Thiruchchikkaaran's Blog

இறைவன் இருக்கின்றானா?

Posted on: December 16, 2009


பகுத்தறிவாளர்களுக்கு மற்றவர்களை விட பொறுப்பும், நிதானமும், எச்சரிக்கையும் அவசியமாகும்.

ஒவ்வொரு வார்த்தையையும் பகுத்தறிவாளன் மிகவும் யோசித்தே, பலமுறை சிந்தித்தே கூற வேண்டிய நிலை உள்ளது.

ஏனெனில் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு செயல் படுபவர்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. என்ன வேண்டுமானாலும் கூறலாம்.  முழ‌ம் முழ‌மாக‌ காதில் பூ சுத்தலா‌ம்! கேட்டால் “எனக்கு நம்பிக்கை இருக்கிறது” என்பார்கள்,
“நான் சாட்சி குடுக்கிறேன்”, என்பார்கள்.  நேரிலே பார்த்து கை குலுக்கி விட்டு வந்தது போல, அவ்வளவு உறுதியாக சரடு விடுவார்கள்.

ஆனால் பகுத்தறிவுவாதி நேர்மையானவன். அவன் தன்னால் முடிந்த வரைக்கும் உண்மையைத் தேடுவான். தெரிந்த வரையில் கண்டதைக் கூறுவான்.

“கடவுள் இருக்கிறார் என்பதை இது வரை யாரும் எனக்கு காட்டவில்லை. எனவே கடவுள் இருப்பதை ஆதாரம் காட்டி நிரூபிக்காதவரை கடவுள் இருக்கிறார் என்பதை நாம் ஒப்புக் கொள்ள முடியாது” என்பதே சரியான பகுத்தறிவு என்பது எனது தாழ்மையான கருத்து.

அதே நேர‌ம் க‌ட‌வுள் இல்லை, கடவுள் இல்ல‌வே இல்லை என்று கூறும் க‌ருத்து சுத‌ந்திர‌ம் எல்லொருக்கும் வ‌ழ‌ங்க‌ப் ப‌ட‌ வேண்டும். பார்க்காத‌ க‌ட‌வுளை இருக்கிறார் என்று அடித்து சொல்லும் போது, பார்க்காத‌ க‌ட‌வுளை பார்க்க‌வில்லை என்று கூற‌ அனும‌தி இல்லையா? இதைக் கூறினால் தண்ட‌னை!

க‌ட‌வுள் இல்லை, கடவுள் இல்ல‌வே இல்லை என்று கூறும் க‌ருத்து சுத‌ந்திர‌ம் எல்லொருக்கும் வ‌ழ‌ங்க‌ப் ப‌ட‌ வேண்டும்.

பார்க்காத‌ க‌ட‌வுளை, இருக்கிறார் என்று அடித்து சொல்லும் போது – பார்க்காத‌ க‌ட‌வுளை பார்க்க‌வில்லை என்று கூற‌ அனும‌தி இல்லையா? இதைக் கூறினால் தண்ட‌னை! க‌டவுள் இல்லை என்று சொல்வ‌தை ஏன் குற்றமாக கருதவேண்டும்?

பகுத்தறிவுவாதி, “கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா?” என்று அறிய தொடர்ந்து ஆராய்ச்சி செய்வான். அதில் தவறில்லை. நாம் ந‌ம்பிக்கை வாதிகளை விட‌ நேர்மையாக‌ இருப்பொம்.

க‌ட‌வுளை பார்க்க முடியாவிட்டாலும் பரவாயில்லை – கடவுள் எல்லாம் வல்லவர் என்று கூறுகிறீர்களே, நிலவை ஆறு மாதம் தொடர்ந்து எல்லா நாட்களிலும்  முழு நிலவாக ஒளி விடச் செய்து   காட்ட முடியுமா?

Advertisements

14 Responses to "இறைவன் இருக்கின்றானா?"

உங்கள் இந்தப் பதிவுக்கான விடையை எனது அடுத்த புத்தகத்தில் மிக தெளிவாக விளக்க இருக்கிறேன். உங்களுக்கும் உதவுமென நினைக்கிறேன். நன்றிகளுடன்.

சகோதரர் மறவன்,

நன்றி, வரவேற்கிறோம்.

மனிதனின் உடல் மரணம் அடையும் போது,மனித உயிர் தொடர்ந்து வாழ்கிறதா,இல்லை அழிகிறதா என்னும் ஆராய்ச்சி ஆதி கால முனிவனுடனோ, சித்தருடனோ, புத்தருடனோ, ஏசுவுடனோ, முகமதுடனோ, ஆதி சங்கரருடனோ, விவேகானந்தருடனோ, பெரியாருடனோ முடிந்து விடவில்லை!

இந்தக் கேள்விக்கு விடை காணும் பொருட்டு, ஆராய்ச்சி செய்யும் உரிமை இந்த உலகத்தில் எல்லோருக்கும் உண்டு!

நண்பரே,
கடவுளை பற்றிய உங்கள் கருத்து அடிப்படையிலேயே தப்பானது என்பதே என் தாழ்மையான கருத்து. ஆண்டவன் நீங்கள் சொல்வதையெல்லாம் செய்யும் ஏவலாளன் அல்ல. நீங்கள் வேலை செய்யும் அலுவலகத்தின் பெயர் பலகையை தலைகீழாக ஒரு மாதம் தொங்க விட்டால்தான் நீங்கள் இந்த நிறுவனத்தின் முதலாளி என்று நீங்கள் உங்கள் முதலாளியிடம் கூற முடியுமா? உங்கள் முதலாளிக்கு உங்களிடம் தான் ஒரு முதலாளி என்று நிரூபிக்க தேவை இல்லை. அதை போலதான் ஆண்டவனுக்கும் உங்களிடம் நிலவை நிறுத்திவைத்து தன்னை நிருபிக்கும் தேவை இல்லை. அவர் தன்னை மக்களுக்கு அடையாளம் காட்டும் சில இடங்களும் அவருடைய கிருபையினால் தான். நீங்கள் சொன்னதையெல்லாம் செய்ய கடவுள் ஒரு அலாவுதீன் பூதம் அல்ல.
நன்றி,
அசோக்

சகோதரர் அசோக் குமார் கணேசன் அவர்களே,

க‌ட‌வுள் என்ப‌வ‌ர் இன்று உல‌க‌த்தில் யாராலும் பார்க்க‌ப் ப‌ட‌வில்லை, நிரூபிக்க‌ப் ப‌ட‌வில்லை என்ப‌து எல்லொருக்கும் தெரிந்த‌தே, நீங்க‌ளும் அறிந்த‌தே. நாங்க‌ள் க‌ட‌வுளை (அப்ப‌டி ஒருவ‌ர் இருந்தால்),
“க‌ட‌வுளே, நீ இருப்ப‌தை நிரூபித்துக் காட்டு” என்று க‌ட‌வுளுக்கு நாங்க‌ள் க‌ட்ட‌ளை போட‌வில்லை.

நான் சொன்ன‌து யாரைப் பார்த்து என்றால்,

“க‌ட‌வுள் இருக்கிரார், அவ‌ர் அப்ப‌டி செய்ய‌ சொன்னார், இப்ப‌டி வ‌ணங்க‌ சொன்னார், இப்படி வ‌ணங்காம‌ல் வேறு முறையிலே வ‌ண‌ங்குப‌வதை க‌ண்டிக்கிரோம், என்று க‌ட‌வுளின் பெய‌ரால் ப‌ல‌ க‌ட்ட‌ளைக‌ளைப் போட்டு, வெறுப்பு க‌ருத்துக்களைப் ப‌ர‌ப்பி, உல‌க‌த்திலே இர‌த்த‌ ஆறு ஓட‌ விடுப‌வ‌ர்களை பார்த்த்தான், இப்ப‌டி அமைதியைக் கெடுக்கும் நீங்க‌ள் பார்க்க‌ப் ப‌டாத‌ நிரூபிக்க‌ப‌டாத‌ க‌ட‌வுளின் பெய‌ரால் இத்த‌னை ர‌வசு விட்டு, இத்த‌னை பேரின் தாலியை அறுக்கிறீர்க‌ள், என்ப‌தைச் சுட்டிக் காட்ட‌த்தான் அப்ப‌டிக் க‌ட‌வுள் இருந்தால் காட்டுங்க‌ள், அல்ல‌து நிரூபியுங்க‌ள் என்று தெளிவாக‌ சொல்கிரோம்.

வெறுப்புக் க‌ருத்துக்க‌ளைப் ப‌ர‌ப்பாம‌ல், காட்டு மிராண்டிக் க‌ருத்துக்க‌ளைப் ப‌ர‌ப்பாம‌ல், யாரையும் க‌ட்டாய‌ப் ப‌டுத்தாம‌ல், யாருக்கும் தொல்லை த‌ராம‌ல், அமைதியான‌ முறையிலே, வ‌ழிபாடு செய்வ‌தை நாங்க‌ள் குறை கூற‌வில்லை.

என்னுடைய‌ க‌ருத்தாக்க‌ம் மிக‌ ச‌ரியான‌து.

// “கடவுள் இருக்கிறார் என்பதை இது வரை யாரும் எனக்கு காட்டவில்லை. எனவே கடவுள் இருப்பதை ஆதாரம் காட்டி நிரூபிக்காதவரை கடவுள் இருக்கிறார் என்பதை நாம் ஒப்புக் கொள்ள முடியாது” என்பதே சரியான பகுத்தறிவு என்பது எனது தாழ்மையான கருத்து.// I Stand with this point.

நீங்க‌ள் கட‌வுளின் பெயரால் க‌ட்ட‌ளைக‌ளைப் போட‌ விரும்பினால் அப்ப‌டி க‌ட‌வுள் ஒருவ‌ர் இருப்ப‌தை நிரூபித்து விட்டு பிற‌கு தான் க‌ட்ட‌ளைக‌ளைப் போட‌வோ, அவ‌ர் இருக்கிறார் என்று அடித்து சொல்ல‌வோ முடியும், அதுதான் நியாய‌ம்.

We are not imposing any thing or command any body!

We only say that if you impose or command any thing, you please prove the authority.

Fair enough?

அருமை சகோதரர் அசோக் குமார் கணேசன் அவர்களே,

நீங்கள் நிரூபிக்கப் படாத , காட்டப் படாத கடவுளை இருப்பதாக கூறி,

அதோடு அவரை எனக்கு முதலாளி ஆகவும் ஆக்கி விட்டீர்கள்!

பகுத்தறிவை விடுத்து, மற்றவர்களை அடிமைப் படுத்தி தான் முதாலாளி ஆக ஒரு சிலர் உருவாக்கியதை எல்லாம் அப்படியே வெகுளித் தனமாக நம்புவதால் வரும் மன பயம் தான், கடவுள் முதலாளி போன்ற கற்பிதங்கள் எல்லாம்.

இந்தியாவில் பயின்ற நீங்கள் தைரியமாக இருக்க வேண்டாமா?

“நாமார்க்கும் குடி அல்லோம்,
நமனை அஞ்சோம் ,
ஏமாப்போம் , பிணியறியோம்,
இனி எதற்கும் இடர் படோம்”

என்று தைரியமாக முழக்கம் இட்ட தமிழ் பாட்டை கேட்டது இல்லையா?

புத்தர் ஆசையை அடக்கி, தியானம் ,அன்பு மூலமாக துன்பங்களை வெல்லும் திறன் பெற்று சுதந்திர நிலை அடையவில்லையா?

தைரியமாக இருங்க பிரதர்.

யாரும் நமக்கு முதலாளி இல்லை. நாம் எல்லோருமே முதலாளி தான்.

ஒரு தாய், தன் பிள்ளைக்கு இவர்தான் அந்த பிள்ளையின் தந்தை என்று ஒருவனை அறிமுக படுத்துகிறாள். இதற்காக அவள் எந்த ஒரு அறிவியல் பூர்வமான நிரூபணமும் செய்வதில்லை. தன் பிள்ளை அந்த தந்தையை மதிக்க வேண்டும் என்று அன்பு கட்டளை இடுகிறாள். அந்த பிள்ளையும் தன் தாயின் வார்த்தையை நம்பி தன் தாய் காண்பித்தவனை தந்தையாக போற்றுகிறது. பல சமயம் தன் தாயைவிட, அவள் மூலம் அறிமுகபடுத்தப்பட்ட தந்தையிடம் பாசமாக இருக்கிறது.
இதை நாம் காலம் காலமாக பார்த்து வருகிறோம்.
Why not the same apply to GOD? Without any scientific proofs most of the kids accept their father. GOD is nothing but the father in a much bigger sense.
Thanks,
Ashok

நீங்கள் முதலாளியா இல்லையா என்று நான் சொல்ல எதுவும் இல்லை. ஆனால் நான் முதலாளி என்று சொல்லிக்கொள்ள எனக்கு எதுவுமே இல்லை. எனது என்று சொல்லிக்கொள்ள எனக்கு எதுவும் இல்லை. நானே எனக்கு சொந்தமில்லை. இப்படி இருக்க நான் எப்படி முதலாளியாக முடியும்? ஒரு தொழிலில் “முதல்” போட்டவன்தான் முதலாளி. அப்படி இருக்க ஆண்டவந்தானே முதலாளியாயிருக்க முடியும். என் தேவைகளை எல்லாம் என் முதலாளி எனக்கு தருகிறான், அவர் என்னில் மகிழும்படி நான் நடந்துகொள்ள விரும்புகிறேன். பல நேரங்களில் என் கடமையிலிருந்து தவறுகிறேன், அதனால் அவருக்கு பயப்படுகிறேன். ஆனாலும், என் பயத்தைவிட அவர் மீது கொண்ட அன்பு பெரியது. என் அன்பைவிட அவர் என்மீது கொண்ட அன்பு இன்னும் பெரியது.

தாய் தந்தையை காட்டுவது போல கடவுளைக் காட்டுங்கள், அல்லது நிரூபியுங்கள். ஒரு குழந்தையின் தந்தை இறந்து விட்டிருந்தாலும் அவர் வாழ்ந்ததற்கான ஆதாரம் அல்லது நிரூபணத்தை அளிக்க முடியும்.

ஆனால் கடவுள் விடயத்தில் ஒரு நிரூபணமும் இல்லை, யூகம் அல்லது நம்பிக்கை மாத்திரமே உள்ளது. நிரூபணம் தேவை இல்லை என்று விட்டு விட முடியாது.

கட்டளைகள் போடப் படுவதை புரிந்து உள்ளீர்கள். கடவுள் என்று ஒரு கான்செப்டை வைத்து சிலர் கட்டளைகளைப் போட்டு உள்ளனர்.அதுவும் வெறுப்புக் கட்டளைகளை, காட்டு மிராண்டிக் கட்டளைகளை, தங்களின் சாம்ராஜ்ஜிய விஸ்தரிப்புக்காக இனப் படுகொலை கட்டளைகளைப் போட்டு உள்ளனர்.

நீங்கள் சிந்திக்க வேண்டும். அப்படியே நம்பி, வெறுப்புக் கருத்துக்களை வியாபாரம் செய்பவர்களின் மிரட்டலுக்கு நாம் அடிபணிந்து, மனித சமுதாயத்தின் எதிர்காலத்தை நாம் பணயம் வைப்பதில் உள்ள ஆபத்து என்ன என்பதை தயவு செய்து சிந்தியுங்கள்.

///அப்படி இருக்க ஆண்டவந்தானே முதலாளியாயிருக்க முடியும்///

ஆண்டவனை முதலாளி என்று நினைத்தால் நீங்கள் அவனது அடிமையா? இறைவனுக்கு நாம் அடிமை என்றால் அவனோடு எப்படி ஒன்றிக்கலக்க முடியும்.

இந்து தர்மப்படி இறைவன் என்பவன் பரமாத்மா. அவனுக்கு எந்தப் பதவியும்கிடையாது. ஜீவாத்மாவான சலனாங்களுடன் வாழும் நாம் பரமாத்மாவோடு ஒன்றிக் கலந்து நாமும் அதுவாகவே ஆக வேண்டும். அதற்கான ஆன்மீக தேடலில் ஈடுபட வேண்டும். அதை விடுத்து ஆவனை முதலாளி ஆக்கி விட்டால் நீங்கள் முக்தி ஆடைய முடியாது.

இந்து தர்மத்தை புரிந்து கொண்டு அதன் வழியில் வாழுங்கள். நன்றாக புலப்படும் அசோக்.

//ஆண்டவனை முதலாளி என்று நினைத்தால் நீங்கள் அவனது அடிமையா? இறைவனுக்கு நாம் அடிமை என்றால் அவனோடு எப்படி ஒன்றிக்கலக்க முடியும்.//
நண்பர் ராம்,
எத்தனையோ இந்து அடியார்களும், தங்களை இறைவனுக்கு அடிமையாகவே வருணித்து உள்ளனர். இதனால் அவர்கள் முக்தி அடையாமல் போய் விடுவார்கள் என்று கூறுகிறீர்களா? முதலாளி என்பதோ எஜமானன் என்பதோ பதவி அல்ல. ஒரு பொருளுக்கு சொந்தக்காரன், அதன் எஜமானன் ஆகிறான். அதனால் படைத்தவன் எஜமானனாகவும் இருக்கிறான்.

மிக்க நன்றிகள்.

திருச்சிக்காரரே,
உங்களது இந்த கட்டுரை ஒருதலை பட்சமானது என்றே எனக்கு தோன்றுகிறது. “கடவுள் இருக்கிறனா” என்று மரியாதை இல்லாமல் எல்லாம் வல்ல இறைவனை அழைப்பதில் இருந்தே நீங்கள் “கடவுளை நம்பாதவர்” அல்லது “கடவுளை கடவுளாக ஏற்காதவர்” என்று காட்டுகிறது. அல்லது கடவுளை அறியமுடியவில்லையே என்ற வெறுப்பாகவும் இருக்கலாம்.
உங்கள் தந்தையை இப்படி அழைப்பீர்களா? அல்லது உங்கள் நண்பனது தந்தையையாவது இப்படி “உங்கப்பன் இருக்கானா??” என்று கேட்பீர்களா? ஏனென்றால் அப்படி ஒருவர் உண்டு என்று நம்புகிறீர்கள். அதனால் அந்த மரியாதை வருகிறது. உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள் விடை தெரியும்.
//க‌ட‌வுள் இல்லை, கடவுள் இல்ல‌வே இல்லை என்று கூறும் க‌ருத்து சுத‌ந்திர‌ம் எல்லொருக்கும் வ‌ழ‌ங்க‌ப் ப‌ட‌ வேண்டும்.//
அதெப்படி? நீங்கள் கடவுளை காணவில்லை அல்லது உணரவில்லை என்றால், கடவுள் இருக்கிறாரா என்று தெரியவில்லை என்றுதான் சொல்லலாமே தவிர இல்லை என்று எப்படி கூறமுடியும்?
There can be agnostics, but logically there is no Athist. People who claim saying that there is no GOD are similar to a person who never seen a camel and saying that there is no camel in the entire world.
Thanks,
Ashok

அன்பு ச‌கோத‌ர‌ர் அசோக்ஜி அவ‌ர்க‌ளே,

//க‌ட‌வுள் இல்லை, கடவுள் இல்ல‌வே இல்லை என்று கூறும் க‌ருத்து சுத‌ந்திர‌ம் எல்லொருக்கும் வ‌ழ‌ங்க‌ப் ப‌ட‌ வேண்டும்.//
அதெப்படி? நீங்கள் கடவுளை காணவில்லை அல்லது உணரவில்லை என்றால், கடவுள் இருக்கிறாரா என்று தெரியவில்லை என்றுதான் சொல்லலாமே தவிர இல்லை என்று எப்படி கூறமுடியும்?

இத‌ற்க்கு நாம் முன்பு எழுதியுள்ள‌தே பொருத்த‌மான‌ ப‌திலாக‌ இருக்கும். //பார்க்காத‌ க‌ட‌வுளை, இருக்கிறார் என்று அடித்து சொல்லும் போது – பார்க்காத‌ க‌ட‌வுளை பார்க்க‌வில்லை என்று கூற‌ அனும‌தி இல்லையா? இதைக் கூறினால் தண்ட‌னை! க‌டவுள் இல்லை என்று சொல்வ‌தை ஏன் குற்றமாக கருதவேண்டும்?//

அதோடு,

இருவ‌ர் இருக்கிறார்க‌ள், இருவ‌ரிட‌மும் காசு, ப‌ண‌ம் சுத்த‌மாக‌ இல்லை. த‌ன்னிட‌ம் ச‌ல்லிக் காசு கூட‌ இல்லாத‌ ஒருவ‌ர், த‌ன்னைப் பெரிய‌ கோடீசுவ‌ராக‌ காட்டிக் கொள்கிறார். இன்னொருவ‌ர், “ஐயா, என்னிட‌ம் காசு ப‌ண‌ம் எதுவும் இல்லை” என்று உண்மையை சொல்கிறார். யார் நேர்மையான‌வ‌ன்?

2)There can be agnostics, but logically there is no Athist. People who claim saying that there is no GOD are similar to a person who never seen a camel and saying that there is no camel in the entire world.

ஒட்ட‌க‌த்தை பார்த்த‌வ‌ர்க‌ள் பல‌ர் இருக்கிறார்க‌ள் இந்த‌ உல‌க‌த்தில். ஆனால் ஒருவ‌ர் கூட‌ க‌ட‌வுளை பார்க்க‌வில்லை. என‌வேதான் க‌ட‌வுள் என்கிர‌ கான்செப்டே ஒரு க‌ற்ப‌னையாக‌ இருக்க‌ கூடும் என்கிற‌ க‌ருத்து வ‌லிமை அடைகிற‌து.
3)உங்களது இந்த கட்டுரை ஒருதலை பட்சமானது என்றே எனக்கு தோன்றுகிறது. “கடவுள் இருக்கிறனா” என்று மரியாதை இல்லாமல் எல்லாம் வல்ல இறைவனை அழைப்பதில் இருந்தே நீங்கள் “கடவுளை நம்பாதவர்” அல்லது “கடவுளை கடவுளாக ஏற்காதவர்” என்று காட்டுகிறது.

“இறைவ‌ன் இருக்கின்றானா?”- இந்த‌ வாச‌க‌ம் க‌விங்க‌ர் கண்ண‌தாச‌ன் எழுதிய‌ ஒரு பாட‌லின் முத‌ல் வ‌ரியாகும். அதையே இக் க‌ட்டுரைக்கு த‌லைப்பாக‌ வைத்தோம். ம‌ற்றப‌டி க‌ற்ப‌னையாக‌ உருவாக்க‌ப் ப‌ட்ட‌ பாத்திர‌ங்க‌ளைக் கூட‌ நாம் கார‌ண‌மில்லாம‌ல் அவ‌ம‌ரியாதை செய்ய‌வோ, வெறுக்க‌வோ விரும்ப‌வில்லை

இந்த‌க் க‌ட‌வுள் என்று க‌ற்பிதப் ப‌டுத்த‌ப்ப‌டுப‌வ‌ர் மாலை நேர‌ங்க‌ளில் சோலையிலே உலா வ‌ந்த‌தாக‌ க‌தைக‌ள் உள்ள‌ன‌ என்று நினைக்கிறேன். அது உண்மையானால், நான் எப்போதாவ‌து அவ‌ரை அண்ணா ந‌க‌ர் ட‌வ‌ர் பார்க்கிலே ச‌ந்திக்க‌ நேர்ந்தால் , அவ‌ருடைய‌ “வ‌ல்ல‌மை” என்ன‌ என்று பார்த்து விட்டு,அதற்க்கு ஏற்றார் போல‌ அவ‌ருக்கு மாண்பு மிகு…. மான‌ மிகு… எல்லாம் வ‌ல்ல‌… இப்ப‌டியாக‌ ப‌ல ப‌ட்ட‌ங்க‌ளை சூட்டி க‌வுர‌வ‌ப் ப‌டுத்துவேன் என‌ உறுதி அளிக்கிறேன். நீங்க‌ள் அவ‌ரை ஏதாவ‌து சோலையிலே ச‌ந்திக்க‌ நேர்ந்தால், அதை எங்க‌ளுக்கு தெரிய‌ப் ப‌டுத்துங்க‌ள்.

இதை அறிவியல் பித்து என்று சொல்லலாம். ஒரு வானவியல் ஆராய்ச்சியாளன் எங்கோ ஒரு புது கிரகம் இருப்பதாக கூறினால் அதை கேள்வி கேட்காமல் ஒத்துக்கொள்வீர்கள். ஏனென்றால் அது அறிவியல் என்ற முத்திரையுடன் வருகிறது, பல அறிவியல் வல்லுனர்களும் அதை வழிமொழிகிறார்கள் என்ற காரணத்தால்.
ஆனால், இவர்தான் கடவுள் என்று கடவுளை உணர்ந்தவர்கள் சாட்சி கொடுத்தாலும், மற்ற ஆன்மீக வல்லுனர்கள் பரிந்துரைத்தாலும், நீங்கலாக காணும்வரை அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று அடம் பிடிக்கிறீர்கள். அறிவியல் முத்திரையுடன் வந்தால் அப்படியே ஏற்றுக்கொள்வதும், ஆன்மிகம் என்றால் கேள்வி (சற்றும் யோசிக்காமல்) ஆதாரம் கேட்பதும் இப்போது பேஷன் ஆகி விட்டது. அதாரம் கொடுத்தாலும், உங்கள் கர்ப்பனையுடம் உண்மை கடவுள் ஒத்துப்போவதில்லை என்றால் நிராகரிக்கவும் செய்கிறீர்கள்.
உங்களை நான் கட்டாயப்படுத்தவில்லை. உண்மையை கூறினேன்.
நன்றி,
அசோக்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: