Posted by: thiruchchikkaaran on: September 13, 2011
பெண்களை தெய்வமாக கருதும் சமூகம் இந்திய சமூகம்.
உலகின் மிக வெற்றிகரமான பெண் அரசியல் தலைவர்களை உருவாக்கிய நாடு இந்தியா. உலகிலே பெண் கடவுளர்கள் இந்தளவுக்கு வணங்கப் படுவது போல எந்த நாட்டிலும் வணங்கப் படுவதில்லை. இந்தியாவைப் போல அரசியல், விளையாட்டு, அரசுப் பணி, தனியார் பணி…என்று எல்லாவற்றிலும் பெண்கள் பிரகாசிப்பது போல வேறு எங்காவது பிராகாசிக்கிரார்களா என்பது ஐயமே.
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற கேட்ட காலம் போய் பெண்கள் ஒவ்வொரு துறையிலும் தடம் பதித்தனர். பெண்கள் போலீஸ் அதிகாரிகளாக வும் சிறப்பாக செயல் பட்டனர். பெண்கள் அதிகம் இல்லாத ஒரே துறையாக இருந்தது இந்திய இராணுவம். அந்த இராணுவத்தின் அதிகாரியாக இந்திய ஏர் போர்சில் பணியில் சேர்ந்தார் அஞ்சலி குப்தா . ஆனால் வட்டமிடும் வல்லூறுகள் தன்னை சுற்றி வருவதாக புகார் சொன்னார்.
சகோ.
காலையில் தொலைக்காட்சியில் படித்ததும் மனதில் ஏதோ செய்தது. அவருக்கு செய்த அநீதிகளை எதிர்த்து போராடி, இனிமேல் இராணுவத்தில் சேரும் பெண்களுக்கு ஒரு பணி பாதுகாப்பு வழிதேடி தருவார் என நினைத்தேன் – தைரியசாலியான பெண் என்பதால்.நினைத்தேன்.
வருத்தமான விஷயம்.
மிகவும் வருந்துகிறேன்.
1 | suryajeeva
September 13, 2011 at 11:37 am
மிருகங்களை தயாரிக்கும் கூடாரமான ராணுவத்தில் மனிதத்தை எதிர் பார்க்க முடியாது அன்பரே.. அமைதி படை என்ற பெயரில் செல்லும் இந்திய ராணுவம் எப்படி அமைதிக்கு பங்கம் விளைவிக்கிறது என்று சர்வதேச நாடுகளும் நம் நாட்டை கேவலமாக பார்க்க ஆரம்பித்து நாட்கள் பல ஆகின்றன.. வேண்டும் என்றால் மார் தட்டிக் கொள்ளலாம் நம் நாடும் வல்லரசாகி விட்டது என்று..