Thiruchchikkaaran's Blog

ஆன்மீக‌ம் என்பது என்ன?

Posted on: December 20, 2009


மனிதனை விடுதலை அடைந்தவனாக , முழு சுதந்திரம் உடையவனாக, எந்த ஒரு துன்பமும் தன்னை வருத்தாத மன  நிலையை அடைந்தவனாக, தன் எதிர்காலத்தை தானே தீர்மானிக்கும் வலிமை உடையவனாக உயர்த்துவது எதுவோ, அதுவே ஆன்மீகம். 

இதை நாம் சொல்கிறோம் என்றால் அதற்க்கு முன்பாகவே நாம் தீர்மானித்து என்ன என்றால் – எல்லா உயிர்களும் அடிமை நிலையிலே, தங்கள் நிலையை, எதிர்காலத்தை தாங்களே தீர்மானிக்கும் வலிமை இல்லாதவராக, பல வகையான துன்பங்கள்  தங்களை வந்து தாக்கும் நிலையிலே  உள்ளனர் (prone to sorrow) என்பதாகும்.

எல்லா உயிர்களையும் பீடித்துள்ள மூன்று முக்கிய துன்பங்கள், பிணி,   மூப்பு, சாக்காடு ஆகியவை.

இந்த‌ சாவு, நோய் ஆகிய‌ பிர‌ச்சின‌க‌ள் ம‌ட்டும் அல்லாம‌ல் இன்னும் எத்த‌னையொ பிரச்சினைக‌ள் ந‌ம்மை வ‌ந்து தாக்குகின்றன.

 வாய்க்கால் , வரப்பு தகராறு, பையனுக்கு பள்ளியில் இடம் கிடைக்கவில்லை, நன்கு வேலை செய்தும் அலுவலகத்தில் இன்னொருவனுக்கு பிரமோசன், மனைவிக்கு உடல் நிலை சரியில்லை, அம்மா- மனைவி தகராறு, …… பிரச்சினைக்கு , துன்பங்களுக்கு பஞ்சமில்லை. எல்லா பிரச்சினையும் பேசித் தீர்க்கலாம்யா, தைரியமாக இரு- ஆனால் எத்தனை முயற்சி செய்தாலும்,  பகுத்தறிவின் அடிப்படையிலே அறிவியல், மனோவியல், பொருளாதாரம், பொறியல், அவியல்…எதை பயன்படுத்தி எவ்வளவு அறிவு பூர்வமாகப் போனாலும், அதையும் தாண்டி துன்பம் வந்து சேருவதை நம்மால் தடுக்கும் வலிமை உடையவராக இருக்கிறோமா?  
நாம் இந்த உலகத்திலே சில  வெற்றிகளை பெற்று விடுகிறோம், அதனால் நாம் வலிமை உடையவராக, எல்லா துன்பங்களையும் விரட்டி அடைக்கும் சக்தி படைததவர்க்க இருப்பதாக நாமே கற்பனை செய்து கொண்டு ஏமாந்து விடுகிறோம் என்ற முடிவுக்கே வர வேண்டியுள்ளது.
 
அப்படி ஏதோ குறைவான துன்பம் இருக்கும் வாழ்க்கையை வாழும் வாய்ப்பு நமக்கு அதிர்ஷ்டவசமாக கிடைத்தாலும்,  பாடுபட்டு தேடி சேர்த்த சொத்து, பணம், கவரவம், உறவு, நண்பர்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு செல்லும் நிலையிலேயே இருக்கிறோம்.  All the properties. wealth, friends, relatives, prestige…etc shall be removed once for all,  (irrevokabaly removed) from us.
இரக்கமற்ற இயற்கையின் இரக்கத்தை நம்பி வாழ்கிறோம். We are at the mercy of a system which has no mercy.
நாம் இந்த உலகத்திலே சில  வெற்றிகளை பெற்று விடுகிறோம், அதனால் நாம் வலிமை உடையவராக , எல்லா துன்பங்களையும் விரட்டி அடைக்கும் சக்தி படைததவர்க்க இருப்பதாக நாமே கற்பனை செய்து கொண்டு ஏமாந்து விடுகிறோம் என்ற முடிவுக்கே வர வேண்டியுள்ளது.

ப‌ணமோ, த‌ங்க‌மோ, செல்வாக்கோ, ப‌த‌வியோ-இந்த‌ உல‌கத்தில் ம‌க்க‌ள் அடைய‌ விரும்பும் எந்த‌ பொருளும்- அவ‌ர்க‌ளைக் காக்க‌ முடியாது என்ப‌து தானே ஆன்மீக‌த்தின் அடிப்ப‌டை.

தொண்ணூராயிர‌ம் கோடி ரூபாய் ம‌திப்புள்ள சொத்துக்க‌ள், திருபாய் அம்பானியை ம‌ர‌ண‌த்தில் இருந்து காக்க‌ முடிந்த‌தா?

ஆஃப்கானில் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ குழுவிட‌ம் சிக்கிய‌ ஒருவ‌ரை அமேரிக்க‌, ருஷிய‌, சீன‌, இந்திய‌ நாடுக‌ள் கூட்டாக‌ அறிக்கை விட்டாலும் காக்க‌ நமுடியுமா? அப்ப‌டி மாட்டிக் கொள்ளாம‌ல் அவ‌ர் “ப‌த்திர‌மாக”‌ வீட்டில் இருந்தாலும் அவ‌ர் எத்த‌னை நாள் சாகாம‌ல் “ப‌த்திர‌மாக”‌ இருக்க‌ முடியும்? ந‌ம் நெருன்கிய‌ உற‌வின‌ர்க‌ள் சாகும் நிலையில் இருந்தால் அழுவ‌த‌த் த‌விர‌ ந‌ம்மால் ஆவ‌து வேரென்ன‌?

எந்த‌க் க‌ட‌வுளாவது இந்த‌ உல‌க‌த்தில் எந்த‌ ம‌னித‌னையோ, மிருக‌த்தியோ எப்போதும் சாகாம‌ல் க‌ப்பாற்றீ வைத்து இருக்கிறாரா?

பிரச்சினைக‌லுக்கு அடிமையாக‌ வாழ்ந்து, நோயால் வ‌ருந்தி, க‌டைசியில் சாகும் நாம், ந‌ம்முடைய‌ வாழ்க்கைய‌ நாமே தீர்மானிக்கும் வ‌லிமை உடைய‌வ‌ராக‌, அடிமை நிலையிலிருந்து முழு விடுத‌லையான‌ நிலையை, அதாவ‌து எந்த‌ துன்ப‌மும் ந‌ம்மை தாக்க‌ முடியாத‌ அள‌வுக்கு முழு விடுத‌லையான‌ நிலையை அடைய‌ முடியுமா?

நான் உட்ப‌ட இந்த‌ உல‌கிலுள்ளா எல்லா ம‌னித‌ர்களூம், கொடுமையான‌ இய‌ற்க்கையின் கையில் சிக்கி த‌விக்கும் அடிமை நிலையில் உள்ளதாக‌வே நான் க‌ருதுகிரேன். 

உட‌ல் இற‌க்கும் போது, உயிர் தொட‌ர்ந்து வாழ்ந்தாலும் ச‌ரி, இல்லை உயிரும் சேர்ந்து அழிந்தாலும் ச‌ரி –  எப்ப‌டியாக‌ இருப்பினும் நாம் ந‌ம்மைக் காக்க‌ இய‌லாத‌ அடிமை வாழ்க்கை வாழ்கிரோம்.

 அர‌ச‌னோ, ஆண்டியோ, செல‌வ்ந்த‌னோ, அறிங்க‌னோ, பாம‌ர‌னோஏழையோ, வெள்ளைக் கார‌னோ, க‌றுப்ப‌னோ, ம‌னித‌னோ, மாடோ எல்லோரும் அடிமை நிலையில் இருப்ப‌தாக‌வே நாம் தீர்மானிக்கலாம். இது ஒரு PROBLEM .

 இத‌ற்க்கு  SOLUTION த‌ருவ‌து எதுவோ அதுவே ஆன்மீக‌ம்.

Advertisements

8 Responses to "ஆன்மீக‌ம் என்பது என்ன?"

Do you have that so called SOLUTION???

With Love,
Ashok

வணக்கம்

நண்பர் திருச்சிக் காரர் அவர்களே, நீங்கள் கூறிய, அதாவது so called solvent எல்லா மனிதர்களிடமும் உள்ளது, ஆனால் மனிதர்கள் அதை சரியான முறையில் இன்னமும் கண்டு பிடிக்கவில்லை. இன்னொன்று அதை கண்டு பிடித்து உள்ள யாரும் முழுவதுமாக வெளியே சொல்லவில்லை. கேள்விப் பட்டவர்களின் முயற்சி அரைகுறையாகி அவர்கள் பைத்தியமானது மட்டும் மிச்சம். நமது முன்னோர்களால் அறியப் பட்ட இந்த சமாசாரத்தை அவர்களால் பல சோதனைக்கு ஆட்படுத்தப் பட்டு அதில் தேர்ந்தவர்களுக்கே கற்று தரப் பட்டது. அதுவே சரியான முறையான பிரம்ம வித்தை எனப்படும் ஒரு யோகம். ஆனால் அதிர்ஷ்ட வசமாக சாதாரண மனிதர்களால் பரிகசிக்கப் பட்டு அது இன்னமும் மிகச்சில மகான்களின் வசம் ஜீவித்துக் கொண்டு உள்ளது. அதுதான் நன்மையையும்கூட.

//தொண்ணூராயிர‌ம் கோடி ரூபாய் ம‌திப்புள்ள சொத்துக்க‌ள், திருபாய் அம்பானியை ம‌ர‌ண‌த்தில் இருந்து காக்க‌ முடிந்த‌தா?//

See some meaning of verses from Al Quran.
3:185. ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் –
இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை

20:15. ”ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்ததற்குத் தக்கபடி பிரதிபலன்கள் அளிக்கப்படும் பொருட்டு (நியாயத் தீர்ப்புக்குரிய) வேளை நிச்சயமாக வரவிருக்கிறது, ஆயினும் அதை மறைத்து வைக்க நாடுகிறேன்.

21:35. ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.

அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை. அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே, அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்;) ”எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!”

அன்புக்குரிய நண்பர் முஹம்மது அவர்களே,

குர் ஆனின் வாசகங்களை எல்லோரும் அறியத் தக்க வகையிலே இங்கே பதிவு இட்டதற்கு நன்றி.

கடவுள் என்பவர் உயிரைப் படைத்ததாக சொல்லப் படுகிறது, பிறக்கும் போது ஒருவரை குருடராகவும், மற்றொருவரை எந்தக் குறைபாடும் இன்றி படைப்பது என்பதற்கான காரணம் என்பது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. மற்றபடி நாம் சந்திக்கும் பல்வேறு துன்பங்களுக்கும் காரணம் என்ன என்பதும் நமக்கு தெரியவில்லை.

எப்படி இருப்பினும் ஒருவர் செய்யும் செயல்களுக்கு ஏற்ப தீர்ப்பு என்பது ஒத்துக் கொள்ளக் கூடிய நியாயாமான தத்துவமே. ஆனால் தவறு செய்யாதவர் இவ்வுலகில் தண்டனை அனுபவிப்பது என் என்று தெரியவில்லை.

நீங்கள் குர் ஆனின் இருந்து குறிப்பிட்டுள்ள வாசகங்களில் எதுவும் ஆட்சேபனைக்கு உரியதாக இல்லை. ஆனால் கடைசியாக குறிப்பிட்டுள்ளது வருத்தத்தை தருவதாக உள்ளது. //காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!”//
காபிர்களாகிய நாங்கள் உங்களுக்கு செய்த கெடுதல் என்ன? எதற்கு நீங்கள் எங்கள மீது வெற்றி அடைய வேண்டும்? எங்களை ஏன் காபிர்கள் என்று நீங்கள் அழைக்க வேண்டும்?

ஆன்மிகம் என்றால் ஆனந்தம் என்று பொருள் யென்பதை சத்குரு ஜக்கி வாசுதேவ் அழகாக சொல்லுவார் .

அன்புக்குரிய திரு. சூரியா அவர்களே,

கட்டுரையைப் படித்ததற்கும் கருத்து தெரிவித்ததற்கும் என் நன்றிகள்.

ஆன்மீகம் என்றால் ஆனந்தம் என்று சொல்லுவதும் சரிதான். ஆனந்தம் என்று சொல்வதை விட அமைதி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக அல்லது அமைதியினால் உருவாகும் ஆனந்தம் என்று சொல்வது மிகப் பொருத்தமாக இருக்கும்.

துன்பம் இருக்கும் வரை அமைதியினால் உருவாகும் ஆனந்தம் எப்படி வரும்?

நம்மோ நோக்கி வரும் துன்பங்களால் மனம் பாதிப்படையாத நிலையை அடையும் வரையில் எப்படி ஆனந்தம் வரும்?

நாம் சுதந்திரமாக இல்லாத வரையில் , நம்மை நோக்கி வரும் துன்பங்களை உதாசீனம் செய்யும் வலிமை இல்லாதவராக இருக்கும் வரை அமைதியினால் உருவாகும் ஆனந்தம் எப்படி வரும்?

ஆனந்தம் ஏற்கெனவே நம்மிடம் இருக்கிறது. ஆனால் அறியாமையினால் உண்டான கவலை அதை மறைக்கிறது. கவலையை உதறும் அறிவைப் பெறும்போது நாம் ஆனந்தத்தை அனுபவிக்கலாம்.

ARUMAI

Dear Mr. Velumani.

Thanks for your visit and appreciation.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: