Thiruchchikkaaran's Blog

சாதிக‌ள‌ற்ற‌ ச‌ம‌த்துவ‌ ச‌மூக‌ம்- 1

Posted on: December 8, 2009


இந்திய‌ ச‌முதாய‌ம் ப‌ல‌ சாதிக‌ளை உள்ள‌ட‌க்கிய‌தாக‌ உள்ள‌து.  இந்த‌ சாதி அமைப்பு உருவான‌து ப‌ற்றி ப‌ல‌ ஆராய்ச்சிக‌ளும் விள‌க்க‌ங்க‌ளும் கொடுக்க‌ப் ப‌ட்டு உள்ளன‌.  ந‌ம்முடைய‌ ஆய்வு இந்த‌ சாதி பிரிவினை முடிய‌வும், ஒரே ச‌முதாய‌மாக‌ உருவாக‌வுமான‌ வ‌ழி முறைக‌ளைப் ப‌ற்றிய‌து ஆகும்.

இந்த‌ சாதி என்ப‌து எங்கே இருக்கிற‌து?  அது ம‌னித‌ர்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் இருக்கிற‌து.  ஒவ்வொரு ம‌னித‌னும் குழ‌ந்தையாக‌  கேட்க‌, பேச‌ ஆரம்பிக்கும் நாளில் இருந்து, அவ‌னை சுற்றி இருப்ப‌வ‌ர்க‌ள் அந்த‌க் குழ‌ந்தையிட‌ம் நீ இந்த‌ சாதி, நாம இந்த‌ சாதிடா, என்று ம‌ன‌திலே ஏற்றுகின்ற‌ன‌ர்.

ந‌ம‌க்கு வேண்டிய‌ சாதி, வேண்டாத‌ சாதி ஆகிய‌ சாதிக் குறிப்புக‌ளும் த‌ரப் ப‌டுகின்ற‌ன‌.வ‌ள‌ர‌, வ‌ள‌ர‌ ம‌ற்ற‌ சாதிக‌ளுட‌னான‌ மோத‌ல் போக்கை க‌டைப் பிடிப்ப‌தை வீர‌மாக க‌ருதும் போக்குக்கு அவ‌ன் த‌ள்ள‌ப் ப‌டுகிறான்.

சாதிப் பிரிவினை ம‌றைய‌ ந‌ம்முடைய‌ வ‌ழி, ஒவ்வொரு  ம‌னித‌னையும் க‌ன‌வான் ஆக்குவ‌து தான். க‌ண்ணிய‌மும், சினேக‌ ம‌ன‌ப் பான்மையும் உடைய‌ ஒருவ‌ன் இன்னொரு ம‌னித‌னை நோக்கும் போது, அவ‌னுக்கு த‌ன்னால் ஏதாவ‌து உத‌வி செய்ய‌ முடியுமா, என்றுதான் எண்ணுவான். அவ‌னை ம‌ரியாதையுட‌ன் எதிர் கொள்வான். எந்த‌ அளவுக்கு ஒரு ம‌னித‌ன் க‌னவானாக‌ இருக்கிறானோ, அந்த‌ அள‌வுக்கு ச‌முதாய‌த்துக்கு ந‌ல்ல‌து.

எந்த‌ அளவுக்கு க‌ன‌வான்க‌ள் ஒரு ச‌முதாய‌த்தில் இருக்கிரார்களோ அந்த‌ அளவுக்கு அந்த‌ ச‌முதாய‌ம் நாக‌ரீக‌மான‌ ச‌மத்துவ‌ ச‌முதாய‌ம் ஆகும்.

பீடிக்கு நெருப்புக் கேட்பதில் ஆரம்பித்த தகராறு மிக விரைவாக மிக எளிதில் கொலையில் முடிகிறது.  பெரும் சாதிக் க‌ல‌வ‌ர‌மாக‌வும் ஆகிற‌து. அந்த அளவுக்கு கட்டுப்பாடு இல்லாத,  கோவத்தை அடக்க முடியாத சமூகமாக இருக்கிறோம்.

ம‌ற்ற‌வ‌ரை தாழ்மையாக‌ எண்ணுப‌வ‌ர்களை வைத்து, ச‌க‌ ம‌னித‌ரின் வாயிலே பீ திணிப்ப‌வ‌ர்க‌ளை வைத்து, பிற‌ ம‌னித‌ரின் த‌லையை வெட்டி தெருவிலே உருட்டுப‌வ‌ர்க‌ளை வைத்து ச‌மத்துவ‌ ச‌முதாய‌ம் உருவாக்க‌ முடியாது.

அன்பும், பிறரை மதிக்கும் பழக்கமும், நிதானமும், கட்டுப்பாடும், நாகரீகமும் இல்லாத மக்கள் தொகுப்பை வைத்து சாதிகள் இல்லாத நாக‌ரீக‌ சமத்துவம் சமுதாயம் உருவாக்க முடியாது.

வெறுப்புக் கருத்துக்களை வைத்து அல்ல, அன்பை வைத்துதான் சமத்துவ சமுதாயம் உருவாக்க முடியும். எனவே நம்முடைய திட்டம் மக்களை செம்மைப் படுத்துவது.

சாலையின் குறுக்கே கட்டப்பட்ட சாதி வெறி சுவரை உடைப்பது அரசின் கையில் உள்ளது. மக்களின் மனங்களில் உள்ள சாதி வெறி சுவரை உடைப்பதே நம் பணி!மக்கள் மனதில் உள்ள சுவர் உடையாத வரை செங்கல் சுவர்கள் உடைந்தும் நிலையான பலன் இருக்காது.

அரசாங்கத்தின் கையிலே சட்டமும், ஆட்சியும், அதிகாரிகளும், புல்டோசரும் உள்ளன.நம்மிடம் அன்பும், நாகரீகமும் தான் உள்ளன. நீங்களும் நானும் தான் இருக்கிறோம்.அரசாங்கத்தை நாம் குறை கூறவில்லை. நாம் நம் பங்கை செய்கிறோம்.

ஆனால் சாதிகளை அழிக்க இங்கெ யாருக்குமே மனம் இல்லை. எல்லோரும் சாதியை தங்களுக்குப் பாதுகாப்பாக கருதுகின்றனர். நாளைக்கு நமக்கு ஏதாவது ஒன்று என்றால் சாதி சனம் வரும் என்று எண்ணுகின்றனர். சட்டம் , ஒழுங்கு, நீதி இவை நம்மைக் காக்கும் என்று எண்ணவில்லை. சட்டத்துக்கும் நீதிக்கும் வலிமை இல்லாத சூழல் உள்ளது.

தமிழ் நாட்டிலே யாரும் தான் பெயருக்குப் பின்னால் தங்கள் சாதியைப் போடவில்லை. ஆனால் தக்க நேரத்திலே அதை வெளிப்படுத்தி, தன்னுடைய பெயரோடு சேர்த்து போஸ்டர் அடிப்பார்கள்.

தமிழ் நாட்டிலே எந்த அரசியல் வாதியும் சாதி அழிவதை அனுமதிக்கப் போவது இல்லை.

உங்களுக்கும் எனக்கும் வேறு வேலை உண்டு. இங்கெ எழுதுகிறோம். எழுதுவதோடு செய்யவும் செய்கிறோம். சாதி அமைப்பு அழிவதால், உங்களுக்கோ எனக்கோ பைசா நஷ்டமில்லை.

ஆனால் அரசியலின் ஆணி வேறாக சாதி மத வேறுபாடு ஆக்கப் பட்டு விட்டது. தேர்தலில் தோற்றால் பல கோடிகள் நஷ்டம். வென்றால் பலப் பல கோடிகள் லாபம்!

எனவே நமக்கு முன்னே உள்ள பணி எவ்வளவு சிக்கலானது என்று எண்ணுங்கள். ஆனால் நம்பிக்கையை விடாதீர்கள்.

இப்போது பிரச்சினையின் காரணத்தையாவது புரிந்து இருக்கிறோம். தீர்வு, மக்களின் மனதில் அன்பை, நாகரீகத்தை உருவாக்கி அவர்களை கனவான் (Gentle man) ஆக மாற்றுவதுதான். இது ஒரு நாளிலோ, ஒரு வருடத்திலோ முடிந்து விடாது.

ஆனால் கல்வி அறிவு பெற்றவர்களே, மெத்தப் படித்தவர்களே காழ்ப்புணர்ச்சிக்கு, வெறுப்புணர்ச்சிக்கு அடிமை ஆகி விடுகிறார்கள். எனவே நம்முடைய வேலை அதிகமாகிறது. இதை சட்டம் போட்டோ, ஆணையிட்டோ நிறைவேற்ற முடியாது. நாமே நடந்து காட்டியும், பிரச்சாரம் செய்தும் தான் நிறைவேற்ற முடியும்.

Advertisements

7 Responses to "சாதிக‌ள‌ற்ற‌ ச‌ம‌த்துவ‌ ச‌மூக‌ம்- 1"

///ஆனால் கல்வி அறிவு பெற்றவர்களே, மெத்தப் படித்தவர்களே காழ்ப்புணர்ச்சிக்கு, வெறுப்புணர்ச்சிக்கு அடிமை ஆகி விடுகிறார்கள்./// ஆம் இன்றைக்கு ஜாதி வெறியை , காழ்புணர்ச்சியை படித்து முன்னேறி இன்டெர்னெட்டில் வந்து பரப்புகிறார்கள். அது உண்மை தான்

திருச்சிக்காரரே, இப்படி பொத்தாம்பொதுவாக எழுதினால், நீங்கள் என்ன சொல்ல வருகிறீங்கள் என்று யாருக்கும் புரியாது. சமத்துவத்தை பற்றி ஏதோ சொல்ல வருகிறீர்கள் என்று மட்டும் புரிகிறது.
அது என்ன இப்படி பொதுப்படையான குற்றச்சாட்டு?
//ஆனால் சாதிகளை அழிக்க இங்கெ யாருக்குமே மனம் இல்லை. எல்லோரும் சாதியை தங்களுக்குப் பாதுகாப்பாக கருதுகின்றனர். //
நீங்கள் மட்டுமே சீர்திருத்தவாதி மற்றவர் அனைவரும் அயோக்கியர் என்று நினைப்பா?
சமத்துவ சமுதாயம் தேவை என்று நினைக்கிற உங்கள் நல்லெண்ணம் எனக்கு புரிகிறது. ஆனால், நீங்கள் நடைமுறைக்கு ஒவ்வாதவராகவே என் கண்ணுக்கு படுகிறீர்கள். வெறும் பிரச்சாரம் சேவையாகிவிடாது.
அன்புடன்,
அசோக்

ச‌கோத‌ர‌ர் அசோக் குமார் க‌ணேச‌ன் அவ‌ர்களே, அவ‌ர்க‌ளே,

த‌ளத்தை பார்வை இட்டு உங்க‌ள் கருத்துக்க‌ளை ப‌திவு செய்த‌த‌ற்கு ந‌ன்றி.

பொதுப் ப‌டையாக‌ என்று எழுதினேன். ஏனெனில் ப‌ல‌ர் வெளிப்ப‌டையாக,‌ “சாதி ப‌ட்ட‌‌த்தை விட‌ விரும்ப‌வில்லை” என‌ சொல்கின்ற‌ன‌ர். சாதீய‌த்தை க‌ண்டிப்ப‌தாக‌ கூறும் சில‌ரும், பிற‌ ஜாதிக‌ளின் மீது காழ்ப்புண‌ர்ச்சி உடைய‌வ‌ராக‌ இருக்கின்ற‌ன‌ர்.

யாரையுமே நாம் அயோக்கிய‌ர் என‌க் கூற‌வில்லை. ந‌ல்ல‌ க‌ருத்துக்க‌ள் எல்லோரிட‌மும் சென்று சேர்க்க‌ப் ப‌ட‌ வேண்டும், ஒவ்வொருவ‌ரின் காதில் விழும் க‌ருத்துக்க‌ள், சூழ‌லில் ந‌ட‌ப்ப‌வை, ப‌டிக்கும் புத்த‌க‌ங்க‌ள், ந‌ண்ப‌ர்க‌ள் இவைக‌ளே ஒருவ‌ரின் எண்ண‌ங்க‌ளை உருவாக்குப‌வையாக‌ உள்ள‌து என்ப‌தே ந‌ம் க‌ருத்து.

என‌வே ம‌னித‌ரின் மீது த‌வ‌று இல்லை. அவ‌ர்க‌ள் மன‌திலே ஏற்ற‌ப் ப‌ட்ட‌ வெறுப்பு க‌ருத்துக்க‌ளின், விச‌ம‌க் க‌ருத்துக்க‌ளினால் தான் பிர‌ச்சினை என்ப‌தே ந‌ம் க‌ருத்து.

நான் சாதார‌ண‌மான‌வ‌ன், உங்க‌ளில் ஒருவ‌ன். நில‌மை என்ன‌ என‌ப‌தையே விள‌க்கினேன், ம‌ன‌தில் தோன்றுவ‌தை எழுதுகிரேன், அவ்வள‌வுதான்.

நீங்க‌ளும் உங்க‌ள் கருத்துக்க‌ளை எழுத‌லாம், வ‌ர‌வேற்கிரோம்.

ம‌ற்ற‌ப‌டி ந‌ன்மைக்கு போகும் பாதை மிக‌வும் குறுக‌லான‌து என்ப‌து நீங்க‌ள் அறிந்த‌தே.

பலர் ( அல்லது என்னைப் போன்ற சிலர்) (மட்டுமே?)உள்ளக் கிடக்கைகளை எதிரொலித்த பதிவு.

பதிவு உலகத்தில் வருகின்ற பதிவுகளைப் பார்த்தால், அவை 1; பார்ப்பன வெறுப்பு பதிவு அல்லது 2. தலித் -அல்லாத சாதிகள் மேல் வெறுப்பு கொந்தளிக்கும் பதிவாக இருக்கும் ; ஆனால் சாதிப் பிரிவினைகளை மறுக்கும் பதிவுகள் வருவதில்லை; வந்தாலும், அவை கடைசியில் பார்ப்பனீயத்தை சாடி முடிக்கும்; ” சாதிகள் ஒழிய வேண்டும், சமூகத்தில் பிரிவுகள்/குழுக்களாக இருந்தாலும், அவற்றின் இடையே உயர்வு-தாழ்வு இருக்கக் கூடாது; சமமாக கருதி, சகோதர உணர்வுடன் வாழ வேண்டும்- வாழலாம் “, என சொல்லும் பதிவுகள் வருவதில்லை.

நீங்கள் இதைத்தான் சொல்ல முயன்றிருக்கீர்கள் என எண்ணுகிறேன்.

பொத்தம் பொதுவாக சொல்வது எனத் தோன்றும்; ஆனால், இந்தக் கோணத்திலிருந்து வரும் முதல் பதிவு; இதற்கு வரும் பின்னுட்டங்களின் மூலம் தான் இது பெரும்பான்மையின் எண்ணங்களை எதிரொலிக்கிறதா எனத் தெரியும்.

சந்தடி சாக்கில், என் எண்ணங்களையும் சொல்லி விடுகிறேன் : சாதிகள் நூறிலிருந்து ஒன்று ஆக வேண்டும் என்பது நீண்ட தூரக் கனவு; ஆனால் சாதிகளின் உட்பிரிவுகள் நீங்க வேண்டும், காலப் போக்கில் சாதிகளின் எண்ணிக்கை குறையும்; அவற்றின் மத்தியில் மேலும் ஒன்று இணைந்து நூறு எண்பதாகி அறுபதாகி இருபதாக ஆகலாம்; சில சாதிகளிலே உட்பிரிவுகள் களைந்து போகும் நிலைமையைப் பார்க்கிறேன்; ஆனால், பெரும்பாலும், சாதிகள் உட்பிரிவுகள் எண்ணிக்கை அதிகம் ஆனது போல் தோன்றுகிறது. (இதே கருத்தை முன்பு ஒரு முறை இது போல் பின் ஓட்டம் இட்டிருந்தேன். யாரும் கண்டு கொள்ளவில்லை.)

Dear Brother Thumbi,

Thanks for your visit and comments,

We can make complete homogenious soceity as well. As you said, the first step shall be to create friendship, fraternity, trust and mutual respect between the communities.

We will discuss more about the homogenious soceity. We will post more articles on the same.

Thiruchchikkaaran

Hi Thiruchikkaaran,
along with Thumbi’s comment, I could understand what you are trying to say. Thank you Thumbi for your clarifying comments.

Good work Thiruchchikkaaran.

Love,
Ashok

வணக்கம்

நண்பரே சிறுவர்கள் உப்பு மூட்டை தூக்கி விளையாடுவதை பாருங்கள், ஒருவனை மற்றவன் சுமக்கிற போது எதோ ஒரு காரணத்திற்க்காக சுமப்பவன் நிமிர்ந்தால் என்ன நேருகிறது? கவனித்துப் பாருங்கள் மேலே இருப்பவன் தன்னை சுதாரித்துக் கொள்ளும் முன்னர் சுமப்பவனின் கழுத்தை தன்னையும் அறியாமல் இறுக்கி விடுகிறான். தான் கீழே விழுந்து விடாமல் இருக்க ஏற்ப்படும் ஒரு அனிச்சை செயல்.

அதுபோலத்தான் இந்த சாதிப் பிரச்சினையும். இது இன்று ஏற்பட்டது அல்ல என்பது அனைவரும் அறிந்ததே. ஒரு நிறுவனத்தில் முதலாளியும் இருக்கிறான், அங்கே காவலாளியும் இருக்கிறான், துப்புரவாளனும் இருக்கிறான். அவர்கள் தங்களின் பணியை செம்மையாக செய்து வந்தால் அதுமட்டுமே போதுமானது. அதுவே ஒரு சிறந்த நிர்வாகமாக இருக்கும். ஆனால் இவன் காவலாள்தானே இவன் இல்லாவிட்டால் நிர்வாகம் நடக்காதா? என்று எண்ணி முதலாளியே காவல் காக்க நின்றால்? சரி இவன் வெறும் துப்புரவாளன் என்று அவனை முதலாளி மட்டமாக நினைத்தால் எப்படி ஒரு தவறான எண்ணமோ அதைப் போலவே தொழிலாளியும் ஐயோ இவர் முதலாளி ஆயிற்றே என்று அடிமைப் பட்டு கிடப்பதும் மகா தவறு. அது விசுவாசம் அல்ல, ஒருவித சுயநலம்.
அவன் பணியப் பணிய இவன் அவன் மீது குதிரை ஏறுவான்.

ஒரு முதலாளி எப்படி தன கடமையை செய்கிறாரோ அது போல நம் கடமயைதான் நாமும் செய்கிறோம் என்ற எண்ணம் இவனுக்கும் இருக்கவேண்டும். ஆரம்ப காலங்களில் இது போலவே ஆரம்பிக்கப் பட்டது. பெரும் பிரிவினைகள் இல்லை. ஒரு வர்ணத்தான் குனிந்து இருந்தான். உழைப்புக்காக, இன்னொருவனும் நிமிர்ந்து இருந்தான் தனது கர்மத்திற்க்காக, நிமிர்ந்து இருந்தவன் அப்படி இருப்பதில் தவறு இருக்கவில்லை, ஆனால் அவனை குனிந்தவன் தனது தலையில் தூக்கி வைக்க ஆரம்பித்தானோ அப்போதே வந்தது பிரச்சினை. குனிந்தவன் நிமிர்ந்தால் நாம் சரிந்து விடுவோம் என்ற பயத்தில் நிமிர்ந்தவன் அவனை தட்டுகிறான். வெளியில் ஆயிரம் காரணங்கள் பேசப் படட்டும். சாதிய வெறிக்காரர்களின் உள்மனம் இதைத்தான் அசைபோடுகிறது. பிறப்பு, வாழ்வு, இறப்பு அனைத்திலும் அனைவருமே சமமாகவே இருக்கிறோம், ஆனால் ஒரே இனத்தை சாதியால் பிரிக்கிறோம். சாதி என்பதை அழிப்பது என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலைவதை விட, அது பாட்டுக்கு இருந்து விட்டு போகட்டும். அதை கண்டுகொள்ளாமல் விட்டு விடுங்களேன். கடைசியில் அது பெயரளவில் மட்டுமே இருக்கும்.

நாம் எதற்க்காக இருக்கிறோமோ அதை மட்டுமே பார்த்துக் கொண்டால் போதுமே, நாம் கீழ்சாதியா அதற்காக மேல்சாதிக் காரர்களுக்கு ஏன் அடிமைப் படவேண்டும்? பிராமணரைப் பார்த்து ஏன் சாமி என்று அழைத்து தலைமேல் தூக்கிக் கொள்ள வேண்டும். தவறு எங்கே உள்ளது, இல்லை நாம் மேல்சாதியா கீழ்சாதிக் காரர்களை பார்த்து ஏன் இழிவாக நினைக்க வேண்டும், நான் ஆபீசில் கணக்கைப் போட்டு கூட்டுகிறேன் என்றால் அவர்கள் தெருவில் குப்பையை கூட்டுகிறார்கள் அவ்வளவுதான் மற்றபடி என்னைப் போலவேதான் அவர்களும் பிறந்து வளர்ந்து வாழ்கிறார்கள். அவ்வளவுதான். யாரும் இங்கே வானத்தில் இருந்து குதிக்கவும் இல்லை, அல்லது கொம்போடு பிறக்கவும் இல்லை என்பதுவே உண்மை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: