள்.

சகோதரர் chillsam அவர்களே ,

தளத்தை பார்வை இட்டு கருத்துக்களை பதிவு இட்டதற்கு நன்றிகள்.

// ஆசையால் உந்த‌ப் ப‌ட்டு ஒருவ‌ன் பாவ‌த்திலே ஈடுப‌டுகிறான் //

கோடி பெறுமான பொன்னான வரிகள்..!//

நன்றி, ஆனால் இது என் சொந்தக் கருத்து அல்ல. நூல்களில் எழுதப் பட்டவை.

//சிலைகளே காம இச்சைகளைத் தூண்டுவதாக உள்ளது;//

சிலைகளே காம இச்சையை தூண்டுவதாக சொல்லி இருக்கிறீர்கள். சிந்திக்க வேண்டிய கருத்துதான்.

அதே நேரம் வீட்டிலே அண்ணி, அக்காள் , தங்கை ஆகியோர் அழகாக தான் உள்ளனர், ஆனால் அவர்களை காம கண்ணோட்டத்திலே நாம் பார்ப்பதில்லை. அப்படியானால் கடவுளாக கருதப் பட்டுள்ள சிலைகளை காணும் போது காம நினைவு வருமா? அப்படி கடவுளின் மீது மரியாதை இல்லாதவன் கோவிலுக்கு எதற்கு செல்ல வேண்டும்?

//போதாக்குறைக்கு அ(வாள்)வர்களது உணவுப் பழக்கம்;//

என்ன தனியாக உணவுப் பழக்கம் என்று தெரியவில்லை. எல்லோரும் உண்ணும் அதே இட்டிலி பொங்கல் சாமபார்தான் தான் சாப்பிடுகிறார்கள் என நினைக்கிறேன்.

//பூசாரியுடன் இருந்தால் பெருமாளுடன் இருப்பது போன்றது எனும் மூடநம்பிக்கை//
நீங்கள் குறிப்பிடும் மூட நம்பிக்கை இது வரை கேள்விப்பட்டு இராதது.

//வேதகாலத்தில்- தேவலோகத்திலேயே தவறுகள் நடந்து அவாள் அவதாரமாக வந்து அருள் பாலித்து- அருள் பாலிக்கப்பட்டு மேலே சென்றதாக புராணங்கள் கூறுகிறதே;

அந்த தேவலோகத்திலேயே தவறு நடக்கமுடியுமானால் அந்த தேவர்களை பூஜிக்கும் கோவில்களில் தவறு நடக்கக்கூடாதா?//

நீங்கள் குறிப்பிடும் தவறுகள் புராணங்களில் எழுதப் பட்டுள்ளது என்பது சரியே. ஆனால் அப்படி தவறு செய்த தேவனுக்கு – இந்திரனுக்கு, கோவில் எதுவும் கட்டப் படவில்லை.

//இந்திரனுக்கு, கோவில் எதுவும் கட்டப் படவில்லை// இந்திரனுக்கு கோவில் கட்டி இந்திர விழா கொண்டாடிக்கொண்டிருந்த பூம்புகார் பற்றி கேள்விப்பட்டதில்லையா?

எனக்குத் தெரிந்த வகையிலே இந்திரனுக்கு கோவில் இல்லை. இந்திர விழா என்பது ஒரு விளையாட்டு விழாவாக இருந்தது என்பதாக அறிகிறோம்.

இந்திரனுக்கு கோவில் இருந்ததாக வரலாற்று ஆதாரம் அளித்தால் நல்லது, எல்லோரும் அதை தெரிந்து கொள்ளலாம்.

எனக்கு தெரிந்த வரையில் இந்திரனை யாரும் இப்போது வழிபடுவது இல்லை. முன்பும் யாரும் கோவில் கட்டி வழிபட்டதாக தெரியவில்லை.

இந்திரன் என்று சொல்லப் படுவது ஒரு பதவியாக அறியப் படுகிறது என நினைக்கிறேன்

//பூசாரியுடன் இருந்தால் பெருமாளுடன் இருப்பது போன்றது எனும் மூடநம்பிக்கை//

// நீங்கள் குறிப்பிடும் மூட நம்பிக்கை இது வரை கேள்விப்பட்டு இராதது //

நண்பரே, இது அந்த தேவநாதனின் லீலைகளாக பத்திரிகைகளில் வந்த காரியமே; இன்னும் சற்று ஆராய்ந்தால் கொஞ்ச நாளைக்கு முன்பு ஒரு “ஹைகிளாஸ்” சாமியார் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த தாயையும் மகளையும் அடுத்த அறைகளில் வைத்து பரிகாரம் செய்கிறேன் என்ற போர்வையில் பெருமாள் பெயரால் நாசம் செய்தது தெரியாததல்லவே..!

இராக்கால பூஜைகளுக்கு இளம்பெண்களை வரவழைத்து- ஏற்கனவே வளைக்கப்பட்ட பெண்களின் உதவியுடனே பிள்ளை வரத்துக்காகவும் திருமணத்துக்காகவும் அந்த பெண்களுக்கு “ஸ்பெஷல்” பூஜை செய்வதும் ஏற்கனவே இங்கே நடந்து கொண்டிருக்கும் காரியமே;

ஆனாலும் பெண்களின் குடும்ப மானம் கருதி இவை வெளியாகிறதில்லை;
இதுவே கருங்காலிகளுக்கு வசதியாகப் போனது..!

கடவுளின் பெயரை சொல்லி செல்வாக்கு பெற்று காம லீலைகளை நடத்துவதும், கோடிகளை குவிப்பதும் எல்லா மதங்களிலும் நடை பெற்று வருகிறது.

இந்தியாவில் பெரும்பாலான மக்களால பின்பற்றப் படும் இந்து மதத்தில் இது போன்ற செயல்கள் நடை பெற்றால அவை வெளிப் படுத்தப் பட்டு மக்களுக்கு அறிவிக்கப் படுகின்றன. அது நல்லதுதான்.இந்து மார்க்கம் காமக் கொடூரர்களைடம் இருந்து விடுபடுவது, இந்திய சமூகத்திற்கு நல்லது.

மேலை நாடுகளில் இருப்பது போல பெயரளவுக்கு ஒரு மார்க்கத்தை பின்பற்றிக் கொண்டு, வரம்பற்ற விபச்சார வாழ்க்கை வாழும் சமுதாயமாக இந்திய சமுதாயம் மாறாமல் இருக்க, காம லீலைகள் அம்பலப் படுத்தப் படுவது நல்லதே.

குடும்ப வாழ்க்கை முறை பின்பற்றப் படும் இந்திய நாட்டிலே விபச்சாரக் கலாச்சாரம் கேடு விளைவிக்கக் கூடியது. ஆரம்பத்திலே சரிப்படுத்தி விட்டால் நல்லது.

//பூசாரியுடன் இருந்தால் பெருமாளுடன் இருப்பது போன்றது எனும் மூடநம்பிக்கை.

நீங்கள் குறிப்பிடும் மூட நம்பிக்கை இது வரை கேள்விப்பட்டு இராதது

நண்பரே, இது அந்த தேவநாதனின் லீலைகளாக பத்திரிகைகளில் வந்த காரியமே; //

“அண்ணன் பொண்டாட்டி அரைப் பொண்டாட்டி, தம்பி பொண்டாட்டி தன் பொண்டாட்டி” என்பது போன்ற வக்கிர காம வாசகங்களும் பத்திரிகைகளில் சில சமயம் எழுதப் பட்டு வருகின்றன.

ஆனால் இந்தியாவில் அண்ணன் மனைவியை தாயாகவும், தம்பி மனைவியை பெண்ணாகவும் நினைப்பதே நடை முறையில் உள்ளது.

பத்திரிக்கைகள் காம வக்கிரத்தை தூண்டி காசு பார்க்கும் திசையிலே செல்லுகின்றன.

காம வெறியில் சிக்கி வக்கிர புத்தி உடையவர்கள் என்ன என்னவோ எழுதுவார்கள். மேலை நாட்டிலே சிலர் இயேசு கிறிஸ்துவுக்கும், மேரி மகதலேனவுக்கும் காதல் உண்டு என்றும் நூல்கள் எழுதி உள்ளனர் – ஆனால் நல்ல சிந்தனை உடையவர்கள் அதற்க்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. எனவே வக்கிரங்களை விடுத்து நாகரீகத்தை முன்னெடுக்க வேண்டும்.

// எனக்கென்னமோ அதில் தவறில்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில் அவன் மீது தொடரப்பட்ட வழக்குகள் எல்லாம் பொய் வழக்குகளாகவே தெரிகிறது.

அவனது வீடியோவில் பார்த்தவரை பெண்கள் விரும்பியே **** ****** *******(this part edited). விருப்பத்தின் பேரில் உறவு கொள்வது சட்டப்படி தவறில்லை என்பதும், கோவில் கருவரையில் உறவு கொள்வது சட்டப்படி தண்டனைக்குள்ளாகுமா என்பதும் அவன் ஒழிக்கீன குற்றத்திலிருந்து தப்பிக்க வழிசெய்யும் என்பதால் அதீதமான ஒரு கற்பழிப்பு வழக்கை தொடுத்திருக்கிறார்கள்.//

விட்டால் ராம் அந்த பெண் பித்தனுக்காக வாதாட செல்வார் போலவே.என்ன சார் பொய் வழக்கு,? ஆதாரத்தை தேட வேண்டியதில்லை. அதான் தமிழ்நாடு முழுதும் வீடியோ ஆதாரமே கிடைகிறதே அவன் மனைவியே ஒத்துகொண்டார். நீங்கள் மிகவும் வருதபடுகிரீர்களே.இந்து மதம்உருப்பட்டடும்

//உண்மையாக அவன் செய்த குற்றத்திற்கு தண்டனை கொடுத்தால் ஏற்றுக்கொள்ளலாம். அதை விடுத்து பொய் வழக்குகள் புனைந்து ஒருவரை அளவுக்கு மீறிய குற்றவாளியாக சித்தரித்தால் அவனுக்கு அவன் சமூகம் உதவுவதில் தவறில்லை. அவனோடு சேர்ந்து சல்லாபித்த பெண்கள் மட்டும் பத்தினி தெய்வங்கள் ஆகிவிட்டார்களா? இதை ஒத்துக்கொள்ள முடியாது.//

நீங்கலாக ஏன் சார் கதை விடுறீங்க .என்ன சார் செய்யலாம் அந்த பெண்களை தண்டித்து விட்டு தேவநாத ஐயரை ஆத்துல கொண்டு விட்டுடலாமா.

//அப்சல் குருவுக்கும், கசாப்புக்கும் அவனைச் சேர்ந்தவர்கள் வழங்காத சப்போர்ட்டா இவனுக்கு கிடைத்து விடப்போகிறது. இவ்வளவுக்கும் அவர்கள் பிற உயிரைக் குடித்த தீவிரவாதிகள்.//

இது ஒரு வாதமா. நமது வீட்டில் ஒரு தவறு நடந்தால் அதை கண்டியுங்கள் தடுங்கள் அதை விட்டுவிட்டு , பக்கத்துக்கு வீடுலயும்தான் நடக்குது அதை விட இது மோசமா என்று கேட்குறீங்களே.ஜாதிய விட்டு வெளிய வாங்கையா மோதல. இந்து மதம் அப்போது தான் வாழும்.

// தேவநாத ஐயரை ஆத்துல கொண்டு விட்டுடலாமா// எகத்தாளம் செய்வது மட்டுமே

வேலையாக இருந்தால் என்ன அர்த்தம்.

குற்றவாளியில் ஜாதி பார்க்கும் நீங்கள் அதே குற்றம் செய்த மற்ற ஜாதிப் பெண்கள் எல்லாம் என்ன ஜாதியை சேர்ந்தவர்கள் என்று பட்டியல் இட்டு அந்த பெண்களையும் இதே போல் ஜாதி பெயரிட்டு அழைத்து கேலி செய்யுங்கள் பார்க்கலாம். ஜாதியை விட்டு வெளியே வா என்று பாப்பானுக்கு சொல்வதற்கு வரிந்து கட்டி வந்து விடுவீர்கள். தவறுசெய்த வேறு ஜாதிப்பெண்களுக்கு என்ன தண்டனை? ஜாதியை கூட விடுங்கள். கோவில் கருவறைக்குள் தவறு செய்த பத்தினிகளுக்கு என்ன தண்டனை. ஆண்கள் மட்டுமே பலிகடா ஆக்கப்படவேண்டும் அதுவும் அவன் பார்ப்பான் என்றவுடன் உடனே வெறி பிடித்தார்போல் பொய்வழக்கு போட வேண்டும் என்றால் அது இன ரீதியான கொடுமை மற்றும் ஆண்களுக்கு செய்யப்படும் ஓரவஞ்சனை, மனித உரிமை மீறல்.

இங்கே மொகலாய கொலைகாரர்களை நான் குறிப்பிட்டது அர்சகர் செய்தது தவறல்ல என்பதற்கு அல்ல. கொலைகாரனுக்கு கூட வக்காலத்து வாங்க ஆள் இருக்கும் போது இவன் என்ன கொலை பாதகமா செய்தான். பெண்களின் சம்மதத்துடன் சுகமாக இருந்தான். அவ்வளவு தானே! அது பெருங்குற்றமா?

//குற்றவாளியில் ஜாதி பார்க்கும் நீங்கள் அதே குற்றம் செய்த மற்ற ஜாதிப் பெண்கள் எல்லாம் என்ன ஜாதியை சேர்ந்தவர்கள் என்று பட்டியல் இட்டு அந்த பெண்களையும் இதே போல் ஜாதி பெயரிட்டு அழைத்து கேலி செய்யுங்கள் பார்க்கலாம்.//
ராம் சார் நான் அந்த காம பித்தனை தண்டிக்க சொல்வதற்கு காரணம் அவன் பிராமணன் என்பதற்காக அல்ல தவறு யார் செய்தாலும் தவறு தான். ஆனால் நீங்கள் தான் அவன் பிராமணன் என்பதற்காகவே அவனுக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள்.

//ஜாதியை கூட விடுங்கள். கோவில் கருவறைக்குள் தவறு செய்த பத்தினிகளுக்கு என்ன தண்டனை.//
உங்களது இந்த நேர்மை தேவநாத குருக்களிடம் காணாமல் போவதேனோ?

//ஆண்கள் மட்டுமே பலிகடா ஆக்கப்படவேண்டும் அதுவும் அவன் பார்ப்பான் என்galaறவுடன் உடனே வெறி பிடித்தார்போல் பொய்வழக்கு போட வேண்டும் என்றால் அது இன ரீதியான கொடுமை மற்றும் ஆண்களுக்கு செய்யப்படும் ஓரவஞ்சனை, மனித உரிமை மீறல்.//
என்ன ஒரு லாஜிக் பொய் வழக்கா .நீகள் சொல்வது பொய் கதை இல்லையா.

//பெண்களின் சம்மதத்துடன் சுகமாக இருந்தான். அவ்வளவு தானே! அது பெருங்குற்றமா?//
இல்ல குற்றமே இல்ல. வாழ்க தேவநாதன் பக்த கோடிகள்

// கோவில் கருவறைக்குள் //

கோவில் என்பது (கோ+இல்) அரசனின் இல்லம் என்று பொருள்படும்;

எந்த தெய்வமும் ஜோடி இல்லாமல் இல்லை;அதிலும் ஒன்றுக்கு மேற்பட்ட ஜோடியுடனே நமது தெய்வங்கள் தோன்றுகின்றன;

ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை பூஜித்துக் கொண்டே இருந்தால் அந்த ஆவிகளுக்கு மாம்சமில்லாததால் அது பூஜிக்கும் மனிதனுக்குள் வந்து குடியிருக்கும்;(கிராமங்களில் சாமி இறங்கின ஆட்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோமல்லவா?)

அதன்பிறகு அந்த ஆவியான விக்கிரகத்தின் தன்மை முழுவதும் (அதாவது அதன் பராக்கிரமங்களைக் குறித்து அந்த பக்தன் கேள்விப்பட்டுள்ள குணாதிசயங்கள் முழுவதும்) மனுஷனுக்குள்ளிருந்து செயலாக மாறுகிறது;

அதன் விளைவுகளை போதித்து மனிதனை நல்வழிப்படுத்தவே வேதங்கள் தோன்றின;ஆனால் யாரும் அதை மதிக்கிறதில்லை..!

//எந்த தெய்வமும் ஜோடி இல்லாமல் இல்லை;அதிலும் ஒன்றுக்கு மேற்பட்ட ஜோடியுடனே நமது தெய்வங்கள் தோன்றுகின்றன;//

தெய்வ‌ங்க‌ள் ஜோடியுட‌ன் இருக்கின்ற‌ன‌ என்று குறிப்பிட்டு உள்ளீர்க‌ள். ஒன்றுக்கு மேற்பட்ட‌ ஜோடிக‌ளூட‌ன் இருந்தாலும், எல்லா ஜோடிக‌ளையும் வூர‌றிய‌ திரும‌ண‌ம் செய்து குடும்ப‌ வாழ்க்கையே ந‌ட‌த்தி உள்ள‌ன‌ர். எந்த‌ தெய்வ‌மும் க‌ள்ளக் காத‌ல் செய்ய‌வில்லை. எனவே அசிங்க‌ அர்ச்ச‌க‌ர் தேவ‌ நாத‌னுக்கு எந்த‌ ச‌லுகையும் அளிக்க‌ முடியாது.

தெய்வ‌ம் என்ப‌தை ம‌தித்து வ‌ழிபாடு செய்ய‌ வ‌ருப‌வ‌ன் தான் கோவிலுக்கு வ‌ர‌ வேண்டும். தெய்வம் என்று க‌ருதுவ‌தை ம‌திக்காத‌வ‌ன்கோவிலுக்கு எத‌ற்க்கு வ‌ர‌ வேண்டும்? ஒருவ‌னின் த‌ந்தை எத்த‌னை பெண்க‌ளை திருமணம் செய்தாலும், ம‌க‌ன் த‌ந்தைய‌ரின் எல்லா ம‌னைவிய‌ரையும் தாயாக‌வே ம‌திக்கிற‌ன், நினைக்கிறான்.

மேலும் உங்க‌ளின் க‌ருத்து பற்றி ந‌ண்ப‌ர் ஒருவ‌ரிட‌ம் பேசிய‌ போது, அவ‌ர் க‌ட‌வுளுக்கு ம‌க‌ன் இருக்கும்போது, க‌ட‌வுளுக்கு ம‌னைவி இருக்க‌க் கூடாதா என்ற‌ வினாவை எழுப்பினார். என‌வே க‌ட‌வுளுக்கு ம‌க‌ன் என்று ஒரு உற‌வை ஏற்ப‌டுத்துகிரார்க‌ளோ அல்ல‌து ம‌னைவி உற‌வோ, ம‌ச்சான் உறவோ…. ம‌னித‌த்தைக் கெடுக்கும் வ‌கையிலே மோத‌லை, ச‌ண்டையை உருவாக்கும் வ‌கையிலே பொல்லாப்பு செய்யாம‌ல் அமைதியாக‌ வ‌ணங்கி கொள்ளுங்‌க‌ள், அதை யாரும் த‌டுக்க‌வில்லை.

//ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை பூஜித்துக் கொண்டே இருந்தால் அந்த ஆவிகளுக்கு மாம்சமில்லாததால் அது பூஜிக்கும் மனிதனுக்குள் வந்து குடியிருக்கும்//

//”ஆவி” என்று நான் குறிப்பிட்டது மிகத் தெளிவாக சொல்லப்போனால் விக்கிரகம்,அதன் பெயர்,அது சம்பந்தமான தலபுராணம்,வீர தீர பராக்கிரமங்களாகப் புனையப்பட்ட கதைகள் இவற்றை சிறு வயது முதல் கேள்விப்பட்டு அதில் ஊறிப்போன ஒரு மனிதன் அதில் தன் வயப்பட்டு தன்னை அந்த சாமியாகவே நினைத்து செயல்படுவது; இங்கே ஆவி எனப்படுவது சிந்தையில் ஏற்படும் ஆழ்ந்த பாதிப்பையே குறிக்கிறது.//

நீங்க‌ள் கூறுவ‌தை முக்கிய‌மான‌ ஒரு விட‌ய‌மாக‌ ப‌திவு செய்கிறேன். அதாவ‌து ஒரு விக்கிர‌க‌த்தை பூஜித்தால் அத‌ன் குண‌ங்க‌ள் அந்த‌ ம‌னித‌னுக்கு வ‌ரும்.

காந்தியின் அருகியில் அம‌ர்ந்து மஹான், காந்தி ம‌ஹான்…கை ராட்டையே ஆயுத‌ம், க‌த‌ராடையே சோபித‌ம்…. என்ப‌து போன்ற கருத்துக்க‌ளை உடைய‌ பாட‌ல்க‌ளைப் பாடினால், காந்தியின் குண‌ங்க‌ளான‌ உண்மை பேசுவ‌து, அஹிம்சை…. போன்ற குண‌ங்க‌ள் அ ந்த‌ ம‌னித‌னுக்கு வ‌ர‌க் கூடும் என‌ப‌து உள‌விய‌ல் ரீதியாக‌ சாத்திய‌மாக‌ இருக்க‌க் கூடும் என்றே க‌ருத‌லாம்.

எனவே காந்தி, புத்த‌ர், இயெசு கிறிஸ்து, விவேகான‌ந்த‌ர், ராம‌ர், அனும‌ன், ஆகிய‌வ‌ரின் கொள்கைக‌ளை சிந்தித்த‌வாரே அவ‌ர்க‌ளின் சிலைக‌ளுக்கு ம‌ரியாதை செய்தால், அத‌ன் மூல‌ம் அவ‌ர்க‌ளின் ந‌ல்ல‌ குண‌ங்க‌ளை ஒரு ம‌னித‌ன் பெறுவ‌து உல‌விய‌ல் ரீதியாக‌ சாத்திய‌ம் என்றால், நான் அதைக் குறை கூற‌வில்லை. அது ஒரு வ‌கையில் ந‌ல்ல‌தே.

ம‌க்க‌ள் அறிவை வ‌ள‌ர்த்து, நாக‌ரீக‌ம‌டைந்து, வெறுப்பை விள‌க்கி, அன்பு வாழ்க்கை வாழ‌ வேண்டும் என்ப‌தே ந‌ம‌து குறிக்கோள். என‌வே உங்க‌ள் கருத்தை வ‌ர‌வேற்ககிரேன்.

Excellent Posting Chillsam.

வணக்கம்
திருசிக்காரர் அவர்களே நீண்ட நாட்களுக்கு பின் சந்திக்கிறோம், நல்ல விஷயங்களை பதிவிட்டு உள்ளீர்கள் வாழ்த்துக்கள்.

வணக்கம்
திருசிக்காரர் அவர்களே நீண்ட நாட்களுக்கு பின் சந்திக்கிறோம், நல்ல விஷயங்களை பதிவிட்டு உள்ளீர்கள் வாழ்த்துக்கள்.

வணக்கம்

நண்பர் சில்சம் அவர்களே,

ஒரு சின்ன விஷயம், நீங்கள் குறிப்பிடும் ‘ஆவி’ சமாசாரங்களை இங்கே கோவில்களில் மட்டுமல்ல யாரும் எங்கும் வணங்குவது கூட இல்லை. பிறகு அதை யார் பூசிப்பது?

கிறிஸ்துவம் இந்துக்களின் விக்கிரக வழிபாட்டை மறுக்கிறது, அதாவது விக்கிரகம் வெறும் கல் என்று கூறும்போது நீங்கள் மட்டும் விக்கிரகத்தின் தன்மை அதனைவழிபடுபவனிடம் சேர்கிறது என்கிறீர்கள்,
அப்படியெனில் விக்கிரகத்திற்கு சக்தி உள்ளது என்பதை நம்புகிறீர்களா?

சரி அப்படியானால் ஒரே தெய்வத்தின் (இயேசுவின்) ஆவியை வணங்கும் கிருஸ்துவர்களுக்கும் பாதிரிகளுக்கும் இயேசுவை பற்றி கேள்விப்பட்ட அன்பும் நேசமும் அல்லவா வந்திருக்கவேண்டும்? ஓரின சேர்க்கை விவகாரம், பாலியல் விவகாரம் என்று சிக்கிக் கொண்டிருக்கும் நிலை எதனால் வந்தது?
நமது பாரதத்தை நரித்தனத்தால் அடிமைப் படுத்திய ஆங்கிலேயர்கள் அனைவரும் கிறிஸ்துவர்களே,
அவர்களில் ஆரம்பத்தில் வந்தவர்கள் டாக்டர் கம் பாதிரிகள்தான். அவர்களிடம் இயேசுவின் குணம் என்று ஒன்றும் இல்லாமல் நாடு பிடிக்கும் எண்ணம் மட்டுமே இருந்ததே? அது எதனால்? ( இன்றும் மத மாற்றத்தின் மூலம் அதைத்தான் நடத்த துடிக்கிறார்கள்)

கிறிஸ்துவையே வணங்கும் அமெரிக்காதான் பெரும்பான்மையாக ஆயுத விற்பனை நடத்துகிறது, இயேசுவின் குணத்தில் ஆயுதம் எப்போது சேர்ந்தது?

கோவிலுக்குள் நடந்த நிகழ்ச்சி விரும்பத்தகாத ஒன்று மட்டுமல்ல, செய்யக் கூடாத ஒன்றும் கூட. அதை நாங்கள்
வன்மையாக கண்டிக்கிறோம், கோவிலில் மட்டுமல்ல ஒரு சர்ச்சில் இது நடப்பினும் குற்றமே. அன்றியும் தன மனைவியை விட்டு இது போல பிரமாதர்களின் உறவு நாடுவது எங்கு நடப்பினும் அது குற்றமே.

புராணங்களில் தவறுகள் நடப்பதை மட்டும் படித்து விட்டு பேசுதல் விடுத்து தவரிளைத்தவருக்கு கிடைத்த சாபம், தண்டனைகளையும் கொஞ்சம் படித்துப் பாருங்கள், குற்றம் என்ன என்று சுட்டிக்காட்டாமல் எப்படி தண்டை பற்றி பேசுதல் முறையாகும்? ஆகவே புராணங்களில் குற்றங்கள் காட்டப் பட்டன.

ச‌கோத‌ர‌ர் பாஸ்கர் அவ‌ர்க‌ளே,

ந‌ம‌து த‌ள‌த்தை நீங்கள் பார்வையிட்டு த‌ங்க‌ளின் மேலான‌ க‌ருத்துக்க‌ளைப் ப‌திவு செய்த‌து‌, ‌ ம‌கிழ்ச்சியை அளிக்கிற‌து. மிக்க ந‌ன்றி.

தொட‌ர்ந்து பார்வையிட்டு த‌ங்க‌ளின் மேலான‌ க‌ருத்துக்க‌ளால் த‌ளத்தை சிற‌ப்பு செய்யுங்க‌ள் என‌க் கோருகிறோம்.

வணங்குவதல்ல,பிரச்சினை; இணங்குவதே..!

அருமை நண்பர்கள் பாஸ்கர் மற்றும் திருச்சிக்காரன் ஆகியோருக்கு எனது தளத்தில் பதில் ஆயத்தமாக இருக்கிறது;

தயவுகூர்ந்து வந்து தடம் ப‌(ம)தித்துச் செல்லவும்.

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=33427580

“கடவுளுக்கு மகன்” என்பது மனிதப் புரிதலுக்காகவே சொல்லப்பட்டுள்ளதே தவிர சர்வ வல்லக் கடவுள் மனிதனாக வந்தார் என்பதே செய்தி;

மற்றபடி “கடவுளுக்கு பெண்டேது, பிள்ளையேது” என்பது சித்தர் பாடல்..!

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=33427580

// எந்த‌ தெய்வ‌மும் க‌ள்ளக் காத‌ல் செய்ய‌வில்லை.//

ஏழை அபலைப் பெண்ணான “அகலிகை” முதலாக ஓராயிரம் (தெய்வ)மோசடி கதைகளை என்னால் சொல்லமுடியும்;

இவையெல்லாம், நீதி நெறிகளை மக்களுக்கு சுவாரசியத்துடன் கற்பிக்க விரும்பிய பெரியவர்களின் கற்பனை கதை என்றும் படிப்பறிவில்லாத பாமர மக்கள் தங்கள் அறியாமையினால் அந்த நாயகன், நாயகிகளை தெய்வமாக்கி விட்டனர் என்று சொல்லுங்கள்;

நான் மற்ற ஆக்கப்பூர்வமான வேலைகளைப் பார்க்கச் செல்லுவேன்..!

//ஏழை அபலைப் பெண்ணான “அகலிகை” முதலாக ஓராயிரம் (தெய்வ)மோசடி கதைகளை என்னால் சொல்லமுடியும்;//

ச‌ரியாக‌ச் சொன்னீர்க‌ள். க‌ள்ள‌க் காத‌ல் க‌தைக‌ளுக்கு ப‌ஞ்ச‌மேயில்லை. தின‌மும் பேப்ப‌ரைப் பார்த்தாலே தெரியும். ஆனால் இதில் ஏதாவ‌து இந்த‌க் “க‌ட‌வுள்” ச‌ம்ப‌ந்த‌ப் ப‌ட்ட‌தா என்று பார்க்க‌ வேண்டும்.

அக‌லிகையை அசிங்க‌ப் ப‌டுத்திய‌ இந்திர‌னுக்கு எங்கும் கோவில் இல்லை. அவ‌னை யாரும் வ‌ழிப‌ட‌வும் இல்லை. இந்திர‌ன் க‌ட‌வுளாக க‌ருத‌ப் ப‌ட‌வும் இல்லை. க‌ள்ள‌க் காத‌ல் செய்யும் க‌ய‌வ‌னை இந்திய‌ர்க‌ள் எப்போதும் ம‌தித்த‌தும் கிடையாது, வ‌ண‌ங்கிய‌தும் கிடையாது.

“தேவ‌ர்க‌ள்” என்று இந்தியாவில் கூற‌ப் ப‌டுவ‌து, மேலை நாடுக‌ளில் “தேவ‌ன்” என்று கூற‌ப் ப‌டுவ‌து போன்ற‌ க‌ட‌வுள் இல்லை.

மேலை நாடுக‌ளில் தேவ‌ன் என்றால் க‌ட‌வுள்.

இந்தியாவில் தேவ‌ர்க‌ள் என்ப‌து ஒரு த‌னி வ‌கையான‌ வ‌லிமைக‌ளும், வாழ்க்கையும் உடைய‌வர்க‌ள் என்று க‌ருத‌ப்ப‌ட்கிறது..

க‌ற்ப்ப‌ழிப்பு செய்ப‌வ‌னை, க‌ள்ள‌க் காத‌ல் செய்ப‌வ‌னை, இன‌ ப‌டுகொலை செய்ப‌வ‌னை, ம‌க்க‌ளை அழிக்க‌ சொல்லுப‌வ‌னை அவ‌ன் தேவ‌ன் என்றாலும், க‌ட‌வுள் என்றாலும் – அதாவ‌து க‌ட‌வுள் என்று ஒருவ‌ர் இருந்தால், தேவ‌ர்க‌ள் என்று இருந்தால் – நான் எதிர்க்கிறேன்‍.

இந்த‌ இந்திர‌னும் கிட்ட‌த் த‌ட்ட‌ இராவ‌ண‌னைப் போல‌க் க‌ருத‌ப் ப‌ட‌க் கூடிய‌வ‌னே.

//நான் மற்ற ஆக்கப்பூர்வமான வேலைகளைப் பார்க்கச் செல்லுவேன்..!//

நானும் அதையே தான் சொல்லுகிறேன், பிற‌ மார்க்க‌ங்க‌ளை இக‌ழ்ந்து, மோத‌லை உருவாக்கி, அழிவு உருவாக‌ கார‌ண‌மாக‌ இல்லாம‌ல், ந‌ல்லிண‌க‌க்கத்திலே ம‌க்க‌ளை இணைத்து ஆக்க‌ பூர்வ‌மாக‌ செய‌ல் ப‌டுவோம்.

// நீங்க‌ள் கூறுவ‌தை முக்கிய‌மான‌ ஒரு விட‌ய‌மாக‌ ப‌திவு செய்கிறேன். அதாவ‌து ஒரு விக்கிர‌க‌த்தை பூஜித்தால் அத‌ன் குண‌ங்க‌ள் அந்த‌ ம‌னித‌னுக்கு வ‌ரும் //

நண்பரே,நீங்கள் குறிப்பிட்டுள்ள ஆச்சரியமான செய்தி ஒன்றுமல்லவே;
இது மிக இயல்பானது;

அவ்வளவு ஏன் பால் மணம் மாறாத குழந்தையானது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரியவர்கள் ஆடிப்பாடிய ஆபாச நடனங்களையும் பாடல் காட்சிகளையும் செய்து காட்டுவதில்லையா?

பிரச்சினை என்னவென்றால் அதன் பின் விளைவு என்ன,என்பதே;

(எனது தளத்தில் இன்னும் விவரமாக…)

http://chillsam.activeboard.com/forum.spark?aBID=134567&p=3&topicID=33427580

அரிச்ச‌ந்திர‌ன், காந்தி,இராம‌ர், புத்த‌ர், விவேகான‌ந்த‌ர், இயெசு கிரிஸ்து, ம‌ஹா வீர‌ர், அனும‌ன் ஆகிய‌வர்க‌ளை ம‌ரியாதை செய்து, அவ‌ர்க‌ளின் கொள்கைக‌ளை ம‌ன‌தில் வாங்கி பின்ப‌ற்ற‌த் த‌யார் என்றே நான் மீண்டும் , மீண்டும் கூறி வ‌ருகிறேன். மானாட‌ , ம‌யிலாட‌ ஆடுபவ‌ரை பின்ப‌ற்ற‌ நான் சொல்ல‌வில்லை. என் ம‌ன‌ம் நாடுவ‌து மேற்கூறிய‌ சான்றோர்க‌ளை.

பிரச்சினை என்னவென்றால் அதன் பின் விளைவு என்ன,என்பதே;

(எனது தளத்தில் இன்னும் விவரமாக…)

http://chillsam.activeboard.com/forum.spark?aBID=134567&p=3&topicID=33427580

நண்பர் ராம் அவர்கள் “பெண்களின் சம்மதத்துடன் சுகமாக இருந்தான். அது ஒரு குற்றமா?”
என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். சுகமாக இருப்பது குற்றமே அல்ல. ஆனால் அதற்கு அவன்
தேர்ந்தெடுத்த இடம் தான் குற்றம் நண்பா. இதே அவன் தனது வீடு படுக்கை அறையிலோ அல்லது
ஏதாவது ஒரு லாட்ஜிலோ இருந்திருந்தால் யாரும் கேட்கப் போவதில்லை. புனிதமான ஆலயக் கருவறையை சல்லாபிக்க தேர்ந்தெடுத்தது தான் தவறு.
ஆலயம் என்பது எல்லா மதங்களிலும் புனிதமான ஒரு இடம். அங்கு இப்படி…இருக்க துணிந்ததுதானே
இத்தனைக்கும் காரணம்.
கடவுளே இதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் காட்டிக்கொடுத்துவிட்டார் என்று எடுத்துக்கொள்ளலாமே.

கருவறையில் இருக்கும் அம்மன் சிலை நிர்வாணமாக இருக்கும் சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அந்த சிலையை நீருற்றி கழுவும் ஒரு அர்ச்சகர் கைகளில் அம்மனின் எல்லா அந்தரங்க உறுப்புகளும் பட்டே தீரும். அந்த நிலையில் அவனுக்கு காம உணர்ச்சி வந்தால் என்ன செய்வான். *************************

http://sagotharan.wordpress.com/2010/02/04/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/

இது என்ன..?
இது உண்மை தானா..?

(Comment edited)

Dear Mr. Chill sam.
I think similar type of question is alreday responded with answer.

ஒருவனின் அன்னையோ அண்ணனின் மனைவியோ, அக்காளோ, தங்கையோ , நீரில் மூழ்கி அடித்து செல்லப் பட்டால் அவன் அவர்களைக் காப்பற்றி கரை சேர்க்கும் போது அவர்களுடிய அந்தரங்க உறுப்புகள் அவன் கையில் படும் வாய்ப்பு உள்ளது. அப்போது அவன் மன நிலத்திலே காம உணர்வு வருமா?

அன்னை என்று கருதி, கடவுள் என்று கருதி, கோவில் சிலையை நோக்கதவனுக்கு கோவிலிலே என்ன வேலை? எனவே அசிங்க அர்ச்சகர் தேவ நாதனின் செயலை நியாயப் படுத்த இயலாது.

வணக்கம்

”””கருவறையில் இருக்கும் அம்மன் சிலை நிர்வாணமாக இருக்கும் சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அந்த சிலையை நீருற்றி கழுவும் ஒரு அர்ச்சகர் கைகளில் அம்மனின் எல்லா அந்தரங்க உறுப்புகளும் பட்டே தீரும். அந்த நிலையில் அவனுக்கு காம உணர்ச்சி வந்தால் என்ன செய்வான்.”””””’

நண்பரே உடல் தளந்து தனது வேலைகளை தானே செய்ய இயலாத நிலையில் உங்கள் தாயார் இருப்பதாக இருப்பின் அவர்களுக்கு நீராட்ட வேண்டிய நிலையில் நீங்கள் இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அப்போது உங்கள் மனம் என்னநிலையில் இருக்கும் ? அப்படித்தான் அவர்களும் இருக்க வேண்டும். அப்படி இல்லாதவர்கள் அந்த பணிக்கு மட்டுமல்ல மானுட வாழ்க்கைக்கே தகுதிஇல்லாதவர்கள்.

http://picasaweb.google.com/lh/view?q=hindu+sex&uname=compraynow&psc=G&filter=1#5262484637626685458

நண்பர் பாஸ்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்;
அற்புதமான வாதத்தை முன்வைத்திருக்கிறீர்கள்;
ஆனால் நம்முடைய சாமி சிலைகளை நன்றாக உற்றுப் பாருங்கள்;
அவற்றின் ரூபத்தைக் கண்டு தேவர்களே மயங்கியதாலேயே நாம் போற்றி வணங்குகிறோம்;

நம்முடைய வயதான தாயைப் போல அவை இருந்திருந்தால் அவை முதியோர் இல்லத்தில் தாமே போய் சேர்ந்திருக்கும்;

இன்னும் நம்முடைய பாரம்பரியத்துக்கு எடுத்துக்காட்டானதொரு படத்தை மேற்கண்ட தொடுப்பில் சென்று பாருங்கள்..!

நன்றாக இருந்தது

கிரிமினல்களைக் கொண்டு மொத்தமாக மதிப்பீடு செய்ய முடியாது.

சில்சாம் போன்றவர்கள் உள்ள இணைப்பின் பாதிரிகள் பலர் சர்ச்சில் விளையாடியுள்ளதை எனோ தான் எடுத்து விமர்சிப்பதில்லை.

http://www.activeboard.com/forum.spark?aBID=134804&p=3&topicID=34454994

திரு. தேவபிரியா அவர்களே,
தளத்தைப் பார்வை இட்டு கருத்து தெரிவித்தற்கு நன்றி.

நான் உங்களுக்கு தாழ்மையுடன் சுட்டிக் காட்ட விரும்புவது என்ன என்றால், ……. சபரி மலை தாந்திரி, அர்ச்சகர் தேவநாதன், நித்யானந்தர் …. இப்படி பாலியல் புகாரில் சிக்கும் போலி ஆன்மீக வாதிகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது.

எனவே , பகட்டு அரசியல் செய்யும் பணக்கார போலி ஆன்மீக வாதிகளை விலக்கி விட்டு சரியான ஆன்மீக வாதிகளை கண்டெடுக்க வேண்டியதுதான் இப்போது இந்து மதத்தை காக்க விரும்புபவர் செய்ய வேண்டிய செயல்.

போலை ஆன்மீகவாதிகளைக் காக்கும் செயலில் ஈடுபட்டால் நட்டம் இந்து மதத்திற்குதான்.

Hinduism is not depedant on organisations or individuals like Abrahmic man made religions where they have to go by their Pastors/ Imams.

With so much of Ugly things preached in Bible as Word of their Small Lord- Crime is quiet common.
http://www.activeboard.com/forum.spark?aBID=134804&p=3&topicID=34454994

We need to be careful that all that Media Spread are true without seeking truth and further investigations. Most of these I feel can have some criminal foriegn money involved, and sex accepted by both and except for morality they are not legally not wrong. People can take teachings and not go by individuals.

The above links are complaints made and registered, but are not properly followd up using church’ political connections.

மதிப்பிற்குரிய தேவப்பிரியா அவர்களே,
உங்களின் கருத்துக்கு நன்றி.

இந்து மதம் யாராலும் நிறுவப்படவில்லை, யாரையும் நம்பி இருக்கவில்லை என்பது உண்மைதான்.

ஆனால் இந்து மதத்தின் பெயரை வைத்து, அதன் தத்துவங்களைக் கூறி தங்களில் இந்து மத ஞானிகள் போலக் காட்டிக் கொள்ளும் போலி புனிதர்கள் இந்து மதத்திற்கு இழுக்கை, பின்னடைவை, இன்னலை உண்டு பண்ணுகின்றனர் என்பது இன்றைக்கு நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விடயமாகும்.

இவர்களால் (போலி சாமியார்களால்) இந்து மதத்திற்கோ, இந்துக்களுக்கோ எந்த நன்மையையும் இல்லை, மாறாக தீமையே உருவாகிறது. இவர்களைக் காக்க முயல்வது , இவர்களின் செயல்களை நியாயப் படுத்த முனைவது, இதெல்லாம் சகஜம் தான் என்பது போல பேசுவது ஆகிய செயல்கள் எல்லாம் உண்மையில் இந்து மதத்தை கெடுக்கும் செயல்களே ஆகும்.

போலித் துறவிகளை ஆதரிப்பதால், போலித் துறவிகளைக் காக்க முயல்வதால் இந்து மதத்திற்கு விளையக் கூடிய ஆபத்தைப் பற்றிய ஒரு கட்டுரை இந்த தளத்தில்வேளியிடப் படும். அதையும் படித்து உங்கள் மேலான கருத்துக்களைப் பதிவு இடுங்கள்.

அன்பு நண்பர்களே,.

நான் விவாதத்தி்ல் இங்கு கலந்து கொள்ளவில்லை என்றாலும்,. chillsam அவர்கள் என்சார்பாக என் தளத்தினை முன்நிறுத்தியிருக்கின்றார்.

அவருக்கு என் நன்றி!.

அம்மனுடன் புணரும் அர்ச்சகர்கள் எனும் தலைப்பில் நான் எழுத கொஞ்சம் வெக்கப்பட்டேன். தினம் தினம் அன்னைப் போல அவள் முகத்தில் விழித்தாலும், காலம் நிர்பந்தமாக்கி விட்டது.

அந்த இடுகை என்னுடைய கோவம், மற்றும் நாத்திகர்களின் கருத்தில் இருக்கும் உண்மை. நிதாணமாக யோசனை செய்யுங்கள் உண்மை புரியும்.

கர்பிணி பெண்களுக்கு கூட பெண் மருத்துவர்கள் பிரசவம் பார்க்கும் காலம் இது. மோகம் கொண்ட அர்ச்சகர்களின் கையில் அம்மனை தனியாக விட்டு வைத்திருக்கும் நமக்கு இன்னும் புரியாத உண்மை, சில நாத்திகர்களுக்கு புரிந்திருக்கிறது. அதை தான் இங்கே சுட்டி காண்பித்திருக்கின்றேன்.

மதங்களை விமர்சனம் செய்ய எல்லோருக்கும் தகுதியிருக்கிறது. என்னுடைய வீட்டில் இருக்கும் குப்பைகளை நான் தான் துடைப்பம் எடுத்து அகற்ற வேண்டும். அதைத் தான் சுட்டி காண்பித்திருக்கின்றேன்.

அம்மனை அர்ச்சகர்களிடம் இருந்து காப்பீர்களா நண்பரே!

– ஜெகதீஸ்வரன்.,

http://sagotharan.wordpress.com/

//அம்மனை அர்ச்சகர்களிடம் இருந்து காப்பீர்களா நண்பரே!//

அன்பு நண்பர் ஜெகதீஸ்வரன் ,

இது பற்றி பல பின்னூட்டங்களில் தெளிவாக விவாதிக்கப் பட்டு இருக்கிறது. குறிப்பிட்டு சொன்னால் பாஸ்கர் இதை விளக்கி இருக்கிறார். தாயை தெய்வமாக கருதுவதும், தான் தெய்வமாக கருதுவதை தாயாக எண்ணுவதும் தமிழர் பண்பாடு. சில தறுதலைகள் ஒழுக்கம் கேட்ட செயலை செய்து இருக்கின்றன. மொத்தத்திலே, மன முதிர்ச்சியை அளிக்கக் கூடிய சரியான ஆன்மீகத்தை கொண்டு செல்வது அவசியமாகும் என கருதலாம்.

ச‌ரியான‌ ஆன்மீக‌த்தை எல்லா ம‌க்க‌ளுக்கும் வ‌ழ‌ங்குவ‌தே, இது போன்ற‌ அசிங்க‌ அர்ச்ச‌க‌ர்க‌ள் உருவாகாம‌ல் த‌டுக்கும்.

இதை விட யாரும் சரியாக சொல்லிவிட முடியாது,.

நன்றி திருச்சிக்காரரே!.

– ஜெகதீஸ்வரன்.

http://sagotharan.wordpress.com/

பெரியவாள் பண்ணினா பகவான் பண்ணின மாதிரி என்ற நிலை காஞ்சியில் நிலவுகிறது அதனால் தான் தேவனாதன்கள் மகா மகா பெரியவாள் “காட்டிய வழியில்” செல்கிறார்கள் . ஜயேந்திரனுக்கு ஒரு நீதி தேவனாதனுக்கு ஒரு நீதியா ?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 39 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: