Thiruchchikkaaran's Blog

த‌ல்லி தெலுங்கானா- 1

Posted on: December 14, 2009


தமிழ் நாட்டுக்கு அண்டைய மாநிலங்களுள் ஒன்று ஆந்திரா. கடந்த இரண்டு  வாரமாக அந்த மாநிலத்தின் ஒரு பகுதியான தெலுங்கானா தனி மாநிலமாகப் பிரிக்கப் படுவதற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் போராட்டங்களும், வன்முறைகளும் நடை பெற்று ஆந்திர மாநிலத்தை அல்லோ கல்லப் படுத்தி வருகின்றன.  

அதிகாரம் பரவலாக்கப் படுவது நல்லதே. ஒரே இடத்தில் அதிகாரக் குவிப்பு, சர்வாதிகார, எதேச்சதிகார போக்கிற்கு வலு சேர்க்கும்.  அதே நேரம் ஒன்றாக இருப்பதிலும் நன்மைகள் உள்ளன. எதில் அதிக நன்மை என்று முடிவு செய்ய வேண்டியது தெலுங்கானா மற்றும் ஆந்திர மக்கள்தான்.

இந்தியர்கள் யாரும் இந்திய நாட்டின் எந்தப் பகுதிக்கும் செல்லவும், வாழவும் இந்திய அரசியல்  அமைப்பு உரிமை அளித்து உள்ளது.   தெலுங்கானா தனி மாநிலமானாலும் அது இந்தியாவிற்குள் தான் இருக்கிறது. அங்கே இருப்பவர் இந்தியராகத் தான் இருக்கிறார். எனவே மாநிலங்கள் பிரிக்கப் பட்டு புது மாநிலங்கள் உருவாக்கப் படுவதால் இந்திய நாட்டிற்கோ,  மக்களுக்கோ பிரச்சினை இல்லை.

 இந்திய‌ விடுத‌லைக்கு முன் தெலுங்கானா, ஹைத‌ராபாத் ந‌வாப் அர‌ச‌ர்க‌ளின் ஆட்சியின் கீழ் இருந்த‌து.  வ‌ல்ல‌பாய் ப‌டேல் இந்தியாவை செப்ப‌னிட்டு ஒன்று சேர்த்த‌ பிற‌கு இந்த‌ப் ப‌குதி ஹைத‌ராபாத் ராஜ‌தானியாக‌ இருந்தது.  அப்போது ஆந்திரா என்று த‌னி மாநில‌ம் இல்லை. ஆந்திர‌ப் ப‌குதிக‌ள் ம‌த‌ராஸ் ராஜ‌தானியின் ஒரு ப‌குதியாக‌ இருந்த‌து.

1953ம் வ‌ருட‌ம் ஆந்திரா, சென்னை ராஜ‌தானியில் இருந்து பிரிக்க‌ப் ப‌ட்டு த‌னி மாநில‌மாக‌ உருவ‌க்க‌ப் ப‌ட்ட‌து.

 1956ம் வ‌ருட‌ம் மொழி வாரி மாநில‌ங்க‌ள் உருவாக்க‌ப் ப‌ட்ட‌ போது, ஹைத‌ராபாத் மாநில‌மாக‌ இருந்த‌  தெலுங்கானா ஆந்திராவுட‌ன் இணைக்க‌ப் ப‌ட்டு ஆந்திர‌ பிர‌தேஷ் என‌ பெரிய‌ மாநில‌மாக‌ உருவெடுத்த‌து.

த‌னி தெலுங்கானா மாநில‌ம் அமைக்க‌ வேண்டும் என‌ போராட்ட‌ங்க‌ள் அவ்வ‌ப் போது தொட‌ர்ந்து ந‌ட‌த்த‌ப் ப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌.  இப்படி தெலுங்கானா மாநில‌ம் அமைக்க‌ப்ப‌டுவ‌தால் பொது ம‌க்களுக்கு கிடைக்க‌ கூடிய‌ லாப,‌ ந‌ட்டங்க‌ள் என்ன‌?

உண்மையை சொன்னால் உழைக்கும் ம‌க்க‌ளுக்கு அவ‌ர்க‌ள் அரசிய‌ல் வாதிக‌ளாலும், அதிகார‌ வ‌ர்க்க‌த்தாலும், பெரு முத‌லாளிக‌ளாலும் சுர‌ண்ட‌ப் ப‌ட்டு வ‌ருவ‌து மாறாத‌ வ‌ரை பெரிய‌ மாறுத‌ல் எதுவும் இல்லை. உழைத்துப் பிழைப்ப‌வ‌னின் கோம‌ண‌ம் கூட‌ விடாது உருவ‌ப்ப‌டுவ‌து இந்தியாவின் எல்லாப் ப‌குதிக‌ளிலும் ந‌டைபெற்று வ‌ருகிர‌து.  இதிலும் ஒற்றுமைதான்.

அதே நேர‌ம் ஆந்திர‌ மாநில‌த்தை ஆளும் வ‌ர்க்க‌ம், பெரும்பாலான‌ முத‌ல்வ‌ர்க‌ள், முக்கிய‌ அமைச்ச‌ர்க‌ள் எல்லோரும் ஆந்திர‌ப் ப‌குதியை சேர்ந்த‌வ‌ர்க‌ள், தெலுங்கானா ப‌குதியில் ஹைத‌ராபாத் ந‌க‌ர‌ம் த‌விர‌ ம‌ற்ற இட‌ங்க‌ளின் வ‌ளர்ச்சி அடைவ‌தில் அர‌சு க‌வ‌ன‌ம் செலுத்த‌வில்லை, அர‌சுப் ப‌ணிக‌ளில் அதிக‌ம் பேர் ஆந்திரா ப‌குதியை சேர்ந்த‌வ‌ர்க‌ள், தெலுங்கானா ப‌குதியை சேர்ந்த‌வ‌ர்க‌ள் அரசுப் ப‌ணிக‌ளில் புற‌க்க‌ணிக்க‌ப் ப‌டுகின்ற‌ன‌ர் –  இப்படியாக‌ தெலுங்கானா ப‌குதி ம‌க்க‌ள் ஆத‌ங்க‌ப் ப‌ட்டு வ‌ந்த‌ன‌ர். தெலுங்கானா ப‌குதியை சேர்ந்த‌ ஒரு ந‌ண்ப‌ர், இந்த‌க் க‌ருத்தை எண்ணிட‌ம் சில‌ வ‌ருட‌ங்க‌ள் முன்பே சொன்னார்.

இந்தப் சூழ்நிலையில்  இப்போது நடைபெறும் போராட்டங்களின் உண்மையான  பின்னணி என்ன?  

 நமது நாட்டிலே “மக்களின் நன்மைக்காக” என்று கூறி அரசியல் வாதிகள் நடத்தும் பெரும்பாலான போராட்டங்களின் உண்மை நோக்கம் அவர்களின் அரசியல், வாக்கு வங்கி,  பொருளாதார ஆதாயத்திற்காகத்தான் இருக்கும். 

அரசியலில் சரிந்து வரும் தன்னுடைய செல்வாக்கை நிலை நிறுத்தவே சந்திரசேகர ராவ் அதிரடி உண்ணா விரதத்தை ஆரம்பித்தார் என்று கூறப் பட்டாலும், அவருடைய உண்ணா விரதத்துக்கு தெலுங்கானா மக்களின் ஆதரவு இருந்தது.  காங்கிரெஸ் மேலிடமும் தெலுங்கானா மாநிலம் அமையும் என்று அறிவித்தது.

ஆனால் ஆந்திராவில் உள்ள “மக்கள்” பிரதிநிதிகளுக்கு இதில் என்ன பிரச்சினை? பல ஆந்திர “மக்கள்” பிரதிநிதிகள்,  ஹைதராபாத்திலும் அதை சுற்றியுள்ள பகுதியிலும், தங்கள்  பணத்தை ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்து உள்ளனர். அந்த நிலங்களில்  பெரிய கட்டிடங்களைக் கட்டவும், மேலும் இது போன்ற “தொழில் வளர்ச்சி”க்கும், ஆந்திர அரசிடம் அனுமதி வாங்குவது அவர்களுக்கு எளிது.  

 தனி மாநிலமாக தெலுங்கான உருவெடுத்து அதன் தலை நகர் ஹைதராபாத் ஆகி விட்டால் அவர்களின் வியாபாரம் படுத்து விடும். அதன்னியில் நகரில் உள்ள பெரிய தொழில் நிருவனங்களைடம் அன்பளிப்பு பெரும் வாய்ப்பும் இல்லாமல் போய் விட்டது. கூகிள், சத்யம், உள்ளிட்ட மிகப் பெரிய தொழில் நிறுவங்கள் உள்ள நகரம், உலகின்  முக்கிய நகரங்களில் ஒன்றாகி விட்டது.

இந்த நிலையிலே இந்தப் பிரச்சினையை காங்கிரெஸ் அரசு எப்படிக் கையாளப் போகிறது,  இன்னும் எப்படிக் குழப்பப் போகிறது  என்பதைப் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisements

2 Responses to "த‌ல்லி தெலுங்கானா- 1"

///பெரிய தொழில் நிருவனங்களைடம் அன்பளிப்பு பெரும் வாய்ப்பும் இல்லாமல் போய் விட்டது. கூகிள், சத்யம், உள்ளிட்ட மிகப் பெரிய தொழில் நிறுவங்கள் உள்ள நகரம்///

அதானே பிரச்சனை, இல்லன்னா நாடு எத்தனை துண்டானா இவங்க ஏன் கவலைப் படப்போறாங்க.

நான் குறிப்பிட்டு சொல்லவிரும்பினால் அது உங்களைத்தான் இருக்கும். நல்ல பதிவு வாழ்த்துக்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 32 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: