Thiruchchikkaaran's Blog

இரண்டு அரசர்களின் கதை – பாப்ரி மஸ்ஜீத்தும் ராம ஜன்ம பூமியும்

Posted on: December 5, 2009


உலக வரலாற்றின் பக்கங்களில் இந்தியா ஒரு முக்கிய நாடு.  உலகின் பண்டைய நாகரீகங்களாக கருதப் படும் நாகரீகங்களில் இந்தியா ஒன்று. 

பல மதங்கள் தோன்றி வளர்ந்த நாடு இந்தியா. பல மதங்களைப் பின்பற்றுபவர்கள் வாழும் நாடாக இந்தியா இருக்கிறது. 

சகிப்புத் தன்மை, அரவணைக்கும் தன்மை,நல்ல கருத்துக்களை எடுத்துக் கொள்ளும் தன்மை, விட்டுக் கொடுக்கும் தன்மை ஆகியவை இந்திய தத்துவத்தின் அடிப்படைப் பண்புகளாக உள்ளன.

இந்த நிலையிலே உத்தர பிரதேசத்திலே உள்ள அயோத்தியிலே அமைந்திருந்த பாப்ரி மசூதியானது சங்க பரிவார அமைப்புகளால், 1992  ல் இடிக்கப் பட்டு தரை மட்டமாக்கப் பட்டது. 

இந்த பிரச்சினை மற்றும் அதன் காரணிகள் பற்றி  நாம் ஆராய்வோம்.

 இந்த பாப்ரி மசூதியானது, இராமர் பிறந்த இடம் என்றும் அதில் இருந்த கோவிலை இடித்து விட்டு மசூதி கட்டப் பட்டதாகவும் சங்க பரிவார இயக்கங்கள் கூறுகின்றன. அதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது நமக்கு தெரியாது.
 
நம்முடைய ஆய்வு இந்த பிரச்சினை எப்படிக் கையாளப் பட்டு இருக்க வேண்டும் என்பதை பற்றியதாக இருக்கும். 
 
இதை சட்ட அடிப்படியிலும், சமூக அடிப்படையிலும்,  அறிவு நாணய அடிப்படையிலும் நாம் விவாதிப்போம்.
 
சட்ட அடிப்படை என்றால் இது பற்றிய வழக்கு நீதி மன்றத்திலே நிலுவையிலே உள்ளது. நீதி மன்றத்திலே வழக்கு எவ்வளவு தாமதம் ஆனாலும் நீதி மன்றத்தின் முடிவுக்கு, பொறுத்து இருக்கத்தான் வேண்டும்.

 எனவே நீதி மன்றத் தீர்ப்பு வரும் முன் இப்படிக் கும்பலாகப் போய் உடைப்பது என்பது சரி அல்ல. சட்டத்துக்கு எதிரானது!  

சமூக அடிப்படையிலே என்றால், இஸ்லாமிய சமூகத்தவர்களை சேர்ந்த முக்கிய பிரதிநிதிகளை அழைத்து, அவர்களிடம்  நட்பு அடிப்படையிலே இந்த இடத்திலே நாங்கள் கோவில் கட்டிக் கொள்ள அனுமதிக்க முடியுமா, என்று கேட்டிருக்க வேண்டும்.
அதையும் அதட்டிக் கேட்டு,  நாங்க கேக்குற மாறி கேட்போம், நீ குடுக்கணும் என்று சொல்லக் கூடாது.
 
அவர்களாக குடுப்பதாக இருந்தால், அந்த இடத்தைப் பெற்று கோவில் கட்டி இருந்தால் நாம் பெரிதாக குறை சொல்ல போவதில்லை.
 
ஆனால் பேச்சு  வார்த்தையை உதாசீனப்படுத்தி விட்டு இப்படி திடீரென்று உடைத்தது சரியா?
 
சாதாரண அப்பாவி முஸ்லீம்கள் இதனால் அதிர்ச்சி அடைந்து, பாதுகாப்பற்ற உணர்வையும், கசப்புணர்வையும் அடைந்தனர்.
இன்னும் பல மசூதிகள் இடிக்கப் படுமோ, தாங்கள் இரண்டாம் தர குடிமக்கள் ஆக்கப் படுவோமோ என கையறு நிலையை அடைந்தனர்.
 
இந்த  இடிப்பு வேலைக்கு எந்த சம்பந்தமும் இல்லாத பெருவாரியான இந்துக்களோ, இத்தனை காலமும் அவர்கள் கைக்கொண்ட சகிப்புத்தன்மையும், அஹிம்சை தத்துவமும் உதாசீனப் படுத்தப்பட்டு, தங்களின் பெயரால் காலித் தனம் நடத்தப் பட்டதை அறிந்து வருத்தமும், கையறு நிலையும் அடைந்தனர்.
 
இப்படியாக இந்திய மக்களின் மனம் வருந்தும்படியாக சங்க  பரிவார கும்பல் செயல் பட்டதால் இஸ்லாமியருக்கு அநீதி இழைக்கப் பட்டதோடு பல்வேறு பின்விளைவுகளும் உருவாயின.
 
இந்தியா சமுதாயம்  ஒரு மத சகிப்புத்தன்மை உடைய சமுதாயம் எனும் வெள்ளை நிறத்தில் கரும் புள்ளி விழுந்தது.
 
இந்தியாவை , இந்தியரை எப்படி எல்லாம் நிலை குலைய  
வைக்கலாம் என்று காத்து இருக்கும் வெளிநாடுகளும், 
அவர்களுக்கு வால் பிடித்து வாழும்  சில இந்திய கிரிமினல்களும், இந்த இடிப்பை ஒரு சாக்காக வைத்து 1993ம் வருடம்  மும்பையிலே மிகப் பெரிய தொடர் குண்டு வெடிப்பு  பயங்கர வாதத்தை நிகழ்த்தின.

நீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையிலே, அல்லது சுமூக பேச்சு வார்த்தையின் அடிப்படையிலே தீர்க்கப் பட வேண்டிய ஒரு பிரச்சினையை, தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக கீழ்த்தரமான முறையிலே அடாவாடி செய்து விட்டனர் இந்த சங்க அமைப்புகள்!

இந்த இராமன் என்பவன் பற்றி கூறப் படும் கதை ஒரு உண்மை நிகழ்வா  அல்லது வெறும் புனைவா என்பதை நாம் உறுதியிட்டுக் கூற முடியாது. இந்த இராமன் பற்றிய குறிப்புகள் ஒரு புனைவாக இருக்கவும் சத்தியங்கள் உள்ளன,  உண்மை நிகழ்வாக இருக்கவும் சாத்தியங்கள் உள்ளன.   
  
உண்மை எதுவாக இருந்தாலும்  எந்த ஒரு இராமனுக்காக கோவில் கட்டுவதாக கூறுகிறார்களோ, அந்த இராமனின் கொள்கைகளையே காற்றில் பறக்க விட்டுள்ளனர் இந்த சங்க அமைப்புகள்!
 
மற்றவரின் மகிழ்ச்சிக்காகத் தான் துன்பத்தை ஏற்றுக் கொள்வதுதான் இராமனின் அடிப்படைக் கொள்கையாக கூறப்பட்டுள்ளது.
 
 மற்றவரின் நன்மைக்காகத் தான் விட்டுக் கொடுப்பது, தியாகம் செய்வதுதான் இராமனின் முக்கிய குணாதிசயமாக கூறப்பட்டுள்ளது.
 
இராமன் தான் வாழ்ந்த காலத்திலேயே அக்காலத்திய வழக்கப்படி அவனுக்கு வர வேண்டிய ஆட்சிப் பதவியை, அயோத்தியை விட்டுக் கொடுத்தான் என்று கூறுகிறார்கள். 
 
அவனுடைய சிறிய தாயார் அவனை 14 வருடம் காட்டுக்குப் போக சொன்ன போது,  இராமன் தயங்காமல் காட்டுக்குசென்றதாக 
கூறப்படுகிறது.
 
 சாகும் வரையிலே காட்டிலேயே இருக்க வேண்டும், அயோத்திக்கு வரக் கூடாது என்று கைகேயியார் கட்டளை இட்டு இருந்தாலும் 
இராமன்அதையும் ஏற்று நடந்திருக்கக் கூடியவனாகவே 
கருதப் பட முடியும்.
 
இப்படிப் பட்ட நல்ல குணாதிசயங்களை உடைய ஒருவர் மற்றவரை மனவருத்தம் அடையச் செய்து தனக்கு கோவில் கட்டப் படுவதை விரும்பியிருப்பாரா? 
 
இந்த சங்கப் பரிவாரங்கள் கூறுவது போல இங்கே இராமன் ஆட்சி நடந்தாலும், இராமனே இந்த நாட்டை ஆண்டாலும் ,
அந்த  இராமனே இந்தக் காட்டுத் தன இடிப்பை  எதிர்த்து நின்று, தன்னுடைய குடி மக்களான இஸ்லாமியர்களுக்கு நீதிக்கு புறம்பான ஒரு செயல் நடை பெறாத வண்ணம் தடுத்து இருப்பான், என்பதே கொள்கை பூர்வமான லாஜிக் நிகழ்வு ஆகும்.
 
இப்படி இஸ்லாமியர், இந்துக்கள் எல்லோரும் வருத்தப் படும் வகையிலே, இந்தியாவின் பெயரையும் கெடுத்து,  தானும் கெட்டு ஆப்பசைத்த குரங்கின் நிலையிலே இருக்கும் பரிவார அமைப்புகள்,  இந்தியாவின், இந்திய சமுதாயத்தின் அடிப்படை என்ன என்பதை சிந்தித்து பார்ப்பார்களா?
 
கால்நடைகளின்  சிறுநீரில் இருந்து  பானம் கண்டு பிடித்ததாக பெருமை பேசும் புத்திசாலிகள் எந்த ஒரு மதத்தின் காவலனாக தங்களை காட்டிக் கொள்கிறார்களோ அந்த மதத்தின் அடிப்படைகள் என்ன என்றாவது சிந்திப்பார்களா?
 
மனம் திருந்துவார்களா?
Advertisements

6 Responses to "இரண்டு அரசர்களின் கதை – பாப்ரி மஸ்ஜீத்தும் ராம ஜன்ம பூமியும்"

அன்புள்ள திருச்சிக் காரன், வலைப்பதிவு தொடங்கியிருப்பதற்கு வாழ்த்துக்கள்!

ராம ஜன்மபூமி இயக்கம் சங்க பரிவார அமைப்புகளின் தொடர்ந்த செயல்பாடுகளால் நாடு தழுவிய மக்கள் இயக்கமாக மாறியது. ஒப்பீட்டில் 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை விடவும் இது பெரியது என்று கூறப் படுகிறது.
இது தொடர்பாக பல தளங்களில் பேச்சு வார்த்தைகள் நடத்தப் பட்டன. நீதிமன்றம, பாராளுமன்றம் என்று எல்லா ஜனநாயக முறைகள் மூலமும் கோரிக்கை வைக்கப் பட்டது. இது அனைத்துமே ஆவணப் படுத்தப் பட்டுள்ளது. கொய்ன்ராட் எல்ஸ்ட் அவர்களின் Ayodhya and After என்ற நூலைப் படியுங்கள். அத்வானியின் சுயசரிதையான My country, My life ம் இது பற்றி விரிவாகப் பேசுகிறது.

வரலாற்றுக் கேள்வி அங்கு ராமர் கோயில் இருந்ததா, அது அழிக்கப் பட்டதா என்பது தானே அன்றி அது “ராமர் பிறந்த இடமா” என்பது அல்ல. இந்து விரோதிகளும், போலி மதச்சார்பின்மை வாதிகளும் தான் கேள்வியையே திரித்து விட்டனர். இந்துத் தரப்பிலிருந்து ஏராளமான வரலாற்றூ, அகழ்வாராய்ச்சி, கல்வெட்டு ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டன. நடுநிலையாளர்களான கே.எஸ். லால் போன்ற உலகப் புகழ் பெற்ற வரலாற்று அறிஞர்கள் இந்த ஆதாரங்களைத் திரட்டினர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த வழக்கு அதன் போக்கில் சென்றிருந்தால் கண்டிப்பாக இந்துக்களிடம் அந்த இடம் ஒப்படைக்கப் படவேண்டும் என்றே ஒரு தீர்ப்பு வந்திருக்கும்..

ஆனால் அத்தகைய ஒரு தீர்ப்பை வழங்க்வோ, அதை அரசியல், சட்ட ரீதியாக ஜீரணித்துக் கொள்ளவோ முடியாத அளவுக்கு செக்யூலர் அரசியல் வாதிகள் இந்திய சமூகத்தைக் கொண்டு வந்து நிறுத்தியிருந்தனர். இந்த இழுபறியில் ஒரு விதமான கோரமான அதிர்ச்சி வைத்தியமாக பாப்ரி கட்டிடம் இடிக்கப் படவேண்டிய சூழல் உருவாயிற்று என்று நான் நினைக்கீறேன். பெரும் இலக்கியவாதிகளான வி.எஸ்.நய்பால், நிராட் சௌதரி போன்றவர்களும் இப்படியே கருதுகிறார்கள். அது ஒரு வரலாற்றுத் தருணமாக, பெரும் திருப்பு முனையாக அமைந்து விட்டது. ஆனால் கண்டிப்பாக சங்க பரிவாரங்களில் அந்த கட்டிடத்தை அன்று இடிக்க வேண்டும் என்று சதித்திட்டம் எதுவும் இருக்கவில்லை – எல்ஸ்ட் தன் நூலில் இதை விரிவாகவே விளக்குகிறார்.

அந்த சம்பவத்தின் பின் விளைவுகள் பற்றி நீங்கள் சொல்வதுடன் உடன்படுகிறேன். ஆனால் வரலாறு என்பது நாம் நினைத்தபடி செல்லக் கூடியதல்ல. வரலாற்றின் பல திருப்பங்கள் சற்றும் எதிர்பாராத தருணங்களாலேயே ஆக்கப் படுகின்றன. அவற்றை நிகழ்த்தும் காரணிகள் உள்ளுக்குள்ளேயே புழங்கிக் கொண்டிருந்தாலும், அது நிகழும் வரை யாருக்கும் புரிவதில்லை. விளக்கங்கள், வியாக்கியானங்கள், அனாலிஸிஸ் எல்லாம் நிகழ்ந்த பின்னேயே தரப் படுகின்றன.

ச‌கோத‌ர‌ர் ஜ‌டாயு அவ‌ர்க‌ளே,

ந‌ம்முடைய‌ வலைத் த‌ள‌த்தை பார்வை இட்டு க‌ருத்துக்களை வ‌ழ‌ங்கிய‌திற்க்கும், வாழ்த்துக்கும் மிக்க‌ ந‌ன்றி.

நீதி ம‌ன்ற‌ தீர்ப்பின் அடிப்ப‌டையிலே சாலையிலே இடையூராக‌ இருக்கும் எத்த‌னையோ கோவில்க‌ளும், ம‌சூதிக‌ளும், த‌லைவ‌ர்க‌ளின் சிலைக‌ளும் அக‌ற்ற‌ப் ப‌டுகின்ற‌ன‌.

இத‌னுடைய‌ விளைவுக‌ள் எப்படி இருக்கின்ற‌ன‌ என்கிற‌ புரித‌ல் உங்க‌ளுக்கு இருக்கிற‌து. எண்ணித் துணியாம‌ல், இப்போது துணிந்த‌ பின் எண்ணுவ‌தால் வ‌ரும் இழுக்கே உள்ள‌து. இந்த‌ வேளையிலே நான் உங்க‌ளிட‌ம் இன்னும் சொல்ல‌ விரும்புவ‌து இதைத் தான்.

இந்து ம‌தத்தை வ‌ழி ந‌ட‌த்தும் பொறுப்பு விவேகான‌ந்த‌ர் போன்ற‌வ‌ர்க‌ளிட‌ம் இருந்தால் அவ‌ர்க‌ள் இந்த‌ விவ‌கார‌த்தை எப்ப‌டி வ‌ழி ந‌ட‌த்தி சென்று இருப்பார்க‌ள்?

விவேகான‌ந்த‌ர் நாட்டுப் ப‌ற்று, ப‌குத்த‌றிவு, ஏழைக‌ளிட‌ம் ப‌ரிவு, ம‌னித‌ நேய‌ம் இவை எல்லாம் உடைய‌, எல்லா மார்க்க‌ங்க‌ளிலும் உள்ள‌ சிற‌ப்பை பாராட்டி எல்லோரையும் நேசிக்கும் ஒரு துற‌வியாக‌ இருந்தார் என்ப‌தை நான் உங்க‌ளுக்கு கூற‌ வேண்டிய‌தில்லை.

அவ‌ர் போன்ற‌வ‌ர்கள் வ‌ழி ந‌ட‌த்த‌ வேண்டிய‌ ஒரு ம‌த‌த்தை அர‌சிய‌ல்வாதிக‌ள் கைப்ப‌ற்றித் த‌ங்க‌ளின் குறுகிய‌ போக்கிலே, அர‌சிய‌ல் லாப‌த்தைக் க‌ண‌க்கில் கொண்டு ஒரு ஹைப்பை உருவாக்கி விட்ட‌ன‌ர் என்ப‌தாக‌வே நான் க‌ருதுகிறேன். ம‌க்க‌ளின் ம‌ன‌திலே உண‌ர்வை உருவாக்குவ‌து எளிது. அணைப்ப‌து க‌டின‌ம்.

சாதார‌ண‌ இஸ்லாமிய‌ர் ம‌த‌ அடிப்ப‌டை வாதிக‌ளின் ப‌க்க‌ம் த‌ள்ள‌ப் ப‌ட்டு விட்ட‌ன‌ர்.

இப்ப‌டி இரு ப‌க்க‌மும் ம‌த‌ அடிப்ப‌டை வாதிக‌ளின் கை ப‌ல‌ப் ப‌டுவ‌தால் ந‌ஷ்ட‌ம் நாட்டுக்குத் தான்.

இந்து ம‌த‌ம் மீண்டும் கருணை வ‌டிவான‌ ஞானிக‌ளின் வ‌ழிகாட்டுத‌லில், ம‌க்க‌ளின் கைக்கு திரும்புமா? அப்ப‌டி ம‌க்க‌ளுக்கு ச‌ரியான‌ வ‌ழி காட்டும் ஞானிக‌ள் தோன்றுவார்க‌ளா?

அவ‌ர்க‌ள் தோன்றுவ‌த‌ற்க்கான‌ சூழ்நிலை இருக்கிற‌தா? அப்ப‌டிப்ப‌ட்ட‌ சூழ்நிலையை உருவாக்க‌ செய்ய‌ போவ‌து என்ன‌?

அப்ப‌டி ந‌ட‌ந்தால், அது இந்தியாவில் உள்ள‌ எல்லா ம‌க்க‌ளுக்கும், இந்திய‌ நாட்டுக்கும், உல‌குக்கும் ந‌ன்மை அளிக்க‌க் கூடிய‌தாக‌ அமையும் என‌ நான் க‌ருதுகிறேன்.

தயங்காமல் எழுதுங்கள். உங்களை போன்ற எழுத்தர்கள்தான் உண்மையில் தேவை!

நன்றிகளுடன்,
மறவன்.

ச‌கோத‌ர‌ர் ம‌ற‌வ‌ன் அவ‌ர்க‌ளே,

த‌ளத்தை பார்வை இட்டு உங்க‌ள் கருத்துக்க‌ளை ப‌திவு செய்த‌த‌ற்க்கும் , பாராட்டுக்கும் ந‌ன்றி.

த‌ளத்தை தொட‌ர்ந்து பார்வை இட்டு உங்க‌ள் கருத்துக்க‌ளை ப‌திவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிரேன். நீங்க‌ள் உங்க‌ள் கவிதைக‌ளை, க‌ட்டுரைகளை அனுப்புங்க‌ள்.இங்கே ப‌திவு இடுவோம்.

நன்றிகளுடன்,

திருச்சிக்கார‌ன்

திருச்சிக்கார‌ன்,
well written. its right words. babri majid using only for divide hindu and muslim communities. let it avoid both (majid and mandir) there. let we all build a service center like hospital…

Dear Mr. Mastan,

Thanks for your visit and comments. I request you to visit our site regularly, and keep posting your opinions.

Thanks,

திருச்சிக்கார‌ன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 37 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: