Thiruchchikkaaran's Blog

My experiments with “Vandhe Matharam”

Posted on: December 6, 2009


வந்தே மாதரம் – வரலாறுடன் சேர்ந்து வந்த இந்தப் பாடல், அவ்வப்போது விவாதத்துக்கு உள்ளாகி வந்துள்ளது.         

 இந்தப் பாடல் பாடுவது இசுலாமியர்களால் எதிர்க்கப் படுகிறது.

முன்பு  தேச பக்தி வியாபாரத்தை கன ஜோராக  செய்து வந்த காங்கிரசோ, வங்காளர் வாக்கு தேவைப் படும் நேரத்திலே இந்தப் பாடலில் தேச பக்தி உள்ளதாக புகழ்ந்தும்,  இசுலாமியர் வாக்கு தேவைப் படும் போது இந்தப் பாடல் விடயத்தில் அடக்கி வாசித்தும் வழக்கம் போல பம்மாத்து செய்து வருகிறது. 

பா. ச. கவும் மற்ற சங்க அமைப்புகளும் இந்தப் பாடலை பாட வேண்டும் என்று கூறுகின்றன.

மதவெறி  பாசிச சக்திகளை எதிர்ப்பதாக கூறிக்கொள்ளும் பொதுவுடைமை இயக்கங்களும் இந்தப் பாடல் இசுலாமியருக்கு எதிராக உள்ளதாக கூறி,  இந்தப் படலை எதிர்க்கின்றனர்.

 நமக்கோ எந்த கட்டாயமோ, நிர்ப்பந்தமோ இல்லாததால் எந்த வித சார்பும் இல்லாமல் இந்தப் பாடலை அணுகி    நம்மால் முயன்ற அளவு ஆய்வு செய்து நம் கருத்தை அளிக்கிறோம்.   

நாம் முக்கியமாக ஆராய்வது. 

1) பாடலின் பொருள் என்ன? 

2) பாடல் தேசத்தை நோக்கி பாடப்பட்டதா அல்லது இந்துக் கடவுள்களை நோக்கி பாடப்பட்டதா?

3) பாடலின் கருத்து இசுலாமியருக்கு எதிரானதா? பாடலில் இசுலாமியருக்கு எதிராக  கருத்துக்கள் கூறப் பட்டுள்ளதா?

4) பாடலில் இசுலாமிய சமுதாயத்துக்கு எதிரான தூண்டுதல் இருக்கிறதா? 

5) இந்தப் பாடல் பொதுப் பாடலாக பாடப் படுவது தடை செய்யப் பட வேண்டுமா? 

ஆகியவை பற்றி   

இந்த தளம் நம் எல்லோரின் தளம், உங்களின் கருத்துக்களை எடுத்து வையுங்கள்.

வந்தே  மாதரம் என்றால் தாயை  வணங்குகிறோம் என்ற பொருள் என்பது  எல்லோருக்கும் புரியும், ஆனால் தாயை என்று குறிப்பிடப் படுவது யாரை என்பது முக்கியமான கேள்வி.

பாடலின் முதல் செய்யுள்:

Vande Mataram
Sujalam Suphalam
Malayaja Seetalam
Sasya Shamalaam Mataram
Vande Mataram
Mother, I bow to thee!
Rich with thy hurrying streams,
bright with orchard gleams,
Cool with thy winds of delight,
Dark fields waving Mother of might,
Mother free.

 ஆர்ப்பரிக்கும் நீரோடைகள், அழகிய   பழச் சோலைகள், தென்றல் காற்று  ஆகியவை உடையதாக உள்ள வனப்பு மிகுந்த தனது தாய் நாட்டை தாயாக எண்ணி ,அதனை வணங்குவதாக பொருள்.  

Shubra Jyotsnaa
Pulakita Yaminim
Pullakusumita
Drumadala Shobhinim
Subhashinim
Sumadhura Bhashinim
Sukhadaam Varadaam
Mataram
Vande Mataram
Glory of moonlight dreams,
Over thy branches and lordly streams,
Clad in thy blossoming trees,
Mother, giver of ease
Laughing low and sweet!
Mother I kiss thy feet,
Speaker sweet and low!
Mother, to thee I bow.

 

இரண்டாவது செய்யுளும் நிலவொளியில் பளிச்சிடும் மரங்களும் , ஓடைகளும், தனக்கு தாலாட்டுப் பாடுவதாக, தன்னை நோக்கி புன் முறுவல் பூப்பதாக  வர்ணித்து வணங்கி  இருக்கிறார்.

Sapta Ko Ti Kan Tha
Kalakalaninaada
Karale Dwisapta Ko Ti Bhujai
Rdhr^Itakhara Karavaale
Abalaa Keno Maa Eto Bale
Bahubhaladharinim
Namaami Taarinim
Ripudala Varinim
Mataram
Vande Mataram
Who hath said thou art weak in thy lands
When the sword flesh out in the seventy million hands
And seventy million voices roar
Thy dreadful name from shore to shore?
With many strengths who art mighty and stored,
To thee I call Mother and Lord!
Thou who savest, arise and save!
To her I cry who ever her foeman drove
Back from plain and Sea
And shook herself free.

இப்படிப்பட்ட நாடு அடிமையாக இருப்பதை சுட்டிக் காட்டி அடிமை தளையில் இருந்து  விடுபட முழக்கம் செய்கிறார். எழுபது மில்லியன் கரங்கள் – ஏழு கோடி கரங்கள், இந்தக் கரங்கள் நாட்டின் புதல்வர்களின் கரங்கள், அப்போதைய வங்காள பகுதியின் மக்களின் கரங்கள் தங்களின் தாய் நாட்டை விடுதலை செய்ய தேவையான சக்தி உடையவை எனக் குறிப்பிடுகிறார்.

Tumi Vidyaa, Tumi Dharmaa
Tumi Hridi, Tumi Marma
Tum Hi Pranaah Shariire
Bahute Tumi Maa Shakti
Hridaya Tumi Maa Bhakti
Tomaraa I Pratimaa Gadi
Mandire Mandire
Thou art wisdom, thou art law,
Thou art heart, our soul, our breath
Thou art love divine, the awe
In our hearts that conquers death.
Thine the strength that nerves the arm,
Thine the beauty, thine the charm.
Every image made divine
In our temples is but thine.

 அத்தகைய நாடே அதன் மக்களுக்கு அறிவை வழங்கி , உயிர் மூச்சாக இருந்து , சக்தியை அளித்து, மரணத்துக்கும் அஞ்சாத மன நிலையை அளிப்பதாக உறுதி கூறுகிறார். ஒவ்வொரு கோவிலிலும் மக்கள வணங்கும் தெய்வமாக இருப்பது தன்னுடைய தாய் நாடே எனக் கூறுகிறார்.

Tvam Hi Durgaa
Dasha Prahara Nadhaarini
Kamala Kamaladala Viharini
Vani Vidhyadayini Namaami Tvam
Namaami Kamalaam,
Amalaam, Atulaam
Sujalaam Suphalaam Mataram
Vande Mataram
Thou art Durga, Lady and Queen,
With her hands that strike and her
swords of sheen,
Thou art Lakshmi lotus-throned,
And the Muse a hundred-toned,
Pure and perfect without peer,
Mother lend thine ear,
Rich with thy hurrying streams,
Bright with thy orchard gleams,
Dark of hue O candid-fair

 

இன்னும் ஒரு படி மேலே போய் வங்காள மக்கள் வணங்கும் தெய்வங்களான துர்க்கை, லக்சுமி இப்படிப்பட்ட தெய்வங்களாக இருப்பது உண்மையில் அவர்களின் தாய் நாடே, சோலைகள்  நிறைந்தே, ஆர்ப்பரிக்கும் நீரோடைகள் நிறைந்த  தாய் நாடே மக்களால் தெய்வமாக வணங்கப்  படுவதாக கூறியிருப்பது தெளிவு. 

இந்த செய்யுளால் உண்மையில் அதிருப்தி அடைய வேண்டியது இந்துக்களே. ஏனெனில் தாய் நாட்டை இந்துக் கடவுள்களுக்கு இணை வைத்து இருக்கிறார் ஆசிரியர்.

இன்னும் சொல்லப் போனால் தாய் நாடுதான் கடவுள், தாய் நாட்டை தான் துர்க்கை லட்சுமியாக வணங்குவதாக கூறி, தன் தாய் நாட்டை இந்து கடவுள்களை விட ஒரு படி மேலே வைத்து இருக்கிறார்.

இப்படிப் பட்ட நிலையிலே இசுலாமியரிடம் இந்தப் பாடலின் பொருள் திரித்துக் கூறப் பட்டுள்ளது.

Shyamalaam Saralaam
Susmitaam Bhuushitaam
Dharanim Bharanim
Mataram
Vande Mataram
In thy soul, with jeweled hair
And thy glorious smile divine,
Loveliest of all earthly lands,
Showering wealth from well-stored hands!
Mother, mother mine!
Mother sweet, I bow to thee,
Mother great and free!

 

இந்தப் பாடலின் பொருளை ஆராய்ந்த பின் இதைப்  பாடிய பக்கிம் சந்திர சட்டர்ஜி அவர்களை நான் மதிக்கிறேன், மரியாதை செய்கிறேன்.

 மிகச் சிறந்த தேச பக்தியாளராக அவர் இருந்திருக்கிறார். தன்னுடைய தாய் நாட்டின் வனப்பை உணர்ந்து, மனதில் மகிழ்ச்சி  பொங்க, உணர்ச்சியுள்ள வார்த்தைகளில் சிறந்த தேச பக்தியை வூட்டியுள்ளார்.  

 இந்தப் பாடலுக்கான பொருளை ஆராயும் போது என்னுடைய அறையிலே வெண்ணிலவின் ஒளியும்,  பூக்களின் நறுமணமும் வீசுவது போல ஒரு புத்துணர்ச்சி எனக்கு உண்டாகியது.

இந்தப் பாடலில் இசலாமியர்களுக்கு எதிரான எந்த ஒரு கருத்தோ, தூண்டுதலோ  இல்லை.

 இஸ்லாத்துக்கு எதிராக கூட எந்த ஒரு கருத்தும் இல்லை.

தெளிவாக சொன்னால்  எந்த ஒரு வெறுப்பு கருத்தும்  இந்தப் பாடலில் இல்லை. 

 தாய் நாட்டின் சிறப்பு, வனப்பு ஆகியவை விளக்கப் பட்டு, அந்த நாட்டை வணங்கி, அதை விடுதலை செய்ய அதன் புதலவர்களை அழைப்பதாகவே உள்ளது.

 இந்தப் பாடல் எல்லா இடங்களிலும் பாடப் படுவதை, பொது இடங்களில், அரசு நிகழ்ச்சிகளில் பாடப் படுவது அவசியம், நல்லது எனவே நான் கருதுகிறேன்.

அப்படி பொது இடங்களில் பாடும் போது யாரவது அந்தப் பாடலை பாட விரும்பவில்லை என்றால், அவர்கள் பாடாமல் இருக்கலாம். அவர்களைப் பாடச் சொல்லி கட்டாயப் படுத்தவில்லை.

 இசுலாமிய சகோதர்கள் இந்தப் பாடலின் உண்மையான பொருள் என்ன என்பதை, அவர்களே நடு நிலையாக ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். 

மத அடிப்படைவாதிகளின் அவசர விளக்கங்களை அப்படியே ஏற்றோ ,   ஓட்டுக்காக மக்களைப் பிரிக்கும் அரசியல்வாதிகளின் பிழைப்பு வாத சொற்களை ஏற்றோ முடிவெடுக்காமல்,    

உங்கள் பகுத்தறிவின் அடிப்படையிலே  நடு நிலையாக ஆராய்ந்து,  இந்தப் பாடல் தேச பக்திப் பாடலா என்பதை ஆக்க பூர்வமான கண்ணோட்டத்திலே அணுகுங்கள் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.  

 இந்த நாடு என்பது இதில் உள்ள 120 கோடி மக்களை சேர்த்துதான் குறிப்பிடப் படுவதாக அமையும்.

உண்மையான தேச பக்தன் இந்த தேசத்திலே உள்ள இசுலாமியரை அவமதிக்க  விரும்ப மாட்டான்.

 உண்மையான தேச பக்தனுக்கு இந்த நாட்டில் உள்ள இருபது கோடி இசுலாமியர் உள்ளிட்ட எல்லா மக்களுமே கடவுள் தான் – இந்தப் பாடலைப் பாடும் போது எனக்கு தோன்றும் உணர்ச்சி இதுதான்.

Advertisements

2 Responses to "My experiments with “Vandhe Matharam”"

அய்யா உங்கள் இமெயில் ஐடி இருந்தால் என்னுடைய ஐடிக்கு அனுப்பவும் என்னிடம் வந்தே மாதரம் சம்பந்தமாக சில விஷயங்கள் உள்ளன அனுப்புகிறோன்

சகோதரர் ஹைதர் அலி அவர்களே,

தளத்திற்கு வந்து பார்வை இட்டதற்கு நன்றி.

என்னுடைய மின் அஞ்சல் முகவரி thiruchchikkaaran@gmail.com

நீங்கள் உங்கள் கருத்துக்களை என் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

இங்கே பதிவாகவும் இடலாம்.

உங்கள் கட்டுரைகளையும் இந்த தளத்திற்கு அனுப்பலாம். நாம் அவற்றை பதிவு இடுவோம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 43 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: